சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷணபரிகாரம் புண்ணியங்களை உன் சமய நூலில் வந்தவழிக்கண்டுகொள்க. ஒருவன் அற்ப பாவத்தினாலே நரகடைவானெனின், அற்ப புண்ணியத்தினாலே ஒருவன் மோக்ஷமடைதலுங் கூடுமே. பாவத்தினால் வருந் துன்பம் அவனுக்கு உண்டெனில், புண்ணியத்தினால்வரும் இன்பமும் அவனுக்கு உண்டென்ப தற்குச் சந்தேகமில்லையே. லூக்.7.36--48. பரிசேயரில் ஒருவன் தன்னுடன் போசனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப் பந்தியிருந் தார். பரிசேயனுடைய வீட்டிலே பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாவியாகிய ஒருஸ்திரீ அறிந்து, ஒருபரணியிற் சுகந்த தைலத்தைக் கொண்டுவந்து, அவருடைய பாதங்களி னருகே பின்னாகநின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங் களைக் கண்ணீரினாலே கழுவி, தன் தலைமயிரினாலே துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, சுகந்ததைலத்தைப் பூசினாள். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட பொழுது, இவள் பாவியே. இவர் தீர்க்கதரிசியானால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும், இப்படிப் பட்டவளென்றும் அறிந்திருப்பாரென்று தனக்குள் எண் ணிக்கொண்டான். அப்பொழுது யேசு அவனை நோக்கி சீமோனே, உனக்கு ஒன்றைச்சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல, அவன் போதகரே, சொல்லுமென்றான். காரன் ஒருவனுக்குக் கடனாளிகள் இரண்டுபேரிருந்தார்கள், அவர்களில் ஒருவன் ஐந்நூறு தேனாரியக்காசும், மற்றவன் ஐம்பதுங் கொடுக்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் கொடுக் கிறதற்குத் திராணியில்லாதவர்களா யிருந்தபொழுது, இருவ ருக்குங் கடனை மன்னித்தான். அவர்களில் எவன் அவனிடத் தில் அதிக அன்பாயிருப்பான்; அதை எனக்குச் சொல் 64 கடன் விவேசனம் Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 65 லென்று கேட்க, சீமோன் அவருக்குத்தரமாக மிகுதிக்கு மன்னிப்புப் பெற்றவனேயென்று நினைக்கிறேனென்றான். அப்பொழுது அவர் நீ யதார்த்தமாய்த் தீர்த்தாயென்று சொல்லி, பின்பு ஸ்திரீக்கு நேரே திரும்பி,சீமோனைநோக்கி இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயா; நான் உன்வீட்டில் வந்த பொழுது நீ என் கால்களுக்காகத் தண்ணீரைத் தரவில்லை; இவளோ கண்ணீரினால் என்கால்களைக்கழுவி, தன் தலை மயிராலே துடைத்தாள்.நீ என்னை முத்தஞ்செய்யவில்லை; நான் இங்கே பிரவேசித்தது முதல் இவள் என்பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்கிறாள். நீ என்தலைக்கு எண்ணெயிட வில்லை: இவளோ சுகந்த தைலத்தை என்பாதங்களிற் பூசினாள்; ஆதலால் இவள் தான் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பாயிருக்கிறா ளென்று உனக்குச்சொல்லுகிறேன்; கொஞ்சமாக மன்னிப்புப் பெற்றவனெவனோ அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்லி, பின்பு அவளைநோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டனவென்றார். இவ்வாறே அற்ப புண்ணியங்களினாலே பெரும் பாதகங்களும் நிவாரணமாகுமென்றும், அநேக பாவங்களைப் பொறுத்து விடுதலே தகுதியென்றும், உன் னுடைய சமயசாத்திரத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்பட்ட அற்ப புண்ணியத்திற்குப் பயன்கிடைக்குமா? அதுபொய்: அப்படிவிதித்த தேவனும் பொய்த்தேவன்; அப்படிச் சொன்ன சமயநூலும் பொய்ந்நூல்; அது மெய்யாகில், உலகத்தில் உள்ள சகலரும் உள்ளநாள் எல்லாம் பெரும் பாதகங்களைச் செய்து, இறக்கும்போதாயினும் அதற்கு முன்னாயினும், அப்படியொரு அற்பபுண்ணியஞ்செய்து மோக்ஷம்சேரலாமே: ஒரு அற்பபுண்ணியத்தைச்செய்து 5
சைவதூஷணபரிகாரம் புண்ணியங்களை உன் சமய நூலில் வந்தவழிக்கண்டுகொள்க . ஒருவன் அற்ப பாவத்தினாலே நரகடைவானெனின் அற்ப புண்ணியத்தினாலே ஒருவன் மோக்ஷமடைதலுங் கூடுமே . பாவத்தினால் வருந் துன்பம் அவனுக்கு உண்டெனில் புண்ணியத்தினால்வரும் இன்பமும் அவனுக்கு உண்டென்ப தற்குச் சந்தேகமில்லையே . லூக்.7.36--48 . பரிசேயரில் ஒருவன் தன்னுடன் போசனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான் . அவர் பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப் பந்தியிருந் தார் . பரிசேயனுடைய வீட்டிலே பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாவியாகிய ஒருஸ்திரீ அறிந்து ஒருபரணியிற் சுகந்த தைலத்தைக் கொண்டுவந்து அவருடைய பாதங்களி னருகே பின்னாகநின்று அழுதுகொண்டு அவருடைய பாதங் களைக் கண்ணீரினாலே கழுவி தன் தலைமயிரினாலே துடைத்து அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து சுகந்ததைலத்தைப் பூசினாள் . அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட பொழுது இவள் பாவியே . இவர் தீர்க்கதரிசியானால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப் பட்டவளென்றும் அறிந்திருப்பாரென்று தனக்குள் எண் ணிக்கொண்டான் . அப்பொழுது யேசு அவனை நோக்கி சீமோனே உனக்கு ஒன்றைச்சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல அவன் போதகரே சொல்லுமென்றான் . காரன் ஒருவனுக்குக் கடனாளிகள் இரண்டுபேரிருந்தார்கள் அவர்களில் ஒருவன் ஐந்நூறு தேனாரியக்காசும் மற்றவன் ஐம்பதுங் கொடுக்கவேண்டியதாயிருந்தது . அவர்கள் கொடுக் கிறதற்குத் திராணியில்லாதவர்களா யிருந்தபொழுது இருவ ருக்குங் கடனை மன்னித்தான் . அவர்களில் எவன் அவனிடத் தில் அதிக அன்பாயிருப்பான் ; அதை எனக்குச் சொல் 64 கடன் விவேசனம் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org 65 லென்று கேட்க சீமோன் அவருக்குத்தரமாக மிகுதிக்கு மன்னிப்புப் பெற்றவனேயென்று நினைக்கிறேனென்றான் . அப்பொழுது அவர் நீ யதார்த்தமாய்த் தீர்த்தாயென்று சொல்லி பின்பு ஸ்திரீக்கு நேரே திரும்பி சீமோனைநோக்கி இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயா ; நான் உன்வீட்டில் வந்த பொழுது நீ என் கால்களுக்காகத் தண்ணீரைத் தரவில்லை ; இவளோ கண்ணீரினால் என்கால்களைக்கழுவி தன் தலை மயிராலே துடைத்தாள்.நீ என்னை முத்தஞ்செய்யவில்லை ; நான் இங்கே பிரவேசித்தது முதல் இவள் என்பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்கிறாள் . நீ என்தலைக்கு எண்ணெயிட வில்லை : இவளோ சுகந்த தைலத்தை என்பாதங்களிற் பூசினாள் ; ஆதலால் இவள் தான் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பாயிருக்கிறா ளென்று உனக்குச்சொல்லுகிறேன் ; கொஞ்சமாக மன்னிப்புப் பெற்றவனெவனோ அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்லி பின்பு அவளைநோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டனவென்றார் . இவ்வாறே அற்ப புண்ணியங்களினாலே பெரும் பாதகங்களும் நிவாரணமாகுமென்றும் அநேக பாவங்களைப் பொறுத்து விடுதலே தகுதியென்றும் உன் னுடைய சமயசாத்திரத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது . அதுகண்டும் சற்றேனும் பிரயாசமின்றிச் செய்யப்பட்ட அற்ப புண்ணியத்திற்குப் பயன்கிடைக்குமா ? அதுபொய் : அப்படிவிதித்த தேவனும் பொய்த்தேவன் ; அப்படிச் சொன்ன சமயநூலும் பொய்ந்நூல் ; அது மெய்யாகில் உலகத்தில் உள்ள சகலரும் உள்ளநாள் எல்லாம் பெரும் பாதகங்களைச் செய்து இறக்கும்போதாயினும் அதற்கு முன்னாயினும் அப்படியொரு அற்பபுண்ணியஞ்செய்து மோக்ஷம்சேரலாமே : ஒரு அற்பபுண்ணியத்தைச்செய்து 5