தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01

தென்னாடு 02 கலாநிதி சு. குணேஸ்வரன் 1.அறிமுகம் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த் தொல்குடிகளின் பண் பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூ ற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அப் பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண் பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும். அகநானூறு புறநானூறு ஆகிய சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் 2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழி பாடாக நடுகற்கள் சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அக நானூறு, புறநானூறு, மலைபடுகடாம். பட்டினப்பாலை, பரிபாடல், திரு முருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக் கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் அகநானூறு (16 பாடல்கள்) மற்றும் புறநானூற்றுப் (12 பாடல்கள்) பாடல் 224. களிலேயே இவை அதிகம் எடுத்தாளப் பட்டிருக்கின்றன. இவ்விரு இலக்கியங்களின் வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும். (அ) பதுக்கைகளும் நடுகற்களும் "நடுகல்" என்பது வீரன் இறந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அவன் நினைவாக எழுப்பப்படும் நினைவுக்கல் ஆகும். இது வீரக்கல் (நசழ ளுவழநௌ) எனவும் அழைக்கப்பட்டது. இவை முதலில் செப்பனிடப்படாத நினைவுக் கற்களாகவும் குத்துக்கற்களாகவும் அமைக்கப்பட்டன. இறந்துபட்டோரின் வீரச்செயல் புடைப்புச் சிற்பமாகப் பொறிக்கப்பட்டனவும் வீரரின் பெயரும் அவர் புகழ்மொழியும் எழுதப்பட்டன வெனவும் குறித்த சங்கப்பனுவல்களால் அறியப்படுகின்றன. தென்னாடு இறந்த வீரரின் உடலை மூடிய கற் குவியல்கள் "பதுக்கை" என அழைக் கப்பட்டன. இவை கல்பதுக்கை, கல்திட்டை என இறந்தோரை மூடிய அல்லது புதைத்த மேடுகளாக அமைக்கப்பட்டிருந்தன. கற்பதுக்கைகள் மற்றும் இலை தழைகளால் மூடிய மேடுகளும் குறிக்கப்படுகின்றன. அதிகமும் பதுக்கையின் மேல் அமைக் கப்பட்ட நடுகல் அல்லது பதுக்கையின் அருகின் அமைக்கப்பட்ட நடுகல் பற்றிய என்றும் பாலைத்திணைப் பாடல்கள் குறிப்புக்களும் உள்ளன. பதுக்கைகள் குறிப்பிடுகின்றன. இல்லாமல் தனியாகவும் நடுகற்கள் அமைக்கப்பட்டன. கற்பதுக்கைகளுக்கு அருகில் நடுகற் கள் அமைக்கப்பட்டவற்றை "வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகல்பீலி சூட்டி" (அகம் 35) என்ற பாடலில் கற்குவியலின்மேல் உள்ள நடுகல் தெய்வத்தை வழிபடுவதற்காக அக்கல் லில் மயிற்தோகைகளைச் சூட்டினர் என வும் "உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்" (அகம் 289) என்ற பாடலில் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டுமல்லிகை ஏறிப் படரும். அம் மல்லிகையின் மலர்கள் கொண்டு நெடிது காலம் நிலைத்து நிற்கும் நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபாடு செய்வர் எனவும், "பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி" (புறம் 264) என்ற பாடலில் பருக்கைக் கற்களைக் கொண்டு மேடு அமைத்து மரலில் இருந்து எடுத்த நார்கொண்டு சிவந்த பூக்களால் கண்ணியைத் தொடுத்து அழகிய மயிற்பீலியைச் சூட்டிப் பெயரை எழுதி நடுகல்லும் நட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. "வெறியாட்டு போன்ற பிறிதொரு சடங்காகக் கல் நட்டு வழிபடும் நடுகல் சடங்கைக் கூறலாம். அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப் பட்டுள்ள "பதுக்கைகள்" எனப்படும் கற்படைகள் தமிழகம் முழுவதும் மிகுதி யாகக் கிடைத்துள்ளன. ஊரிருக்கைகள் அமைந்த பகுதிகளில் இவ்வகையான புறநானூற்றுப் பாடல்களில், போர் நடந்த இடங்கள், ஊரின் எல்லைப் புறங்களுடன் ஏரிக்கரைகளில் ஆற்றங் கரைகளில் காட்டுப்பகுதிகளில் அமைக் கப்பட்ட குறிப்புக்களும் உள்ளன. "இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. இவை உணர்த்துவது யாதெனில் நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில் வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோதான் அனுமானிக்க முடிகின்றது."(2) இதனூடாக நடுகற்கள் அதிகமும் ஊருக்கு வெளியேயும் ஊரில் எல்லையிலும் போர் நடைபெற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டவை தெரியவருகின்றன. நடுகற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. வீரனை நினைவுபடுத்தும் வகையில் கல் நடப்பட்டு வழிபடப்பட்டவை இவை. இதனை நடுகல் என்று அழைக்கிறோம்."(1) இவற்றினூடாக கற்பதுக்கைகள் அமைக் கப்பட்டு அருகில் நடுகல் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்பட்ட செய்திகள் தெளி வாகின்றன. (ஆ) நடுகல் மற்றும் பதுக்கைகள் காணப்படும் இடங்கள் நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் எல்லையில் அல்லது ஊரின் ஒதுக்குப் புறத்தில் போர் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டன. அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களில் அதிகமான குறிப்புக்கள் இவை குறித்து உள்ளன. "பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்றாங்குப் பெயரும் கானம்" (அகம் 387) என பெரிய முகபடாம் அணிந்த யானை மீது செல்லும் அரசியராயினும் அவ்விடத்தினின்றும் மேலும் செல்ல நினைக்காது திரும்பிச் செல்லும் அச்சம் மிகுந்த பாலைநிலம் எனவும், ஒருமுறை சென்றவர் மீளவும் செல்லத் தயங்கும் நீண்ட சுரவழியில் அந்நடுகற்கள் உள்ளன எனவும், போர் நடந்த பாலைநிலங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட நடுகற்களின் அருகில் வாள்களும் கேடகங்களும் வைக்கப்பட்டன (இ) நடுகல் பற்றிய தொல்காப்பியச் சூத்திரம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் அமைக்கும் வழக்கம் தொல்தமிழர் குடிகளிடம் இருந்ததென்பதும் அது சடங்கு முறையாகப் பேணப்பட்டது என்பதும் தெரியவருகிறது. "நடுகல் என்பதன் நேர்ப்பொருள் நடப்படுகின்ற கல் - வீரக்கல் நினைவுச் சின்னக் குத்துக்கல் என்பனவாகும். இத்தகைய பழக்கங்கள் திடீரென எழுவன அல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். மேலும் அப்பழக்கங்களிற் சிலகூறுகள் பாடல்களைவிடப் பழமை யானவை என்பது முறையானது. தொல் காப்பியம் இதனை கவிதைக்குரிய பாடுபொருளாக மட்டும் காட்டவில்லை. பாடல்கள் முழுமையாகக் காட்டும் ஒரு மெய்ம்மை என்பதனோடு அதனை ஒரு சடங்காகக் காட்டுவதோடு ஆறு நிலைகளை உடையதாக அக்கல் நடுதலை எண்ணு கிறது."(3) "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர் (4) இங்கு நடுகல் அமைத்தல் முதல் அதன் வழிபாடு வரை ஆறு படிமுறை உரைக் கப்படுகிறது. i. காட்சி என்பது ஒரு கல்லினைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் செதுக்குதல் ii. கால்கோள் என்பது அக்கல்லினை நடுவதற்கு நல்ல நேரம் குறித்தல் iii. நீர்ப்படை என்பது அக்கல்லை தூ யநீர் கொண்டு கழுவுதல் iv.நடுதல் என்பது அக்கல்லினை எவ்விடத்தில் நிறுவவேண்டும் எனத் தீர்மானித்து நடுதல் V. பெரும்படை என்பது இறந்துபட்ட வீரனின் சிறப்புக்களை அக்கல்லில் பொறித்தல் மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் விருந்தும் பிறவும் ஆகும். vi.வாழ்த்துதல் என்பது இறந்த வீரனை நடுகல் வழியாக வழிபடுதல் இதனூடாக தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் வழிபாடு இருந்தது என்பதும் மக்களால் தொடர்ந்து பேணப்பட்டதும் அறியப்படுகிறது. அது சடங்காக துலைத் திங்கள், 2020 3. நடுகற்கள் அமைத்துப் பாடப்பட்டோரும் நடுகற்களின் அமைப்பும் அகநானூற்றுப் பாடல்களில் போரில் இறந்த வீரர்களுக்கு பெயரும் பீடும் எழுதி வேல், கேடகம், வைக்கப்பட்ட நடுகற்களும் பின்னர் செம்மறிக்குட்டி பலியிடப்பட்ட ருருந்து +389100+ செய்திகளும் பதிவாகியுள்ளன. தழையிட்டு மூடிய கற்குவியல் (அகம் 109), கற்குவியல் (அகம் 289), வீரரின் நடுகல் (அகம் 387), காட்டுயானை ஆள் என உதைத்த நடுகல் (அகம் 365), மறவர் நடுகல்லில் அம்பு தீட்டுதல் அதனால் நடுகல்லின் எழுத்து பக்கம் தேய்ந்து காணப்படல் (அகம் 297), உப்புவணிகரின் வண்டில் முனை அழுத்தி சிதைந்த நடுகல் (அகம் 343), பெயரும் பீடும் எழுதிய நடுகல் (அகம் 179), பெயரும் பீடும் எழுதிய எழுத்துடை நடுகல் (அகம் 53), கற்குவியல் கொண்ட பதுக்கையும் நடுகல் முன் வேலும் கேடகமும் வைக்கப்பட்டபட்டவையும் (அகம் 67), பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகல் (131), நடுகல் தெய்வத்திற்கு மயிற்றோகை, துடிமுழக்குதல், செம்மறிக்குட்டி பலியிட்ட செய்தி குறிப்பிடப்படுதல் (அகம் 35) ஆகியன அகநானூற்றுச் செய்யுட்களின்வழி அறியப்படும் நடுகல் பற்றிய குறிப்புகளாகும். மேற்குறித்த அகநானூற்றுப் பாடல் களில் கற்குவியற் பதுக்கைகளும் பின்னர் பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகற்களும் காணப் பட்டுள்ளன. பலியிடப்பட்ட செய்தியும் வருகிறது. இங்கு படிப்படியான வளர்ச்சி முறை தெரிகிறது. புறநானூற்றுப் பாடல்களில் அரசர்கள், நிலத் தலைவர்கள், போரில் இறந்த வீரர்கள் ஆகியோருக்கு நடுகற்கள் அமைத்து வழிபடப்பட்ட குறிப்புகள் உள்ளன. இவை புறநானூற்றுப் பாடல்களில் ஒரு சடங்கு முறைக்கு மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். புறநானூற்றுப் பாடல்களில் கோப் பெருஞ்சோழன் மீது நட்புக் கொண்டிருந்த பொத்தியார் பாடிய (புறம் 221, 222,223) பாடல்களிலும்: அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடிய (புறம் 232) பாடலிலும் நடுகல் வழிபாடு குறிக்கப் படுகிறது. இவை தவிர ஏனைய புற நானூற்றுப் பாடல்களில் அதிகமும் நிரைமீட்கும் போரிலும், அரசனுடன் கூடவே பகைமுடிக்கும் போரிலும் இறந்த வீரர்கள் மீதே அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ஆநிரை மீட்கவரும் போரில் மாண்டவன் நடுகல். (புறம். 260), பகை கவர்ந்த ஆநிரை மீட்டுத்தந்த போரில் வீழ்ந்த கரந்தை மறவனின் நடுகல் (புறம்.261), நிரைமீட்டு உயிர்துறந்த வீரனுக்கு பீலியும் கண்ணியும் சூட்டி கல் நட்டமை. (புறம்.264), நிரைமீட்டு உயிர் துறந்த வீரனின் கல்லுக்கு மாலைசூட்டுதல். (புறம். 265), கணவன் பகைமுடித்து வருக என முன்னோரின் நடுகல்லைப் பரவியமை. (புறம் 306), போருக்குச் சென்ற கணவன் நடுகல் மிகுந்த ஊரை உடையவன் என ஊரின் சிறப்பை பாடுதல். (புறம். 314), பலியிட்டு நன்னீராட்டி நெய்விளக்கேற்றி நடுகல்லை வழிபடும் சிறப்பை பாடியமை.(புறம். 329), களிறினை எறிந்து தாமும் வீழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நடுகல்லைத் தொழுவோம் என பாடியமை. (புறம்.335) முதலான புறப்பாடல்களில் நடுகல் குறித்து உரைக்கப்பட்டுள்ளன. (தொடரும்)
தென்னாடு 02 கலாநிதி சு . குணேஸ்வரன் 1.அறிமுகம் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும் . எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை தமிழ்த் தொல்குடிகளின் பண் பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன . சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல் வெறியாட்டு நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது . அகநானூறு மற்றும் புறநானூ ற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன . அப் பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண் பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும் . அகநானூறு புறநானூறு ஆகிய சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் 2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழி பாடாக நடுகற்கள் சங்க இலக்கியங்களில் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அக நானூறு புறநானூறு மலைபடுகடாம் . பட்டினப்பாலை பரிபாடல் திரு முருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக் கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன . அவற்றுள் அகநானூறு ( 16 பாடல்கள் ) மற்றும் புறநானூற்றுப் ( 12 பாடல்கள் ) பாடல் 224 . களிலேயே இவை அதிகம் எடுத்தாளப் பட்டிருக்கின்றன . இவ்விரு இலக்கியங்களின் வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும் . ( ) பதுக்கைகளும் நடுகற்களும் நடுகல் என்பது வீரன் இறந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அவன் நினைவாக எழுப்பப்படும் நினைவுக்கல் ஆகும் . இது வீரக்கல் ( நசழ ளுவழநௌ ) எனவும் அழைக்கப்பட்டது . இவை முதலில் செப்பனிடப்படாத நினைவுக் கற்களாகவும் குத்துக்கற்களாகவும் அமைக்கப்பட்டன . இறந்துபட்டோரின் வீரச்செயல் புடைப்புச் சிற்பமாகப் பொறிக்கப்பட்டனவும் வீரரின் பெயரும் அவர் புகழ்மொழியும் எழுதப்பட்டன வெனவும் குறித்த சங்கப்பனுவல்களால் அறியப்படுகின்றன . தென்னாடு இறந்த வீரரின் உடலை மூடிய கற் குவியல்கள் பதுக்கை என அழைக் கப்பட்டன . இவை கல்பதுக்கை கல்திட்டை என இறந்தோரை மூடிய அல்லது புதைத்த மேடுகளாக அமைக்கப்பட்டிருந்தன . கற்பதுக்கைகள் மற்றும் இலை தழைகளால் மூடிய மேடுகளும் குறிக்கப்படுகின்றன . அதிகமும் பதுக்கையின் மேல் அமைக் கப்பட்ட நடுகல் அல்லது பதுக்கையின் அருகின் அமைக்கப்பட்ட நடுகல் பற்றிய என்றும் பாலைத்திணைப் பாடல்கள் குறிப்புக்களும் உள்ளன . பதுக்கைகள் குறிப்பிடுகின்றன . இல்லாமல் தனியாகவும் நடுகற்கள் அமைக்கப்பட்டன . கற்பதுக்கைகளுக்கு அருகில் நடுகற் கள் அமைக்கப்பட்டவற்றை வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகல்பீலி சூட்டி ( அகம் 35 ) என்ற பாடலில் கற்குவியலின்மேல் உள்ள நடுகல் தெய்வத்தை வழிபடுவதற்காக அக்கல் லில் மயிற்தோகைகளைச் சூட்டினர் என வும் உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் ( அகம் 289 ) என்ற பாடலில் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டுமல்லிகை ஏறிப் படரும் . அம் மல்லிகையின் மலர்கள் கொண்டு நெடிது காலம் நிலைத்து நிற்கும் நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபாடு செய்வர் எனவும் பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி ( புறம் 264 ) என்ற பாடலில் பருக்கைக் கற்களைக் கொண்டு மேடு அமைத்து மரலில் இருந்து எடுத்த நார்கொண்டு சிவந்த பூக்களால் கண்ணியைத் தொடுத்து அழகிய மயிற்பீலியைச் சூட்டிப் பெயரை எழுதி நடுகல்லும் நட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . வெறியாட்டு போன்ற பிறிதொரு சடங்காகக் கல் நட்டு வழிபடும் நடுகல் சடங்கைக் கூறலாம் . அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப் பட்டுள்ள பதுக்கைகள் எனப்படும் கற்படைகள் தமிழகம் முழுவதும் மிகுதி யாகக் கிடைத்துள்ளன . ஊரிருக்கைகள் அமைந்த பகுதிகளில் இவ்வகையான புறநானூற்றுப் பாடல்களில் போர் நடந்த இடங்கள் ஊரின் எல்லைப் புறங்களுடன் ஏரிக்கரைகளில் ஆற்றங் கரைகளில் காட்டுப்பகுதிகளில் அமைக் கப்பட்ட குறிப்புக்களும் உள்ளன . இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன . ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன . இவை உணர்த்துவது யாதெனில் நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில் வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோதான் அனுமானிக்க முடிகின்றது . ( 2 ) இதனூடாக நடுகற்கள் அதிகமும் ஊருக்கு வெளியேயும் ஊரில் எல்லையிலும் போர் நடைபெற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டவை தெரியவருகின்றன . நடுகற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன . வீரனை நினைவுபடுத்தும் வகையில் கல் நடப்பட்டு வழிபடப்பட்டவை இவை . இதனை நடுகல் என்று அழைக்கிறோம் . ( 1 ) இவற்றினூடாக கற்பதுக்கைகள் அமைக் கப்பட்டு அருகில் நடுகல் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்பட்ட செய்திகள் தெளி வாகின்றன . ( ) நடுகல் மற்றும் பதுக்கைகள் காணப்படும் இடங்கள் நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் எல்லையில் அல்லது ஊரின் ஒதுக்குப் புறத்தில் போர் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டன . அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களில் அதிகமான குறிப்புக்கள் இவை குறித்து உள்ளன . பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்றாங்குப் பெயரும் கானம் ( அகம் 387 ) என பெரிய முகபடாம் அணிந்த யானை மீது செல்லும் அரசியராயினும் அவ்விடத்தினின்றும் மேலும் செல்ல நினைக்காது திரும்பிச் செல்லும் அச்சம் மிகுந்த பாலைநிலம் எனவும் ஒருமுறை சென்றவர் மீளவும் செல்லத் தயங்கும் நீண்ட சுரவழியில் அந்நடுகற்கள் உள்ளன எனவும் போர் நடந்த பாலைநிலங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட நடுகற்களின் அருகில் வாள்களும் கேடகங்களும் வைக்கப்பட்டன ( ) நடுகல் பற்றிய தொல்காப்பியச் சூத்திரம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் அமைக்கும் வழக்கம் தொல்தமிழர் குடிகளிடம் இருந்ததென்பதும் அது சடங்கு முறையாகப் பேணப்பட்டது என்பதும் தெரியவருகிறது . நடுகல் என்பதன் நேர்ப்பொருள் நடப்படுகின்ற கல் - வீரக்கல் நினைவுச் சின்னக் குத்துக்கல் என்பனவாகும் . இத்தகைய பழக்கங்கள் திடீரென எழுவன அல்ல என்பதை நினைவிற் கொள்ள வேண்டும் . மேலும் அப்பழக்கங்களிற் சிலகூறுகள் பாடல்களைவிடப் பழமை யானவை என்பது முறையானது . தொல் காப்பியம் இதனை கவிதைக்குரிய பாடுபொருளாக மட்டும் காட்டவில்லை . பாடல்கள் முழுமையாகக் காட்டும் ஒரு மெய்ம்மை என்பதனோடு அதனை ஒரு சடங்காகக் காட்டுவதோடு ஆறு நிலைகளை உடையதாக அக்கல் நடுதலை எண்ணு கிறது . ( 3 ) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர் ( 4 ) இங்கு நடுகல் அமைத்தல் முதல் அதன் வழிபாடு வரை ஆறு படிமுறை உரைக் கப்படுகிறது . i . காட்சி என்பது ஒரு கல்லினைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் செதுக்குதல் ii . கால்கோள் என்பது அக்கல்லினை நடுவதற்கு நல்ல நேரம் குறித்தல் iii . நீர்ப்படை என்பது அக்கல்லை தூ யநீர் கொண்டு கழுவுதல் iv . நடுதல் என்பது அக்கல்லினை எவ்விடத்தில் நிறுவவேண்டும் எனத் தீர்மானித்து நடுதல் V. பெரும்படை என்பது இறந்துபட்ட வீரனின் சிறப்புக்களை அக்கல்லில் பொறித்தல் மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் விருந்தும் பிறவும் ஆகும் . vi . வாழ்த்துதல் என்பது இறந்த வீரனை நடுகல் வழியாக வழிபடுதல் இதனூடாக தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் வழிபாடு இருந்தது என்பதும் மக்களால் தொடர்ந்து பேணப்பட்டதும் அறியப்படுகிறது . அது சடங்காக துலைத் திங்கள் 2020 3. நடுகற்கள் அமைத்துப் பாடப்பட்டோரும் நடுகற்களின் அமைப்பும் அகநானூற்றுப் பாடல்களில் போரில் இறந்த வீரர்களுக்கு பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகற்களும் பின்னர் செம்மறிக்குட்டி பலியிடப்பட்ட ருருந்து +389100+ செய்திகளும் பதிவாகியுள்ளன . தழையிட்டு மூடிய கற்குவியல் ( அகம் 109 ) கற்குவியல் ( அகம் 289 ) வீரரின் நடுகல் ( அகம் 387 ) காட்டுயானை ஆள் என உதைத்த நடுகல் ( அகம் 365 ) மறவர் நடுகல்லில் அம்பு தீட்டுதல் அதனால் நடுகல்லின் எழுத்து பக்கம் தேய்ந்து காணப்படல் ( அகம் 297 ) உப்புவணிகரின் வண்டில் முனை அழுத்தி சிதைந்த நடுகல் ( அகம் 343 ) பெயரும் பீடும் எழுதிய நடுகல் ( அகம் 179 ) பெயரும் பீடும் எழுதிய எழுத்துடை நடுகல் ( அகம் 53 ) கற்குவியல் கொண்ட பதுக்கையும் நடுகல் முன் வேலும் கேடகமும் வைக்கப்பட்டபட்டவையும் ( அகம் 67 ) பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகல் ( 131 ) நடுகல் தெய்வத்திற்கு மயிற்றோகை துடிமுழக்குதல் செம்மறிக்குட்டி பலியிட்ட செய்தி குறிப்பிடப்படுதல் ( அகம் 35 ) ஆகியன அகநானூற்றுச் செய்யுட்களின்வழி அறியப்படும் நடுகல் பற்றிய குறிப்புகளாகும் . மேற்குறித்த அகநானூற்றுப் பாடல் களில் கற்குவியற் பதுக்கைகளும் பின்னர் பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகற்களும் காணப் பட்டுள்ளன . பலியிடப்பட்ட செய்தியும் வருகிறது . இங்கு படிப்படியான வளர்ச்சி முறை தெரிகிறது . புறநானூற்றுப் பாடல்களில் அரசர்கள் நிலத் தலைவர்கள் போரில் இறந்த வீரர்கள் ஆகியோருக்கு நடுகற்கள் அமைத்து வழிபடப்பட்ட குறிப்புகள் உள்ளன . இவை புறநானூற்றுப் பாடல்களில் ஒரு சடங்கு முறைக்கு மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம் . புறநானூற்றுப் பாடல்களில் கோப் பெருஞ்சோழன் மீது நட்புக் கொண்டிருந்த பொத்தியார் பாடிய ( புறம் 221 222 ) பாடல்களிலும் : அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடிய ( புறம் 232 ) பாடலிலும் நடுகல் வழிபாடு குறிக்கப் படுகிறது . இவை தவிர ஏனைய புற நானூற்றுப் பாடல்களில் அதிகமும் நிரைமீட்கும் போரிலும் அரசனுடன் கூடவே பகைமுடிக்கும் போரிலும் இறந்த வீரர்கள் மீதே அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன . ஆநிரை மீட்கவரும் போரில் மாண்டவன் நடுகல் . ( புறம் . 260 ) பகை கவர்ந்த ஆநிரை மீட்டுத்தந்த போரில் வீழ்ந்த கரந்தை மறவனின் நடுகல் ( புறம் .261 ) நிரைமீட்டு உயிர்துறந்த வீரனுக்கு பீலியும் கண்ணியும் சூட்டி கல் நட்டமை . ( புறம் .264 ) நிரைமீட்டு உயிர் துறந்த வீரனின் கல்லுக்கு மாலைசூட்டுதல் . ( புறம் . 265 ) கணவன் பகைமுடித்து வருக என முன்னோரின் நடுகல்லைப் பரவியமை . ( புறம் 306 ) போருக்குச் சென்ற கணவன் நடுகல் மிகுந்த ஊரை உடையவன் என ஊரின் சிறப்பை பாடுதல் . ( புறம் . 314 ) பலியிட்டு நன்னீராட்டி நெய்விளக்கேற்றி நடுகல்லை வழிபடும் சிறப்பை பாடியமை . ( புறம் . 329 ) களிறினை எறிந்து தாமும் வீழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நடுகல்லைத் தொழுவோம் என பாடியமை . ( புறம் .335 ) முதலான புறப்பாடல்களில் நடுகல் குறித்து உரைக்கப்பட்டுள்ளன . ( தொடரும் )