திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

196 திருவாசக ஆராய்ச்சியுரை திருவடிக்காம் பவம்-திருவடியைப் பெறுதற்குரிய தகுதியமைந்த மானி டப்பிறப்பு. " இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிம்மா னிலத்தே" (தே A1:4) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. பவம்-பிறப்பு. ஏகாரம் தேற்றப் பொருளது. இதண்கண் தவம்புரிதலும் மலரிட்டு இறைஞ்சுதலும் அன்பருள்ளாம் சிவமே பெறுந்திரு எய்துதலுமே மெய்ம்மை என மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிபொருள் போதருதல் காண்க.5. உணரப்படுதலால் 10. பரந்துபல் லாய்மல ரிட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி இரந்தவெல் லாமெமக் கேபெற லாமென்னும் அன்பருள்ளங் கரந்துநில் லாக்கள்வ னே நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தர மாயரு ளாய்தின்னை யேத்த முழுவதுமே. ப-ரை: சந்து பல் ஆய் மலர் இட்டு-விரிவாகப் பல ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களைப் பெய்து முட்டாது அடியே இறைஞ்சி குறைவு படாமல் திருவடிகளையே சிறப்பாக வணங்கி. இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் - ஈயும்படி வேண்டிக்கொண்ட எல்லாவற்றையும் எமக் குப் பெற்றுக்கொள்ளலாம் என்று கருதுகின்ற. அன்பர் உள்ளம் கரந்து நில்லா கவ்வனே - அன்பர்களுடைய உள்ளத்தில் மறைந்து நில்லாத கள் வனே. நின்னை முழுவதும் ஏத்த-உன்னையே முழுவதும் வாழ்த்தும் வண் ணம், நின்தன் வார் கழற்கு அன்பு-கின்னுடைய நீண்ட கழலணிந்த திரு வடிக்கட் செய்யும் அன்பினை, எனக்கு நிரந்தரமாய் அருளாய் - அடியே னுக்கு இடையீடின்றி நிகழும்படி அருள்செய்வாயாக. விரிவாக மலர்களை இட்டுக் குறைவுபடாது நின் திருவடிகளையே வணங்கி இரந்தவெல்லாம் எமக்குப் பெறலாம் என்று கருதுகின்ற அன் பர்களுடைய உள்ளத்தில் சுரந்து நில்லாத கள்வளே, வின்னை முழுவதும் வாழ்த்தும் வண்ணம் நின்னுடைய திருவடிக்கட் செய்யும் அன்பினை எனக்கு நிரந்தரமாய் நிகழும்படி அருள் செய்வாயாக என்பதாம். பரந்து என்னும் எச்சத்தைப் பரக்கவெனத் திரித்து இறைஞ்சி என் னும் விளையொடு முடிக்க. மலரிட்டு அடி. இறைஞ்சுதல் இறைஞ்சுவார் நிலைமைக்குத்தகச் சுருக்கமாகவும் விரிவாகவும் அமையும். இங்கு பரந்து என்பது விரிவாக என்னும் பொருளில் வந்தது. இனி, பரந்து என்ப தற்குப் பலதலங்கள்தோறும் சென்று எனினுமாம். வினைகெடப் பள்ள மும் மேடும் பரந்து திரிவரே' எனத் திருமந்திரத்து (509) வருத லுங் காண்க. பன்மலர் என்றது கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ என்பவற்றை ஆய்மலர் என்றது எடுத்துவைத்து அலர்ந்தபூவும் தானே விழுந்தாகிடந்த பூவும் பழம்பூவும் உதிர்ந்தபூவும் அரும்பும் இரவில் எடுத்த பூவும் கை திருச்சதகம் 197 சீலை எருக்கிலை ஆமணக்கிலை என்பவற்றிற் கொணர்ந்த பூவுமாகிய விலக்கி யன ஒழித்து, உரியகாலத்தில் உரிய முறைப்படி புழுக்கடி எச்சந்தாக்கல் சிலந்தி கூடுகட்டல் மயிர்சுற்றல் முதலிய குற்றங்கள் இல்லாதனவாக ஆராய்ந்து எடுத்து மலர்களை. திருவடி இறைஞ்சுதற்கு மலர் சிறந்ததா தலின் 'மலரிட்டு' என்றார். "ஏய்ந்த மாமலரிட்டு முட்டாததோர் இயல் பொடும் வணங்காதே" (அற்புதப் 2) எனவும் 'மற்றுன்று மாமலரிட் ருன்னை வாழ்த்தி வந்தித்தலன்றி'' (திருக்கோவை 178, எனவும் வருவன வும் காண்க. அடியே இறைஞ்சி இரந்தவெல்லாம் எமக்கே பெறலாமென்னும் அன்பர் என்க. அடியே என்பதில் ஏகாரம் தேற்றம். இறைஞ்சி என்ற வினையை இரந்த என்பதனோடு முடிக்க. இரத்தல் - இன்னது தருகவென வேண்டிக்கோடல், எமக்கே என்பதில் ஏகாரம் அசை. அடி அன்பருள்ளம் கரந்து நில்லாக் கள்வன் என்றது அன்பருள்ளத்தில் மறைந்து நிற்றமுடியாது வெளிப்படுகின்ற கள்வன் என்றவாறு. யார்க்குக், கரக்ககில்லா தருள்செய் பெருமான்'' எனத் தேவரத்து (ஞான 195:8) வருதலும் காண்க. இதனால் அன்பரல்லாதார் உள்ளத் துக் கரந்து நிற்பவன் என்பது போதரும். வார்கழல் என்பது அதனையுடைய திருவடியை உணர்த்தியது. கழற்கு என்னும் நான்காவது ஏழில்வதன் பொருட்கண் வந்தது. "எம்பிரான் தில்லைச் சூழ்பொழிற்கே" (திருக்கோவை 167) என்புழிப்போல. வீடு பயக்கும் இறையருளையுண்டாக்கத் திருவடியிடத்துச் செய்யும் அன்பு சாதனமாதலின் ' உன்தன் வார்கழற்கு அன்பு அருளாய்' என்றார். 'மெய் யன்பை உடையாய் நான் பெறவேண்டுமே அணியா ரடியா ருனக் குள்ள அன்புந் தாராய்'' (பிரார்த்த 318) என அடிகள் பிறாண்டு அருளி யமையுங் காண்க. கோலநீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலையிந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மாலயன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சாலநின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன், பானு 154, எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டறியற்பாலது. நிரந்தரம் - இடையீடின்மை. வடசொல் புப்புள்மையிலே, கிரந் தரமாய் நின்ற வென்னையும்'" (II-ந் திரு முறை கோயிற்றிருப்பண்ணியர் 41) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அன்பு நின்பால் இடையீடின்றி நிகழவேண்டுமென்பார் 'நிரந்தரமாயருளாய்' என்றார். a ''ஏழையென்புன்மை கருதா கிடையரு வள்பெனக்கு வாழி ரின்பாத மலர்க்கே மருவ வருளு நண்டாய் எனப் பதினொராந்திருமுறையில் வருதலும் காண்க. அவ்வன்பு நின்னை ஏத்துவதற்கே பயன்பட வேண்டுமென்பார் சின்னை ஏத்தமுழுவதுமே
196 திருவாசக ஆராய்ச்சியுரை திருவடிக்காம் பவம் - திருவடியைப் பெறுதற்குரிய தகுதியமைந்த மானி டப்பிறப்பு . இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிம்மா னிலத்தே ( தே A1 : 4 ) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . பவம் - பிறப்பு . ஏகாரம் தேற்றப் பொருளது . இதண்கண் தவம்புரிதலும் மலரிட்டு இறைஞ்சுதலும் அன்பருள்ளாம் சிவமே பெறுந்திரு எய்துதலுமே மெய்ம்மை என மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிபொருள் போதருதல் காண்க .5 . உணரப்படுதலால் 10. பரந்துபல் லாய்மல ரிட்டுமுட் டாதடி யேயிறைஞ்சி இரந்தவெல் லாமெமக் கேபெற லாமென்னும் அன்பருள்ளங் கரந்துநில் லாக்கள்வ னே நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தர மாயரு ளாய்தின்னை யேத்த முழுவதுமே . - ரை : சந்து பல் ஆய் மலர் இட்டு - விரிவாகப் பல ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களைப் பெய்து முட்டாது அடியே இறைஞ்சி குறைவு படாமல் திருவடிகளையே சிறப்பாக வணங்கி . இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் - ஈயும்படி வேண்டிக்கொண்ட எல்லாவற்றையும் எமக் குப் பெற்றுக்கொள்ளலாம் என்று கருதுகின்ற . அன்பர் உள்ளம் கரந்து நில்லா கவ்வனே - அன்பர்களுடைய உள்ளத்தில் மறைந்து நில்லாத கள் வனே . நின்னை முழுவதும் ஏத்த - உன்னையே முழுவதும் வாழ்த்தும் வண் ணம் நின்தன் வார் கழற்கு அன்பு - கின்னுடைய நீண்ட கழலணிந்த திரு வடிக்கட் செய்யும் அன்பினை எனக்கு நிரந்தரமாய் அருளாய் - அடியே னுக்கு இடையீடின்றி நிகழும்படி அருள்செய்வாயாக . விரிவாக மலர்களை இட்டுக் குறைவுபடாது நின் திருவடிகளையே வணங்கி இரந்தவெல்லாம் எமக்குப் பெறலாம் என்று கருதுகின்ற அன் பர்களுடைய உள்ளத்தில் சுரந்து நில்லாத கள்வளே வின்னை முழுவதும் வாழ்த்தும் வண்ணம் நின்னுடைய திருவடிக்கட் செய்யும் அன்பினை எனக்கு நிரந்தரமாய் நிகழும்படி அருள் செய்வாயாக என்பதாம் . பரந்து என்னும் எச்சத்தைப் பரக்கவெனத் திரித்து இறைஞ்சி என் னும் விளையொடு முடிக்க . மலரிட்டு அடி . இறைஞ்சுதல் இறைஞ்சுவார் நிலைமைக்குத்தகச் சுருக்கமாகவும் விரிவாகவும் அமையும் . இங்கு பரந்து என்பது விரிவாக என்னும் பொருளில் வந்தது . இனி பரந்து என்ப தற்குப் பலதலங்கள்தோறும் சென்று எனினுமாம் . வினைகெடப் பள்ள மும் மேடும் பரந்து திரிவரே ' எனத் திருமந்திரத்து ( 509 ) வருத லுங் காண்க . பன்மலர் என்றது கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூ நிலப்பூ என்பவற்றை ஆய்மலர் என்றது எடுத்துவைத்து அலர்ந்தபூவும் தானே விழுந்தாகிடந்த பூவும் பழம்பூவும் உதிர்ந்தபூவும் அரும்பும் இரவில் எடுத்த பூவும் கை திருச்சதகம் 197 சீலை எருக்கிலை ஆமணக்கிலை என்பவற்றிற் கொணர்ந்த பூவுமாகிய விலக்கி யன ஒழித்து உரியகாலத்தில் உரிய முறைப்படி புழுக்கடி எச்சந்தாக்கல் சிலந்தி கூடுகட்டல் மயிர்சுற்றல் முதலிய குற்றங்கள் இல்லாதனவாக ஆராய்ந்து எடுத்து மலர்களை . திருவடி இறைஞ்சுதற்கு மலர் சிறந்ததா தலின் ' மலரிட்டு ' என்றார் . ஏய்ந்த மாமலரிட்டு முட்டாததோர் இயல் பொடும் வணங்காதே ( அற்புதப் 2 ) எனவும் ' மற்றுன்று மாமலரிட் ருன்னை வாழ்த்தி வந்தித்தலன்றி ' ' ( திருக்கோவை 178 எனவும் வருவன வும் காண்க . அடியே இறைஞ்சி இரந்தவெல்லாம் எமக்கே பெறலாமென்னும் அன்பர் என்க . அடியே என்பதில் ஏகாரம் தேற்றம் . இறைஞ்சி என்ற வினையை இரந்த என்பதனோடு முடிக்க . இரத்தல் - இன்னது தருகவென வேண்டிக்கோடல் எமக்கே என்பதில் ஏகாரம் அசை . அடி அன்பருள்ளம் கரந்து நில்லாக் கள்வன் என்றது அன்பருள்ளத்தில் மறைந்து நிற்றமுடியாது வெளிப்படுகின்ற கள்வன் என்றவாறு . யார்க்குக் கரக்ககில்லா தருள்செய் பெருமான் ' ' எனத் தேவரத்து ( ஞான 195 : 8 ) வருதலும் காண்க . இதனால் அன்பரல்லாதார் உள்ளத் துக் கரந்து நிற்பவன் என்பது போதரும் . வார்கழல் என்பது அதனையுடைய திருவடியை உணர்த்தியது . கழற்கு என்னும் நான்காவது ஏழில்வதன் பொருட்கண் வந்தது . எம்பிரான் தில்லைச் சூழ்பொழிற்கே ( திருக்கோவை 167 ) என்புழிப்போல . வீடு பயக்கும் இறையருளையுண்டாக்கத் திருவடியிடத்துச் செய்யும் அன்பு சாதனமாதலின் ' உன்தன் வார்கழற்கு அன்பு அருளாய் ' என்றார் . ' மெய் யன்பை உடையாய் நான் பெறவேண்டுமே அணியா ரடியா ருனக் குள்ள அன்புந் தாராய் ' ' ( பிரார்த்த 318 ) என அடிகள் பிறாண்டு அருளி யமையுங் காண்க . கோலநீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன் மேலையிந்திரன் அரசினைக் கனவிலும் வெஃகேன் மாலயன்பெறு பதத்தையும் பொருளென மதியேன் சாலநின்பதத் தன்பையே வேண்டுவன் தமியேன் பானு 154 எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டறியற்பாலது . நிரந்தரம் - இடையீடின்மை . வடசொல் புப்புள்மையிலே கிரந் தரமாய் நின்ற வென்னையும் ' ( II- ந் திரு முறை கோயிற்றிருப்பண்ணியர் 41 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அன்பு நின்பால் இடையீடின்றி நிகழவேண்டுமென்பார் ' நிரந்தரமாயருளாய் ' என்றார் . a ' ' ஏழையென்புன்மை கருதா கிடையரு வள்பெனக்கு வாழி ரின்பாத மலர்க்கே மருவ வருளு நண்டாய் எனப் பதினொராந்திருமுறையில் வருதலும் காண்க . அவ்வன்பு நின்னை ஏத்துவதற்கே பயன்பட வேண்டுமென்பார் சின்னை ஏத்தமுழுவதுமே