திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

10 இவ்வுரை 'ஆராய்ச்சியுரை ' என்ற அமைப்புடன் வெளிவருகின்றது. இந்நூல் முற்றும் வெளிவரும்வரை, ஆசிரியரவர்களை உலகிடை இருத்தலின் கருணையின்றி, தன் சேவடிக்கீழ் வருகவென்று பணித் தனன் இறைவன் என்பது இங்கு எண்ணுதற்குரியது. திருவாசகத் தலங்களை நேரிற்கண்டு வணங்குதற்காக இவ்வாசிரியர் 1964-ல் தமிழகம் போந்து வழிபட்டு மிக்க அன்புடன் இதனை எழுதியுள் ளார். உரை அகலவுரையாக அமைந்துள்ளது. முதற்கண் சொற் பொருளும் அதன் பின்னே ஆராய்ச்சிப்பகுதியுமாக உள்ளது. பொதுவாக இவ்வுரை, மூவர் தேவாரத்தோடும் திருவாசகத்தை இணைத்து நோக்கிச் செல்கின்றது எனலாம். தேவார ஆசிரியர் வற் புறுத்தருளிய திருநெறிக் கொள்கைகளுடன் திருவாசகக் கருத்துக்கள் எவ்வாறு ஒரு நெறிப்பட்டுச் செல்கின்றன என்பதை ஆசிரியர் ஆங் காங்கு எடுத்துக் காட்டியிருக்கின்ற திறம் பாராட்டிற்குரியது. சுருங் சுக் கூறின் 'திருவாசக-தேவார' இணைப்புரையாக இதிற் பெரும் பகுதிகள் விளங்குகின்றன. தொல்காப்பியச் சூத்திர அமைதிக்கேற்ப மணிவாசகர் திரு வாக்குச் சொன்னடை ஒத்தியல்வதை ஆங்காங்குக் குறித்து விளக்கி யிருக்கின்றனர். இவ்வாறே சங்கநூற் கருத்துக்களும் ஏற்ற விடங் களில் எடுத்துக் காட்டப் பெறுகின்றன. குறிப்பிட்ட பகுதிகட்கு விளக்கம் எழுதுகின்றபொழுது, அவற் றோடொத்த திருவாசகப் பகுதிகளை மிகத் தெளிவாகக் காட்டி விளக்குகின்றனர். இதனால் மணிவாசகர் திருவுளத்தைத் தெளிவா கக் கற்போர் உணர்வது எளிதாகின்றது என்று கூறவேண்டுவதில்லை. சைவ சித்தாந்தச் சாத்திரக் கருத்துக்களை அவ்வவ் விடங்களில் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். (பக். 151, 154, 188, 193 201,237,238,276, 425, 437 முதலியன). ஐந்து மலங்கள் பற்றி ஆசிரியர் தரும் விளக்கம் (பக். 435) எட்டினோடிரண்டும் அறியேனையே பக். 287,288 என்பதற்கு எழுதும் விளக்கம், 'இருகையானை' என் பதன் விரிவுரை (பக். 273-274) முதலிய பகுதிகள் நுட்பமான பேரறிவை விளக்கி நிற்கும் சான்றுகளாம். "இரண்டுமிலித் தனியனேற்கே" எனுந் தொடரில் வரும் "இரண்டு மிலி'' என்ற தொடரின் பொருண்மை பற்றிய ஆராய்ச்சி கருத்துக்கு விருந்து. இருவினைகள், ஆக்கக் கேடுகள், நூல் அறிவு, அநுபவ அறிவு என்ற மூவிரண்டு கருத்துக்களைக் காட்டி அவை பொருந்தா மையை விளக்குகின்றனர். 'உயிர் இறையை நோக்க அசத்தாதலும். உலகினை நோக்கச் சத்தாதலும் உடைமையின் சதசத்து என்று குறிக் - 11 - கப்படும் சாத்திர நிலையைக் காட்டி, சத்தாதற்றன்மையும், அசுத் தாதற்றன்மையுமாகிய இரண்டுமின்றிச் சதசத்தாயுள்ள உயிராம்' என்ற கருத்தொடு இணைத்து இங்கு விளக்கப்பட்டது இவ்வியல்பே என்று நிறுவுகின்றார்.(பக்.237-238) * " அமுதக் கடல் வாயாற் பருகப்படுவதாக. இறைவன் அறிவுக் கண்ணால் அறிந்தனுபவிக்கப்படும் அமுதக் கடலாய் இருத்தலின் 'கண் ணாரமுதக் கடலே' என்றார்". (பக். 163) "கூத்தாட்டும் பாவை தோலினாலும் மரத்தினாலும் செய்யப் பட்டு ஆட்டுவாரால் ஆட்டப்படும்; தான் அவை போலன்றி ஒரு செயலுமற்றுக் கிடந்தமையின் இரும்பின்பாவை அனையநான்'' என்றார். (பக்.228) இத்தகைய தெளிவுரைகள் பலவும் இவ்வுரை நூலில் ஆங்காங்கு உள்ளன. அருள் அம்பலவனாக விளங்கும் "தில்லையுட் கூத்தன்' திருவடி களில், மணிவாசகர் சார்த்தியருளிய. 'திருவாசகம் என்னும் திரு வளர் தாமரை'யின் நறுமணத்தை, இந்த அருளம்பலவர் வழியே உல கில் வெளிப்படுத்த உளங்கொண்ட திருவருள் வலத்தை வியப்ப தன்றி வேறென் செயவல்லேன் ! 'ஐய, ஐயோ எம்பெருமான் திருக்கருணையிருந்தவாறே '- என்று அடிகள் வியந்தருளியது போல், இறைவன் திருக்கருணை எவ்வெக் காலத்து எவ்வெவர் வழியே எவ் வெந் நலங்களை விளக்குகின்றது என்று எண்ணி அமைவேன். வாசகத்தைச் "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல' விழைவோர்க்கு இந்த ஆராய்ச்சியுரையும் ஒரு புதிய துணை; தமி முலகிற்கு ஓர் இனிய படையல்: உரைப்பனுவல்கட்கு ஓர் ஒளி விளக்கு. இதனை இயற்றிய பண்டித அருளம்பலவனாரை. எப்போ தும் நினைவிற் கொண்டு போற்றுவது தமிழர் கடன்.
10 இவ்வுரை ' ஆராய்ச்சியுரை ' என்ற அமைப்புடன் வெளிவருகின்றது . இந்நூல் முற்றும் வெளிவரும்வரை ஆசிரியரவர்களை உலகிடை இருத்தலின் கருணையின்றி தன் சேவடிக்கீழ் வருகவென்று பணித் தனன் இறைவன் என்பது இங்கு எண்ணுதற்குரியது . திருவாசகத் தலங்களை நேரிற்கண்டு வணங்குதற்காக இவ்வாசிரியர் 1964 - ல் தமிழகம் போந்து வழிபட்டு மிக்க அன்புடன் இதனை எழுதியுள் ளார் . உரை அகலவுரையாக அமைந்துள்ளது . முதற்கண் சொற் பொருளும் அதன் பின்னே ஆராய்ச்சிப்பகுதியுமாக உள்ளது . பொதுவாக இவ்வுரை மூவர் தேவாரத்தோடும் திருவாசகத்தை இணைத்து நோக்கிச் செல்கின்றது எனலாம் . தேவார ஆசிரியர் வற் புறுத்தருளிய திருநெறிக் கொள்கைகளுடன் திருவாசகக் கருத்துக்கள் எவ்வாறு ஒரு நெறிப்பட்டுச் செல்கின்றன என்பதை ஆசிரியர் ஆங் காங்கு எடுத்துக் காட்டியிருக்கின்ற திறம் பாராட்டிற்குரியது . சுருங் சுக் கூறின் ' திருவாசக - தேவார ' இணைப்புரையாக இதிற் பெரும் பகுதிகள் விளங்குகின்றன . தொல்காப்பியச் சூத்திர அமைதிக்கேற்ப மணிவாசகர் திரு வாக்குச் சொன்னடை ஒத்தியல்வதை ஆங்காங்குக் குறித்து விளக்கி யிருக்கின்றனர் . இவ்வாறே சங்கநூற் கருத்துக்களும் ஏற்ற விடங் களில் எடுத்துக் காட்டப் பெறுகின்றன . குறிப்பிட்ட பகுதிகட்கு விளக்கம் எழுதுகின்றபொழுது அவற் றோடொத்த திருவாசகப் பகுதிகளை மிகத் தெளிவாகக் காட்டி விளக்குகின்றனர் . இதனால் மணிவாசகர் திருவுளத்தைத் தெளிவா கக் கற்போர் உணர்வது எளிதாகின்றது என்று கூறவேண்டுவதில்லை . சைவ சித்தாந்தச் சாத்திரக் கருத்துக்களை அவ்வவ் விடங்களில் எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர் . ( பக் . 151 154 188 193 201 425 437 முதலியன ) . ஐந்து மலங்கள் பற்றி ஆசிரியர் தரும் விளக்கம் ( பக் . 435 ) எட்டினோடிரண்டும் அறியேனையே பக் . 287 என்பதற்கு எழுதும் விளக்கம் ' இருகையானை ' என் பதன் விரிவுரை ( பக் . 273-274 ) முதலிய பகுதிகள் நுட்பமான பேரறிவை விளக்கி நிற்கும் சான்றுகளாம் . இரண்டுமிலித் தனியனேற்கே எனுந் தொடரில் வரும் இரண்டு மிலி ' ' என்ற தொடரின் பொருண்மை பற்றிய ஆராய்ச்சி கருத்துக்கு விருந்து . இருவினைகள் ஆக்கக் கேடுகள் நூல் அறிவு அநுபவ அறிவு என்ற மூவிரண்டு கருத்துக்களைக் காட்டி அவை பொருந்தா மையை விளக்குகின்றனர் . ' உயிர் இறையை நோக்க அசத்தாதலும் . உலகினை நோக்கச் சத்தாதலும் உடைமையின் சதசத்து என்று குறிக் - 11 - கப்படும் சாத்திர நிலையைக் காட்டி சத்தாதற்றன்மையும் அசுத் தாதற்றன்மையுமாகிய இரண்டுமின்றிச் சதசத்தாயுள்ள உயிராம் ' என்ற கருத்தொடு இணைத்து இங்கு விளக்கப்பட்டது இவ்வியல்பே என்று நிறுவுகின்றார் . ( பக்.237-238 ) * அமுதக் கடல் வாயாற் பருகப்படுவதாக . இறைவன் அறிவுக் கண்ணால் அறிந்தனுபவிக்கப்படும் அமுதக் கடலாய் இருத்தலின் ' கண் ணாரமுதக் கடலே ' என்றார் . ( பக் . 163 ) கூத்தாட்டும் பாவை தோலினாலும் மரத்தினாலும் செய்யப் பட்டு ஆட்டுவாரால் ஆட்டப்படும் ; தான் அவை போலன்றி ஒரு செயலுமற்றுக் கிடந்தமையின் இரும்பின்பாவை அனையநான் ' ' என்றார் . ( பக் .228 ) இத்தகைய தெளிவுரைகள் பலவும் இவ்வுரை நூலில் ஆங்காங்கு உள்ளன . அருள் அம்பலவனாக விளங்கும் தில்லையுட் கூத்தன் ' திருவடி களில் மணிவாசகர் சார்த்தியருளிய . ' திருவாசகம் என்னும் திரு வளர் தாமரை'யின் நறுமணத்தை இந்த அருளம்பலவர் வழியே உல கில் வெளிப்படுத்த உளங்கொண்ட திருவருள் வலத்தை வியப்ப தன்றி வேறென் செயவல்லேன் ! ' ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணையிருந்தவாறே ' - என்று அடிகள் வியந்தருளியது போல் இறைவன் திருக்கருணை எவ்வெக் காலத்து எவ்வெவர் வழியே எவ் வெந் நலங்களை விளக்குகின்றது என்று எண்ணி அமைவேன் . வாசகத்தைச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல ' விழைவோர்க்கு இந்த ஆராய்ச்சியுரையும் ஒரு புதிய துணை ; தமி முலகிற்கு ஓர் இனிய படையல் : உரைப்பனுவல்கட்கு ஓர் ஒளி விளக்கு . இதனை இயற்றிய பண்டித அருளம்பலவனாரை . எப்போ தும் நினைவிற் கொண்டு போற்றுவது தமிழர் கடன் .