சைவ தூஷண பரிகாரம்

22. தவப் பிரகரணம் ஆன்மாக்களுக்கு மனிதப்பிறப்புக்கிடைத்தது சிவனை வழிபட்டு நித்தியமாய் ஆனந்தமாயுள்ள முத்தியையடைதற் பொருட்டாகலால், அதற்கு விக்கினமாயுள்ள மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்னும் மூன்றையும் முழுமை யும் வெறுத்துத்தள்ளி, தவ்வேடந்தரித்து, வனத்தில் வாசஞ் செய்துகொண்டு, உண்டிசுருக்குதல் செய்து, ஐம் பொறிகளையும் அடக்கி, சிவனை நினைந்து தவம்பண்ணுதல் பெரும்புண்ணியம் என்று சைவ நூல்கள் சாற்றுகின்றன. ஆசைகள் மூன்றையும் முழுமையும் நீக்கவேண்டிய அவசியம்யாது? வேடத்தினாற் பயன்யாது? உண்டி சுருக்கு தலினாற் பயன்யாது? இப்படித் தவம்பண்ணினதினாலே மோக்ஷம் சேரலாமா? என்பாயாகில், சொல்வோம் கேள். மண் பொன் பெண் என்னும் மூன்றும் அநித்தியமுந் துக்கந்தருவனவுமாயிருத்தலாலும், அவற்றின்மேலாசை யுண்டாயவழிக் கடவுள்மேல் அன்புவைத்தல் கூடாமை யாலும், அவற்றோடு கூடிய வழி ஆசையுண்டாதல் ஒருதலை ஆதலாலும், அவைகளை முழுமையும் வெறுத்து ஒழித்தல் வேண்டும். அங்ஙனம் எல்லாப்பொருளையும் ஒழித்து ஒரு பொருளை ஒழியாவழியும், பெருநெருப்பைத் தணித்து ஒரு சிறுபொறியை இதுயாதுசெய்யுமென்று தணியாவிடத்தும் அது பக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றினும் அதிசீக்கிர மாகப் பற்றிப் பின்னுமெரிந்தாற்போல, அவ்வொருபொரு ளாசை முன் விடப்பட்டவெல்லாப் பொருளாசைகளையும் மீண்டும் வருவித்து, பண்ணியசங்கற்பத்தை அழித்துத் தவத்திற்கு இடையூறாய்க் கலக்கஞ்செய்யும். ஆகையால் அவைகள் எல்லாவற்றையும் ஒருங்கே விடுதலே தகுதியாம். தவப் பிரகரணம் 1.கொரி.7.1,32,33,40. ஸ்திரீயைத் தொடாம லிருப்பது மனுஷனுக்கு நலம். நீங்கள் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்பதே என்வாஞ்சை. விவாகமில்லா தவன், கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி கர்த்தருக்கு ஏற்றவை களைக் குறித்து விசாரமாயிருப்பான். விவாகம் பண்ணின வன், மனைவியைப் பிரியப்படுத்தும்படி உலகத்துக்கேற்றவை களுக்காகக் கவலைப்படுவான். அவள் விவாகம்பண்ணாமல் இருந்தால் அதிக சௌக்கியத்தை அனுபவிப்பாள். மத்.19. 10-12. அவருடைய சீஷர் அவரைநோக்கி, ஸ்திரீயுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமேயாகில், விவாகம் பண்ணுவது நன்மையல்லவென்றார்கள். அவர், அவர்க ளுடனே, எவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களே பன்றி, மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்றார்கள், அண்ணகர்க ளுண்டு, சிலர் மாதாவின் கருப்பத்தில் அப்படியே பிறந்தார் சிலர் மற்றைமனுஷர்களால் அண்ணகர்களாகப்பட் டார்கள். சிலர் பரமராச்சியத்தினிமித்தம் தங்களை அண்ண கர்களாக்கினார்கள். இதற்குடன்பட வல்லவனெவனோ, அவன் உடன்படக்கடவனென்றார். ஓஷ அதி.23, 24. யேசு தம்முடைய சீஷரைநோக்கி, ஐசுவரியவான் தேவனுடைய பரமராச்சியத்திற் பிரவேசிப்பதரிதென்று மெய்யாய் உங்க ளுக்குச் சொல்லுகின்றேன்: ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்பதிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்லு கின்றேன் என்றார்.ஷை. அதி.29. என் நாமத்தினிமித்தம் வீடுகளையாகிலும் சகோதாரையாகிலும், சகோதரிகளை யாகிலும், பிதாவையாகிலும், மாதாவையாகிலும், மனைவியை யாகிலும், பிள்ளையையாகிலும், நிலங்களையாகிலும், விட்டவ னெவனோ அவன் நூறுமடங்கு பலன்பெற்று, நித்தியசீவனை கள். 53 Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
22. தவப் பிரகரணம் ஆன்மாக்களுக்கு மனிதப்பிறப்புக்கிடைத்தது சிவனை வழிபட்டு நித்தியமாய் ஆனந்தமாயுள்ள முத்தியையடைதற் பொருட்டாகலால் அதற்கு விக்கினமாயுள்ள மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்னும் மூன்றையும் முழுமை யும் வெறுத்துத்தள்ளி தவ்வேடந்தரித்து வனத்தில் வாசஞ் செய்துகொண்டு உண்டிசுருக்குதல் செய்து ஐம் பொறிகளையும் அடக்கி சிவனை நினைந்து தவம்பண்ணுதல் பெரும்புண்ணியம் என்று சைவ நூல்கள் சாற்றுகின்றன . ஆசைகள் மூன்றையும் முழுமையும் நீக்கவேண்டிய அவசியம்யாது ? வேடத்தினாற் பயன்யாது ? உண்டி சுருக்கு தலினாற் பயன்யாது ? இப்படித் தவம்பண்ணினதினாலே மோக்ஷம் சேரலாமா ? என்பாயாகில் சொல்வோம் கேள் . மண் பொன் பெண் என்னும் மூன்றும் அநித்தியமுந் துக்கந்தருவனவுமாயிருத்தலாலும் அவற்றின்மேலாசை யுண்டாயவழிக் கடவுள்மேல் அன்புவைத்தல் கூடாமை யாலும் அவற்றோடு கூடிய வழி ஆசையுண்டாதல் ஒருதலை ஆதலாலும் அவைகளை முழுமையும் வெறுத்து ஒழித்தல் வேண்டும் . அங்ஙனம் எல்லாப்பொருளையும் ஒழித்து ஒரு பொருளை ஒழியாவழியும் பெருநெருப்பைத் தணித்து ஒரு சிறுபொறியை இதுயாதுசெய்யுமென்று தணியாவிடத்தும் அது பக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றினும் அதிசீக்கிர மாகப் பற்றிப் பின்னுமெரிந்தாற்போல அவ்வொருபொரு ளாசை முன் விடப்பட்டவெல்லாப் பொருளாசைகளையும் மீண்டும் வருவித்து பண்ணியசங்கற்பத்தை அழித்துத் தவத்திற்கு இடையூறாய்க் கலக்கஞ்செய்யும் . ஆகையால் அவைகள் எல்லாவற்றையும் ஒருங்கே விடுதலே தகுதியாம் . தவப் பிரகரணம் 1.கொரி .7.1 . ஸ்திரீயைத் தொடாம லிருப்பது மனுஷனுக்கு நலம் . நீங்கள் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்பதே என்வாஞ்சை . விவாகமில்லா தவன் கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி கர்த்தருக்கு ஏற்றவை களைக் குறித்து விசாரமாயிருப்பான் . விவாகம் பண்ணின வன் மனைவியைப் பிரியப்படுத்தும்படி உலகத்துக்கேற்றவை களுக்காகக் கவலைப்படுவான் . அவள் விவாகம்பண்ணாமல் இருந்தால் அதிக சௌக்கியத்தை அனுபவிப்பாள் . மத் .19 . 10-12 . அவருடைய சீஷர் அவரைநோக்கி ஸ்திரீயுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமேயாகில் விவாகம் பண்ணுவது நன்மையல்லவென்றார்கள் . அவர் அவர்க ளுடனே எவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களே பன்றி மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்றார்கள் அண்ணகர்க ளுண்டு சிலர் மாதாவின் கருப்பத்தில் அப்படியே பிறந்தார் சிலர் மற்றைமனுஷர்களால் அண்ணகர்களாகப்பட் டார்கள் . சிலர் பரமராச்சியத்தினிமித்தம் தங்களை அண்ண கர்களாக்கினார்கள் . இதற்குடன்பட வல்லவனெவனோ அவன் உடன்படக்கடவனென்றார் . ஓஷ அதி .23 24. யேசு தம்முடைய சீஷரைநோக்கி ஐசுவரியவான் தேவனுடைய பரமராச்சியத்திற் பிரவேசிப்பதரிதென்று மெய்யாய் உங்க ளுக்குச் சொல்லுகின்றேன் : ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்பதிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்லு கின்றேன் என்றார்.ஷை . அதி .29 . என் நாமத்தினிமித்தம் வீடுகளையாகிலும் சகோதாரையாகிலும் சகோதரிகளை யாகிலும் பிதாவையாகிலும் மாதாவையாகிலும் மனைவியை யாகிலும் பிள்ளையையாகிலும் நிலங்களையாகிலும் விட்டவ னெவனோ அவன் நூறுமடங்கு பலன்பெற்று நித்தியசீவனை கள் . 53 Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org