தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01
துலைத் திங்கள், 2020
சிவத்திரு திருவம்பலம் தென்னவன்
தென்புலத்தார் வழிபாடு - மறைமதி (அமாவாசை)
தினத்தில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம்
(மகாலய அமாவாசை)
·
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே - திருமந்திரம்
மானிடப்பிறப்பின் சிறப்பு
உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே
நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு
மிழலையாமே
நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு
லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப்
படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே
விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும்
கோயிலானது மலைகளில் தங்கியுள்ள மேகங்கள்
எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள்
பல நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை
மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய
பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல்
விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும் என்பது
பொருள்.
என்ற திருஞானசம்பந்தர் சுவாமி அவர்களின்
பாடலின் படி, 1.19×10-5 நிகழ்தகவில் தான் மனிதராக
பிறக்கிறோம். இந்த மனிதப்பிறப்பென்பது ஆறாவது
அறிவாகிய பகுத்தறிவுடன் கூடிய அருமையான
இறைவனின் படைப்பாகும். இந்த ஆறாம் அறிவினை
பயன்படுத்தி நிலையான இன்பம் (பேரின்பம்
நிலையில்லாத இன்பம் (சிற்றின்பம்) போன்றவற்றினை
பிரித்தறிந்து பேரின்பப்பெருவாழ்வினை அடையும்
வழியினை கடைப்பிடித்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்து மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வினை
அடைவதே பிறவிப்பயனாகும்.
இதனையே வள்ளுவரும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
ஒருவர் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும்
பொழுது அவரால் தெய்வீக நிலையை அடைய முடியுமா
என்ற கேள்விக்கு வள்ளுவர் அழகாகப் பதிலளித்துள்ளார்
இந்தக்குறளில் ஒருவர் இல்லற வாழ்க்கையில்
வாழ்வதற்கான அடிப்படை நெறிகளை கடைப்பற்றி
நெறி தவறாது வாழ்ந்தால் அதாவது தமிழ்
வேதங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற
அடிப்படையில் அறவழி நின்று பொருளீட்டி இன்பமாக
வாழ்ந்து வீடுபெறுதல் என்ற வழக்கை முறையினை
கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர் வானுறையும்
தெய்வத்துக்கு நிகராக வைக்கப்படுவர் என்பது பொருள்.
அப்படி உயிர் இறைவனாகும் தன்மையை கொண்ட
அற்புதப் பிறப்பே மனிதப்பிறப்பு. இந்தப் பிறப்பினை
அதற்காக பயன்படுத்தாமல் ஐம்பொறிகளின் வழிநின்று,
உலகியலில் தொலைந்து, சாதாரண முலையூட்டியாக
வாழ்ந்து மடியப்போகிறோம் என்ற எண்ணம் எப்போது
வருகிறதோ, அப்போதுதான் நீங்கள் மனிதப்பிறவியை
உணருகிறீர்கள் எனலாம்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
என்ற சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமானின்
வரிகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மனிதரை வழிபடும் வகைகள் மற்றும் சிறப்புகள்
தமிழர் மரபில் மூத்தோர் வழிபாடு, குரு வழிபாடு
மற்றும் நீத்தார் வழிபாடு என்று மூன்றுவகையாக
மனித வழிப்பாட்டுமுறையைப் பார்க்கலாம்.
மூத்தோர் என்பவர், எங்களுக்கு முன்தோன்றி
இப்பூவுலகில் வாழ்ந்து வாழ்வியல் அனுபவங்களை
மகாதேன் சுவாமி
தென்னாடு
தென்புலத்தார்
வழிபாடு
பெற்று, அவற்றினைப் பிரித்தறிந்து, அவற்றினை
உணர்ந்தவர்களாக வாழ்கின்றனர். இப்படியான
மூத்தோரை வழிபடுதல் தமிழர் மரபாக இருந்து
வருகிறது. மூத்தோரிலே முதன்மை பெறுவர்கள்
பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்.
வாழும் தெய்வங்களான இவர்களை நாங்கள் வணங்கி
அவர்களின் ஆசிகளை பெற்று எமது வாழ்க்கையினை
கொண்டு செல்வதே சிறப்பான எளிய வாழ்வியல்
தந்திரமாகும்.
குரு வழிபாடு
தெளிவினை ஞானத்தினை அறிவினை,
ஆற்றலினை அடைவதற்கு ஞானகுரு நிச்சயம் தேவை.
சாதாரண மனிதராக பிறந்தவர்கள் இந்தவழியில் சென்று
ஞானத்தினை பெறுவது இலகுவானது. அத்துடன்
நமக்கு கல்வியினை தரும், கலைகளை ஊடுகடத்தும்,
அறிவுரைகளை வழங்கும் பெரியோர்களும் குரு
எனுமிடத்தில் வருவார்கள். எமக்கு வழிகாட்டுபவர்களை
வழிபடுவதும் தமிழர் பண்பாடாக இருந்து வருகிறது.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே - திருமந்திரம்
"
திருவருளால் திருவடித் தெளிவினை அருளும்
சிவமாகிய குருவினை காணுதல், அதாவது அவரைப்
பார்த்தல் மற்றும் அவரின் பெயரை தினமும் சொல்லுதல்
அல்லது உச்சரித்தல் ஆகிய புறச் செயற்பாடுகளாலும்
அவரிடமிருந்து செவியறிவுறுத் தருளிய
திருவைந்தெழுத்தைச் சிறப்புற உளங்கொளக் கேட்டல்
மற்றும் அவரது திருவுருவை உள்ளத்துள் உள்வாங்கல்
என்னும் அக செயற்பாடுகளாலும் உண்மையான
ஞானத்தை உணரமுடியும்.
வாதவூராருக்கு சிவபெருமான் குருவாக வந்து குருந்த
மரநிழலில் இருந்து திருவடிதீட்சை கொடுத்து
முதலமைச்சராக இருந்த தென்னவன் பிரம்மராயனை
மாணிக்கவாசகராக மாற்றி, ஞானத்தினை கொடுத்து
இவ்வுலகிற்கு திருவாசகத்தினை தந்ததுடன்
வாதவூரரையும் வீடுபெறச் செய்தார்.
இங்கேயும் புறமாக திருவடி தீட்சை கொடுத்து,
அகமாக சூக்கும ஐந்தெழுத்தாகிய சிவாயநம என்ற
மந்திரத்தினை கொடுத்து ஞானத்தினை கொடுக்கிறார்.
இதனையே மணிவாசகர்
நாகநாத சித்தர
நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
சடைவரதர சவாமி
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே எனப்
பாடியுள்ளார்.
நீத்தார் வழிபாடு வழமை முறைகள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மடிந்தவர்களை
வழிபடும் மரபு பண்டைய காலத்தில் இருந்தே
இருந்துவருகிறது. சங்ககால முறைமைக்கு வருவதற்கு
முன்னர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்ற
ஆதித்தமிழர்கள் குமரிக்கண்டத்தில் / தென்னாட்டில்
உயிர் நீத்தவர்களை வழிபடுகின்ற வழமைகளில் இருந்தது
என்பதற்கு இலக்கியச்சான்றுகள் உள்ளன.
07 தென்னாடு
பியர் போய
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர் (குறி பார்ப்பார்,
கணி(சோதிடம்) பார்ப்பார் என்போர்), பெண்டிர்,
பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர்
ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு
அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று
நெட்டிமையார் கூறுகிறார்.
இங்கே இந்த வரிகளை கவனித்தால்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும்
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை
முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும்
பலநாள் வாழ்க என்று
நெட்டிமையார்
வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால்
கொள்ளப்படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது
தெரிய வருகிறது. முன்னோர் வழிபாடானது தொன்று
தொட்டு தமிழர் வாழ்வியலில்
பின்னிப்பிணைந்திருக்கிறது.
நடுகல் வழிபாடே பின்னர் கோவில் வழிபாடாக
மற்றும் தமிழாகம முறையாக மாறியது
மறைந்தவர்களுக்கு குறிப்பாக மறைந்த போர்
வீரர்களுக்கு நடுகல் மற்றும் பதுக்கைகள் அமைக்கும்
பழக்கம் ஆதித்தமிழர் பண்பாடுகளில் ஆழக்கலந்து
இருந்தது என்பதற்கு பல இலக்கிய ஆதாரங்களை
அடுக்கிக்கொண்டே செல்லலாம். தொல்காப்பியர்
காலத்துக்கு முன்னரே நடுகல் அமைக்கும் வழக்கம்
ஆதித்தமிழரிடம் இருந்ததென்பதும் அது சடங்கு
முறையாகப் கொண்டாடப்பட்டது என்றும்
இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இது பின்னர்
ஆகம் முறையாக மாறியது என்று கூறுவதில் மறுப்பதற்கு
இடமில்லை.
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மறபிற் கல்லொடு புணர - தொல். புறத்திணை
இயல், 5
காட்சி - கல்காண்டல்
ஆனா வென்றி அமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கல்கண் டன்று - பெரிய வெற்றியைப்
பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக்
காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது மேலுள்ள
செய்யுளின் பொருள்
கால்கோள் என்பது அக்கல்லினை நடுவதற்கு நல்ல
நேரம் குறித்தல் / நாள்ப்பார்த்தல்
கால்கோள் என்பது கல்லைக் கொள்ளுதல் என்பதை
குறிக்கிறது. தேர்ந் தெடுத்த நடுகல்லை எடுத்துக்
கொணர்தல் என்பது பொருள்.
சித்தாளைக்குட்டி சுவாமி
(தொடரும்)
துலைத்
திங்கள்
2020
சிவத்திரு
திருவம்பலம்
தென்னவன்
தென்புலத்தார்
வழிபாடு
-
மறைமதி
(
அமாவாசை
)
தினத்தில்
தென்புலத்தார்
வழிபாடு
மற்றும்
பேரொடுக்கம்
(
மகாலய
அமாவாசை
)
·
ஐந்து
கரத்தனை
யானை
முகத்தனை
இந்தி
னிளம்பிறை
போலும்
எயிற்றனை
நந்தி
மகன்றனை
ஞானக்
கொழுந்தினைப்
புந்தியில்
வைத்தடி
போற்றுகின்
றேனே
-
திருமந்திரம்
மானிடப்பிறப்பின்
சிறப்பு
உரைசேரு
மெண்பத்து
நான்குநூ
றாயிரமாம்
யோனிபேதம்
நிரைசேரப்
படைத்தவற்றி
னுயிர்க்குயிரா
யங்கங்கே
நின்றான்கோயில்
வரைசேரு
முகின்முழவ
மயில்கள்பல
நடமாட
வண்டுபாட
விரைசேர்பொன்
னிதழிதர
மென்காந்தள்
கையேற்கு
மிழலையாமே
நூல்களில்
உரைக்கப்
பெறும்
எண்பத்துநான்கு
லட்சம்
பிறப்பு
வேறுபாடுகளையும்
முறையாகப்
படைத்து
அவ்வவற்றின்
உயிர்கட்கு
உயிராய்
அங்கங்கே
விளங்கி
நிற்போனாகிய
சிவபிரான்
உறையும்
கோயிலானது
மலைகளில்
தங்கியுள்ள
மேகங்கள்
எழுந்து
வந்து
முழவுபோல
ஒலிக்க
ஆண்மயில்கள்
பல
நடனமாட
வண்டுகள்பாட
பரிசிலாகக்
கொன்றை
மரங்கள்
மணம்
பொருந்திய
மலர்
இதழ்களாகிய
பொன்னைத்
தர
மெல்லிய
காந்தள்
மலர்கள்
கை
போல்
விரிந்து
அதனை
ஏற்கும்
திருவீழிமிழலையாகும்
என்பது
பொருள்
.
என்ற
திருஞானசம்பந்தர்
சுவாமி
அவர்களின்
பாடலின்
படி
1.19
×
10-5
நிகழ்தகவில்
தான்
மனிதராக
பிறக்கிறோம்
.
இந்த
மனிதப்பிறப்பென்பது
ஆறாவது
அறிவாகிய
பகுத்தறிவுடன்
கூடிய
அருமையான
இறைவனின்
படைப்பாகும்
.
இந்த
ஆறாம்
அறிவினை
பயன்படுத்தி
நிலையான
இன்பம்
(
பேரின்பம்
நிலையில்லாத
இன்பம்
(
சிற்றின்பம்
)
போன்றவற்றினை
பிரித்தறிந்து
பேரின்பப்பெருவாழ்வினை
அடையும்
வழியினை
கடைப்பிடித்து
இவ்வையகத்தில்
வாழ்வாங்கு
வாழ்ந்து
மீண்டும்
பிறப்பில்லா
பெருவாழ்வினை
அடைவதே
பிறவிப்பயனாகும்
.
இதனையே
வள்ளுவரும்
வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்பவன்
வான்உறையும்
தெய்வத்துள்
வைக்கப்படும்
ஒருவர்
இல்லறத்தில்
வாழ்ந்துக்கொண்டு
இருக்கும்
பொழுது
அவரால்
தெய்வீக
நிலையை
அடைய
முடியுமா
என்ற
கேள்விக்கு
வள்ளுவர்
அழகாகப்
பதிலளித்துள்ளார்
இந்தக்குறளில்
ஒருவர்
இல்லற
வாழ்க்கையில்
வாழ்வதற்கான
அடிப்படை
நெறிகளை
கடைப்பற்றி
நெறி
தவறாது
வாழ்ந்தால்
அதாவது
தமிழ்
வேதங்களாகிய
அறம்
பொருள்
இன்பம்
வீடு
என்ற
அடிப்படையில்
அறவழி
நின்று
பொருளீட்டி
இன்பமாக
வாழ்ந்து
வீடுபெறுதல்
என்ற
வழக்கை
முறையினை
கடைப்பிடித்து
வாழ்ந்தால்
அவர்
வானுறையும்
தெய்வத்துக்கு
நிகராக
வைக்கப்படுவர்
என்பது
பொருள்
.
அப்படி
உயிர்
இறைவனாகும்
தன்மையை
கொண்ட
அற்புதப்
பிறப்பே
மனிதப்பிறப்பு
.
இந்தப்
பிறப்பினை
அதற்காக
பயன்படுத்தாமல்
ஐம்பொறிகளின்
வழிநின்று
உலகியலில்
தொலைந்து
சாதாரண
முலையூட்டியாக
வாழ்ந்து
மடியப்போகிறோம்
என்ற
எண்ணம்
எப்போது
வருகிறதோ
அப்போதுதான்
நீங்கள்
மனிதப்பிறவியை
உணருகிறீர்கள்
எனலாம்
.
புல்லாகிப்
பூடாய்ப்
புழுவாய்
மரமாகிப்
பல்
விருகமாகிப்
பறவையாய்ப்
பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப்
பேயாய்க்
கணங்களாய்
வல்
அசுரர்
ஆகி
முனிவராய்த்
தேவராய்ச்
செல்லாஅ
நின்ற
இத்
தாவர
சங்கமத்துள்
எல்லாப்
பிறப்பும்
பிறந்து
இளைத்தேன்
எம்பெருமான்
மெய்யே
உன்
பொன்
அடிகள்
கண்டு
இன்று
வீடு
உற்றேன்
என்ற
சிவபுராணத்தில்
மணிவாசகப்
பெருமானின்
வரிகளையும்
நினைவுபடுத்த
விரும்புகிறேன்
.
மனிதரை
வழிபடும்
வகைகள்
மற்றும்
சிறப்புகள்
தமிழர்
மரபில்
மூத்தோர்
வழிபாடு
குரு
வழிபாடு
மற்றும்
நீத்தார்
வழிபாடு
என்று
மூன்றுவகையாக
மனித
வழிப்பாட்டுமுறையைப்
பார்க்கலாம்
.
மூத்தோர்
என்பவர்
எங்களுக்கு
முன்தோன்றி
இப்பூவுலகில்
வாழ்ந்து
வாழ்வியல்
அனுபவங்களை
மகாதேன்
சுவாமி
தென்னாடு
தென்புலத்தார்
வழிபாடு
பெற்று
அவற்றினைப்
பிரித்தறிந்து
அவற்றினை
உணர்ந்தவர்களாக
வாழ்கின்றனர்
.
இப்படியான
மூத்தோரை
வழிபடுதல்
தமிழர்
மரபாக
இருந்து
வருகிறது
.
மூத்தோரிலே
முதன்மை
பெறுவர்கள்
பெற்றோர்கள்
மற்றும்
அவர்களின்
பெற்றோர்கள்
.
வாழும்
தெய்வங்களான
இவர்களை
நாங்கள்
வணங்கி
அவர்களின்
ஆசிகளை
பெற்று
எமது
வாழ்க்கையினை
கொண்டு
செல்வதே
சிறப்பான
எளிய
வாழ்வியல்
தந்திரமாகும்
.
குரு
வழிபாடு
தெளிவினை
ஞானத்தினை
அறிவினை
ஆற்றலினை
அடைவதற்கு
ஞானகுரு
நிச்சயம்
தேவை
.
சாதாரண
மனிதராக
பிறந்தவர்கள்
இந்தவழியில்
சென்று
ஞானத்தினை
பெறுவது
இலகுவானது
.
அத்துடன்
நமக்கு
கல்வியினை
தரும்
கலைகளை
ஊடுகடத்தும்
அறிவுரைகளை
வழங்கும்
பெரியோர்களும்
குரு
எனுமிடத்தில்
வருவார்கள்
.
எமக்கு
வழிகாட்டுபவர்களை
வழிபடுவதும்
தமிழர்
பண்பாடாக
இருந்து
வருகிறது
.
தெளிவு
குருவின்
திருமேனி
காண்டல்
தெளிவு
குருவின்
திருநாமஞ்
செப்பல்
தெளிவு
குருவின்
திருவார்த்தை
கேட்டல்
தெளிவு
குருவுருச்
சிந்தித்தல்
தானே
-
திருமந்திரம்
திருவருளால்
திருவடித்
தெளிவினை
அருளும்
சிவமாகிய
குருவினை
காணுதல்
அதாவது
அவரைப்
பார்த்தல்
மற்றும்
அவரின்
பெயரை
தினமும்
சொல்லுதல்
அல்லது
உச்சரித்தல்
ஆகிய
புறச்
செயற்பாடுகளாலும்
அவரிடமிருந்து
செவியறிவுறுத்
தருளிய
திருவைந்தெழுத்தைச்
சிறப்புற
உளங்கொளக்
கேட்டல்
மற்றும்
அவரது
திருவுருவை
உள்ளத்துள்
உள்வாங்கல்
என்னும்
அக
செயற்பாடுகளாலும்
உண்மையான
ஞானத்தை
உணரமுடியும்
.
வாதவூராருக்கு
சிவபெருமான்
குருவாக
வந்து
குருந்த
மரநிழலில்
இருந்து
திருவடிதீட்சை
கொடுத்து
முதலமைச்சராக
இருந்த
தென்னவன்
பிரம்மராயனை
மாணிக்கவாசகராக
மாற்றி
ஞானத்தினை
கொடுத்து
இவ்வுலகிற்கு
திருவாசகத்தினை
தந்ததுடன்
வாதவூரரையும்
வீடுபெறச்
செய்தார்
.
இங்கேயும்
புறமாக
திருவடி
தீட்சை
கொடுத்து
அகமாக
சூக்கும
ஐந்தெழுத்தாகிய
சிவாயநம
என்ற
மந்திரத்தினை
கொடுத்து
ஞானத்தினை
கொடுக்கிறார்
.
இதனையே
மணிவாசகர்
நாகநாத
சித்தர
நானேயோ
தவம்செய்தேன்
சிவாயநம
எனப்பெற்றேன்
தேனாய்இன்
அமுதமாய்த்
தித்திக்கும்
சிவபெருமான்
சடைவரதர
சவாமி
தானேவந்
தெனதுள்ளம்
புகுந்தடியேற்
கருள்செய்தான்
ஊனாரும்
உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே
வெறுத்திடவே
எனப்
பாடியுள்ளார்
.
நீத்தார்
வழிபாடு
வழமை
முறைகள்
வையத்துள்
வாழ்வாங்கு
வாழ்ந்து
மடிந்தவர்களை
வழிபடும்
மரபு
பண்டைய
காலத்தில்
இருந்தே
இருந்துவருகிறது
.
சங்ககால
முறைமைக்கு
வருவதற்கு
முன்னர்
சங்க
இலக்கியத்தில்
குறிப்பிடப்படுகின்ற
ஆதித்தமிழர்கள்
குமரிக்கண்டத்தில்
/
தென்னாட்டில்
உயிர்
நீத்தவர்களை
வழிபடுகின்ற
வழமைகளில்
இருந்தது
என்பதற்கு
இலக்கியச்சான்றுகள்
உள்ளன
.
07
தென்னாடு
பியர்
போய
ஆவும்
ஆனியற்
பார்ப்பன
மாக்களும்
பெண்டிரும்
பிணியுடை
யீரும்
பேணித்
தென்புலம்
வாழ்நர்க்கு
அருங்கடன்
இறுக்கும்
பொன்போற்
புதல்வர்ப்
பெறாஅ
தீரும்
எம்அம்பு
கடிவிடுதும்
நுன்அரண்
சேர்மின்
என
அறத்துஆறு
நுவலும்
பூட்கை
மறத்தின்
கொல்களிற்று
மீமிசைக்
கொடிவிசும்பு
நிழற்றும்
எங்கோ
வாழிய
குடுமி
!
தங்
கோச்
செந்நீர்ப்
பசும்பொன்
வயிரியர்க்கு
ஈத்த
முந்நீர்
விழவின்
நெடியோன்
நன்னீர்ப்
பறுளி
மணலினும்
பலவே
!
பாண்டியன்
பல்யாகசாலை
முதுகுடுமிப்
பெருவழுதி
போருக்குப்
போகுமுன்
பசு
பார்ப்பனர்
(
குறி
பார்ப்பார்
கணி
(
சோதிடம்
)
பார்ப்பார்
என்போர்
)
பெண்டிர்
பிணியுடையோர்
ஆண்
பிள்ளை
இல்லாதோர்
ஆகியோரைப்
பாதுகாவலான
இடத்திற்குச்
செல்லுமாறு
அறை
கூவிப்
பின்னர்ப்
போர்
செய்தான்
என்று
நெட்டிமையார்
கூறுகிறார்
.
இங்கே
இந்த
வரிகளை
கவனித்தால்
தென்புலம்
வாழ்நர்க்கு
அருங்கடன்
இறுக்கும்
பொன்போற்
புதல்வர்ப்
பெறாஅ
தீரும்
இறந்த
முன்னோருக்குக்
கடன்
செலுத்தும்
குழந்தைப்பேறு
இல்லாதவர்கள்
என
குறிப்பிடப்படுகிறது
.
அத்துடன்
இப்பாடலில்
பாண்டியன்
பல்யாகசாலை
முதுகுடுமிப்
பெருவழுதியை
பஃறுளி
ஆற்று
மணலினும்
பலநாள்
வாழ்க
என்று
நெட்டிமையார்
வாழ்த்துவதிலிருந்து
இவர்
பஃறுளி
ஆறு
கடலால்
கொள்ளப்படுவதற்கு
முந்திய
காலத்தவர்
என்பது
தெரிய
வருகிறது
.
முன்னோர்
வழிபாடானது
தொன்று
தொட்டு
தமிழர்
வாழ்வியலில்
பின்னிப்பிணைந்திருக்கிறது
.
நடுகல்
வழிபாடே
பின்னர்
கோவில்
வழிபாடாக
மற்றும்
தமிழாகம
முறையாக
மாறியது
மறைந்தவர்களுக்கு
குறிப்பாக
மறைந்த
போர்
வீரர்களுக்கு
நடுகல்
மற்றும்
பதுக்கைகள்
அமைக்கும்
பழக்கம்
ஆதித்தமிழர்
பண்பாடுகளில்
ஆழக்கலந்து
இருந்தது
என்பதற்கு
பல
இலக்கிய
ஆதாரங்களை
அடுக்கிக்கொண்டே
செல்லலாம்
.
தொல்காப்பியர்
காலத்துக்கு
முன்னரே
நடுகல்
அமைக்கும்
வழக்கம்
ஆதித்தமிழரிடம்
இருந்ததென்பதும்
அது
சடங்கு
முறையாகப்
கொண்டாடப்பட்டது
என்றும்
இலக்கியங்கள்
எடுத்துரைக்கின்றன
.
இது
பின்னர்
ஆகம்
முறையாக
மாறியது
என்று
கூறுவதில்
மறுப்பதற்கு
இடமில்லை
.
காட்சி
கால்கோள்
நீர்ப்படை
நடுதல்
சீர்த்தகு
சிறப்பில்
பெரும்படை
வாழ்த்தலென்று
இருமூன்று
மறபிற்
கல்லொடு
புணர
-
தொல்
.
புறத்திணை
இயல்
5
காட்சி
-
கல்காண்டல்
ஆனா
வென்றி
அமரில்வீழ்ந்
தோற்குக்
கான
நீளிடைக்
கல்கண்
டன்று
-
பெரிய
வெற்றியைப்
பெற்ற
போரில்
இறந்துவிட்ட
வீரனுக்கு
நடுகல்
செய்யக்
காட்டில்
கல்லைத்
தேர்ந்தெடுத்தல்
என்பது
மேலுள்ள
செய்யுளின்
பொருள்
கால்கோள்
என்பது
அக்கல்லினை
நடுவதற்கு
நல்ல
நேரம்
குறித்தல்
/
நாள்ப்பார்த்தல்
கால்கோள்
என்பது
கல்லைக்
கொள்ளுதல்
என்பதை
குறிக்கிறது
.
தேர்ந்
தெடுத்த
நடுகல்லை
எடுத்துக்
கொணர்தல்
என்பது
பொருள்
.
சித்தாளைக்குட்டி
சுவாமி
(
தொடரும்
)