சைவ தூஷண பரிகாரம்

10 சைவதூஷணபரிகாரம் இவ்வசனங்களினாலே உன் கடவுளுக்கும் விசேஷ ஸ்தலங்கள் உண்டென்பது துணியப்படுகின்றது. அது கண்டும், நாங்கள் சிவனுக்கு விசேஷஸ்தலங்கள் உண்டென்று எங்கள் சாத்திரங்களாலே துணிந்து, அவைகளுக்கு யாத் திரை செய்தலை நீ இகழ்வது அறியாமையன்றோ? 3. ஆலயப் பிரகரணம் புண்ணியஸ்தலங்களிலே அறிவுள்ளவர்களும் அறிவில் லாதவர்களும் ஆகிய சகலருங் கூடிக் கடவுளை அன்போடு வழிபட்டு உய்யும்பொருட்டு விதிப்படி ஆலயங்களைக் கட்டிப் பிரதிட்டை பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன. யாத். 35-ம் அதிகாரந் தொடங்கி 40-ம் அதிகாரம் வரைக்கும் மோசே என்பவன் உன்தேவனுடைய ஆஞ்ஞைப் படி அவனுக்கு ஒரு ஆவாசத்தை உண்டாக்கிப் பிரதிட்டை பண்ணினான் என்று சொல்லப்படுகின்றது. 2. நாளா 6. 79. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங் கட்ட என் பிதாவாகிய தாவீது அபிப்பிராயங் கொண்டிருந்தார். யெகோவா என் பிதாவை நோக்கி, என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய், நீ கோண்ட அபிப்பிராயம் நல்லது; ஆனாலும் நீ அந்த ஆலயத் தைக் கட்டமாட்டாய். உன்னுதரத்திற்றோன்றும் புத்திரனே என்பேரால் ஒரு ஆலயங்கட்டுவான் என்று சொல்லியிருந்தார். 1.இராசா 6-ம், 8-ம் அதிகாரங்களில் சலோமோன் யெருஷ லேமிலே உன்தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டிப் பிர ட்டை செய்தானென்றும், எஸ்றா. 6 - ம்- அதிகாரத்திலே இலிங்கப் பிரகரணம் யெரூஷலேமிலே உன் தேவனுடைய ஆஞ்ஞைப்படி ஆலயம் திரும்பவும் கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 11 இவ்வாறே உன் கடவுளுக்கும் ஆலயங்கட்டிப் பிர திட்டை செய்தல் புண்ணியமென்றும், அதனைப் பலர் செய்தார்களென்றும், உன் சமய நூல் பேசுகின்றது அஃதுணர்ந்தும், நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்று எங்கள் சாத்திரங்க ளாலே தெளிந்து, அவ்வாறு செய்தலும் அங்கேகூடி அவரை வழிபடுதலும் விருதாவென்று நீ புலம்புவது என்னை! 4. இலிங்கப் பிரகரணம் வியத்தலிங்கம் அவ்வியத்தலிங்கம் வியத்தாவியத்த லிங்கம் * என்னும் மூவகை இலிங்கங்களை,வரிவடி வெழுத்தை ஒலிவடிவெழுத்திற்கு அறிகுறியாகக் கொள்ளுதல்போலக் கடவுளுக்கு அறிகுறியாகவும், அதிட்டேயமாகவும் கொண்டு, அவரை அவற்றினிடத்தே விதிப்படி ஆவாகனம் பண்ணிப் பூசித்து வழிபடில், பாலானது பசுவினுடம்பெங்கும் வியாபித் திருப்பினும், கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஒழுகுதல்போல், அவர் தாம் சமஸ்தப்பிரபஞ்சத்தும் நிறைந் திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள்செய்வார் என்று சிவர்கமங்கள் செப்புகின்றன, * வியத்தலிங்கம் - எல்லா அவயவங்களும் வெளிப்பட்டிருக் கும் சந்திரசேகரர் முதலிய இருபத்தைந்து விக்கிரகங்கள். அவ் வியத்தலிங்கம் -- அவைகள் வெளிப்படாதத பீடமும் சிவ லிங்கமுமாய் இருப்பது. வியத்தாவியத்தலிங்கம் முகமுந் தோள் களுமாத்திரம் வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம்.
10 சைவதூஷணபரிகாரம் இவ்வசனங்களினாலே உன் கடவுளுக்கும் விசேஷ ஸ்தலங்கள் உண்டென்பது துணியப்படுகின்றது . அது கண்டும் நாங்கள் சிவனுக்கு விசேஷஸ்தலங்கள் உண்டென்று எங்கள் சாத்திரங்களாலே துணிந்து அவைகளுக்கு யாத் திரை செய்தலை நீ இகழ்வது அறியாமையன்றோ ? 3. ஆலயப் பிரகரணம் புண்ணியஸ்தலங்களிலே அறிவுள்ளவர்களும் அறிவில் லாதவர்களும் ஆகிய சகலருங் கூடிக் கடவுளை அன்போடு வழிபட்டு உய்யும்பொருட்டு விதிப்படி ஆலயங்களைக் கட்டிப் பிரதிட்டை பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன . யாத் . 35 - ம் அதிகாரந் தொடங்கி 40 - ம் அதிகாரம் வரைக்கும் மோசே என்பவன் உன்தேவனுடைய ஆஞ்ஞைப் படி அவனுக்கு ஒரு ஆவாசத்தை உண்டாக்கிப் பிரதிட்டை பண்ணினான் என்று சொல்லப்படுகின்றது . 2. நாளா 6 . 79. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங் கட்ட என் பிதாவாகிய தாவீது அபிப்பிராயங் கொண்டிருந்தார் . யெகோவா என் பிதாவை நோக்கி என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய் நீ கோண்ட அபிப்பிராயம் நல்லது ; ஆனாலும் நீ அந்த ஆலயத் தைக் கட்டமாட்டாய் . உன்னுதரத்திற்றோன்றும் புத்திரனே என்பேரால் ஒரு ஆலயங்கட்டுவான் என்று சொல்லியிருந்தார் . 1.இராசா 6 - ம் 8 - ம் அதிகாரங்களில் சலோமோன் யெருஷ லேமிலே உன்தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டிப் பிர ட்டை செய்தானென்றும் எஸ்றா . 6 - ம்- அதிகாரத்திலே இலிங்கப் பிரகரணம் யெரூஷலேமிலே உன் தேவனுடைய ஆஞ்ஞைப்படி ஆலயம் திரும்பவும் கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 11 இவ்வாறே உன் கடவுளுக்கும் ஆலயங்கட்டிப் பிர திட்டை செய்தல் புண்ணியமென்றும் அதனைப் பலர் செய்தார்களென்றும் உன் சமய நூல் பேசுகின்றது அஃதுணர்ந்தும் நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்று எங்கள் சாத்திரங்க ளாலே தெளிந்து அவ்வாறு செய்தலும் அங்கேகூடி அவரை வழிபடுதலும் விருதாவென்று நீ புலம்புவது என்னை ! 4. இலிங்கப் பிரகரணம் வியத்தலிங்கம் அவ்வியத்தலிங்கம் வியத்தாவியத்த லிங்கம் * என்னும் மூவகை இலிங்கங்களை வரிவடி வெழுத்தை ஒலிவடிவெழுத்திற்கு அறிகுறியாகக் கொள்ளுதல்போலக் கடவுளுக்கு அறிகுறியாகவும் அதிட்டேயமாகவும் கொண்டு அவரை அவற்றினிடத்தே விதிப்படி ஆவாகனம் பண்ணிப் பூசித்து வழிபடில் பாலானது பசுவினுடம்பெங்கும் வியாபித் திருப்பினும் கன்றைக் கண்டபொழுது முலைவழியாகவே ஒழுகுதல்போல் அவர் தாம் சமஸ்தப்பிரபஞ்சத்தும் நிறைந் திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருள்செய்வார் என்று சிவர்கமங்கள் செப்புகின்றன * வியத்தலிங்கம் - எல்லா அவயவங்களும் வெளிப்பட்டிருக் கும் சந்திரசேகரர் முதலிய இருபத்தைந்து விக்கிரகங்கள் . அவ் வியத்தலிங்கம் -- அவைகள் வெளிப்படாதத பீடமும் சிவ லிங்கமுமாய் இருப்பது . வியத்தாவியத்தலிங்கம் முகமுந் தோள் களுமாத்திரம் வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம் .