சைவ தூஷண பரிகாரம்

18 சைவதூஷணபரிகாரம் அவனுடைய தகன ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவந்து, அவ னுடைய பிராயச்சித்தபலியையும், பலியையும், நிவேதனம்பண்ணி, ஆட்டுக்கடாவைக் கூடையி லுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேகூட, யெகோவா வுக்கு ஸ்தோத்திரபலியா யிடக்கடவன்; அன்றியும் ஆசாரி யன் நைவேத்தியத்துடனே பானபலியைச் செலுத்துவானாக. லேவி. 24.5-9. நீ மெல்லியமாவை எடுத்து ஒவ்வொரு அப்பம், ஒரு ஏபாவிற் பத்தில் இரண்டுபங்குள்ளதாகப் பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும். நீ அவைகளை யெகோ வாவின் சந்நிதியில் பரிசுத்தபீடத்தின்மேல் ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு இருக்கும்படி இரண்டு அடுக்காக வைத்து யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும்பொருட்டு, அடுக்குத்தோறுஞ் சுத்த குந்துருவை யிடக்கடவாய். அவைகளை நித்தியவுடன்படிக் கையாய் இஸ்ரவேல் சந்ததியார் கையில் வாங்கி ஓய்வுநாள் தோறும் யெகோவாவின் சந்நிதியில் அடுக்கிவைக்கக் கடவன். நித்திய நியமமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமான வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திர ருக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்தில் புசிக்கக்கடவர்கள். இன்னும் நைவேத்தியத்தைக் குறித்து யாத். 29ம் அதிகாரத்திலும் லேவி. 3,4ம் அதிகாரங் களிலும் பிறவிடங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது. இங்கே எடுத்துச்சொல்லிற் பெருகும். இப்படியே உன் சமய நூலிலும் நிவேதனம் விதிக்கப் பட்டமைகண்டும், நீ நாங்கள் எங்கள் கடவுளுக்கு நிவேத னம்பண்ணுதலை அறிந்து, நீங்கள் அன்னம் பழம் முதலிய தூபதீபப் பிரகரணம் வைகளை இலிங்கத்துக்கு முன் படைக்கிறீர்களே; அது அவைகளை உண்ணுமா என்று இகழ்கின்றாய். இதனால் பூர்வகாலத்திலே உன் யெகோவா பசியினால் தமக்குமுன் படைத்தவைகளை உண்டாரென்பதே உன் கருத்தென்று தோன்றுகின்றது. 19 7. தூபதீபப் பிரகரணம் இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யுங்கடவுளைத் தூபதீபங்களினாலே விதிப்படி பூசித்தல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்கின்றன. யாத்.30.34-36. யெகோவா மோசேயை நோக்கி வடிந்த வெள்ளைப்போளமும், குங்குலியமும் சாம்பிராணியு மாகிய சுகந்ததிரவியங்களையும், பரிசுத்தமான குந்துருவை யும் சமநிறையாக எடுத்து, பரிமளத்தைலக்காரன் செய்கிறது போல அவைகளைக் கலந்து நிர்மலபரிசுத்தசுகந்த தூபமாக்கு வாயாக. அதில் ஒருபங்கை இடித்துப் பொடியாக்கி, நான் உன்னைச்சந்திக்கும் சபையின் ஆவாசத்திலிருக்கும் சாட்சிப் பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். அது உங்களுக்கு மிகவும் பரிசுத்தமா யிருக்கவேண்டும். லேவி.16,12,13. யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தன்தூபகலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தில் தன்கைநிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து, தான் சாகா சாகாதிருக் கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின் மேலிருக்குங் கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப் போடக்கடவன் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
18 சைவதூஷணபரிகாரம் அவனுடைய தகன ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவந்து அவ னுடைய பிராயச்சித்தபலியையும் பலியையும் நிவேதனம்பண்ணி ஆட்டுக்கடாவைக் கூடையி லுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேகூட யெகோவா வுக்கு ஸ்தோத்திரபலியா யிடக்கடவன் ; அன்றியும் ஆசாரி யன் நைவேத்தியத்துடனே பானபலியைச் செலுத்துவானாக . லேவி . 24.5-9 . நீ மெல்லியமாவை எடுத்து ஒவ்வொரு அப்பம் ஒரு ஏபாவிற் பத்தில் இரண்டுபங்குள்ளதாகப் பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும் . நீ அவைகளை யெகோ வாவின் சந்நிதியில் பரிசுத்தபீடத்தின்மேல் ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு இருக்கும்படி இரண்டு அடுக்காக வைத்து யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும்பொருட்டு அடுக்குத்தோறுஞ் சுத்த குந்துருவை யிடக்கடவாய் . அவைகளை நித்தியவுடன்படிக் கையாய் இஸ்ரவேல் சந்ததியார் கையில் வாங்கி ஓய்வுநாள் தோறும் யெகோவாவின் சந்நிதியில் அடுக்கிவைக்கக் கடவன் . நித்திய நியமமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமான வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திர ருக்கும் உரித்தாகும் ; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்தில் புசிக்கக்கடவர்கள் . இன்னும் நைவேத்தியத்தைக் குறித்து யாத் . 29 ம் அதிகாரத்திலும் லேவி . 3 ம் அதிகாரங் களிலும் பிறவிடங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக் கின்றது . இங்கே எடுத்துச்சொல்லிற் பெருகும் . இப்படியே உன் சமய நூலிலும் நிவேதனம் விதிக்கப் பட்டமைகண்டும் நீ நாங்கள் எங்கள் கடவுளுக்கு நிவேத னம்பண்ணுதலை அறிந்து நீங்கள் அன்னம் பழம் முதலிய தூபதீபப் பிரகரணம் வைகளை இலிங்கத்துக்கு முன் படைக்கிறீர்களே ; அது அவைகளை உண்ணுமா என்று இகழ்கின்றாய் . இதனால் பூர்வகாலத்திலே உன் யெகோவா பசியினால் தமக்குமுன் படைத்தவைகளை உண்டாரென்பதே உன் கருத்தென்று தோன்றுகின்றது . 19 7. தூபதீபப் பிரகரணம் இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யுங்கடவுளைத் தூபதீபங்களினாலே விதிப்படி பூசித்தல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்கின்றன . யாத்.30.34-36 . யெகோவா மோசேயை நோக்கி வடிந்த வெள்ளைப்போளமும் குங்குலியமும் சாம்பிராணியு மாகிய சுகந்ததிரவியங்களையும் பரிசுத்தமான குந்துருவை யும் சமநிறையாக எடுத்து பரிமளத்தைலக்காரன் செய்கிறது போல அவைகளைக் கலந்து நிர்மலபரிசுத்தசுகந்த தூபமாக்கு வாயாக . அதில் ஒருபங்கை இடித்துப் பொடியாக்கி நான் உன்னைச்சந்திக்கும் சபையின் ஆவாசத்திலிருக்கும் சாட்சிப் பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும் . அது உங்களுக்கு மிகவும் பரிசுத்தமா யிருக்கவேண்டும் . லேவி .16 . யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தன்தூபகலசத்தை நிறைத்து தூளாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தில் தன்கைநிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து தான் சாகா சாகாதிருக் கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின் மேலிருக்குங் கிருபாசயத்தை மூடத்தக்கதாக யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப் போடக்கடவன் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org