சைவ தூஷண பரிகாரம்

88 யைக் கொல்லக்கண்டுமிரோம்; கேட்டுமிரோம். இப்படியே சிற்றறிவுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களும் ஆகிய மனிதர்தாமும் ஆராய்ந்து அவரவர்செய்த குற்றத் துக்கு அவரவரையே தண்டிப்பார்களெனில், முற்றறி வுடையவரும் நீதியில் வழுவாதவருமாகிய கடவுள் ஆரா ஒருவன் செய்த குற்றத்துக்கு வேறொருவனைத் தண்டிப்பாரா! தண்டியாரே. உபா.24.16. "பிள்ளைகளி னிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம். அவனவன் செய்த பாவத்தி அவனவனே கொலைசெய்யப்படவேண்டும்." எசே.18.2."இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசு கின்றன என்னும் இந்தப் பழமொழியைச் சொல்லுகிற தென்ன?" இவ்வசனங்களினாலே ஒருவன் செய்தகுற்றம் மற்றொருவனைச் சாராதென்பதே உன் சமயநூற்றுணி பென்று தோன்றுகின்றது. நாங்கள் முன்னும் பிறந்து கர்மஞ்செய்தோமெனில், நாம் முன்னே இன்னபிறப்பாய்ப் பிறந்தோமென்றும், இன்ன இன்ன கர்மங்கள் செய்தோமென்றும், நமக்கு விளங்கா திருக்கவேண்டுவது என்னை? என்பாயாகில்; அறிவுடனே இருப்பவனொருவன் தன் கையிலிருக்கும் ஒருபொருளைத் தன்வீட்டிலே ஓரிடத்தில் வைத்துவிட்டு, உடனே எங்கே வைத்தேனோ தெரியவில்லையே! என்று தடுமாறுகின்றான். இப்படியாமாகில், கருப்பாசயப்பை உறுத்தலினாலும், அதிற் சலம் பூரித்தலினாலும், உதராக்கினி சுடுதலினாலும், பிரசூத வாயு முரித்துத் தள்ளுதலினாலும், மலையிருத்திக்கொண்டது போலவும், கடலின்கண்வீழ்த்தி அமிழ்த்தல்போலவும், இருப்புக்கடத்திலடைத்து நெருப்பாற் சுடுதல்போலவும், யாது னிமித்தம் சைவதூஷணபரிகாரம் விவேசனம் 89 மலைமேல் நின்றானைத் தலைகீழாகத் தள்ளுதல் போலவும் வரும் பெருங்கொடுந் துன்பங்களினாலே பலங்கெட்டு மிகுந்த மயக்கத்தைப் பொருந்தி,ஆனையிலிட்ட கரும்புபோல மாதா வின் யோநித்துவாரத்தினாலே நெருக்கப்பட்டுப் பிறந்த எங்க ளுக்கு, பூர்வசென்மம் இதுவென்றும், அதிலே செய்யப்பட்ட கர்மங்களிவையென்றும், எப்படித் தெரியும்? தெரியாமை யால், பூர்வசென்மம் இல்லையென்று சொல்லுதல் கூடாது. கடவுளானவர் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களைத் திருவுளத்தடைத்து அவைகளை அனுபவித்துத் தொலைப் பித்து முத்தியடைவிக்கும் பொருட்டு அவ்வக் கர்மங்களுக் கேற்ற சுகதுக்கங்களை ஊட்டுவார் என்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆதலால், நாம் இம்மையிலனுபவிக்கும் சுக துக்கங்களிரண்டையும் நாம் முன்செய்த புண்ணிய பாவங்களி னாலே பெருங்கருணாகிதியாகிய கடவுள் நமக்கு ஊட்டுகின்றா ரென்பது சத்தியம். அப்படியாமாகில், அரசனானவன் குற்றஞ்செய்தவ னொருவனைத் தண்டிக்கும்பொழுது, நீ இன்னகுற்றம் செய்த மையால் இன்னதண்டம் பெறுவாய் என்று அவனுக்கு அக் குற்றத்தை உணர்த்தியன்றோ அவனைத் தண்டிப்பான். அது போல, நாம் பூர்வசென்மத்திலே பாவம் செய்தோமாகில், கடவுள், நீங்கள் இன்னபாவஞ் செய்தமையால் இன்ன தண்டம் பெறுவீர்களென்று நமக்கு உணர்த்தியன்றோ நம்மைத் தண்டிப்பார். அங்ஙனம் உணர்த்தாது தண்டித்தல் நீதியன்றே யென்பாயாகில்; அக்கடவுள் இன்ன இன்ன பாவஞ் செய்தவர்கள் இன்ன இன்ன துன்பங்களை அடைவார் களென்று சைவாகமங்களால் நமக்கு உணர்த்துகின்றாரே. இதுகாறும் கூறியவாற்றால், நாம்செய்த கர்மங்களினாலேயே மேன்மேலும் பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின் றோம் என்பது நாட்டப்பட்டது. Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org
88 யைக் கொல்லக்கண்டுமிரோம் ; கேட்டுமிரோம் . இப்படியே சிற்றறிவுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களும் ஆகிய மனிதர்தாமும் ஆராய்ந்து அவரவர்செய்த குற்றத் துக்கு அவரவரையே தண்டிப்பார்களெனில் முற்றறி வுடையவரும் நீதியில் வழுவாதவருமாகிய கடவுள் ஆரா ஒருவன் செய்த குற்றத்துக்கு வேறொருவனைத் தண்டிப்பாரா ! தண்டியாரே . உபா .24.16 . பிள்ளைகளி னிமித்தம் பிதாக்களும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம் . அவனவன் செய்த பாவத்தி அவனவனே கொலைசெய்யப்படவேண்டும் . எசே .18.2 . இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள் பிள்ளைகளின் பற்கள் கூசு கின்றன என்னும் இந்தப் பழமொழியைச் சொல்லுகிற தென்ன ? இவ்வசனங்களினாலே ஒருவன் செய்தகுற்றம் மற்றொருவனைச் சாராதென்பதே உன் சமயநூற்றுணி பென்று தோன்றுகின்றது . நாங்கள் முன்னும் பிறந்து கர்மஞ்செய்தோமெனில் நாம் முன்னே இன்னபிறப்பாய்ப் பிறந்தோமென்றும் இன்ன இன்ன கர்மங்கள் செய்தோமென்றும் நமக்கு விளங்கா திருக்கவேண்டுவது என்னை ? என்பாயாகில் ; அறிவுடனே இருப்பவனொருவன் தன் கையிலிருக்கும் ஒருபொருளைத் தன்வீட்டிலே ஓரிடத்தில் வைத்துவிட்டு உடனே எங்கே வைத்தேனோ தெரியவில்லையே ! என்று தடுமாறுகின்றான் . இப்படியாமாகில் கருப்பாசயப்பை உறுத்தலினாலும் அதிற் சலம் பூரித்தலினாலும் உதராக்கினி சுடுதலினாலும் பிரசூத வாயு முரித்துத் தள்ளுதலினாலும் மலையிருத்திக்கொண்டது போலவும் கடலின்கண்வீழ்த்தி அமிழ்த்தல்போலவும் இருப்புக்கடத்திலடைத்து நெருப்பாற் சுடுதல்போலவும் யாது னிமித்தம் சைவதூஷணபரிகாரம் விவேசனம் 89 மலைமேல் நின்றானைத் தலைகீழாகத் தள்ளுதல் போலவும் வரும் பெருங்கொடுந் துன்பங்களினாலே பலங்கெட்டு மிகுந்த மயக்கத்தைப் பொருந்தி ஆனையிலிட்ட கரும்புபோல மாதா வின் யோநித்துவாரத்தினாலே நெருக்கப்பட்டுப் பிறந்த எங்க ளுக்கு பூர்வசென்மம் இதுவென்றும் அதிலே செய்யப்பட்ட கர்மங்களிவையென்றும் எப்படித் தெரியும் ? தெரியாமை யால் பூர்வசென்மம் இல்லையென்று சொல்லுதல் கூடாது . கடவுளானவர் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களைத் திருவுளத்தடைத்து அவைகளை அனுபவித்துத் தொலைப் பித்து முத்தியடைவிக்கும் பொருட்டு அவ்வக் கர்மங்களுக் கேற்ற சுகதுக்கங்களை ஊட்டுவார் என்று சைவாகமங்கள் சாற்றுகின்றன . ஆதலால் நாம் இம்மையிலனுபவிக்கும் சுக துக்கங்களிரண்டையும் நாம் முன்செய்த புண்ணிய பாவங்களி னாலே பெருங்கருணாகிதியாகிய கடவுள் நமக்கு ஊட்டுகின்றா ரென்பது சத்தியம் . அப்படியாமாகில் அரசனானவன் குற்றஞ்செய்தவ னொருவனைத் தண்டிக்கும்பொழுது நீ இன்னகுற்றம் செய்த மையால் இன்னதண்டம் பெறுவாய் என்று அவனுக்கு அக் குற்றத்தை உணர்த்தியன்றோ அவனைத் தண்டிப்பான் . அது போல நாம் பூர்வசென்மத்திலே பாவம் செய்தோமாகில் கடவுள் நீங்கள் இன்னபாவஞ் செய்தமையால் இன்ன தண்டம் பெறுவீர்களென்று நமக்கு உணர்த்தியன்றோ நம்மைத் தண்டிப்பார் . அங்ஙனம் உணர்த்தாது தண்டித்தல் நீதியன்றே யென்பாயாகில் ; அக்கடவுள் இன்ன இன்ன பாவஞ் செய்தவர்கள் இன்ன இன்ன துன்பங்களை அடைவார் களென்று சைவாகமங்களால் நமக்கு உணர்த்துகின்றாரே . இதுகாறும் கூறியவாற்றால் நாம்செய்த கர்மங்களினாலேயே மேன்மேலும் பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின் றோம் என்பது நாட்டப்பட்டது . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org