திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 2. அறிவுறுத்தல் இதன் பொருள் தமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப் பித்தலும் தம் மனத்திற்கு நல்லறிவுறுத்தலுமாம். 206 15. தரவு கொச்சகக் கலிப்பா நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே வீடகத்தே புகுத்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே. மு.ரை:- ஆடகம் சீர் மணி குன்றே - மாற்றுயர்ந்த பசும்பொன்னில் அமைந்த சிறப்பினையுடைய மாணிக்கமலை போன்றவனே, எம் உடை யானே - எம்மை அடிமையாக உடையவனே. நான் உன் அடியார்போல் நாடகத்தால் நடித்து - யான் உன் அடியவர் போல உருவங் கொண்டு நாடகம் ஆடி. நடுவே அகத்தே புகுந்திடுவான் - அந்நடிப்பளவி லேயே நின்றுகொண்டு இடையில் வீட்டுநிலையிற் புகுவதற்கு, மிக பெரி தும் விரைகின்றேன் - அளவின் மிக்க விரைவோடு முற்படுகின்றேன்; உனக்கு இடை அறா அன்பு -ஆதலால் உன்னிடத்தில் இடைவிடாமல் நிகழும் மெய்யன்பு, என் அகத்து ஊடு நின்று உருக தந்தருள் - என் உள் ளத்தினிடத்து நிலைபெற்று ஆதனால் உள்ளம் உருகும்படி அடியேனுக்குத் தந்தருள்வாயாக. மணிக்குன்றே உடையானே, நான் உன் அடியார்போல் நடித்து அந் நடிப்பளவிலேயே நின்றுகொண்டு இடையில் வீட்டு நிலையிற் போதற்கு மிகப் பெரிதும் விரைகின்றேன்; ஆதவால் உன்னிடத்து இடையறாமல் நிகழும் மெய்யன்பு என் உள்ளத்தினிடத்தே நிலைபெற்று அதனால் உள் ளம் உருகும்படி அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்பதாம். யான் நாடகத்தால் நடித்தல் -கூத்தாடுவார் எடுத்த கூத்திற்கு இயைந்தவர் களின் வேடம் தாங்கி நடித்தல். மெய்யுணர்வீனை அடைந்தும் என் உள்ளத்தில் மெய்யன்பு நிகழாமையால் அதளைப் பிறர் அறியாத வாறு உன் மெய்யடியார் போல் நடிப்பேனாயினேன் என்பார் 'நாடகத் தால் உன் அடியார்போல் நடித்து என்றார், அவ்வளவிலும் அமை யாது இந்நடிப்பு நிலையிலேயே நின்றுகொண்டு இடையில் மெய்யன்பர் பெறத்தக்க வீட்டு நிலையிற் புகுதற்கு மிகமிக முற்படுகின்றேன் என்பார் 'நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். என்றார். புகுந்திடுவான். வான் ஈற்று வினையெச்சம். ஆடகம் - பொன். மாட நெருங்குங் கடல்" என்னும் தேவாரத்தும் இப்பொருட்டாதல் காண்க. ஆடகச்சீர் மணிக்குன்றே என்றது மாற்றுயர்ந்த பொன்னின் பசுமையும் மாணிக்க மணியின் வண் L. 207 திருச்சதகம் ணமும் கலந்த அம்மையப்பரது திருவுருவைக் குறித்தது. "மாரற்ற மணிக் குன்றே" (சதகம் 24) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. "மற்றவ ரறியா மாணிக்க மலையை" எனச் சேந்தனார் திருவிசைப்பாவில் (திருவீழி மிழலை 2) வருதலும் ஈண்டறியற்பாலது. மணி என்றது ஈண்டு மாணிக்கம். "அக்கு மரவு மணி மணிக்கூத்தன்'' (திருக்கோவை 103) என்புழிப் போல, குன்றே என்றார் அனக்கலாலா அளவும் பெருமையு முடைய இறைவன் பேரூழிக் காலத்தும் தான் ஒடுங்குதலின்றி அசை வற்ற இயல்புடையவனாதலன். "வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட வின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு' (தெள் 18) என அடிகள் அருளியமையுங் காண்க, வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேனுாதலின் அது கைகூடுதற்கு என் உள்ளத்தில் இடையறா மெய்யன்பு நிலைபெறவும், அவ்வன்பினால் உள்ளம் உருகவும் செய்தருள வேண்டும் என்பார் 'இடை யறா அன்புனக் கென்னூடகத்தே நின்றுருகத் தந்தருள்' என்றார். அடி கள் இறைவன்பால் அன்பையே வேண்டுதல். ''உன்றன வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய்” நின்கழற்கணே, மெய்கலந்த அன்ப ரன்பெனக்கு மாகவேண்டும்" சத8. சத?3. பிரார்த்3 பிரார்த்8. வேண்டு நின்கழற்கண் அன்பு சத?4. *மெய்யன்பை உடையாய் நான் பெறவேண்டும்" அணியா ரடிய ருனக்குள்ள அன்புந் தாராய்" என வருஉம் திருவாக்குகளானுமறிக. இதன்கண் உன்னடியார்போல் நடித்து வீடகத்தே புகுதிடுவான் விரைகின்றேன். அங்ஙனமாயினும் அது கைகூடும் வண்ணம் இடையறா அன்பு தந்தருள் என வேண்டிக்கொள்ளப்படுதலின் அறிவுறுத்தல் என் லும் இரண்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 11. " ப-ரை: 10.யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயு மலர்க்கொன்றைச் சிவனே யெம் பெருமானெம் மானேயுன் னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே. யான் பிறப்பு ஏதும் அஞ்சேன்-யான் பிறப்பதற்கு ஒரு சிறிதும் அஞ்சுவேனல்லேன்; இறப்பதனுக்கு என் கடவேன்-அப்பிறப் பின் பின்வரும் இறத்தற்கு யாது செய்யவல்லேன்; வானேயும் பெறில் வேண்டேன் - விண்ணுலக அரசு எனக்கு எளிதிற் கிடப்பதாயினும் அதனை விரும்யேன்: மண் ஆன்வான் மதித்தும் இரேங் வன்ணுல அரரை விரும் பாத யான் மண்ணுலகத்தை ஆளுதற்கு சுருஞ்சத்தால் எனைத்தும் இருக்க
திருவாசக ஆராய்ச்சியுரை 2 . அறிவுறுத்தல் இதன் பொருள் தமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப் பித்தலும் தம் மனத்திற்கு நல்லறிவுறுத்தலுமாம் . 206 15 . தரவு கொச்சகக் கலிப்பா நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே வீடகத்தே புகுத்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே . மு.ரை : - ஆடகம் சீர் மணி குன்றே - மாற்றுயர்ந்த பசும்பொன்னில் அமைந்த சிறப்பினையுடைய மாணிக்கமலை போன்றவனே எம் உடை யானே - எம்மை அடிமையாக உடையவனே . நான் உன் அடியார்போல் நாடகத்தால் நடித்து - யான் உன் அடியவர் போல உருவங் கொண்டு நாடகம் ஆடி . நடுவே அகத்தே புகுந்திடுவான் - அந்நடிப்பளவி லேயே நின்றுகொண்டு இடையில் வீட்டுநிலையிற் புகுவதற்கு மிக பெரி தும் விரைகின்றேன் - அளவின் மிக்க விரைவோடு முற்படுகின்றேன் ; உனக்கு இடை அறா அன்பு -ஆதலால் உன்னிடத்தில் இடைவிடாமல் நிகழும் மெய்யன்பு என் அகத்து ஊடு நின்று உருக தந்தருள் - என் உள் ளத்தினிடத்து நிலைபெற்று ஆதனால் உள்ளம் உருகும்படி அடியேனுக்குத் தந்தருள்வாயாக . மணிக்குன்றே உடையானே நான் உன் அடியார்போல் நடித்து அந் நடிப்பளவிலேயே நின்றுகொண்டு இடையில் வீட்டு நிலையிற் போதற்கு மிகப் பெரிதும் விரைகின்றேன் ; ஆதவால் உன்னிடத்து இடையறாமல் நிகழும் மெய்யன்பு என் உள்ளத்தினிடத்தே நிலைபெற்று அதனால் உள் ளம் உருகும்படி அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்பதாம் . யான் நாடகத்தால் நடித்தல் -கூத்தாடுவார் எடுத்த கூத்திற்கு இயைந்தவர் களின் வேடம் தாங்கி நடித்தல் . மெய்யுணர்வீனை அடைந்தும் என் உள்ளத்தில் மெய்யன்பு நிகழாமையால் அதளைப் பிறர் அறியாத வாறு உன் மெய்யடியார் போல் நடிப்பேனாயினேன் என்பார் ' நாடகத் தால் உன் அடியார்போல் நடித்து என்றார் அவ்வளவிலும் அமை யாது இந்நடிப்பு நிலையிலேயே நின்றுகொண்டு இடையில் மெய்யன்பர் பெறத்தக்க வீட்டு நிலையிற் புகுதற்கு மிகமிக முற்படுகின்றேன் என்பார் ' நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் . என்றார் . புகுந்திடுவான் . வான் ஈற்று வினையெச்சம் . ஆடகம் - பொன் . மாட நெருங்குங் கடல் என்னும் தேவாரத்தும் இப்பொருட்டாதல் காண்க . ஆடகச்சீர் மணிக்குன்றே என்றது மாற்றுயர்ந்த பொன்னின் பசுமையும் மாணிக்க மணியின் வண் L. 207 திருச்சதகம் ணமும் கலந்த அம்மையப்பரது திருவுருவைக் குறித்தது . மாரற்ற மணிக் குன்றே ( சதகம் 24 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . மற்றவ ரறியா மாணிக்க மலையை எனச் சேந்தனார் திருவிசைப்பாவில் ( திருவீழி மிழலை 2 ) வருதலும் ஈண்டறியற்பாலது . மணி என்றது ஈண்டு மாணிக்கம் . அக்கு மரவு மணி மணிக்கூத்தன் ' ' ( திருக்கோவை 103 ) என்புழிப் போல குன்றே என்றார் அனக்கலாலா அளவும் பெருமையு முடைய இறைவன் பேரூழிக் காலத்தும் தான் ஒடுங்குதலின்றி அசை வற்ற இயல்புடையவனாதலன் . வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட வின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ' ( தெள் 18 ) என அடிகள் அருளியமையுங் காண்க வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேனுாதலின் அது கைகூடுதற்கு என் உள்ளத்தில் இடையறா மெய்யன்பு நிலைபெறவும் அவ்வன்பினால் உள்ளம் உருகவும் செய்தருள வேண்டும் என்பார் ' இடை யறா அன்புனக் கென்னூடகத்தே நின்றுருகத் தந்தருள் ' என்றார் . அடி கள் இறைவன்பால் அன்பையே வேண்டுதல் . ' ' உன்றன வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய் நின்கழற்கணே மெய்கலந்த அன்ப ரன்பெனக்கு மாகவேண்டும் சத 8 . சத ? 3 . பிரார்த் 3 பிரார்த் 8 . வேண்டு நின்கழற்கண் அன்பு சத ? 4 . * மெய்யன்பை உடையாய் நான் பெறவேண்டும் அணியா ரடிய ருனக்குள்ள அன்புந் தாராய் என வருஉம் திருவாக்குகளானுமறிக . இதன்கண் உன்னடியார்போல் நடித்து வீடகத்தே புகுதிடுவான் விரைகின்றேன் . அங்ஙனமாயினும் அது கைகூடும் வண்ணம் இடையறா அன்பு தந்தருள் என வேண்டிக்கொள்ளப்படுதலின் அறிவுறுத்தல் என் லும் இரண்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 11 . - ரை : 10.யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயு மலர்க்கொன்றைச் சிவனே யெம் பெருமானெம் மானேயுன் னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே . யான் பிறப்பு ஏதும் அஞ்சேன் - யான் பிறப்பதற்கு ஒரு சிறிதும் அஞ்சுவேனல்லேன் ; இறப்பதனுக்கு என் கடவேன் - அப்பிறப் பின் பின்வரும் இறத்தற்கு யாது செய்யவல்லேன் ; வானேயும் பெறில் வேண்டேன் - விண்ணுலக அரசு எனக்கு எளிதிற் கிடப்பதாயினும் அதனை விரும்யேன் : மண் ஆன்வான் மதித்தும் இரேங் வன்ணுல அரரை விரும் பாத யான் மண்ணுலகத்தை ஆளுதற்கு சுருஞ்சத்தால் எனைத்தும் இருக்க