சைவ தூஷண பரிகாரம்

72 சைவதூஷணபரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில், அவைகளெல் லாம் அப்புண்ணியப்பொருள்களின் விசேடத்தினாலேயே நிகழ்ந்தன. ஒரு சவத்தைச் சிலரடக்கும்படி கொண்டுபோம் பொழுது, பகைஞருடைய சேனைகளைக் கண்டு பயந்து, இலீஷாவின் பிரேதவறையில் அந்தச்சவத்தை எறிந்துவிட அது இலீஷாவின் எலும்புகளின் மேலே பட்டதனால், உயிர் பெற்றெழுந்து காலூன்றிக்கொண்டு நின்றது என்று, 2.இரா. 13.21. வசனத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இலீஷாவி னுடைய எலும்பைத் தீண்டினால் தான் உயிர்பெற்று எழும்புமென்று அந்தச் சவம் விசுவசித்தல் கூடுமா? கூடாதே. அதைச் சுமந்துகொண்டு போனவர்களாயினும் விசுவசித் தார்களா? இல்லையே. இப்படி உன் சமயசாத்திரத்திற் சொல்லப்பட்டவைகள் உனக்கு நியாயமாகத் தோன்றுவது என்னை? இவைகளெல்லாவற்றையும் உன் சமயசாத்திரத் திலே நீ வாசித்திருந்தும், பிறசமயநூல்களிலே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் சரித்திரங்களைப் பொய்யென்று தூஷிப்பது என்னை? சிவசின்னதாரணம் சிவபூசை சிவமந்திர செபம் முதலிய சிவபுண்ணியங்களினாலே பயன் இல்லையென்று உங்களாலே மெய்ஞ்ஞானிகளென்று பேசப்படும் பட்டணத்துப்பிள்ளை யார் சிவவாக்கியர் தாயுமானசுவாமிகள் முதலியோர்கள் பேசுவதேது? என்பாயாகில், "நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைதூ லேற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டா யாற்றிற்கிடந்துந் துறையறியாம லலைகின்றையே." எனவும், விவேசனம் 'சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்சுருதியிலு மல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோ ரில்லினுமன்பரிடத்திலு மீசனிருக்குமிடங் கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பானெங்கள் கண்ணுதலே." எனவும், "எட்டுத்திசையும் பதினாறுகோணமு மெங்கு மொன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலையிரவென்று கூறிடும் பாதகரே." எனவும், Digitized by Noolaham Foundation. noolaham.org |aavanaham.org "ஆரூநரிங்கிருக்க வவ்வூர்த் திருநாளென் றூரூர்கடோறு முழலுவீர்-நேரே யுளக்குறிப்பை நாடாதவூமர்கா ணீவிர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர்." 73 எனவும் கூறியவர் தாமே; "ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்றபோதொன்று வேண்டுவன்யான் செய்யுந் திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைந்தெழுத்தோதவுங் கற்பியுமே." எனவும், ''ஊரீ ருமக்கோ ருபதேசங்கேளு முடம்படங்கப் போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீ ரனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகநகைக்க வேரீ ருமக்கவர் தாமே தருவ ரிணையடியே." எனவும், "அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த வைம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேரறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிய மென்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களைபறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே." எனவும்,
72 சைவதூஷணபரிகாரம் சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில் அவைகளெல் லாம் அப்புண்ணியப்பொருள்களின் விசேடத்தினாலேயே நிகழ்ந்தன . ஒரு சவத்தைச் சிலரடக்கும்படி கொண்டுபோம் பொழுது பகைஞருடைய சேனைகளைக் கண்டு பயந்து இலீஷாவின் பிரேதவறையில் அந்தச்சவத்தை எறிந்துவிட அது இலீஷாவின் எலும்புகளின் மேலே பட்டதனால் உயிர் பெற்றெழுந்து காலூன்றிக்கொண்டு நின்றது என்று 2.இரா . 13.21 . வசனத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது . இலீஷாவி னுடைய எலும்பைத் தீண்டினால் தான் உயிர்பெற்று எழும்புமென்று அந்தச் சவம் விசுவசித்தல் கூடுமா ? கூடாதே . அதைச் சுமந்துகொண்டு போனவர்களாயினும் விசுவசித் தார்களா ? இல்லையே . இப்படி உன் சமயசாத்திரத்திற் சொல்லப்பட்டவைகள் உனக்கு நியாயமாகத் தோன்றுவது என்னை ? இவைகளெல்லாவற்றையும் உன் சமயசாத்திரத் திலே நீ வாசித்திருந்தும் பிறசமயநூல்களிலே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் சரித்திரங்களைப் பொய்யென்று தூஷிப்பது என்னை ? சிவசின்னதாரணம் சிவபூசை சிவமந்திர செபம் முதலிய சிவபுண்ணியங்களினாலே பயன் இல்லையென்று உங்களாலே மெய்ஞ்ஞானிகளென்று பேசப்படும் பட்டணத்துப்பிள்ளை யார் சிவவாக்கியர் தாயுமானசுவாமிகள் முதலியோர்கள் பேசுவதேது ? என்பாயாகில் நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைதூ லேற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டா யாற்றிற்கிடந்துந் துறையறியாம லலைகின்றையே . எனவும் விவேசனம் ' சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்சுருதியிலு மல்லிலு மாசற்ற வாகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோ ரில்லினுமன்பரிடத்திலு மீசனிருக்குமிடங் கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பானெங்கள் கண்ணுதலே . எனவும் எட்டுத்திசையும் பதினாறுகோணமு மெங்கு மொன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாங் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலையிரவென்று கூறிடும் பாதகரே . எனவும் Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org ஆரூநரிங்கிருக்க வவ்வூர்த் திருநாளென் றூரூர்கடோறு முழலுவீர் - நேரே யுளக்குறிப்பை நாடாதவூமர்கா ணீவிர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர் . 73 எனவும் கூறியவர் தாமே ; ஐயுந்தொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிந்து மெய்யும் பொய்யாகி விடுகின்றபோதொன்று வேண்டுவன்யான் செய்யுந் திருவொற்றி யூருடையீர் திருநீறுமிட்டுக் கையுந் தொழப்பண்ணி யைந்தெழுத்தோதவுங் கற்பியுமே . எனவும் ' ' ஊரீ ருமக்கோ ருபதேசங்கேளு முடம்படங்கப் போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற் சாரீ ரனந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகநகைக்க வேரீ ருமக்கவர் தாமே தருவ ரிணையடியே . எனவும் அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த வைம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேரறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிய மென்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களைபறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே . எனவும்