திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

212 திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: புத்தேளிர் கோமான்-கடவளர் தயைவனே, உன் திரு வடிக்கே ஆம் அனு - உன் னுடைய திருவடிகளுக்கே ஆளாகும் வண்ணம், அகம் குழையேன்-அன்பினால் மனம் நெகிழ்ந்திலேன்; அன்பு உருகேன்- அன்பினால் மனம் உருதலும் இல்லேன்; பூ மாலை புனைந்து ஏத்தேன். பூவாலாகிய மாலையைச் சாத்தித் துதியேன்; புகழ்ந்து உரையேன் - நின் பெருமைகளைப் புகழ்ந்து பேசேன்: வின் திருக்கோயில் தூகேன் - நின் திருக்கோயில்களைத் திருவவகிட்டு விளக்கஞ் செய்யேன்; மெழுகேன் - திரு மெழுக்கிடேன்; கூத்து ஆடேன் - ஆனந்தக் கூத்து ஆடுதல் செய்யேன்; சதுராலே சார்வான் விரைகின்றேன்- என் அறிவின் ஆற்றலினால் நின்னை அடைதற்கு முற்படுகின்றேன்; சாம் ஆறே-அங்ஙனம் முற்படுதல் பிற வீப் பயன்பெறாது இறந்துபடும் வழியேயாகும். புத்தேனீர் கோமான்! உன் திருவடிக்கு ஆளாகும் வண்ணம் மனம் குழையேன்: அன்பினால் மனம் உருகேன்: மலர்மாலையைச் சாத்தித் துதி யேன்; நின்பெருமைகளையெல்லாம் புகழ்ந்து உரையேன்; உனது திருக் கோயிலை அலகிடேன்; மெழுகிடேன்; கூத்தாடேன்: ஆற்றலால் நின்னை அடைதற்கு முற்படுகின்றேன்; அங்ஙனம் முற்படுதல் பிறவிப்பயன் பெறாது இறந்துபடும் வழியேயாகும் என்பதாம். கடவுளர் தலைவன் இறைவனாதலின் அவனைப் புத்தேளிர் கோமான்' என்றார். கோமான். அண்மைவிளி, திருவடிக்கே ஆமாறு திருவடிக்கே ஆளாமாறு. திரு-ஞானச் செல்வம். ஏகாரம் தேற்றப்பொருளது. குழை தல் - நெகிழ்தல்; உருகுதல் - நீர் போல் உருகுதல். அகம் குழைதலுக்கும் உருகுதற்கும் அன்பு ஏதுவாகும். "அன்பினாலடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக" (கோயிற் 2) என வருதலுங் காண்க, இறை வன் திருவடிக்கு ஆளாதற்கு அன்பினால் அகங்குழைதலும் உருகு த லும் சிறந்த சாதனங்களரகும். "அன்போ டுருகி யகங்குழை வார்க்கன் றி என்போல் மணியினை எய்தவொண் ணாதே" (272) எனத் திருமந்திரத்து வருதலும் காண்சு. ஏத்தேன் - துடுயேன். புகழ்ந்துரைத்தல். இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து பேசுதல். தூகல்-திருவலகிடுதல். மெழுகல்-கோமயத்தால் மெழுகு தல். குழைதலும் உருகுதலும் மனத்தின் செயல்களாகும். ஏத்துதலும் உரைத்தலும் மொழிகளின் செயல்களாகும். தூகலும் மெழுகலும் உட லின் செயல்களாகும். இறைவனை வழிபட்டு அதன்பயனாக ஆனந்தத் தால் கூத்தாடுதலும் செய்திலேல் என்பார் கூத்தாடேன் என்றார். பூ மாலை புனைந்தேத்தல் தூகல் மெழுகல் கூத்தாடல் என்பன இன்றியமை யாதன என்பது, திருச்சதகம் நிலைபெறுமா றெண்ணுகியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு விட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி என அப்பரடிகள் திருவாக்காலும் தெளிக. (245:8) 213 சதுர் - ஆற்றல்.ஏ-தேற்றம். சாரிவான், வானீற்று வினையெச்சம். ஏ-அசை. சார்வான் விரைகின்றேன் என மாற்றிக் கூட்டி முடிக்க, இறை வன் திருவடிக்கு ஆமாறு அகங்குழைதல் முதலியனவற்றைச் செய்யாது சதுராகலே சார்தற்கு முற்படுதல் பிறவிப் பயனைப் பெருது இறந்துபடும் வழியேயாகும் என்பார் சாமாறு என்றார். இதன்கண் மனமொழிமெய்கள் சரியையாகிய சைவநன்னெறிக்கணின்று வழிபடுதற்கு இயைந்து வாராமையை இறைவனிடத்துக் கூறுமுகத்தால் நெஞ்சிற்குக் குறிப்பினால் அறிவுறுத்தலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க. 14. 19.வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே. ப-சை: வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி-ஆகாயமாகி நிலமா கிக் காற்றாகி ஓளியுடைப் பொருள்களாகி, ஊனாகி உயிராகி -உடலோடு கூடிய உயிராகி. உண்மையுமாய் இன்மையுமாய்-மெய்யன்பர்களுக்கு உன் பொருளாகியும் அஃதில்லார்க்கு இல்பொருளாகியும், கோனாகி-எப்பொருட் டும் தலைவனாகியும், அவர் அவரை யான் எனது என்று கூத்தாட்டுவா னாகி - உலகத்துள்ள ஒவ்வொருவரையும் யான் என்றும் எனது என்றும் செருக்கடைந்து கூறிக் கூத்தாடும்படி செய்பவனாகியும், நின்றயை - நிற் கின்ற நின்னை என் சொல்லி வாழ்த்துவன்-யாது சொல்லி வாழ்த்தக் கடவேன். வான் முதலிய பொருள்களாகியும் உள்பொருளாகியும் இல்பொருளாகி யும் அப்பொருள்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் உலகிலுள்ள ஒவ் வொருவரையும் யான் எனது என்று செருக்கடைந்து கூறிக் கூத்தாடும் படி செய்பவனாகியும் நிற்கின்ற நின்னை என் சொல்லி வாழ்த்தக் கடவேன் என்பதாம். வானாகி என்றதனால் விண்ணையும் மேகத்திலுள்ள நீரையும் குறித் தார். மண் என்றதனால் அணுச்செறிந்த நிலத்தைக் குறித்தார். ' மண்டி ணிந்த ஜீலனும்... (புற 2) எனப் பிறர் கூறுதலும் காண்க. வளி-காற்று. ஒளி என்றதனால் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்கள்
212 திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : புத்தேளிர் கோமான் - கடவளர் தயைவனே உன் திரு வடிக்கே ஆம் அனு - உன் னுடைய திருவடிகளுக்கே ஆளாகும் வண்ணம் அகம் குழையேன் - அன்பினால் மனம் நெகிழ்ந்திலேன் ; அன்பு உருகேன் அன்பினால் மனம் உருதலும் இல்லேன் ; பூ மாலை புனைந்து ஏத்தேன் . பூவாலாகிய மாலையைச் சாத்தித் துதியேன் ; புகழ்ந்து உரையேன் - நின் பெருமைகளைப் புகழ்ந்து பேசேன் : வின் திருக்கோயில் தூகேன் - நின் திருக்கோயில்களைத் திருவவகிட்டு விளக்கஞ் செய்யேன் ; மெழுகேன் - திரு மெழுக்கிடேன் ; கூத்து ஆடேன் - ஆனந்தக் கூத்து ஆடுதல் செய்யேன் ; சதுராலே சார்வான் விரைகின்றேன்- என் அறிவின் ஆற்றலினால் நின்னை அடைதற்கு முற்படுகின்றேன் ; சாம் ஆறே - அங்ஙனம் முற்படுதல் பிற வீப் பயன்பெறாது இறந்துபடும் வழியேயாகும் . புத்தேனீர் கோமான் ! உன் திருவடிக்கு ஆளாகும் வண்ணம் மனம் குழையேன் : அன்பினால் மனம் உருகேன் : மலர்மாலையைச் சாத்தித் துதி யேன் ; நின்பெருமைகளையெல்லாம் புகழ்ந்து உரையேன் ; உனது திருக் கோயிலை அலகிடேன் ; மெழுகிடேன் ; கூத்தாடேன் : ஆற்றலால் நின்னை அடைதற்கு முற்படுகின்றேன் ; அங்ஙனம் முற்படுதல் பிறவிப்பயன் பெறாது இறந்துபடும் வழியேயாகும் என்பதாம் . கடவுளர் தலைவன் இறைவனாதலின் அவனைப் புத்தேளிர் கோமான் ' என்றார் . கோமான் . அண்மைவிளி திருவடிக்கே ஆமாறு திருவடிக்கே ஆளாமாறு . திரு - ஞானச் செல்வம் . ஏகாரம் தேற்றப்பொருளது . குழை தல் - நெகிழ்தல் ; உருகுதல் - நீர் போல் உருகுதல் . அகம் குழைதலுக்கும் உருகுதற்கும் அன்பு ஏதுவாகும் . அன்பினாலடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக ( கோயிற் 2 ) என வருதலுங் காண்க இறை வன் திருவடிக்கு ஆளாதற்கு அன்பினால் அகங்குழைதலும் உருகு லும் சிறந்த சாதனங்களரகும் . அன்போ டுருகி யகங்குழை வார்க்கன் றி என்போல் மணியினை எய்தவொண் ணாதே ( 272 ) எனத் திருமந்திரத்து வருதலும் காண்சு . ஏத்தேன் - துடுயேன் . புகழ்ந்துரைத்தல் . இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து பேசுதல் . தூகல் - திருவலகிடுதல் . மெழுகல் - கோமயத்தால் மெழுகு தல் . குழைதலும் உருகுதலும் மனத்தின் செயல்களாகும் . ஏத்துதலும் உரைத்தலும் மொழிகளின் செயல்களாகும் . தூகலும் மெழுகலும் உட லின் செயல்களாகும் . இறைவனை வழிபட்டு அதன்பயனாக ஆனந்தத் தால் கூத்தாடுதலும் செய்திலேல் என்பார் கூத்தாடேன் என்றார் . பூ மாலை புனைந்தேத்தல் தூகல் மெழுகல் கூத்தாடல் என்பன இன்றியமை யாதன என்பது திருச்சதகம் நிலைபெறுமா றெண்ணுகியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கு விட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி என அப்பரடிகள் திருவாக்காலும் தெளிக . ( 245 : 8 ) 213 சதுர் - ஆற்றல்.ஏ - தேற்றம் . சாரிவான் வானீற்று வினையெச்சம் . - அசை . சார்வான் விரைகின்றேன் என மாற்றிக் கூட்டி முடிக்க இறை வன் திருவடிக்கு ஆமாறு அகங்குழைதல் முதலியனவற்றைச் செய்யாது சதுராகலே சார்தற்கு முற்படுதல் பிறவிப் பயனைப் பெருது இறந்துபடும் வழியேயாகும் என்பார் சாமாறு என்றார் . இதன்கண் மனமொழிமெய்கள் சரியையாகிய சைவநன்னெறிக்கணின்று வழிபடுதற்கு இயைந்து வாராமையை இறைவனிடத்துக் கூறுமுகத்தால் நெஞ்சிற்குக் குறிப்பினால் அறிவுறுத்தலின் அறிவுறுத்தல் என்னும் இரண்டாம் பத்து நுதலியபொருள் போதருதல் காண்க . 14 . 19.வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே . - சை : வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி - ஆகாயமாகி நிலமா கிக் காற்றாகி ஓளியுடைப் பொருள்களாகி ஊனாகி உயிராகி -உடலோடு கூடிய உயிராகி . உண்மையுமாய் இன்மையுமாய் - மெய்யன்பர்களுக்கு உன் பொருளாகியும் அஃதில்லார்க்கு இல்பொருளாகியும் கோனாகி - எப்பொருட் டும் தலைவனாகியும் அவர் அவரை யான் எனது என்று கூத்தாட்டுவா னாகி - உலகத்துள்ள ஒவ்வொருவரையும் யான் என்றும் எனது என்றும் செருக்கடைந்து கூறிக் கூத்தாடும்படி செய்பவனாகியும் நின்றயை - நிற் கின்ற நின்னை என் சொல்லி வாழ்த்துவன் - யாது சொல்லி வாழ்த்தக் கடவேன் . வான் முதலிய பொருள்களாகியும் உள்பொருளாகியும் இல்பொருளாகி யும் அப்பொருள்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாகியும் உலகிலுள்ள ஒவ் வொருவரையும் யான் எனது என்று செருக்கடைந்து கூறிக் கூத்தாடும் படி செய்பவனாகியும் நிற்கின்ற நின்னை என் சொல்லி வாழ்த்தக் கடவேன் என்பதாம் . வானாகி என்றதனால் விண்ணையும் மேகத்திலுள்ள நீரையும் குறித் தார் . மண் என்றதனால் அணுச்செறிந்த நிலத்தைக் குறித்தார் . ' மண்டி ணிந்த ஜீலனும் ... ( புற 2 ) எனப் பிறர் கூறுதலும் காண்க . வளி - காற்று . ஒளி என்றதனால் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்கள்