திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

174 திருவாசக ஆராய்ச்சியுரை எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. 'செல்வா' என்றார் இறை ஞானச்செல்வனாதலின். 'தேனார் பொழில்கும் மறைக்காட்டுறை தே. ஞான 173:5 என வருகலுங் காண்க. செல்வா' பூவணம் - பாண்டி நாட்டிலுள்ள திருப்பூவணம் என்னும் தலம். " பாரார் வையைப் புனல்வாய்ப் பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச் சீரார் வாரி சேரநின்ற தென்றிரு பூவணமே'செடியார் வையை சூழ நின்ற தென்றிருப் பூவணமே" (தே.ஞான 61:3: 04:4) என வருவன காண்க. மலைகள் பொருந்திய பூவணமாதலின் என்றார்."பொறைமல்கு பொழிலணி பூவணத்து பொருப்பமர்:பூவணம்" (ஞான 278:7) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பூவணத் தரன் - பூவணத்தில் எழுந்தருளி யிருக்கும் அரன், 'பூவணத்துறை ஈசனை'' (ஞான 278:5) "புண்ணி யனா ருறை பூவணம்" (சுந் 11 : 2) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. அருவமாய் நிற்கும் இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யவேண்டி உருவமாயு மிருத்தலின் ' அருவமு முருவமு மானாய்" என்றார். ''ஆரொரு வர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன் றும்'' (தே.232:11) என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க. அருவமும் உருவமும் கூறவே அருவுருவமும் கொள்ளப்படும். இறை வற்கு இம்மூன்றும் வடிவமேயாம் என்பது. அருவமோ உருவா ரூபம் ஆனதோ அன்றி நின்ற உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற உருவமும் மூன்றும் சொன்ன ஒருவனுக்குள்ள வாமே சூத் 1 செய் 39 எனச் சிவஞானசித்தியாரில் வருதலானுமறிக In *சாக்கிரம் சொற்பனம். சுமுப்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளுள் துரியாதீத அவத்தைக்கண் நிற்கும் உயிர். தோன்றாது அருள்வழி நின்றுணரும் ஒளிவடிவினன் இறைவனாதலின் துரியமு மிறந்த சுடரே' என்றார். *பிருகுடி நாப்பண் ஆன்மாவானவன் புருவமத்தியிலே கின்றபோது, ஆன்ற சாக்கிரம் - விசாலமுடைத்தாகிய சாக்கிராவத்தை என்றும். ஒரு பெருங் கந்தரம் சொற்பனம் ஒப்பில்லாத பெரிய கழுத்தடியிலே நின்றபோது சொப்பனாவத்தையென்றும், மருமத் தாதி சுழுத்தி-நெஞ்சடியிலே நின்ற போது சுழுத்தியவத்தையென்றும், வலஞ்சுழி யுந்தி யும்பர் ஒருநாள் கங்குலி துரியம் வலமாய்ச் சுழித்திருக்கின்ற நாபித்தானத்துக்கு மேலே மேலே நாலங்குலமும் கீழே நாலங்குலமுமாக எட்டங்குலத்து நின்ற போது துரியாவத்தையென் றுஞ் சொல்லப்படும், ஞானாமிர் 16:9-12 உரை போற்றித் திருவகவல் 4 துரியமு மிறந்த தூயோன்" 54:20 என ஞானாமிர்தத்தும். 'துரியங் கடந்த துரியா தீதத்தே அரிய வியோமங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானை " 2454. 175 எனத் திருமந்திரத்தும் வருவன காண்க. 'தரியமும் நின்மல துரியா வத்தைக்கும்' என்பது ஞானாமிர்தம் பழையவுரை (54:20 உரை).துரிய மும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. இறைவன் காட்சி கருதல் நூல் முதலிய அளவைகளால் அறியப்ப டாது அவனது திருவடிஞானம் ஒன்றானே தெனியப்படுத்தலின் 'தெரிவரி தாகிய தெளிவே" என்றார். "பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் பார்ப்பரிய பரப்பரனைப் பதிஞானத் தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி Fa (ஓம் சூத்) எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க. 197-206. தோளா மூத்த சுடரே போற்றி - துளையிடப்படாத முத் தின் ஒளியுள்ளவனே நினக்கு வணக்கம்; ஆளானவர்க்கு அன்பா போற்றி - ஆட்பட்டவர்க்கு அவர்செய்யும் அன்புருவாய் அருள் செய்பவனே நினக்கு வணக்கம்: ஆரா அமுகே அருளே போற்றி தெவிட்டாத அமு தத்தை ஒப்பவனே அருளையுடையவனே நினக்கு வணக்கம்; ஆயிரம் பேர் உடை பெம்மான் போற்றி - ஆயிரம் திருப்பெயர்களையுடைய பெரு மானே நினக்கு வணக்கம்; தாளி அறுகிள் தாராய் போற்றி தாளி யநூகினாலாகிய மாலையினை மார்பீல் அணிந்தவனே நினக்கு வணக் கம்: நீள் ஒளியாகிய நிருத்தா போற்றி திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காணவொண்ணாடு நீண்ட ஒளியுருவாய்த் தோனறிய கூத்தனே நினக்கு வணக்கம்; சந்தன சாந்தின் சுந்தர போற்றி-இருமேனியிற் சாத் தப்பட்ட சந்தனக்கலவையின் அழகினையுடையவனே நினக்கு வணக்கம். சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி - நினைத்தற்கு அரிதாகிய சிவமே நினக்கு வணக்கம்; மந்திர மாடலை மேயாய் போற்றி - மறைமொழிகளை வெளிப் படுத்தற்கிடமான பெரிய மகேந்திர மலையிற் பொருந்தினவனே நினக்கு வணக்கம். எம் தகை உய்ய கொள்வாய் போற்றி - அடியோமைப் பிழைக்கு மாறு அடிமைகொள்வோனே நினக்கு வணக்கம். தோளாமுத்து - துளையிடப்படாதமுத்து. தோளாமணி - துளையிடாத மாணிக்கம்+ என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க. (சீவக 3087 உரை). சுடர் - ஒளி. முத்தின் ஒளியினை இறைவனது தண்ணிய ஒளிக்கு உவமை கூறினார். சுடர்பொற் குன்றைத் தோளரமுத்தை (புணர்ச் 1) +தோளாமுத்தெருப்பானை' (தே.நாவு 280: 1) எனப் பிராண்டு வருவனவுங் காண்க,
174 திருவாசக ஆராய்ச்சியுரை எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . ' செல்வா ' என்றார் இறை ஞானச்செல்வனாதலின் . ' தேனார் பொழில்கும் மறைக்காட்டுறை தே . ஞான 173 : 5 என வருகலுங் காண்க . செல்வா ' பூவணம் - பாண்டி நாட்டிலுள்ள திருப்பூவணம் என்னும் தலம் . பாரார் வையைப் புனல்வாய்ப் பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச் சீரார் வாரி சேரநின்ற தென்றிரு பூவணமே'செடியார் வையை சூழ நின்ற தென்றிருப் பூவணமே ( தே.ஞான 61 : 3 : 04 : 4 ) என வருவன காண்க . மலைகள் பொருந்திய பூவணமாதலின் என்றார் . பொறைமல்கு பொழிலணி பூவணத்து பொருப்பமர் : பூவணம் ( ஞான 278 : 7 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பூவணத் தரன் - பூவணத்தில் எழுந்தருளி யிருக்கும் அரன் ' பூவணத்துறை ஈசனை ' ' ( ஞான 278 : 5 ) புண்ணி யனா ருறை பூவணம் ( சுந் 11 : 2 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . அருவமாய் நிற்கும் இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யவேண்டி உருவமாயு மிருத்தலின் ' அருவமு முருவமு மானாய் என்றார் . ' ' ஆரொரு வர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன் றும் ' ' ( தே .232 : 11 ) என அப்பரடிகள் அருளியவாறுங் காண்க . அருவமும் உருவமும் கூறவே அருவுருவமும் கொள்ளப்படும் . இறை வற்கு இம்மூன்றும் வடிவமேயாம் என்பது . அருவமோ உருவா ரூபம் ஆனதோ அன்றி நின்ற உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற உருவமும் மூன்றும் சொன்ன ஒருவனுக்குள்ள வாமே சூத் 1 செய் 39 எனச் சிவஞானசித்தியாரில் வருதலானுமறிக In * சாக்கிரம் சொற்பனம் . சுமுப்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளுள் துரியாதீத அவத்தைக்கண் நிற்கும் உயிர் . தோன்றாது அருள்வழி நின்றுணரும் ஒளிவடிவினன் இறைவனாதலின் துரியமு மிறந்த சுடரே ' என்றார் . * பிருகுடி நாப்பண் ஆன்மாவானவன் புருவமத்தியிலே கின்றபோது ஆன்ற சாக்கிரம் - விசாலமுடைத்தாகிய சாக்கிராவத்தை என்றும் . ஒரு பெருங் கந்தரம் சொற்பனம் ஒப்பில்லாத பெரிய கழுத்தடியிலே நின்றபோது சொப்பனாவத்தையென்றும் மருமத் தாதி சுழுத்தி - நெஞ்சடியிலே நின்ற போது சுழுத்தியவத்தையென்றும் வலஞ்சுழி யுந்தி யும்பர் ஒருநாள் கங்குலி துரியம் வலமாய்ச் சுழித்திருக்கின்ற நாபித்தானத்துக்கு மேலே மேலே நாலங்குலமும் கீழே நாலங்குலமுமாக எட்டங்குலத்து நின்ற போது துரியாவத்தையென் றுஞ் சொல்லப்படும் ஞானாமிர் 16 : 9-12 உரை போற்றித் திருவகவல் 4 துரியமு மிறந்த தூயோன் 54:20 என ஞானாமிர்தத்தும் . ' துரியங் கடந்த துரியா தீதத்தே அரிய வியோமங்கொண் டம்பலத் தாடும் பெரிய பிரானை 2454 . 175 எனத் திருமந்திரத்தும் வருவன காண்க . ' தரியமும் நின்மல துரியா வத்தைக்கும் ' என்பது ஞானாமிர்தம் பழையவுரை ( 54:20 உரை ) .துரிய மும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு . இறைவன் காட்சி கருதல் நூல் முதலிய அளவைகளால் அறியப்ப டாது அவனது திருவடிஞானம் ஒன்றானே தெனியப்படுத்தலின் ' தெரிவரி தாகிய தெளிவே என்றார் . பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் பார்ப்பரிய பரப்பரனைப் பதிஞானத் தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி Fa ( ஓம் சூத் ) எனச் சிவஞானசித்தியாரில் வருதலுங் காண்க . 197-206 . தோளா மூத்த சுடரே போற்றி - துளையிடப்படாத முத் தின் ஒளியுள்ளவனே நினக்கு வணக்கம் ; ஆளானவர்க்கு அன்பா போற்றி - ஆட்பட்டவர்க்கு அவர்செய்யும் அன்புருவாய் அருள் செய்பவனே நினக்கு வணக்கம் : ஆரா அமுகே அருளே போற்றி தெவிட்டாத அமு தத்தை ஒப்பவனே அருளையுடையவனே நினக்கு வணக்கம் ; ஆயிரம் பேர் உடை பெம்மான் போற்றி - ஆயிரம் திருப்பெயர்களையுடைய பெரு மானே நினக்கு வணக்கம் ; தாளி அறுகிள் தாராய் போற்றி தாளி யநூகினாலாகிய மாலையினை மார்பீல் அணிந்தவனே நினக்கு வணக் கம் : நீள் ஒளியாகிய நிருத்தா போற்றி திருமாலும் பிரமனும் அடியும் முடியும் காணவொண்ணாடு நீண்ட ஒளியுருவாய்த் தோனறிய கூத்தனே நினக்கு வணக்கம் ; சந்தன சாந்தின் சுந்தர போற்றி - இருமேனியிற் சாத் தப்பட்ட சந்தனக்கலவையின் அழகினையுடையவனே நினக்கு வணக்கம் . சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி - நினைத்தற்கு அரிதாகிய சிவமே நினக்கு வணக்கம் ; மந்திர மாடலை மேயாய் போற்றி - மறைமொழிகளை வெளிப் படுத்தற்கிடமான பெரிய மகேந்திர மலையிற் பொருந்தினவனே நினக்கு வணக்கம் . எம் தகை உய்ய கொள்வாய் போற்றி - அடியோமைப் பிழைக்கு மாறு அடிமைகொள்வோனே நினக்கு வணக்கம் . தோளாமுத்து - துளையிடப்படாதமுத்து . தோளாமணி - துளையிடாத மாணிக்கம் + என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க . ( சீவக 3087 உரை ) . சுடர் - ஒளி . முத்தின் ஒளியினை இறைவனது தண்ணிய ஒளிக்கு உவமை கூறினார் . சுடர்பொற் குன்றைத் தோளரமுத்தை ( புணர்ச் 1 ) + தோளாமுத்தெருப்பானை ' ( தே.நாவு 280 : 1 ) எனப் பிராண்டு வருவனவுங் காண்க