சைவ தூஷண பரிகாரம்

78 சைவதூஷணபரிகாரம் சுமத்தப்படாமலிருக்கவேண்டில்; பிறர்மேல் குற்றஞ் சுமத்த வேண்டாம்: நீங்கள் குற்றஞ் சுமத்துவதுபோலக் குற்றஞ் சுமத்தப்படுவீர்கள். நீங்கள் அளக்கும் அளவினால் உங்களுக் கும் அளப்பார்கள். உன்கண்ணிலுள்ள உத்திரத்தை உண ராமல், உன்சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப் பார்க்கிறது என்ன? உத்திரம் உன்கண்ணிலிருக்க, நீ உன் சகோதரனை நோக்கி, உன்கண்ணிலுள்ள சிராயை எடுத்து விடுகிறேன் இடங்கொடு என்றுசொல்வதென்ன? கபடியே! முன்பு உன்கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு, அப் பொழுது உன்கண்தெளிய நீ உன்சகோதரனுடைய கண்ணி லுள்ள சிராயை எடுத்துவிடுவாய்." இவ்வசனங்களை அறிந். மறந்தனிர்போலும். இன்னும், உலகப்பொருள் ளெல்லாம் அநித்தியமென்றும், அவற்றின்மேல் ஆசையை ஒழித்தல்வேண்டும் என்றும், சனங்களுக்குப் புத்திசொல்லித் திரிகின்றவர்கள் தாங்கள் அவ்வாறு நடவாதது என்னை? இஃதெல்லாம் பணத்தைச் சம்பாதித்துப் பெண்டிர் பிள்ளைக ளுடனே உண்டுடுத்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் அபேட்சையினாலே எடுத்த வேஷமென்று காண்கின்றது. தும் ஆன்மாக்கள் தாம்தாம் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்பச் சுவர்க்க நரகங்களிலே சுகதுக்கங்களை ஒருவர் கூடவும் ஒருவர் குறையவும் அனுபவிப்பார்களென்று சொல்லலாமா? என்பாயாகில்; ஒருவன் ஒருபணத்துக்காகச் சொல்லிய பொய்யும், ஒருவன் ஒருவனைக்கொன்ற கொலையும், ஒருவன் ஒரு பெண்ணுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் ஓரிள நீரைத் திருடியகளவும், ஒருவன் ஒருவனைக் கழுதை என்று சொல்லிய நிந்தையும், ஆகிய பலபல வருக்கமான பாவங்க ளெல்லாம் சமமாகிய பாவங்களென்றும், அப்பாவங்களைச் செய்தவர்களெல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்கு விவேசனம் 79 மென்றும் சொல்வது தகாது. இன்னும், ஒருவன் ஒரு வேசையுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் ஒரு கன்னிகை யுடன்செய்த வியபசாரமும், ஒருவன் பரதாரத்துடன் செய்த வியபிசாரமும், ஒருவன் குருபத்தினியுடன் செய்த வியபி சாரமும், ஒருவன் சகோதரியுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் மாதாவுடன்செய்த வியபிசாரமும், ஒரேவருக்கமா யிருப்பினும், அவைகளெல்லாம் சமமாகிய பாவங்கள் என் றும்; அப்பாவங்களைச் செய்த ஆடவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும், சொல்வது தகாது. இப்படியே பாவங்களிலே பலவேற்றுமை உண்டு. புண்ணி யங்களையும் அவ்வாறே பகுத்துணர்தல் வேண்டும். நீ இதனைச் சற்றாயினும் ஆராய்ந்தறியாமல், ஒரு அற்ப பாவத்தைச் செய்தவனும், அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய தண்டத்தை அடை யார்கள் என்று சொல்வது தப்பு. சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம் செய்தவர்களை அவரவர்செய்த குற்றத் துக்கு ஏற்பத் தண்டிக்கின்றார்கள். குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டத்தை விதிக்கும் அரசனைக் கண்டுமிரேம், கேட்டுமிரேம். எங்காயினும் ஓரரசன் அவ் வாறு தண்டம் விதிக்கில், அவனை நீதியீனனென்றும் கொடுங் கோலரசனென்றும் உலகத்தார் யாவரும் பேசுவார்களே. சிற்றறிவினையுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களு மாகிய பசுக்கள் தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத் துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில், முற்றறிவினை யுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபரருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல், இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா? தண்டி யாரே. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
78 சைவதூஷணபரிகாரம் சுமத்தப்படாமலிருக்கவேண்டில் ; பிறர்மேல் குற்றஞ் சுமத்த வேண்டாம் : நீங்கள் குற்றஞ் சுமத்துவதுபோலக் குற்றஞ் சுமத்தப்படுவீர்கள் . நீங்கள் அளக்கும் அளவினால் உங்களுக் கும் அளப்பார்கள் . உன்கண்ணிலுள்ள உத்திரத்தை உண ராமல் உன்சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப் பார்க்கிறது என்ன ? உத்திரம் உன்கண்ணிலிருக்க நீ உன் சகோதரனை நோக்கி உன்கண்ணிலுள்ள சிராயை எடுத்து விடுகிறேன் இடங்கொடு என்றுசொல்வதென்ன ? கபடியே ! முன்பு உன்கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு அப் பொழுது உன்கண்தெளிய நீ உன்சகோதரனுடைய கண்ணி லுள்ள சிராயை எடுத்துவிடுவாய் . இவ்வசனங்களை அறிந் . மறந்தனிர்போலும் . இன்னும் உலகப்பொருள் ளெல்லாம் அநித்தியமென்றும் அவற்றின்மேல் ஆசையை ஒழித்தல்வேண்டும் என்றும் சனங்களுக்குப் புத்திசொல்லித் திரிகின்றவர்கள் தாங்கள் அவ்வாறு நடவாதது என்னை ? இஃதெல்லாம் பணத்தைச் சம்பாதித்துப் பெண்டிர் பிள்ளைக ளுடனே உண்டுடுத்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் அபேட்சையினாலே எடுத்த வேஷமென்று காண்கின்றது . தும் ஆன்மாக்கள் தாம்தாம் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்பச் சுவர்க்க நரகங்களிலே சுகதுக்கங்களை ஒருவர் கூடவும் ஒருவர் குறையவும் அனுபவிப்பார்களென்று சொல்லலாமா ? என்பாயாகில் ; ஒருவன் ஒருபணத்துக்காகச் சொல்லிய பொய்யும் ஒருவன் ஒருவனைக்கொன்ற கொலையும் ஒருவன் ஒரு பெண்ணுடன் செய்த வியபிசாரமும் ஒருவன் ஓரிள நீரைத் திருடியகளவும் ஒருவன் ஒருவனைக் கழுதை என்று சொல்லிய நிந்தையும் ஆகிய பலபல வருக்கமான பாவங்க ளெல்லாம் சமமாகிய பாவங்களென்றும் அப்பாவங்களைச் செய்தவர்களெல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்கு விவேசனம் 79 மென்றும் சொல்வது தகாது . இன்னும் ஒருவன் ஒரு வேசையுடன் செய்த வியபிசாரமும் ஒருவன் ஒரு கன்னிகை யுடன்செய்த வியபசாரமும் ஒருவன் பரதாரத்துடன் செய்த வியபிசாரமும் ஒருவன் குருபத்தினியுடன் செய்த வியபி சாரமும் ஒருவன் சகோதரியுடன் செய்த வியபிசாரமும் ஒருவன் மாதாவுடன்செய்த வியபிசாரமும் ஒரேவருக்கமா யிருப்பினும் அவைகளெல்லாம் சமமாகிய பாவங்கள் என் றும் ; அப்பாவங்களைச் செய்த ஆடவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும் சொல்வது தகாது . இப்படியே பாவங்களிலே பலவேற்றுமை உண்டு . புண்ணி யங்களையும் அவ்வாறே பகுத்துணர்தல் வேண்டும் . நீ இதனைச் சற்றாயினும் ஆராய்ந்தறியாமல் ஒரு அற்ப பாவத்தைச் செய்தவனும் அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய தண்டத்தை அடை யார்கள் என்று சொல்வது தப்பு . சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம் செய்தவர்களை அவரவர்செய்த குற்றத் துக்கு ஏற்பத் தண்டிக்கின்றார்கள் . குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டத்தை விதிக்கும் அரசனைக் கண்டுமிரேம் கேட்டுமிரேம் . எங்காயினும் ஓரரசன் அவ் வாறு தண்டம் விதிக்கில் அவனை நீதியீனனென்றும் கொடுங் கோலரசனென்றும் உலகத்தார் யாவரும் பேசுவார்களே . சிற்றறிவினையுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களு மாகிய பசுக்கள் தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத் துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில் முற்றறிவினை யுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபரருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல் இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா ? தண்டி யாரே . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org