சைவ தூஷண பரிகாரம்

சைவதூஷண்பரிகாரம் அங்ஙனமாயில், காம் படியேயன்றி, எங்கள் கர்மங்களின்படி சுகதுக்கங்களை அளிப்பவர் அல்லரென்றாயிற்று. புண்ணியம் செய்தாலும் சரி, பாவம் செய்தாலும் சரி, அதினால் நமக்கு இன்பமுமில்லை, இதினால் நமக்குத் துன்பமு மில்லை என்று முடியும். அன்றியும், யாதொரு காரணமு மின்றித் தமது சித்தத்தின்படியே பிறக்கும்பொழுதே சிலரை அப்படியும் சிலரை இப்படியும் படைத்தாரெனில், சருவசீவதாயாபரர் என்னும் பெயர் இழந்து பக்ஷபாத முள்ளவராவர். ஆதலால், அது பொருந்தாது. குயவனால் வனையப்பட்ட பாண்டங்களுட்சில, எங்களை ஏன் இப்படி வனைந்தாய்? என்று அவனுடன் வழக்காடுவது நீதியன்றே; அதுபோல், கடவுளாலே சிருட்டிக்கப்பட்ட நாங்கள், எங்களை ஏன் இப்படிப்படைத்தீர்? என்று அவருடன் வழக்காடுவது நீதியன்று என்பாயாகில்; அவை கள் சடப்பொருளாகையில், அந்தத் திஷ்டாந்தம் பொருந் தாது; அவைகளுள் எங்களைப்போலச் சித்துப்பொருளாகில், ஒருவன் தன் பிள்ளைகளைச் சமமாகக் காப்பாற்றாதபொழுது, பிள்ளையானது தன் பிதாவை நோக்கி, என் பிதாவே! நீர் என் சகோதரனுக்கு இந்தப்போக்கியப் பொருள்களெல்லா வற்றையும் கொடுத்தீர்; எனக்கு ஒன்றுந் தந்தீரில்லையே! உமக்கு நான்செய்த அபகாரம் யாது? அவன் செய்த உபகாரம் யாது? என்று வழக்காடுவதுபோல, வழக்காடுமே. 86 குயவன் வனையும்பொழுது, சிலபாண்டங்கள் கோண லாய் வனையப்படவில்லையா? சிலபாண்டங்கள் வெடித்துப் போகவில்லையா? என்பாயாகில்; குயவன் பாண்டங்களை வனையும்பொழுது, ல்லாப் பாண்டங்களும் யாதொரு குற்றமுமின்றிச் சிறந்தனவாகவே வனையப்படல் வேண்டு மென்று விரும்புகின்றான். விரும்பினும், அவன் சிற்றறிவு விவேசனம் 87 சிறுதொழிலுடையனாகையால், அவனுடைய விருப்பத்துக்கு மாறாகச் சில பாண்டங்களவ் வாறாகின்றன. கடவுள் எல்லா ரையும் சமமாகவே படைத்தல் வேண்டுமென்று விரும்பி, படைக்கும்பொழுது, அவருடைய விருப்பத்துக்கு மாறாகப் பலர் குருடு முதலிய குற்றமுடையவர்களாய்ப் பிறந்தா ரெனில், அவரை முற்றறிவு முற்றுத்தொழில் உடைய ரெனல் கூடாது. ஆதலால், பலரைக் குற்றமுடையராகப் படைத்தல் வேண்டுமென்று நினைந்து படைத்திரார் என்பது சிறிதும் பொருந்தாது. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org பெருமை சிறுமை இல்லையாகில் உலகம் நடவாதா தலால், அவ்வாறு படைத்தார் என்பாயாகில்; அவர் சர்வசாமர்த்திய முடையவராகையால், பெருமை சிறுமை இல்லாதிருப்பினும், உலகத்தை நடத்துவாரே; ஆகையால் அதுவும் பொருந்தாது. இவ்வேற்றுமைகளெல்லாம் பிதாமாதா செய்த பாவங் களினாலே பிள்ளைகளுக்கு உண்டாகின்றன. பிரமியம் வெட்டை கிரந்தி ஈளை பாண்டுமுதலிய வியாதிகளிலே அழுந்தும் பிதாமாதாக்களிடத்திலே பிறக்கும் பிள்ளைகளும் அவ்வவ் வியாதிகளை உடையவைகளாய்ப் பிறக்கின்றன என்பாயாகில், மேற்கூறிய வியாதி உள்ளவர்களுக்கு அல் வியாதியில்லாத பிள்ளைகளும் வியாதியில்லாதவர்களுக்கு ரியாதியுள்ள பிள்ளைகளும் பிறக்கக் காண்கின்றோமே! ஆதலால், ஒரோவழி வியாதியுள்ள பிதாமாதாக்களிடத்திலே ளியாதியுள்ள பிள்ளைகள் பிறப்பினும், அப்பிள்ளைகள் பூர்வ சென்மத்திலே செய்த வினையினாலேயே அவைகளுக்கு அவ் வியாதிகள் வந்தனவென்று கொள்ளவேண்டும்; இன்னும், பிதாமாதாக்கள் செய்த கர்மத்தினாலே பிள்ளைகளைத் தண்டித்தல் நீதியன்று. அரசர்கள், ஒருவனை ஒருவன் கொலை பண்ணினால் அவனைக் கொல்வதேயன்றி அவன் பிள்ளை
சைவதூஷண்பரிகாரம் அங்ஙனமாயில் காம் படியேயன்றி எங்கள் கர்மங்களின்படி சுகதுக்கங்களை அளிப்பவர் அல்லரென்றாயிற்று . புண்ணியம் செய்தாலும் சரி பாவம் செய்தாலும் சரி அதினால் நமக்கு இன்பமுமில்லை இதினால் நமக்குத் துன்பமு மில்லை என்று முடியும் . அன்றியும் யாதொரு காரணமு மின்றித் தமது சித்தத்தின்படியே பிறக்கும்பொழுதே சிலரை அப்படியும் சிலரை இப்படியும் படைத்தாரெனில் சருவசீவதாயாபரர் என்னும் பெயர் இழந்து பக்ஷபாத முள்ளவராவர் . ஆதலால் அது பொருந்தாது . குயவனால் வனையப்பட்ட பாண்டங்களுட்சில எங்களை ஏன் இப்படி வனைந்தாய் ? என்று அவனுடன் வழக்காடுவது நீதியன்றே ; அதுபோல் கடவுளாலே சிருட்டிக்கப்பட்ட நாங்கள் எங்களை ஏன் இப்படிப்படைத்தீர் ? என்று அவருடன் வழக்காடுவது நீதியன்று என்பாயாகில் ; அவை கள் சடப்பொருளாகையில் அந்தத் திஷ்டாந்தம் பொருந் தாது ; அவைகளுள் எங்களைப்போலச் சித்துப்பொருளாகில் ஒருவன் தன் பிள்ளைகளைச் சமமாகக் காப்பாற்றாதபொழுது பிள்ளையானது தன் பிதாவை நோக்கி என் பிதாவே ! நீர் என் சகோதரனுக்கு இந்தப்போக்கியப் பொருள்களெல்லா வற்றையும் கொடுத்தீர் ; எனக்கு ஒன்றுந் தந்தீரில்லையே ! உமக்கு நான்செய்த அபகாரம் யாது ? அவன் செய்த உபகாரம் யாது ? என்று வழக்காடுவதுபோல வழக்காடுமே . 86 குயவன் வனையும்பொழுது சிலபாண்டங்கள் கோண லாய் வனையப்படவில்லையா ? சிலபாண்டங்கள் வெடித்துப் போகவில்லையா ? என்பாயாகில் ; குயவன் பாண்டங்களை வனையும்பொழுது ல்லாப் பாண்டங்களும் யாதொரு குற்றமுமின்றிச் சிறந்தனவாகவே வனையப்படல் வேண்டு மென்று விரும்புகின்றான் . விரும்பினும் அவன் சிற்றறிவு விவேசனம் 87 சிறுதொழிலுடையனாகையால் அவனுடைய விருப்பத்துக்கு மாறாகச் சில பாண்டங்களவ் வாறாகின்றன . கடவுள் எல்லா ரையும் சமமாகவே படைத்தல் வேண்டுமென்று விரும்பி படைக்கும்பொழுது அவருடைய விருப்பத்துக்கு மாறாகப் பலர் குருடு முதலிய குற்றமுடையவர்களாய்ப் பிறந்தா ரெனில் அவரை முற்றறிவு முற்றுத்தொழில் உடைய ரெனல் கூடாது . ஆதலால் பலரைக் குற்றமுடையராகப் படைத்தல் வேண்டுமென்று நினைந்து படைத்திரார் என்பது சிறிதும் பொருந்தாது . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org பெருமை சிறுமை இல்லையாகில் உலகம் நடவாதா தலால் அவ்வாறு படைத்தார் என்பாயாகில் ; அவர் சர்வசாமர்த்திய முடையவராகையால் பெருமை சிறுமை இல்லாதிருப்பினும் உலகத்தை நடத்துவாரே ; ஆகையால் அதுவும் பொருந்தாது . இவ்வேற்றுமைகளெல்லாம் பிதாமாதா செய்த பாவங் களினாலே பிள்ளைகளுக்கு உண்டாகின்றன . பிரமியம் வெட்டை கிரந்தி ஈளை பாண்டுமுதலிய வியாதிகளிலே அழுந்தும் பிதாமாதாக்களிடத்திலே பிறக்கும் பிள்ளைகளும் அவ்வவ் வியாதிகளை உடையவைகளாய்ப் பிறக்கின்றன என்பாயாகில் மேற்கூறிய வியாதி உள்ளவர்களுக்கு அல் வியாதியில்லாத பிள்ளைகளும் வியாதியில்லாதவர்களுக்கு ரியாதியுள்ள பிள்ளைகளும் பிறக்கக் காண்கின்றோமே ! ஆதலால் ஒரோவழி வியாதியுள்ள பிதாமாதாக்களிடத்திலே ளியாதியுள்ள பிள்ளைகள் பிறப்பினும் அப்பிள்ளைகள் பூர்வ சென்மத்திலே செய்த வினையினாலேயே அவைகளுக்கு அவ் வியாதிகள் வந்தனவென்று கொள்ளவேண்டும் ; இன்னும் பிதாமாதாக்கள் செய்த கர்மத்தினாலே பிள்ளைகளைத் தண்டித்தல் நீதியன்று . அரசர்கள் ஒருவனை ஒருவன் கொலை பண்ணினால் அவனைக் கொல்வதேயன்றி அவன் பிள்ளை