திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை திருவடியாகிய மலரை நின்தகூமேற் குடுகின்றாயுமில்லை; குட்டுகின்றதும் இலை - அவ்விறைவன் திருவடிக்கண் மலரைச் சூட்டுவதும் செய்கின் றாயில்வை. தேடுகின் றிலை-எவ்விறைவன் யாண்டு உள்ளான் என்று தேடுகின்றாயு மில்லை; தெருவுதொறு அவறிலை.தெருக்கள் தோறும் அவ்விறைவனைத் தேடி அலறுகின் ருயுமில்லை. நீ இவ்வாறு பிணம்போற் பயனற்றுக் கிடப்பின் செய்வது ஒன்று அறியேன் -உன்னோடு கூடிய யான் உய்தி அடைவதற்குச் செய்யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன். 250 துணையிலி பிணநெஞ்சே, கூத்துடையான் திருவடிக்கண் அன்பிலை; என்புருகிப் பாடுகின்றிலை: ஆடுகின்றிலை; பதைப்பதுஞ் செய்கிலை; பணி கிலை; இறைவன் பாதமலர்களை நின்தவைமேற் குடுகின் றாயுமில்லை; அவ் விறைவன் திருவடிக்கண் மலரைச் சூட்டுகின் றாயுமில்லை; அவ்விறைவனைத் தேடுகின்றாயுமில்லை; தெருக்கள்தோறும் அவ்விறைவனைத் தேடி அலறு கின்றாயுமில்லை ; இந்நிலையில் உன்னோடு கூடிய யான் உய்தியடையச் செய் யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன் என்பதாம். கூத்துடையான் - திருக்கூத்தையுடையவன்; சிவபெருமான். கழற்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. இறைவன் திரு வடிக்கண் அன்பின்மையாற் பாடுதலும் ஆடுதலும் செய்கின் றிலை; அதைப் பற்றிப் பதைப்பதுஞ் செய்கிலை என்றார். உருகி என்னும் செய் தென் எச்சத்தை செயவென் எச்சமாக்குக. அன்பின்மையால் பாடுவது செய்யாமையாலும் அதனால் என்புருகாமையாலும் அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை' என்றார். பாடுதங் நெகிழ்ச்சிக்கேதுவாதல். 'பாடி நைந்து நைந்துருகி" (சத 100) கண்ணுக்கினீயானைப் பாடிக் கசிந்துள்ளம் உள் நெருக்கு நின்றுருக' (திருவெம் 4) ''மாலுக்கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து'' (பொன்னுசல் பீ) என வருவனவற்றலுமறிக. அன்பின்மையும் பதைப்பின்மையும் மனத்தின் செயல்களாகும். பாடுத் லும் அலறுதலும் மொழியில் செயலாகும். என்புருகுதலும் ஆடலும் பணிதலும் பாதமலர் சூடுதலும் பாதத்திற்கு மலர் குட்டுதலும் தேடு தலும் மெய்யின் செயல்களாகும். ஆகவே மனமொழி மெய்கள் இறை வன் பணியில் நில்லாமையின் செய்வதொன்றறியன் என்றார். என்ற கருத்து மனமொழி மெய்கள் முற்கூறப்பட்ட இறைபணியில் நிற்றற்கு இறைவன் அருள்செய்ய வேண்டுமென்பதும், அதனால் உயிர் தூய்மையான நிலையடையவேண்டும் என்பதும் குறிப்பெச்சம். பதைத்தல்- துடித்தல். "பதையேன் மனமிக உருகேன்'' செத் 2. பாதமலர் சூடுகின்றிலை என்றது இறைவன் திருவடிமலரை நின்கிரசிற் சூடுகின் நிலை என்றவாறு, பாதமலர் சூட்டுகின்றதுமிலை என இயைத்து திருவடிக்கண் மலரைச் சாத்துகின்றாயுமில்லை என வுரைக்க, நெஞ்சே என விளித்துப் பாடுகினறிலை; ஆடுகின் றிக்; பணிகின்றிலை; குடுகின்றலை சூட்டுகின்றதுமிலை; தேடுகின்றிலை; அலறிலை என மொழிமெய்களின் திருச்சதகம் 251 செயல்களையும் அதன் செயல்களாகக் கூறியது மனநினைவின்படி மொழி யும் மெய்யும் தொழிற்படும் இயைபுபற்றியாகும். தேடுகின்றிலை என்றது இறைவன் யாண்டுள்ளான் அவனை யார் கண்டனர் என்று தேடுகின்றாயீல்லையென்றவாறு. 'தேடிற்றிலேன் சிவ னெவ்விடத்தான் எவர்கண்டனரென்று" (நீத்தல்45) அடிகள் பிறிதோரி டத்து அருளியவாருங் காண்க. தேடுதல் கடனாகுதல் "உள்ளுகித் தேடு. வேன்' (அம் t7) ''ஒருத்தனே யுன்னை ஓலமிட்டலறி யுலகெலாந் தேடி யுங் காணேன் " (அருட் 2) என வருவனவற்றாலுமறிக. தெருவுதொறு அலறிலை என்றது அன்பின்மையால் தெருவுதொறும் இறைவனைத் தேடி அலறுகின் றாயுயில்லை என்றவாறு. "மருளிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருக்கக் தெருவுதொறு மிகவளறிச் சிவபெருமானென்றேத்திஏசறவு 9. என்பதும் ஈண்டு அறியற்பாலது. துணையிலி நெஞ்சு என்றது உயிரா கிய எனக்குத் துணையாதல் இல்லையான நெஞ்சு என்றனாறு. பிணநெஞ்சு என்றார் ஆடுதல் பாடுதல் பதைத்தல் முதலிய செயல்களைச் செய்யாமல் உயிர் நீங்கிய உடல்போற் கிடத்தலின். லட் என்பது இதன்கண். ஆடல்பாடல் முதலிய அன்பின் செயல்கள் உயிரின் தூய்மைக்கு இறைவன் திருவருளாற் கிடைக்க வேண்டியன பெறப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 31. 16587 38. அறிவி லாத வெனைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல் நெறியே லாம்புல மாக்கிய எத்தையைப் பந்தனை யறுப்பானைப் பிறிவி லாதவீன் னருள்கள்பெற் றிருந்துமா குடுதி பிணதெஞ்சே இறியெலாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்களக் கெடுமாறே - ப-ரை: பிண நெஞ்சே - பிணம்போலப் பயனற்றுக் கிடக்கும் மனமே, அறிவு இலாத என்னை புகுந்து ஆண்டுகொண்டு-தன்னை அறியும் உண்மை யறிவு இல்லாத அடியேனை வலியவந்து ஆளாகக்கொண்டு, அறிவதை அருளி - தன்னை அறிதற்குக் கருவியாகிய அவ்வுண்மை யறிவைத் தந்தருளி, மேல் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை-மேலாகிய வீட்டிற்குரிய வழிகள் எல்லாவற்றையும் புலப்படச் செய்த எங்கள். தந்தையும், பக் தனை அறுப்பானை - பாசப்பிணிப்பினை ஒழிப்பவனுமாகிய இறைவனை, பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும்-எஞ்ஞான்றும் நீங்கு நவில்லாமைக்கு ஏதுவாகிய இனிய அருள் உதவிகளை எளிதாகப் பெற்றுக்கொண்டிருந் தும், மாருடுதி- தடுமாறுகின்றாய்; கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் - அத் தடுமாற்றத்தினால் பொய்ந்நெறிகளெல்லாம் மேற்பட என்னைக் கீழ்ப் படுத்திவிட்டார்; என்னை கெடுமாறு கெடுத்தாய்-அங்ஙனம் கீழ்ப்படுத்தமை யால் என்னைக் கெட்டுப்போமாறு கெடுத்துவிட்டாய்; உன் இயல்பினை என்னென்பேன்.
திருவாசக ஆராய்ச்சியுரை திருவடியாகிய மலரை நின்தகூமேற் குடுகின்றாயுமில்லை ; குட்டுகின்றதும் இலை - அவ்விறைவன் திருவடிக்கண் மலரைச் சூட்டுவதும் செய்கின் றாயில்வை . தேடுகின் றிலை - எவ்விறைவன் யாண்டு உள்ளான் என்று தேடுகின்றாயு மில்லை ; தெருவுதொறு அவறிலை.தெருக்கள் தோறும் அவ்விறைவனைத் தேடி அலறுகின் ருயுமில்லை . நீ இவ்வாறு பிணம்போற் பயனற்றுக் கிடப்பின் செய்வது ஒன்று அறியேன் -உன்னோடு கூடிய யான் உய்தி அடைவதற்குச் செய்யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன் . 250 துணையிலி பிணநெஞ்சே கூத்துடையான் திருவடிக்கண் அன்பிலை ; என்புருகிப் பாடுகின்றிலை : ஆடுகின்றிலை ; பதைப்பதுஞ் செய்கிலை ; பணி கிலை ; இறைவன் பாதமலர்களை நின்தவைமேற் குடுகின் றாயுமில்லை ; அவ் விறைவன் திருவடிக்கண் மலரைச் சூட்டுகின் றாயுமில்லை ; அவ்விறைவனைத் தேடுகின்றாயுமில்லை ; தெருக்கள்தோறும் அவ்விறைவனைத் தேடி அலறு கின்றாயுமில்லை ; இந்நிலையில் உன்னோடு கூடிய யான் உய்தியடையச் செய் யத்தக்கது ஒன்றையும் அறிகின்றிலேன் என்பதாம் . கூத்துடையான் - திருக்கூத்தையுடையவன் ; சிவபெருமான் . கழற்கு என்னும் நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது . இறைவன் திரு வடிக்கண் அன்பின்மையாற் பாடுதலும் ஆடுதலும் செய்கின் றிலை ; அதைப் பற்றிப் பதைப்பதுஞ் செய்கிலை என்றார் . உருகி என்னும் செய் தென் எச்சத்தை செயவென் எச்சமாக்குக . அன்பின்மையால் பாடுவது செய்யாமையாலும் அதனால் என்புருகாமையாலும் அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை ' என்றார் . பாடுதங் நெகிழ்ச்சிக்கேதுவாதல் . ' பாடி நைந்து நைந்துருகி ( சத 100 ) கண்ணுக்கினீயானைப் பாடிக் கசிந்துள்ளம் உள் நெருக்கு நின்றுருக ' ( திருவெம் 4 ) ' ' மாலுக்கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து ' ' ( பொன்னுசல் பீ ) என வருவனவற்றலுமறிக . அன்பின்மையும் பதைப்பின்மையும் மனத்தின் செயல்களாகும் . பாடுத் லும் அலறுதலும் மொழியில் செயலாகும் . என்புருகுதலும் ஆடலும் பணிதலும் பாதமலர் சூடுதலும் பாதத்திற்கு மலர் குட்டுதலும் தேடு தலும் மெய்யின் செயல்களாகும் . ஆகவே மனமொழி மெய்கள் இறை வன் பணியில் நில்லாமையின் செய்வதொன்றறியன் என்றார் . என்ற கருத்து மனமொழி மெய்கள் முற்கூறப்பட்ட இறைபணியில் நிற்றற்கு இறைவன் அருள்செய்ய வேண்டுமென்பதும் அதனால் உயிர் தூய்மையான நிலையடையவேண்டும் என்பதும் குறிப்பெச்சம் . பதைத்தல்- துடித்தல் . பதையேன் மனமிக உருகேன் ' ' செத் 2 . பாதமலர் சூடுகின்றிலை என்றது இறைவன் திருவடிமலரை நின்கிரசிற் சூடுகின் நிலை என்றவாறு பாதமலர் சூட்டுகின்றதுமிலை என இயைத்து திருவடிக்கண் மலரைச் சாத்துகின்றாயுமில்லை என வுரைக்க நெஞ்சே என விளித்துப் பாடுகினறிலை ; ஆடுகின் றிக் ; பணிகின்றிலை ; குடுகின்றலை சூட்டுகின்றதுமிலை ; தேடுகின்றிலை ; அலறிலை என மொழிமெய்களின் திருச்சதகம் 251 செயல்களையும் அதன் செயல்களாகக் கூறியது மனநினைவின்படி மொழி யும் மெய்யும் தொழிற்படும் இயைபுபற்றியாகும் . தேடுகின்றிலை என்றது இறைவன் யாண்டுள்ளான் அவனை யார் கண்டனர் என்று தேடுகின்றாயீல்லையென்றவாறு . ' தேடிற்றிலேன் சிவ னெவ்விடத்தான் எவர்கண்டனரென்று ( நீத்தல் 45 ) அடிகள் பிறிதோரி டத்து அருளியவாருங் காண்க . தேடுதல் கடனாகுதல் உள்ளுகித் தேடு . வேன் ' ( அம் t7 ) ' ' ஒருத்தனே யுன்னை ஓலமிட்டலறி யுலகெலாந் தேடி யுங் காணேன் ( அருட் 2 ) என வருவனவற்றாலுமறிக . தெருவுதொறு அலறிலை என்றது அன்பின்மையால் தெருவுதொறும் இறைவனைத் தேடி அலறுகின் றாயுயில்லை என்றவாறு . மருளிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருக்கக் தெருவுதொறு மிகவளறிச் சிவபெருமானென்றேத்திஏசறவு 9 . என்பதும் ஈண்டு அறியற்பாலது . துணையிலி நெஞ்சு என்றது உயிரா கிய எனக்குத் துணையாதல் இல்லையான நெஞ்சு என்றனாறு . பிணநெஞ்சு என்றார் ஆடுதல் பாடுதல் பதைத்தல் முதலிய செயல்களைச் செய்யாமல் உயிர் நீங்கிய உடல்போற் கிடத்தலின் . லட் என்பது இதன்கண் . ஆடல்பாடல் முதலிய அன்பின் செயல்கள் உயிரின் தூய்மைக்கு இறைவன் திருவருளாற் கிடைக்க வேண்டியன பெறப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 31 . 16587 38. அறிவி லாத வெனைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல் நெறியே லாம்புல மாக்கிய எத்தையைப் பந்தனை யறுப்பானைப் பிறிவி லாதவீன் னருள்கள்பெற் றிருந்துமா குடுதி பிணதெஞ்சே இறியெலாமிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாயென்களக் கெடுமாறே - - ரை : பிண நெஞ்சே - பிணம்போலப் பயனற்றுக் கிடக்கும் மனமே அறிவு இலாத என்னை புகுந்து ஆண்டுகொண்டு - தன்னை அறியும் உண்மை யறிவு இல்லாத அடியேனை வலியவந்து ஆளாகக்கொண்டு அறிவதை அருளி - தன்னை அறிதற்குக் கருவியாகிய அவ்வுண்மை யறிவைத் தந்தருளி மேல் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை - மேலாகிய வீட்டிற்குரிய வழிகள் எல்லாவற்றையும் புலப்படச் செய்த எங்கள் . தந்தையும் பக் தனை அறுப்பானை - பாசப்பிணிப்பினை ஒழிப்பவனுமாகிய இறைவனை பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் - எஞ்ஞான்றும் நீங்கு நவில்லாமைக்கு ஏதுவாகிய இனிய அருள் உதவிகளை எளிதாகப் பெற்றுக்கொண்டிருந் தும் மாருடுதி- தடுமாறுகின்றாய் ; கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் - அத் தடுமாற்றத்தினால் பொய்ந்நெறிகளெல்லாம் மேற்பட என்னைக் கீழ்ப் படுத்திவிட்டார் ; என்னை கெடுமாறு கெடுத்தாய் - அங்ஙனம் கீழ்ப்படுத்தமை யால் என்னைக் கெட்டுப்போமாறு கெடுத்துவிட்டாய் ; உன் இயல்பினை என்னென்பேன் .