சைவ தூஷண பரிகாரம்

80 சைவதூஷணபரிகாரம் மத். 12. 31. "மனுஷர்செய்யும் எந்தப்பாவமும், தூஷணமும், மனுஷருக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்தாவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சோல்லுகின்றேன்.'' இதனால், பாவங்களில் வேற்றுமையுண்டென்பதே உன்சமயநூற் கருத்தென்று தோன்றுகிறது. புண்ணியங்களிலும் அவ்வாறே வேற்றுமை உண்டென்பதை உன்சமயநூலில் வந்தவழிக் கண்டுகொள்க. பன்னிரண்டு சிங்காசனங்களில் யோசு.5.14."நான் யெகோவாவின் சேனைக்கதிபதி யாய் வந்திருக்கிறேன் என்றார்." மத். 1. 20. "கர்த்த ருடையதூதன்.'' இவைகளினாலே, மோட்சவாசிகள் ஒரு வரினுமொருவர் அதிகமகத்துவமும் அதிகாரமும் உடையவர் களென்று தோன்றுகின்றது. மத். 16.28. "அவர்களை நோக்கி, புதுச்சிருட்டி தோன்றுங்காலத்தில், மனுபுத்திரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, என்னைப் பின்சென்றுவந்த நீங்களும், இஸ்ரவேலராகிய பன்னிரண்டு வமிசத்தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, வீற்றிருப்பீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்." இதனால், மோட் சத்திலே மற்றவர்களுக்கு நியாயந்தீர்க்கு மதிகாரமும் மகத் துவமும் இவர்களுக்கு உண்டென்று காண்கின்றது. வெளி 14.1-4. பின்பு நான் பார்க்கையில், சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும், அவரோடே அவருடையபிதாவின் நாமந் தங்கள் தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற இலட் சத்து நாற்பத்து நாலாயிரம்பேரும் நிற்கக்கண்டேன். அன்றியும், சலராசியின் இரைச்சல்போலவும், மகா இடியின் முழக்கம்போலவும், பரமண்டலத்திருந்துண்டாகிய ஒரு சத்தத்தைக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம், தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காரருடைய விவேசனம் களால் ஓசையைப்போலிருந்தது. அவர்கள் அந்தச் சிங்காசனத் துக்கு முன்பாகவும், நாலுபிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினார்கள். அந்தப் பாட்டு, உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங் கற்றுக்கொள்ளக் கூடாததாயிருந்தது. இவர்களே ஸ்திரீ தங்களை அசுசிப்படுத்தாத நிறையுடையவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனாலும் அதைப்பின் பற்றுகிறவர்கள். இவர்களே மனுஷரிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுத் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனானவர்கள். இவ்வசனங்களிலே,"இலட்சத்து நாற்பத்து தாலாயிரம்பேர்" என விசேடித்துத் தொகைகுறித்ததினா லும், "அவர்கள் ஒருபுதுப்பாட்டைப்பாடினார்கள். அந்தப் பாட்டு அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்ளக்கூடாததாயிருந்தது." என்று மோட்சத்திலிருந்த மற்றவர்களை விலக்கி, இவர்களை விதந்து கூறினமையாலும், "தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனானவர்கள்" எனவே மோட்சத்திலே இரண்டாம் பலமா னவர்களும் உண்டென்பது பெறப்படுதலாலும், மோட்ச வாசிகளுள் வேற்றுமை உண்டென்று காண்கின்றது. வாக் 19 - ம் அதிகாரத்திலே ஒரு இறாத்தல் திரவியத்தைக்கொண்டு பத்து இறாத்தல் ஆதாயம்பண்ணினவன் பத்துப்பட்டணங் களுக்கு அதிகாரியானான் என்றும், ஐந்து இறாத்தல் ஆதா யம் பண்ணினவன் ஐந்துபட்டணங்களுக்கு அதிகாரியானான் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், ஆன்மாக் கள் மோட்சத்திலே தாம் தாம் செய்த புண்ணியங்களுக்குத் தக்க மேன்மையும் இன்பமும் பெறுவார்களென்று தோன்று கின்றது. 81 மத்.11. 24. "நியாயத்தீர்ப்புநாளில் உன் நிலைமையி லும், சோதோம்தேசத்து நிலைமை சகாயமாயிருக்குமென்று 6 Digitized by Noolaham Foundation. noolaham.org |aavanaham.org
80 சைவதூஷணபரிகாரம் மத் . 12. 31. மனுஷர்செய்யும் எந்தப்பாவமும் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும் ; பரிசுத்தாவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சோல்லுகின்றேன் . ' ' இதனால் பாவங்களில் வேற்றுமையுண்டென்பதே உன்சமயநூற் கருத்தென்று தோன்றுகிறது . புண்ணியங்களிலும் அவ்வாறே வேற்றுமை உண்டென்பதை உன்சமயநூலில் வந்தவழிக் கண்டுகொள்க . பன்னிரண்டு சிங்காசனங்களில் யோசு .5.14 . நான் யெகோவாவின் சேனைக்கதிபதி யாய் வந்திருக்கிறேன் என்றார் . மத் . 1. 20. கர்த்த ருடையதூதன் . ' ' இவைகளினாலே மோட்சவாசிகள் ஒரு வரினுமொருவர் அதிகமகத்துவமும் அதிகாரமும் உடையவர் களென்று தோன்றுகின்றது . மத் . 16.28 . அவர்களை நோக்கி புதுச்சிருட்டி தோன்றுங்காலத்தில் மனுபுத்திரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது என்னைப் பின்சென்றுவந்த நீங்களும் இஸ்ரவேலராகிய பன்னிரண்டு வமிசத்தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி வீற்றிருப்பீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் . இதனால் மோட் சத்திலே மற்றவர்களுக்கு நியாயந்தீர்க்கு மதிகாரமும் மகத் துவமும் இவர்களுக்கு உண்டென்று காண்கின்றது . வெளி 14.1-4 . பின்பு நான் பார்க்கையில் சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும் அவரோடே அவருடையபிதாவின் நாமந் தங்கள் தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற இலட் சத்து நாற்பத்து நாலாயிரம்பேரும் நிற்கக்கண்டேன் . அன்றியும் சலராசியின் இரைச்சல்போலவும் மகா இடியின் முழக்கம்போலவும் பரமண்டலத்திருந்துண்டாகிய ஒரு சத்தத்தைக் கேட்டேன் ; நான் கேட்ட சத்தம் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காரருடைய விவேசனம் களால் ஓசையைப்போலிருந்தது . அவர்கள் அந்தச் சிங்காசனத் துக்கு முன்பாகவும் நாலுபிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினார்கள் . அந்தப் பாட்டு உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங் கற்றுக்கொள்ளக் கூடாததாயிருந்தது . இவர்களே ஸ்திரீ தங்களை அசுசிப்படுத்தாத நிறையுடையவர்கள் . இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனாலும் அதைப்பின் பற்றுகிறவர்கள் . இவர்களே மனுஷரிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுத் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனானவர்கள் . இவ்வசனங்களிலே இலட்சத்து நாற்பத்து தாலாயிரம்பேர் என விசேடித்துத் தொகைகுறித்ததினா லும் அவர்கள் ஒருபுதுப்பாட்டைப்பாடினார்கள் . அந்தப் பாட்டு அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்ளக்கூடாததாயிருந்தது . என்று மோட்சத்திலிருந்த மற்றவர்களை விலக்கி இவர்களை விதந்து கூறினமையாலும் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனானவர்கள் எனவே மோட்சத்திலே இரண்டாம் பலமா னவர்களும் உண்டென்பது பெறப்படுதலாலும் மோட்ச வாசிகளுள் வேற்றுமை உண்டென்று காண்கின்றது . வாக் 19 - ம் அதிகாரத்திலே ஒரு இறாத்தல் திரவியத்தைக்கொண்டு பத்து இறாத்தல் ஆதாயம்பண்ணினவன் பத்துப்பட்டணங் களுக்கு அதிகாரியானான் என்றும் ஐந்து இறாத்தல் ஆதா யம் பண்ணினவன் ஐந்துபட்டணங்களுக்கு அதிகாரியானான் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . இதனால் ஆன்மாக் கள் மோட்சத்திலே தாம் தாம் செய்த புண்ணியங்களுக்குத் தக்க மேன்மையும் இன்பமும் பெறுவார்களென்று தோன்று கின்றது . 81 மத் .11 . 24. நியாயத்தீர்ப்புநாளில் உன் நிலைமையி லும் சோதோம்தேசத்து நிலைமை சகாயமாயிருக்குமென்று 6 Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org