சைவ தூஷண பரிகாரம்

8-ம் பதிப்பு. துன்முகி, ஆவணி செப்டம்பர், 1956. (உரிமையுடையது.) வித்தியாநுபாலன அச்சகம், நெ.300, தங்கசாலைத் தெரு, சென்னை-1 சிவமயம். கடவுள் வணக்கம் சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச் சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப் பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப் பிறைபூத்த சடைமவுலிப் பிரானார் தந்த வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம். உபோற்காதம் அநாதி பகவானாகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாக மங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம். இச் சற்சமயம் வழங்கும் நமது ஆரியகண்டத்திலே மிலேச்சர்க ளாகிய பாதிரிகள் புகுந்து, இச்சைவத்தை விளக்கும் சிவ சாத்திரங்களைச் சிறிதும் அறியாமையினாலும், தாங்கள் முன்னே தழுவிக்கொண்ட துர்ச்சமயமாகிய கிறிஸ்து மதத்தின் மேல்வைத்த துரபிமானத்தினாலும், அப்புன் மதத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதிற் பொருள் வரும்வழியாய் இருத்தலாலும், இச்சைவத்தை வாய்மொழி யாலும் குருட்டுவழிமுதலிய பல புத்தகங்களாலும் அநியாய மாகவே தூஷிக்கின்றார்கள். Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
8 - ம் பதிப்பு . துன்முகி ஆவணி செப்டம்பர் 1956 . ( உரிமையுடையது . ) வித்தியாநுபாலன அச்சகம் நெ .300 தங்கசாலைத் தெரு சென்னை -1 சிவமயம் . கடவுள் வணக்கம் சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச் சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப் பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப் பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப் பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப் பிறைபூத்த சடைமவுலிப் பிரானார் தந்த வார்பூத்த வறிவிச்சை தொழிலென் றோது மதம்பூத்த விநாயகன்றாள் வணங்கி வாழ்வாம் . உபோற்காதம் அநாதி பகவானாகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாக மங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம் . இச் சற்சமயம் வழங்கும் நமது ஆரியகண்டத்திலே மிலேச்சர்க ளாகிய பாதிரிகள் புகுந்து இச்சைவத்தை விளக்கும் சிவ சாத்திரங்களைச் சிறிதும் அறியாமையினாலும் தாங்கள் முன்னே தழுவிக்கொண்ட துர்ச்சமயமாகிய கிறிஸ்து மதத்தின் மேல்வைத்த துரபிமானத்தினாலும் அப்புன் மதத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதிற் பொருள் வரும்வழியாய் இருத்தலாலும் இச்சைவத்தை வாய்மொழி யாலும் குருட்டுவழிமுதலிய பல புத்தகங்களாலும் அநியாய மாகவே தூஷிக்கின்றார்கள் . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org