சைவ தூஷண பரிகாரம்
76
சைவதூஷணபரிகாரம்
கருத்தன்றாமென்றறிக. இன்னும், சிவாகமங்களிலே
சொல்லப்படும் பாதங்கள் சரியை கிரியை யோகம் ஞானம்
என நான்காம். அவற்றுள், முன்னைய மூன்றும் பொதுப்படக்
கிரியைகளெனவேட்டும். இந்நான்கினுள்ளும், சரியையின்றிக்
கிரியையும், கிரியையின்றி யோகமும், யோகமின்றி ஞான
மும் கைகூடாவாம்.
"விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கு
மரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே.'
தாயுமானசுவாமிகள்.
கிரியைகளி
என்னும் திருவாக்கால் உணர்க. இந்த ஞானத்தாலடையப்
படுவது பரமுத்தியாகிய சிவசாயுச்சியமாம்.
னாலே அடையப்படுவது பதமுத்தியாம். அப்பதமுத்தி
பலபேதப்படும். கிரியைகளைச் செய்து அததற்கேற்ற பத
முத்திகளைப்பெற்றுப் போகம்புசித்தவர்கள், திரும்பப்
பூலோகத்திலேவந்து சென்மித்து, இருவினையொப்பு மலபரி
பாகத்தினாலே சிவஞானத்தைப் பெற்று, சிவசாயுச்சியத்தை
அடைவார்கள். பட்டணத்துப்பிள்ளையார் முதலியோர்
இப்படிப்பட்ட பெருஞ்சிறப்பினதாகிய சிவஞானத்தைப்
பெற்றவர்கள். அவர்கள், அச்சிவஞானமே பரமுத்திசாதன
மென்றும், கிரியைகளெல்லாம் அதற்குக் கருவிகளென்றும்
உணர்ந்து அக்கிரியைகள் வாயிலாகச் சிவஞானத்தைப்பெற
முயலாது, அக்கிரியைகளையே பொருளெனக்கொண்டு களிப்
பாரைக்கண்டிரங்கி,இகழ்ந்தாரென்க. ஆதலால், சிவஞானத்
தைக் குறித்துக் கிரியைகள் கீழ்ப்பட்டன என உணர்த்து
தலே அவர்களுக்குக் கருத்தாம். அஃதன்றி,அச்சிவஞானத்
துக்கு இன்றியமையாக் கருவியாக அக்கிரியைகளைச்
செய்யற்க என்பது கருத்தன்றாம்; இவ்விரு சமாதானமும்
ஏற்குமிடமறிந்து கொள்ளப்படும்.
77
தீர்த்தமாடுதல் முதலிய புண்ணியங்களினாலே பாவந்
தேயுமெனில், அப்புண்ணியங்களைச் செய்தவர்களிடத்திலே
கோபம் முதலிய துர்க்குணங்கள் மாறாதிருக்கக் காண்கின்
றேனே; அவர்கள் மீளவும் பாவம் செய்கின்றார்களே என்பா
யாகில்; எங்கள் சமயநூலிலே விதித்தவிதி தவறாமல் சிவன்
மேல்வைத்த அன்பினுடனே அப்புண்ணியங்களைச் செய்
பவர்கள் அநேகர் ஒரு வருஷத்தினுள்ளே உலகப்பற்றுக்களை
முற்றவெறுத்து வனவாசம்பண்ணித் தவம்செய்யக்காண்
கின்றோம். இந்தப்புண்ணியம் செய்பவர்களெல்லாரும்
இப்படி ஏன் ஆகவில்லை? என்பாயாகில்; எங்கள் உள்ளத்திலே
பரிசுத்தாவி புகுந்துவிட்டது என்று சொல்லி, உன்சமயவிதிப்
படி ஸ்நானம்பெற்று, இராப்போசனங் கையேற்பவர்கள்
அநேகர் கொலை களவு பிறர்மனைநயத்தல் முதலிய பல பெரும்
பாவங்களைச் செய்யக் காண்கின்றோமே; கோபம் முதலிய
துர்க்குணங்களெல்லாம் அவர்களிடத்திலே மேன்மேலும்
பெருகிவளர்கின்றனவே. அதுவுமன்றி, உன்சமயாசாரியர்
கள் நாம் பரிசுத்தாவியினாலே லௌகிக ஆசைகளையும் சகல
பாவங்களையும் வெறுத்துத்தள்ளி நவீனசிருட்டராய்த்
தெய்வத்தன்மையோடு கூடியிருந்து நாள் விடுகின்றோம் என்று
கள்ளஞானம் பேசுகின்றார்களே. இவர்களுள்,
எவன்
கிறிஸ்துநாதர் கூறியவாறே முத்திவிக்கினமாகிய மண்ணாசை
பொன்னாசை பெண்ணாசை என்னும் லௌகிக ஆசைகளைச்
சிறிதாயினும் வெறுத்துவிட்டவன்? இவர்களுள் எவன்
ஒருமாசமேனும் ஒருவாரமேனும் ஒருநாளேனும் ஒருநாழிகை
யேனும் மனம் வாக்குக்காயங்களினாலே பாவஞ்செய்யாது.
ஒழிந்தவன்? இப்படியே நீங்கள் உங்களுள்ளேதானே பெருங்
குற்றங்களை வைத்துக்கொண்டு, பிறரை வேண்டியவாறே
தூஷிப்பது என்னை? மத். 7.1-5. "நீங்கள் குற்றம்
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org
விவேசனம்
76
சைவதூஷணபரிகாரம்
கருத்தன்றாமென்றறிக
.
இன்னும்
சிவாகமங்களிலே
சொல்லப்படும்
பாதங்கள்
சரியை
கிரியை
யோகம்
ஞானம்
என
நான்காம்
.
அவற்றுள்
முன்னைய
மூன்றும்
பொதுப்படக்
கிரியைகளெனவேட்டும்
.
இந்நான்கினுள்ளும்
சரியையின்றிக்
கிரியையும்
கிரியையின்றி
யோகமும்
யோகமின்றி
ஞான
மும்
கைகூடாவாம்
.
விரும்புஞ்
சரியை
முதன்
மெய்ஞ்ஞான
நான்கு
மரும்புமலர்
காய்கனிபோ
லன்றோ
பராபரமே
.
'
தாயுமானசுவாமிகள்
.
கிரியைகளி
என்னும்
திருவாக்கால்
உணர்க
.
இந்த
ஞானத்தாலடையப்
படுவது
பரமுத்தியாகிய
சிவசாயுச்சியமாம்
.
னாலே
அடையப்படுவது
பதமுத்தியாம்
.
அப்பதமுத்தி
பலபேதப்படும்
.
கிரியைகளைச்
செய்து
அததற்கேற்ற
பத
முத்திகளைப்பெற்றுப்
போகம்புசித்தவர்கள்
திரும்பப்
பூலோகத்திலேவந்து
சென்மித்து
இருவினையொப்பு
மலபரி
பாகத்தினாலே
சிவஞானத்தைப்
பெற்று
சிவசாயுச்சியத்தை
அடைவார்கள்
.
பட்டணத்துப்பிள்ளையார்
முதலியோர்
இப்படிப்பட்ட
பெருஞ்சிறப்பினதாகிய
சிவஞானத்தைப்
பெற்றவர்கள்
.
அவர்கள்
அச்சிவஞானமே
பரமுத்திசாதன
மென்றும்
கிரியைகளெல்லாம்
அதற்குக்
கருவிகளென்றும்
உணர்ந்து
அக்கிரியைகள்
வாயிலாகச்
சிவஞானத்தைப்பெற
முயலாது
அக்கிரியைகளையே
பொருளெனக்கொண்டு
களிப்
பாரைக்கண்டிரங்கி
இகழ்ந்தாரென்க
.
ஆதலால்
சிவஞானத்
தைக்
குறித்துக்
கிரியைகள்
கீழ்ப்பட்டன
என
உணர்த்து
தலே
அவர்களுக்குக்
கருத்தாம்
.
அஃதன்றி
அச்சிவஞானத்
துக்கு
இன்றியமையாக்
கருவியாக
அக்கிரியைகளைச்
செய்யற்க
என்பது
கருத்தன்றாம்
;
இவ்விரு
சமாதானமும்
ஏற்குமிடமறிந்து
கொள்ளப்படும்
.
77
தீர்த்தமாடுதல்
முதலிய
புண்ணியங்களினாலே
பாவந்
தேயுமெனில்
அப்புண்ணியங்களைச்
செய்தவர்களிடத்திலே
கோபம்
முதலிய
துர்க்குணங்கள்
மாறாதிருக்கக்
காண்கின்
றேனே
;
அவர்கள்
மீளவும்
பாவம்
செய்கின்றார்களே
என்பா
யாகில்
;
எங்கள்
சமயநூலிலே
விதித்தவிதி
தவறாமல்
சிவன்
மேல்வைத்த
அன்பினுடனே
அப்புண்ணியங்களைச்
செய்
பவர்கள்
அநேகர்
ஒரு
வருஷத்தினுள்ளே
உலகப்பற்றுக்களை
முற்றவெறுத்து
வனவாசம்பண்ணித்
தவம்செய்யக்காண்
கின்றோம்
.
இந்தப்புண்ணியம்
செய்பவர்களெல்லாரும்
இப்படி
ஏன்
ஆகவில்லை
?
என்பாயாகில்
;
எங்கள்
உள்ளத்திலே
பரிசுத்தாவி
புகுந்துவிட்டது
என்று
சொல்லி
உன்சமயவிதிப்
படி
ஸ்நானம்பெற்று
இராப்போசனங்
கையேற்பவர்கள்
அநேகர்
கொலை
களவு
பிறர்மனைநயத்தல்
முதலிய
பல
பெரும்
பாவங்களைச்
செய்யக்
காண்கின்றோமே
;
கோபம்
முதலிய
துர்க்குணங்களெல்லாம்
அவர்களிடத்திலே
மேன்மேலும்
பெருகிவளர்கின்றனவே
.
அதுவுமன்றி
உன்சமயாசாரியர்
கள்
நாம்
பரிசுத்தாவியினாலே
லௌகிக
ஆசைகளையும்
சகல
பாவங்களையும்
வெறுத்துத்தள்ளி
நவீனசிருட்டராய்த்
தெய்வத்தன்மையோடு
கூடியிருந்து
நாள்
விடுகின்றோம்
என்று
கள்ளஞானம்
பேசுகின்றார்களே
.
இவர்களுள்
எவன்
கிறிஸ்துநாதர்
கூறியவாறே
முத்திவிக்கினமாகிய
மண்ணாசை
பொன்னாசை
பெண்ணாசை
என்னும்
லௌகிக
ஆசைகளைச்
சிறிதாயினும்
வெறுத்துவிட்டவன்
?
இவர்களுள்
எவன்
ஒருமாசமேனும்
ஒருவாரமேனும்
ஒருநாளேனும்
ஒருநாழிகை
யேனும்
மனம்
வாக்குக்காயங்களினாலே
பாவஞ்செய்யாது
.
ஒழிந்தவன்
?
இப்படியே
நீங்கள்
உங்களுள்ளேதானே
பெருங்
குற்றங்களை
வைத்துக்கொண்டு
பிறரை
வேண்டியவாறே
தூஷிப்பது
என்னை
?
மத்
.
7.1-5
.
நீங்கள்
குற்றம்
Digitized
by
Noolaham
Foundation
.
noolaham.org
|
aavanaham.org
விவேசனம்