திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 246 34. தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி முதாதை மாதாளும் பரசுத் தெந்தை யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன்மேலுங் குடைத்தாடி யாடு வோமே. சிய படரை : தேவர் கோ அறியாத தேவ தேவன் - தேவர்கட்கு அரசனா இந்திரனும் அறியமாட்டாத மகாதேவனும், செழு பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் - செழுமைபொருந்திய உலகங்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில் செய்கின்ற, மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்-தன்னின் வேறாகிய பிரமன் திருமால் உருத்தி ரன் என்னும் மூவர்க்கும் தலைவனாய் நிலைபெற்ற முதவ்வனும், மூர்த்தி - அட்ட மூர்த்தியாயுள்ளவனும், முதாதை - பிரமன் திருமால் உருத்திரன் சதாசிவன் ஈசுவரன் என்பவர்களுக்குத் தந்தையாகிய சதாசிவமூர்த்திக்கும் தந்தையாயுள்ளவனும், மாது ஆளும் பாகத்து எந்தை - உமையம்மையார் டய தமதாக்கிக் கொண்ட இடப்பாகத்தையுடைய எங்கள் தந்தையும், யாவர் கோன்- எல்லார்க்கும் தலையனுமாகிய சிவபெருமான், வந்து என்னையும் ஆண்டு கொண்டான்-வலிய வந்து ஒன்றும் போதா நாயேனையும் ஆளா கக் கொண்டருளினான்; நாம் ஆர்க்கும் குடி அல்லோம் - ஆதலால் இனி நாம் பிறரெவர்க்கும் அடிமை அவ்வோம்; யாதும் அஞ்சோம்-எதற்கும் சிறிதும் அஞ்சுவோமல்லோம். அவன் அடியார் அடியாரோடு மேவினோம். அவ்விறைவனுடைய அடியார்க்கும் அடியாரோடும் சேர்ந்துள்ளோம்; மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோம்-மேலும் மேலும் அவனது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித்திளைத்து ஆனந்தக் கூத்து ஆடுவோம். தேவர்கட்கு அரசனாகிய இந்திரனும் அறியாத மகாதேவனும் உ கங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கின்ற மற்றைய பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூவர்க்கும் தலைவனாய் நிறை முதல்வனும் அட்டமூர்த்தியாயுள்ளவனும், முதாதையாயுள்ளவனும் உமையம்மையார் ஆளும் இடப்பாகத்தையுடைய எங்கள் தந்தையும், யாவார்க்கும் தலைவனு மாகிய சிவபெருமான் வலியவந்து என்னையும் ஆளாகக் கொண்டருளினான். ஆதலால் இனி நாம் பிறர் எவர்க்கும் அடிமையல்லோம்; யாதும் அஞ்சோம் அவ்விறைவனுடைய அடியார்க்கும் அடியாரோடும் சேர்ந்துள்ளோம். மேலும் மேலும் அவனது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித் தினைத்து ஆனந் தக்கூத்தாடுவோம் என்பதாம். இறைவனது இறைமைக்குணத்தினைக் கூறத்தொடங்கிய அடிகள் முதலில் தேவர்கோ வறியாத தேவதேவன்' என்றும், பின்னர் அவனில் திருச்சதகம் 247 மேம்பட்ட பிரம்மன் முதலிய மூவர்க்கும் தலைவனாய் உள்ளவன் என்றும் அட்ட மூர்த்தங்களையுடையவன் என்றும் கீழுள்ள பிரமன் முதலியோர்க்குத் தாதையாகிய சதாசிவமூர்த்திக்கும் தாதையுள்ளவன் என்றும் உமையம்மை யாளும் பாகத்தையுடையவன் என்றும் எங்கள் தந்தை என்றும் கூறி யருளி இவையெல்லாவற்றையும் சேர்த்து முடித்தற் பொருட்டு யாவர் கோள்' என்றும் அருளிச் செய்தார். தேவர்கோ-தேவர்கட்கு அரசனாகிய இந்திரன். அவன் பசுபோத முனைப்பினால் இறைவனைக் காணமுடியாமையின் "தேவர்கோ அறியாத்தேவ தேவன்' என்றார். தேவதேவன்- தேவர்க்குத் தேவன். மகாதேவன் என்ற வாறு, "ஆகிமூர்த்திக் கரும்புரிந்தருளிய தேவதேவன்'' (கீர்த்தி 122) தேவதேவன் மெய்ச் சேவகன் ' (சென்னிப் 1) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. '- மிகுதேவர்க்குந் தேவன்' திருமந்திரம் 2030. தேவன் என ஒருமையாற் கூறினார் தேவர்க்கும் மேலாகிய தேவன் ஈசன் ஒருவனேயாதலின். பொழிகள் என்றது உலகங்களை பயந்து-பெற்று. நீண்ட தோளி னாய் நிற்பயந் தெடுத்த யான்'' (கம்ப. மந்திரப் 63) என் புழியும் இப் பொருட்டாதல் காண்க. ஈண்டு படைத்து என்னும் பொருட்டாய் நின் றது. பயந்து காத்து அழிக்கும்' என்புழி வினையெச்சங்கள் எச்சுப்பொருள் தாராமல் செவ்வெண் மாத்திரையே குறித்து நின்றன. "சக்கரமும் கந் தித்துச் சுழலுமாப் போன் '' (சிவஞானசித் குத்.10 செய்யுள் 6) என். புழிப்போல, மற்றைய என்பது தன்னின் வேறாகிய பிறிதுபொருளில் வந்தது. பிரமன் முதலியோரைக் கொண்டு படைத்தல் முதலிய தொழில் களைச் செய்விக்கும் பெருந்தலவன் இறைவனாதலின் 'மூவர்கோன்' என்றார். " மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய. வாளா மேவண்ணல்' எனப் பரஞ்சோதி திருவிளையாடற்புராணத்து (கடவுள் வாழ்த்து 1) வருதலும் காண்க, மூர்த்தி-அட்ட மூர்த்தி. அட்டமூர்த்தி யழகன் " (சென்னிப் 2) ''அட்டமூர்த்தியை மட்டவிழசோலை யாரூரானை'' (தே.சும். எனவும். 50:2) எனவும் வருவன காண்க. அட்ட மூர்த்தம் நிலம் நீர் தீ வளி வான் உயிர் ஞாயிறு திங்கள் என்னும் எட்டுமாம். அவற்றைத் தனது மூர்த்தமாகக் கொண்டு தான் மூர்த்திமானாய்ப் பவர் முதலிய எட்டுத் திருநாமங்களோடு விளங்குபவன். 21 ""நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனாய மைந்தனோ டென்வகையாய்ப் புணர்ந்து கின்றான்" என அடிகளும், "அட்ட மூர்த்தியதாகிய வப்பரோ" தே. 124 : 3, என அப்பரடிகளும் அருளியமையுங் காண்க. (தோனோ 5)
திருவாசக ஆராய்ச்சியுரை 246 34. தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி முதாதை மாதாளும் பரசுத் தெந்தை யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன்மேலுங் குடைத்தாடி யாடு வோமே . சிய படரை : தேவர் கோ அறியாத தேவ தேவன் - தேவர்கட்கு அரசனா இந்திரனும் அறியமாட்டாத மகாதேவனும் செழு பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் - செழுமைபொருந்திய உலகங்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் முத்தொழில் செய்கின்ற மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் - தன்னின் வேறாகிய பிரமன் திருமால் உருத்தி ரன் என்னும் மூவர்க்கும் தலைவனாய் நிலைபெற்ற முதவ்வனும் மூர்த்தி - அட்ட மூர்த்தியாயுள்ளவனும் முதாதை - பிரமன் திருமால் உருத்திரன் சதாசிவன் ஈசுவரன் என்பவர்களுக்குத் தந்தையாகிய சதாசிவமூர்த்திக்கும் தந்தையாயுள்ளவனும் மாது ஆளும் பாகத்து எந்தை - உமையம்மையார் டய தமதாக்கிக் கொண்ட இடப்பாகத்தையுடைய எங்கள் தந்தையும் யாவர் கோன்- எல்லார்க்கும் தலையனுமாகிய சிவபெருமான் வந்து என்னையும் ஆண்டு கொண்டான் - வலிய வந்து ஒன்றும் போதா நாயேனையும் ஆளா கக் கொண்டருளினான் ; நாம் ஆர்க்கும் குடி அல்லோம் - ஆதலால் இனி நாம் பிறரெவர்க்கும் அடிமை அவ்வோம் ; யாதும் அஞ்சோம் - எதற்கும் சிறிதும் அஞ்சுவோமல்லோம் . அவன் அடியார் அடியாரோடு மேவினோம் . அவ்விறைவனுடைய அடியார்க்கும் அடியாரோடும் சேர்ந்துள்ளோம் ; மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோம் - மேலும் மேலும் அவனது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித்திளைத்து ஆனந்தக் கூத்து ஆடுவோம் . தேவர்கட்கு அரசனாகிய இந்திரனும் அறியாத மகாதேவனும் கங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கின்ற மற்றைய பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூவர்க்கும் தலைவனாய் நிறை முதல்வனும் அட்டமூர்த்தியாயுள்ளவனும் முதாதையாயுள்ளவனும் உமையம்மையார் ஆளும் இடப்பாகத்தையுடைய எங்கள் தந்தையும் யாவார்க்கும் தலைவனு மாகிய சிவபெருமான் வலியவந்து என்னையும் ஆளாகக் கொண்டருளினான் . ஆதலால் இனி நாம் பிறர் எவர்க்கும் அடிமையல்லோம் ; யாதும் அஞ்சோம் அவ்விறைவனுடைய அடியார்க்கும் அடியாரோடும் சேர்ந்துள்ளோம் . மேலும் மேலும் அவனது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கித் தினைத்து ஆனந் தக்கூத்தாடுவோம் என்பதாம் . இறைவனது இறைமைக்குணத்தினைக் கூறத்தொடங்கிய அடிகள் முதலில் தேவர்கோ வறியாத தேவதேவன் ' என்றும் பின்னர் அவனில் திருச்சதகம் 247 மேம்பட்ட பிரம்மன் முதலிய மூவர்க்கும் தலைவனாய் உள்ளவன் என்றும் அட்ட மூர்த்தங்களையுடையவன் என்றும் கீழுள்ள பிரமன் முதலியோர்க்குத் தாதையாகிய சதாசிவமூர்த்திக்கும் தாதையுள்ளவன் என்றும் உமையம்மை யாளும் பாகத்தையுடையவன் என்றும் எங்கள் தந்தை என்றும் கூறி யருளி இவையெல்லாவற்றையும் சேர்த்து முடித்தற் பொருட்டு யாவர் கோள் ' என்றும் அருளிச் செய்தார் . தேவர்கோ - தேவர்கட்கு அரசனாகிய இந்திரன் . அவன் பசுபோத முனைப்பினால் இறைவனைக் காணமுடியாமையின் தேவர்கோ அறியாத்தேவ தேவன் ' என்றார் . தேவதேவன்- தேவர்க்குத் தேவன் . மகாதேவன் என்ற வாறு ஆகிமூர்த்திக் கரும்புரிந்தருளிய தேவதேவன் ' ' ( கீர்த்தி 122 ) தேவதேவன் மெய்ச் சேவகன் ' ( சென்னிப் 1 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . ' - மிகுதேவர்க்குந் தேவன் ' திருமந்திரம் 2030 . தேவன் என ஒருமையாற் கூறினார் தேவர்க்கும் மேலாகிய தேவன் ஈசன் ஒருவனேயாதலின் . பொழிகள் என்றது உலகங்களை பயந்து - பெற்று . நீண்ட தோளி னாய் நிற்பயந் தெடுத்த யான் ' ' ( கம்ப . மந்திரப் 63 ) என் புழியும் இப் பொருட்டாதல் காண்க . ஈண்டு படைத்து என்னும் பொருட்டாய் நின் றது . பயந்து காத்து அழிக்கும் ' என்புழி வினையெச்சங்கள் எச்சுப்பொருள் தாராமல் செவ்வெண் மாத்திரையே குறித்து நின்றன . சக்கரமும் கந் தித்துச் சுழலுமாப் போன் ' ' ( சிவஞானசித் குத் .10 செய்யுள் 6 ) என் . புழிப்போல மற்றைய என்பது தன்னின் வேறாகிய பிறிதுபொருளில் வந்தது . பிரமன் முதலியோரைக் கொண்டு படைத்தல் முதலிய தொழில் களைச் செய்விக்கும் பெருந்தலவன் இறைவனாதலின் ' மூவர்கோன் ' என்றார் . மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்ய . வாளா மேவண்ணல் ' எனப் பரஞ்சோதி திருவிளையாடற்புராணத்து ( கடவுள் வாழ்த்து 1 ) வருதலும் காண்க மூர்த்தி - அட்ட மூர்த்தி . அட்டமூர்த்தி யழகன் ( சென்னிப் 2 ) ' ' அட்டமூர்த்தியை மட்டவிழசோலை யாரூரானை ' ' ( தே.சும் . எனவும் . 50 : 2 ) எனவும் வருவன காண்க . அட்ட மூர்த்தம் நிலம் நீர் தீ வளி வான் உயிர் ஞாயிறு திங்கள் என்னும் எட்டுமாம் . அவற்றைத் தனது மூர்த்தமாகக் கொண்டு தான் மூர்த்திமானாய்ப் பவர் முதலிய எட்டுத் திருநாமங்களோடு விளங்குபவன் . 21 நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனாய மைந்தனோ டென்வகையாய்ப் புணர்ந்து கின்றான் என அடிகளும் அட்ட மூர்த்தியதாகிய வப்பரோ தே . 124 : 3 என அப்பரடிகளும் அருளியமையுங் காண்க . ( தோனோ 5 )