சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷண பரிகாரம் கானுனக்குச் சொல்லுகிறேன் என்றார்." லூக்.12. 47. 48. "தன் எசமானுடைய சித்தத்தை அறிந்தும், ஆயத்தமா யிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருக்கின்ற பணிவிடைக்காரன் பல அடிகள் அடிக்கப் படுவான். அறியாமலிருந்து, அடிகளுக்கு ஏற்றவைகளைச் செய்கிறவனோ சில அடிகள் அடிக்கப்படுவான்." 19.21."கண்ணுக்குக் கண்ணும், பல்லுக்குப் பல்லும், கைக்குக் கையும், காலுக்குக் காலும், பிரதியாகவேண்டும்.'' இவைகளினாலே, அவரவர் பாவத்துக்குத் தக்கதண்டம் விதிக்கப்படுமென்று தோன்றுகின்றது. உபா. 82 ஆன்மாக்கள் தாம்தாம்செய்த பாவத்துக்கு ஏற்ப நரகத் திலே துன்பம் அனுபவிப்பினும், அதனை நித்தியமும் அனு புவிப்பதேயன்றி, இடையிலே அந்நரகத்தினின்றும் மீளு வார்களென்பது நியாயமா? என்பாயாகில், தந்தைதாயர்கள் தங்கள்பிள்ளைகளையும், அரசர்கள் தங்கள் பிரஜைகளையும், தாங்கள் கூறிய நீதி மார்க்கத்திலே நடவாமைகண்டு தண்டித்தல், அவர்கள் மேலே வைத்த அன்பினாலேயாம்; அதுபோல, கடவுள் தாம் அருளிய வேதாகமங்களிலே விலக்கப்பட்ட பாவங்களைச் செய்த ஆன்மாக்களைத் தண்டித் தல், அவர்கள்மேல்வைத்த கிருபையினாலேயாம்; ஆதலால், அத்தந்தைதாயர்களும் அரசர்களும், பிள்ளைகளையும் பிரஜை களையும், அவரவர்செய்த குற்றத்துக்குத்தக்க கால வெல்லை குறித்து, தண்டித்துப் பயப்படுத்தி, முன்செய்த குற்றங் களை அந்தத் தண்டனையினாலே ஒழித்து, நீங்கள் முன் போலக் கெட்டுப்போகாமல் இனி நீதிமார்க்கத்திலே நட வுங்களென்று புத்திசொல்வதுபோல, கடவுளும் அவ்வான் மாக்களை அவரவர்செய்த பாவத்துக்குத்தக்க காலவெல்லை குறித்துத் தண்டித்துப் பயப்படுத்தி, முன்பு செய்த பாவங் விவேசனம் 83 நடந்து களை அந்தத்தண்டனையினாலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி வேதாகமவழியிலே உய்யுங்களென்று அருளுவார்; ஆகையால், நரகத்திலே விழுந்த ஆன்மாக்கள் தத்தம் பாவங்களுக்கேற்பக் குறித்த கால வெல்லைவரைக்குமே துக்கத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கும், அதன்பின்னர் அந்நரகத்தினின்றும் மீளுவார் கள் என்பதற்கும், சந்தேகமில்லை. ஒருவன் தான்செய்த குற்றத்தினிமித்தம் அரசனாலே விதிக்கப்பட்ட தண்டத் தைக் குறித்தகாலம் வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து அனுபவித்துத் தீர்ந்தால் அச்சிறைச்சாலையினின்றும் நீக்கப் படவேண்டுவதன்றி, பின்னும் அத்தண்டத்தை அநுபவிக்க வேண்டுவதில்லை; அதுபோல ஆன்ம தாம்செய்த பாவத்தினிமித்தம் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம்வரைக்கும் நரகத்திலேகிடந்து அதுபளித்துத் தீர்ந்தால், அந்நரத்தினின்று நீக்கப்பட வேண்டுவதன்றி, பின்னுமத்தண்டத்தை அனுபவிக்கவேண்டுவதில்லை. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org நாம் செய்த பாவம் அளவற்ற மகிமையையுடைய கடவுளுக்கு விரோதமாகையால், நாம் நித்தியமும் நரகத் திலே கிடத்தல்வேண்டும் என்பாயாகில், நாம் செய்யும் புண்ணிய பாவங்களினாலே வரும் பலங்களாகிய சுகதுக்கங்கள் கமக்கேயன்றிக் கடவுளுக்கல்ல; ஆகையால், நாம் பாவஞ் செய்தல் நமக்கு விரோதமேயன்றிக் கடவுளுக்கு விரோத மன்று; அன்றியும், புண்ணியபாவம் இரண்டையுஞ் செய்த ஒருவன் தான் செய்த பாவத்தினிமித்தம் நித்தியநரகயாதனைப் படில், தான்செய்த புண்ணியபலத்தை இழந்துபோவானே! அளவற்ற மகிமையையுடைய கடவுளது விதிப்படி புண்ணி யத்தையும் செய்தான் ஆகையால், அவன் அந்தப் புண்ணிய பலத்தை இழப்பதற்கு நியாயமில்லையே! அப்படி இழக்கப்
சைவதூஷண பரிகாரம் கானுனக்குச் சொல்லுகிறேன் என்றார் . லூக் .12 . 47. 48 . தன் எசமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமா யிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருக்கின்ற பணிவிடைக்காரன் பல அடிகள் அடிக்கப் படுவான் . அறியாமலிருந்து அடிகளுக்கு ஏற்றவைகளைச் செய்கிறவனோ சில அடிகள் அடிக்கப்படுவான் . 19.21 . கண்ணுக்குக் கண்ணும் பல்லுக்குப் பல்லும் கைக்குக் கையும் காலுக்குக் காலும் பிரதியாகவேண்டும் . ' ' இவைகளினாலே அவரவர் பாவத்துக்குத் தக்கதண்டம் விதிக்கப்படுமென்று தோன்றுகின்றது . உபா . 82 ஆன்மாக்கள் தாம்தாம்செய்த பாவத்துக்கு ஏற்ப நரகத் திலே துன்பம் அனுபவிப்பினும் அதனை நித்தியமும் அனு புவிப்பதேயன்றி இடையிலே அந்நரகத்தினின்றும் மீளு வார்களென்பது நியாயமா ? என்பாயாகில் தந்தைதாயர்கள் தங்கள்பிள்ளைகளையும் அரசர்கள் தங்கள் பிரஜைகளையும் தாங்கள் கூறிய நீதி மார்க்கத்திலே நடவாமைகண்டு தண்டித்தல் அவர்கள் மேலே வைத்த அன்பினாலேயாம் ; அதுபோல கடவுள் தாம் அருளிய வேதாகமங்களிலே விலக்கப்பட்ட பாவங்களைச் செய்த ஆன்மாக்களைத் தண்டித் தல் அவர்கள்மேல்வைத்த கிருபையினாலேயாம் ; ஆதலால் அத்தந்தைதாயர்களும் அரசர்களும் பிள்ளைகளையும் பிரஜை களையும் அவரவர்செய்த குற்றத்துக்குத்தக்க கால வெல்லை குறித்து தண்டித்துப் பயப்படுத்தி முன்செய்த குற்றங் களை அந்தத் தண்டனையினாலே ஒழித்து நீங்கள் முன் போலக் கெட்டுப்போகாமல் இனி நீதிமார்க்கத்திலே நட வுங்களென்று புத்திசொல்வதுபோல கடவுளும் அவ்வான் மாக்களை அவரவர்செய்த பாவத்துக்குத்தக்க காலவெல்லை குறித்துத் தண்டித்துப் பயப்படுத்தி முன்பு செய்த பாவங் விவேசனம் 83 நடந்து களை அந்தத்தண்டனையினாலே ஒழித்து நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி வேதாகமவழியிலே உய்யுங்களென்று அருளுவார் ; ஆகையால் நரகத்திலே விழுந்த ஆன்மாக்கள் தத்தம் பாவங்களுக்கேற்பக் குறித்த கால வெல்லைவரைக்குமே துக்கத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கும் அதன்பின்னர் அந்நரகத்தினின்றும் மீளுவார் கள் என்பதற்கும் சந்தேகமில்லை . ஒருவன் தான்செய்த குற்றத்தினிமித்தம் அரசனாலே விதிக்கப்பட்ட தண்டத் தைக் குறித்தகாலம் வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து அனுபவித்துத் தீர்ந்தால் அச்சிறைச்சாலையினின்றும் நீக்கப் படவேண்டுவதன்றி பின்னும் அத்தண்டத்தை அநுபவிக்க வேண்டுவதில்லை ; அதுபோல ஆன்ம தாம்செய்த பாவத்தினிமித்தம் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம்வரைக்கும் நரகத்திலேகிடந்து அதுபளித்துத் தீர்ந்தால் அந்நரத்தினின்று நீக்கப்பட வேண்டுவதன்றி பின்னுமத்தண்டத்தை அனுபவிக்கவேண்டுவதில்லை . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org நாம் செய்த பாவம் அளவற்ற மகிமையையுடைய கடவுளுக்கு விரோதமாகையால் நாம் நித்தியமும் நரகத் திலே கிடத்தல்வேண்டும் என்பாயாகில் நாம் செய்யும் புண்ணிய பாவங்களினாலே வரும் பலங்களாகிய சுகதுக்கங்கள் கமக்கேயன்றிக் கடவுளுக்கல்ல ; ஆகையால் நாம் பாவஞ் செய்தல் நமக்கு விரோதமேயன்றிக் கடவுளுக்கு விரோத மன்று ; அன்றியும் புண்ணியபாவம் இரண்டையுஞ் செய்த ஒருவன் தான் செய்த பாவத்தினிமித்தம் நித்தியநரகயாதனைப் படில் தான்செய்த புண்ணியபலத்தை இழந்துபோவானே ! அளவற்ற மகிமையையுடைய கடவுளது விதிப்படி புண்ணி யத்தையும் செய்தான் ஆகையால் அவன் அந்தப் புண்ணிய பலத்தை இழப்பதற்கு நியாயமில்லையே ! அப்படி இழக்கப்