சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் இந்த ரகசியம் சமாதிகொடுக்கும் சாக்ஷத்காரவான்களுக்கு வெளிப்படும். இவ்வுண்மையை அறியாமலும், சிவபுராணங் களிற்றானே பலவிடங்களிலே சிவன் ஆணவம் மாயை கர்மம் என்னும் மும்மலங்களையும் அநாதியே யில்லாதவரென்றும் ஞானந்தானுருவாகியநாயகர் என்றும் சொல்லப்பட்டிருந்த லால் அவர் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார் என்பன முதலியவற்றிற்கு வேறுபொருள் இருத்தல் கூடும். நரம் அதனை ஆராயாமல் இகழ்தல் தகுதியன்று என்று சிந்தியாம லும் எங்கள் கடவுளை வாயில்வந்தபடியே தூஷித்துக் கொண்டுதிரியும் அதிபாதகனாகிய நீ, உன் விவிலிய நூலிலே சலோமோன் எழுதிய உன்னதகீதத்திலே, கிறிஸ்துவாகிய புருஷன் ஒருபெண்ணைக்கண்டு மயங்கினான் என்றும், அவளுடன் கூடி மகிழ்ந்தான் என்றும், அவளுடைய அழகைப் புகழ்ந்தானென்றும், அவளைப் பிரிந்தானென்றும், அதனால் அவள் துயருற்றுத் தேடித் திரிந்தாளென்றும், சொல்வதை நிந்தியாது அங்கீகரிப்பது என்னை! இன்னும் முதனூல்களாகிய வேதாகமங்களிலே கூறப் பட்ட விஷயங்களுட் பல சிவபுராணங்களிலே குறிப்பாகப் பொருள்கொள்ளக் கிடக்கும். அது ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சிவானுபூதிமான்கள் இயற்றிய பல சாத்திரங்களாலும் குருசம்பிரதாயத்தாலும் தெள்ளிதிற் றுணியப்பட்டது. மலபரிபாகம் உடையவர்களாய், சைவா சாரியர்களை அடைந்து வழிபட்டுக் கேட்கில்; அவர்கள் சிவ புராணங்களுக்கு முதல் நூல்களோடு விரோதமறப் பொருள் உணர்த்துவார்கள். அவைகளை எனக்கு விளங்கச் சொல்லல் வேண்டும் என்பாயாகில்; சிவதூஷணம் கோமாமிசபக்ஷணம் முதலிய பெரும்பாதகங்களே செய்யும் உனக்கும் உன்போலி. களுக்கும் அவைகளைச்சொல்ல, எங்களுக்குச் சிவனுடைய புண்ணியஸ்தலப் பிரகரணம் அனுமதியில்லை. நீ இவ்வுண்மையை அறியாது, சிவபுராணங் களிலே குறிப்புப் பொருளாகக் கொள்ளற்பாலனவற்றைச் செம்பொருளாகக்கொண்டு, அதுவே மெய்ப்பொருள் என்று துணிந்து, ஈற்சமயலக்கணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்தியசமயமாகிய எங்கள் சைவத்தின்மேலே குற்றங்கள் ஏற்றப் புகுந்தமை மண்குதிரையை நம்பி ஆற்றின் வழிக் கொள்ளப் புகுந்தமைபோலும். 5 2. புண்ணியஸ்தலப் பிரகரணம் தன் கொடிகட்டப்பட்ட தேசமெங்கும் தன் ஆணை செல்லும்படி அரசியற்றும் இராசாவானவன் குறைவேண்டி னோரும் முறை வேண்டினோரும் தன்னை எளிதில் வந்து காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல்போல், சர்வ லோகாதிநாயகராகிய சிவன் தம்மாலே பயன்பெற விரும்பிய சர்வான்மாக்களும் தம்மை வந்து வழிபட்டு உய்யும்படி சிதம்பரம் முதலிய தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி விருப்பார். ஆதலால், அவைகள் புண்ணியஸ்தலங்களெனப் படும். இராசாவானவன், தன்னானை தன் தேசமெங்கும் செல்லினும் சர்வ வியாபகத்துவமும் சர்வஞ்ஞத்துவமும் இல்லாதவனாகையால் சமஸ்தரும் தன்னை எளிதிற்காணும் BJL9. அத்தாணியில் வீற்றிருத்தல் வெண்டும் என்பது ஒக்கும்: நடவுள் அவனைப்போலன்றிச் சர்வவியாபகத்துவ மும் சர்வஞ்ஞத்துவமும் உடையவராகையால், அவரை எவ்விடத்தினும் எவர்களும் வழிபட்டு அதுக்கிரகம் பெற்றுக் கொள்ளலாமே என்பாயாகில்; அதுமெய்ம்மையே! ஆயினும், தேவர்கள் இருடிகள் முதலிய பெரியோர்கள் ஒவ்வோரிடங் களிலே கடவுளை அன்போடு பூசித்து, அவர் சத்திகாரிய Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
சைவதூஷணபரிகாரம் இந்த ரகசியம் சமாதிகொடுக்கும் சாக்ஷத்காரவான்களுக்கு வெளிப்படும் . இவ்வுண்மையை அறியாமலும் சிவபுராணங் களிற்றானே பலவிடங்களிலே சிவன் ஆணவம் மாயை கர்மம் என்னும் மும்மலங்களையும் அநாதியே யில்லாதவரென்றும் ஞானந்தானுருவாகியநாயகர் என்றும் சொல்லப்பட்டிருந்த லால் அவர் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார் என்பன முதலியவற்றிற்கு வேறுபொருள் இருத்தல் கூடும் . நரம் அதனை ஆராயாமல் இகழ்தல் தகுதியன்று என்று சிந்தியாம லும் எங்கள் கடவுளை வாயில்வந்தபடியே தூஷித்துக் கொண்டுதிரியும் அதிபாதகனாகிய நீ உன் விவிலிய நூலிலே சலோமோன் எழுதிய உன்னதகீதத்திலே கிறிஸ்துவாகிய புருஷன் ஒருபெண்ணைக்கண்டு மயங்கினான் என்றும் அவளுடன் கூடி மகிழ்ந்தான் என்றும் அவளுடைய அழகைப் புகழ்ந்தானென்றும் அவளைப் பிரிந்தானென்றும் அதனால் அவள் துயருற்றுத் தேடித் திரிந்தாளென்றும் சொல்வதை நிந்தியாது அங்கீகரிப்பது என்னை ! இன்னும் முதனூல்களாகிய வேதாகமங்களிலே கூறப் பட்ட விஷயங்களுட் பல சிவபுராணங்களிலே குறிப்பாகப் பொருள்கொள்ளக் கிடக்கும் . அது ஸ்ரீமந் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய சிவானுபூதிமான்கள் இயற்றிய பல சாத்திரங்களாலும் குருசம்பிரதாயத்தாலும் தெள்ளிதிற் றுணியப்பட்டது . மலபரிபாகம் உடையவர்களாய் சைவா சாரியர்களை அடைந்து வழிபட்டுக் கேட்கில் ; அவர்கள் சிவ புராணங்களுக்கு முதல் நூல்களோடு விரோதமறப் பொருள் உணர்த்துவார்கள் . அவைகளை எனக்கு விளங்கச் சொல்லல் வேண்டும் என்பாயாகில் ; சிவதூஷணம் கோமாமிசபக்ஷணம் முதலிய பெரும்பாதகங்களே செய்யும் உனக்கும் உன்போலி . களுக்கும் அவைகளைச்சொல்ல எங்களுக்குச் சிவனுடைய புண்ணியஸ்தலப் பிரகரணம் அனுமதியில்லை . நீ இவ்வுண்மையை அறியாது சிவபுராணங் களிலே குறிப்புப் பொருளாகக் கொள்ளற்பாலனவற்றைச் செம்பொருளாகக்கொண்டு அதுவே மெய்ப்பொருள் என்று துணிந்து ஈற்சமயலக்கணங்களெல்லாங் குறைவற அமைந்த சத்தியசமயமாகிய எங்கள் சைவத்தின்மேலே குற்றங்கள் ஏற்றப் புகுந்தமை மண்குதிரையை நம்பி ஆற்றின் வழிக் கொள்ளப் புகுந்தமைபோலும் . 5 2. புண்ணியஸ்தலப் பிரகரணம் தன் கொடிகட்டப்பட்ட தேசமெங்கும் தன் ஆணை செல்லும்படி அரசியற்றும் இராசாவானவன் குறைவேண்டி னோரும் முறை வேண்டினோரும் தன்னை எளிதில் வந்து காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல்போல் சர்வ லோகாதிநாயகராகிய சிவன் தம்மாலே பயன்பெற விரும்பிய சர்வான்மாக்களும் தம்மை வந்து வழிபட்டு உய்யும்படி சிதம்பரம் முதலிய தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி விருப்பார் . ஆதலால் அவைகள் புண்ணியஸ்தலங்களெனப் படும் . இராசாவானவன் தன்னானை தன் தேசமெங்கும் செல்லினும் சர்வ வியாபகத்துவமும் சர்வஞ்ஞத்துவமும் இல்லாதவனாகையால் சமஸ்தரும் தன்னை எளிதிற்காணும் BJL9 . அத்தாணியில் வீற்றிருத்தல் வெண்டும் என்பது ஒக்கும் : நடவுள் அவனைப்போலன்றிச் சர்வவியாபகத்துவ மும் சர்வஞ்ஞத்துவமும் உடையவராகையால் அவரை எவ்விடத்தினும் எவர்களும் வழிபட்டு அதுக்கிரகம் பெற்றுக் கொள்ளலாமே என்பாயாகில் ; அதுமெய்ம்மையே ! ஆயினும் தேவர்கள் இருடிகள் முதலிய பெரியோர்கள் ஒவ்வோரிடங் களிலே கடவுளை அன்போடு பூசித்து அவர் சத்திகாரிய Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org