சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷண பரிகாரம் இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அனேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்றார். இப்படியே அப்பமும் திராட்சரசமும் உன்தேவனாலே நியமிக்கப்பட்டமையால், விசேஷமடைந் தனவென்பது உன் சமய நூலிலே காணப்படுகின்றது. அவ்வாறே நீயும் இப்பொழுது இராப்போசனம் உட்கொள்ள விரும்பி, உன்சபையார் எல்லாரும் சூழ்ந்திருப்ப,அப்பத்தை யும் மதுவையும் கொண்டுவந்து, பீடத்தின் மேலே வைத்து, உங்கள் தேவனைநோக்கி, அவைகளை ஆசீர்வதிக்கும்படி விண்ணப்பம் பண்ணினதன்மேல், அவைகள் அவராலே ஆசீர்வதிக்கப்பட்டமை பற்றி அவருடைய சரீரமும் இரத்தமுமாய் விசேஷமடைந்தனவென்று துணிந்து, நீயும் உட்கொண்டு அச்சபையாருக்கும் உட்கொள்ளக் கொடுக் கின்றாயே. 68 சிவசிவ அரகர என்றற்றொடக்கத்துப் பெயர்கள் சிவ னுடைய திருநாமங்களாயிருக்கும் விசேஷத்தினாலே, அந்தப் புண்ணியநாமங்களை நினைப்பினும், நாவினால் உச்சரிப்பினும் பிறர்சொல்லக் கேட்பினும், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்க ளுண்டாம். கிறிஸ்துசமயத்திலே பிரவேசியாதவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஓட்டினார்க ளென்று, மாற்கு.9.38. வசனத்தினாலும், லூக்.9.49-ம் வசனத்தினாலும், தோன்றுகின்றது. அப்பிசாசுகளை யோட்டினவர்கள் கிறிஸ்துவை விசுவசியாதவர்களாகையால், அவருடைய நாமத்தினது விசேஷத்தினாலேயே அப்பிசாசு கள் பயந்தோடின என்பது சங்.9.3. "மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது' என்னும் வசனத்தினாலே விளங்கு கின்றது. விவேசனம் 69 விபூதி ருத்திராக்ஷங்கள் சிவனால் அணியப்பட்ட விசேஷம் உடையன ஆதலால், அந்தப்புண்ணியப் பொருள் களைத் தரிக்கின்றவர்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடு உடையவளாய், அநேக வைத்தியரிடத்தில் மிக வருத்தப்பட்டு, தனக்குண்டான யாவையும் செலவழித்தும் சற்றாயினும் சொஸ்தமடையாமல் மிகமெலிவடைந்த ஒரு ஸ்திரீ யேசுவைக்குறித்துக் கேள்விப் பட்டுப்போய், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட வுடனே, அவளுடைய இரத்த ஊறல் நின்றுபோயிற்று. அவள் உபத்திரவம் நீங்கி, ஆரோக்கியமடைந்தனள் என்றும், மாற்கு. 5.25--29. வசனங்களிலே சொல்லப்பட் டிருக்கின்றது. அவள் அந்த வஸ்திரத்தைத்தொட்ட உடனே நோய் நீங்கினமையால், அவ்வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அவளுடைய நோய் நீங்கிற்றென்று தோன்றுகின்றது. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org களிலே இலீஷா என்பவன் யோர்தான் நதிக்கரையிலே நின்று கொண்டு, இலீசாவினுடைய மேலங்கியினாலே சலத்தை அடிக்க; அது இருபுறமும் ஒதுங்கிப் பிரிவுபட்டது; இலீஷா கடந்துபோனான் என்று, 2. இரா.2.13, 14. வசனங் சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், அந்த வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அந்நதி இலீஷாவுக்கு வழிவிட்டது என்று காண்கின்றது. இப்படியே, புண்ணிய ஸ்தலம், புண்ணியகாலம், புண்ணியக்கிரியை முதலியவை களின் விசேஷத்தினாலே பாவம்நீங்கினமை வந்துழி வந்துழிக் கண்டுகொள்க. கிறிஸ்துவினுடைய சீஷர்கள் அவருடைய நாமத்தைச் சொல்லி, பிசாசுகளை ஓட்டினமையைக் கண்டு, கிறிஸ்து
சைவதூஷண பரிகாரம் இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப பாவமன்னிப்புக் கென்று அனேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்றார் . இப்படியே அப்பமும் திராட்சரசமும் உன்தேவனாலே நியமிக்கப்பட்டமையால் விசேஷமடைந் தனவென்பது உன் சமய நூலிலே காணப்படுகின்றது . அவ்வாறே நீயும் இப்பொழுது இராப்போசனம் உட்கொள்ள விரும்பி உன்சபையார் எல்லாரும் சூழ்ந்திருப்ப அப்பத்தை யும் மதுவையும் கொண்டுவந்து பீடத்தின் மேலே வைத்து உங்கள் தேவனைநோக்கி அவைகளை ஆசீர்வதிக்கும்படி விண்ணப்பம் பண்ணினதன்மேல் அவைகள் அவராலே ஆசீர்வதிக்கப்பட்டமை பற்றி அவருடைய சரீரமும் இரத்தமுமாய் விசேஷமடைந்தனவென்று துணிந்து நீயும் உட்கொண்டு அச்சபையாருக்கும் உட்கொள்ளக் கொடுக் கின்றாயே . 68 சிவசிவ அரகர என்றற்றொடக்கத்துப் பெயர்கள் சிவ னுடைய திருநாமங்களாயிருக்கும் விசேஷத்தினாலே அந்தப் புண்ணியநாமங்களை நினைப்பினும் நாவினால் உச்சரிப்பினும் பிறர்சொல்லக் கேட்பினும் பாவங்கள் நீங்கிப் புண்ணியங்க ளுண்டாம் . கிறிஸ்துசமயத்திலே பிரவேசியாதவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி பிசாசுகளை ஓட்டினார்க ளென்று மாற்கு .9.38 . வசனத்தினாலும் லூக் .9.49 - ம் வசனத்தினாலும் தோன்றுகின்றது . அப்பிசாசுகளை யோட்டினவர்கள் கிறிஸ்துவை விசுவசியாதவர்களாகையால் அவருடைய நாமத்தினது விசேஷத்தினாலேயே அப்பிசாசு கள் பயந்தோடின என்பது சங் .9.3 . மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக ; அது பரிசுத்தமுள்ளது ' என்னும் வசனத்தினாலே விளங்கு கின்றது . விவேசனம் 69 விபூதி ருத்திராக்ஷங்கள் சிவனால் அணியப்பட்ட விசேஷம் உடையன ஆதலால் அந்தப்புண்ணியப் பொருள் களைத் தரிக்கின்றவர்களுடைய பாவங்கள் நீங்குகின்றன . பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடு உடையவளாய் அநேக வைத்தியரிடத்தில் மிக வருத்தப்பட்டு தனக்குண்டான யாவையும் செலவழித்தும் சற்றாயினும் சொஸ்தமடையாமல் மிகமெலிவடைந்த ஒரு ஸ்திரீ யேசுவைக்குறித்துக் கேள்விப் பட்டுப்போய் அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட வுடனே அவளுடைய இரத்த ஊறல் நின்றுபோயிற்று . அவள் உபத்திரவம் நீங்கி ஆரோக்கியமடைந்தனள் என்றும் மாற்கு . 5.25--29 . வசனங்களிலே சொல்லப்பட் டிருக்கின்றது . அவள் அந்த வஸ்திரத்தைத்தொட்ட உடனே நோய் நீங்கினமையால் அவ்வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அவளுடைய நோய் நீங்கிற்றென்று தோன்றுகின்றது . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org களிலே இலீஷா என்பவன் யோர்தான் நதிக்கரையிலே நின்று கொண்டு இலீசாவினுடைய மேலங்கியினாலே சலத்தை அடிக்க ; அது இருபுறமும் ஒதுங்கிப் பிரிவுபட்டது ; இலீஷா கடந்துபோனான் என்று 2. இரா .2.13 14. வசனங் சொல்லப்பட்டிருக்கின்றது . இதனால் அந்த வஸ்திரத்தினது விசேஷத்தினாலேயே அந்நதி இலீஷாவுக்கு வழிவிட்டது என்று காண்கின்றது . இப்படியே புண்ணிய ஸ்தலம் புண்ணியகாலம் புண்ணியக்கிரியை முதலியவை களின் விசேஷத்தினாலே பாவம்நீங்கினமை வந்துழி வந்துழிக் கண்டுகொள்க . கிறிஸ்துவினுடைய சீஷர்கள் அவருடைய நாமத்தைச் சொல்லி பிசாசுகளை ஓட்டினமையைக் கண்டு கிறிஸ்து