சைவ தூஷண பரிகாரம்

விக்கியாபனம் உணரக்கடவாய்; இவ்வதிபாதகத்தினால் வருந்துயரமும் பெருந் நியரமென்றும் அதை அனுபவிக்குங்காலமும் நெடுங்காலம் என் லும் சிந்திக்கக்கடவாய்; இதன்கூறாகிய அதிபாதகபேதத்தையும் இனியாம் சொல்வாம். எ- வேதம், மந்திரம் - மொழிபெயர்ப்பு. "சனங்களிடத்து (அந்தரியாமியாய் நிற்கும்) பரனாகிய அந்த உருத்திரனைப் புத்தியினால் உள்ளே பற்றுபவர்கள் ஈசியத்தை நாவினாலே கிரகிப்பவர்கள்.'' இ-எ பரன் - எல்லாரினும் உயர்ந்தவன். உருத்திரன் ஆணவமாகிய நோயை ஓட்டுபவன். சசியம் - தானியம். அதற்கு இங்கே தானியவிகாரமாகிய அன்னம் எனப்பொருள்கொள்ளப் படும். குதர்க்கதோஷிகளாய் அவ்வுருத்திரனை உள்ளே பற்றாத வர்கள் மலத்தையே நாவினால் கிரகிப்பவர்கள் என்பது அப்பிரஸ் துதப் பிரசம்ஸாலங்காரத்தாற் பெறப்படும். இதற்கு உபவிருங் கணம் வருமாறு:- பராசரஸ்மிருதி-மொழிபெயர்ப்பு. நற்றகை யுருத்திர நாய கன்றனைப் பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப் பற்றிடு வோர்நிதம் பரிந்து நாவினாற் குற்றமி லமுதினைக் கொள்ளு வார்களால். உற்றிடு முமைபுண ருருத்தி ரன்றனைப் பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப் பற்றிடாத் தீயர்கள் பரிந்து நாவினாற் குற்றமா மலத்தினைக் கொள்வ ருண்மையே. இங்கே முதற் செய்யுளால் மந்திரத்தின் வாச்சியார்த்தம் காட்டப்பட்டது. இரண்டாஞ்செய்யுளாலோ கம்மியார்த்தம்; இது இங்கே மறுதலைப்படுதலால், நிந்திக்கப்படும் சீவனம் எனப்பொருள்படும். விக்கியாபனம் திருவாசகம் (அச்சப்பத்து-2) வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினு மஞ் இருவரான் மாறு காணா வெம்பிரான் றம்பி ரானாம் (சேன் திருவுரு வன்றி மற்றோர் தேவெரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே. கந்தபுராணம் (உமைவருபடலம் - 55) முண்டக மிசையினான் முகுந்த னாடியே பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக் கொண்டில் ரெள்ளிய கொடுமை யோர்க்கெலாந் தண்டம்வந் திருமென மறைகள் சாற்றுமால். Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org கூர்மபுராணம் (பிராயச்சித்தமுரைத்தவத்தியாயம்-31) திங்களங் கண்ணி வேய்ந்த செல்வனை யிகழ்ந்த பாவ மிங்கிது தன்னிற் றீரா தெண்ணறும் விரதமாற்றிப் பொங்கழ னாப்பண் வைகி யருந்தவம் புரிந்திட் டாலு மங்கவ னருளி லன்றித் தீர்ந்திட லரிய தாமால். சித்தாந்தசிகாமணி (பத்தஸ்தலம்-27-28) கண்டன னாயின் முக்கட் கடவுளை நிந்திப் போனைத் தண்டனை புரிந்து கொல்க வரிதெனிற் சமிக்க * நின்று (திக் மண்டனில் வலிய னன்றேல் வான்செவித் துணைகள்பொத் கொண்டவ ணகன்று செல்க் குலைகுலைந் தமல பத்தன். எயுமா சார நிந்தை யாண்டுள தவ்விடத்திற் போயுற லொழிக வென்றும் புகல்சிவ நிந்தை செய்வோன் றீயக முறாது நிற்க சிவநிந்தை யவர்க்கு நூறாண் டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் கரிது மாதோ. *சமித்தல் - தடுத்தல்.
விக்கியாபனம் உணரக்கடவாய் ; இவ்வதிபாதகத்தினால் வருந்துயரமும் பெருந் நியரமென்றும் அதை அனுபவிக்குங்காலமும் நெடுங்காலம் என் லும் சிந்திக்கக்கடவாய் ; இதன்கூறாகிய அதிபாதகபேதத்தையும் இனியாம் சொல்வாம் . வேதம் மந்திரம் - மொழிபெயர்ப்பு . சனங்களிடத்து ( அந்தரியாமியாய் நிற்கும் ) பரனாகிய அந்த உருத்திரனைப் புத்தியினால் உள்ளே பற்றுபவர்கள் ஈசியத்தை நாவினாலே கிரகிப்பவர்கள் . ' ' - பரன் - எல்லாரினும் உயர்ந்தவன் . உருத்திரன் ஆணவமாகிய நோயை ஓட்டுபவன் . சசியம் - தானியம் . அதற்கு இங்கே தானியவிகாரமாகிய அன்னம் எனப்பொருள்கொள்ளப் படும் . குதர்க்கதோஷிகளாய் அவ்வுருத்திரனை உள்ளே பற்றாத வர்கள் மலத்தையே நாவினால் கிரகிப்பவர்கள் என்பது அப்பிரஸ் துதப் பிரசம்ஸாலங்காரத்தாற் பெறப்படும் . இதற்கு உபவிருங் கணம் வருமாறு : பராசரஸ்மிருதி - மொழிபெயர்ப்பு . நற்றகை யுருத்திர நாய கன்றனைப் பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப் பற்றிடு வோர்நிதம் பரிந்து நாவினாற் குற்றமி லமுதினைக் கொள்ளு வார்களால் . உற்றிடு முமைபுண ருருத்தி ரன்றனைப் பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப் பற்றிடாத் தீயர்கள் பரிந்து நாவினாற் குற்றமா மலத்தினைக் கொள்வ ருண்மையே . இங்கே முதற் செய்யுளால் மந்திரத்தின் வாச்சியார்த்தம் காட்டப்பட்டது . இரண்டாஞ்செய்யுளாலோ கம்மியார்த்தம் ; இது இங்கே மறுதலைப்படுதலால் நிந்திக்கப்படும் சீவனம் எனப்பொருள்படும் . விக்கியாபனம் திருவாசகம் ( அச்சப்பத்து -2 ) வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினு மஞ் இருவரான் மாறு காணா வெம்பிரான் றம்பி ரானாம் ( சேன் திருவுரு வன்றி மற்றோர் தேவெரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே . கந்தபுராணம் ( உமைவருபடலம் - 55 ) முண்டக மிசையினான் முகுந்த னாடியே பண்டுணர் வரியதோர் பரனை யாதியாக் கொண்டில் ரெள்ளிய கொடுமை யோர்க்கெலாந் தண்டம்வந் திருமென மறைகள் சாற்றுமால் . Digitized by Noolaham Foundation . noolaham.org | aavanaham.org கூர்மபுராணம் ( பிராயச்சித்தமுரைத்தவத்தியாயம் -31 ) திங்களங் கண்ணி வேய்ந்த செல்வனை யிகழ்ந்த பாவ மிங்கிது தன்னிற் றீரா தெண்ணறும் விரதமாற்றிப் பொங்கழ னாப்பண் வைகி யருந்தவம் புரிந்திட் டாலு மங்கவ னருளி லன்றித் தீர்ந்திட லரிய தாமால் . சித்தாந்தசிகாமணி ( பத்தஸ்தலம் - 27-28 ) கண்டன னாயின் முக்கட் கடவுளை நிந்திப் போனைத் தண்டனை புரிந்து கொல்க வரிதெனிற் சமிக்க * நின்று ( திக் மண்டனில் வலிய னன்றேல் வான்செவித் துணைகள்பொத் கொண்டவ ணகன்று செல்க் குலைகுலைந் தமல பத்தன் . எயுமா சார நிந்தை யாண்டுள தவ்விடத்திற் போயுற லொழிக வென்றும் புகல்சிவ நிந்தை செய்வோன் றீயக முறாது நிற்க சிவநிந்தை யவர்க்கு நூறாண் டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் கரிது மாதோ . * சமித்தல் - தடுத்தல் .