திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

268 திருவாசக ஆராய்ச்சியுரை மாட்டாதவனாயிருக்கின்றேன்: திண் வரை உருள்கிலேன்- திண்ணிய கன்மலை உச்சியிலிருந்து உருண்டு வீழ்ந்து இறக்கமாட்டாதவனாயிருக்கின்றேன்; செழு கடல் புகுவேனே- மிக்கநீர் வளத்தினையுடைய கடலில் பாய்ந்து உயிரை விடுவேனோ? அதுவுஞ் செய்ய மாட்டாதவனுாயிருக்கின்றேன். அருட்செயவில் ஓய்வில்லா தன வும் உவமனில் இறந்தனவுமாகிய திரு வடிகளை எனக்குத் தந்தருளி, நாய்க்குலத்தினுங் கீழ்ப்பட்ட எனக்கு நல்ல அன்பு நெறியைக் காட்டித் தாயிடத் துண்டாகும் அருளினும் மேலா கிய இனிய அருளைச் செய்த என்தலைவனை நெடும் பொழுது காணப்பெற்றி லேன்; ஆயினும் தீயில் வீழ்கிலேன்: திண்வரைமேலிருந்து உருள்ேெலன்; செழுங்கடலிற் பாய்ந்து உயிரை விடவும் மாட்டாதளனாயிருக்கின்றேன் என்பதாம். ஓய்விலாதள தாள். உவமனிலிறந்தன தாள், ஓண்மலர்த்தாள் எனத் தனித்தனி இயைக்க ஓய்வு-செயல் ஒழிதல். திருவடிகள் உயிர்களுக்குச் செய்யும் அருளுதளியில் ஒழிவின் றியிருத்தலின் ஓப்விலாதன என்றார். உவமன் = உவமை. "உல்மன் இல்லாதனவாதலின் ' உவமனிபிறந்தன என்றார். "மிக்குவமன், மாறென்றிலாதன இன்னம்பரான்ற னிணையடியே" நாவு 101:4. "உவமனிலாதென... இன்னம்பரான் ற னிணையடியே"நாவு 101:10. எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. ஏன ஒண்மலர்த்தாள் - ஒள்ளிய மலர்போலுக் ககள்: "ஒன்மலரடியிணை "ஒண்மலரடி" (ஞான 201:9: 262:9) எனத் தேவசரத்து வருவன வுங் காண்க வர் என்றது தமரைமலரை. ''ஏரிக் கனகக் கமலமலரன்ன 2 து த ல் சேவடி" (தே43:2) எனச் சுத்நாமூர்த்தி சுவாமிகள் அருளியவாறும் காண்க. 'உவாளிவிறந்தன' எனக் கூறிய அடிான். 'ஒண்மலர்த்தாள்' உவமைபுணர்த்தக் கூறியது முன்னொடு பின் முரணாகாதோவெனின் உண்மையறிவும் பேரொளியும் பெருநள்மையும் உடைய எனப்பொருள் படத்தக்க ஒண்மை' என்னும் அடைமொறி கொடுத்திருத்தலானும், உலாத்தத் தாமரைமலர் அத்தன்மைகள் உடையதல்லாமையானும், அத் தன்மையுடைய தாமரை மலரே ஈண்டுத் திருவடிகளுக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கலின் முரணாகாதென்க. "ஒப்பிலாதன வுவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்தப்பன் "" (அதிசயப் I) என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க. *நன்மையு மிகுதியும் அறிவு மொழுங்கும், ஒன்மை யென்னுஞ் சொல்லிற் சூரிய" திவாகசம் (பண்புபற்றிய); - அழகு நன்றும் அறிவும் ஒண்மை" பிங்கலந்தை 10 : 210. திருச்சதகம் 269 ஆகிய-உண்டாகிய. "போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி" பெருங் (3) 7:2. நாயிவாகிய குவம்-நாயினிடத்துளதாகிய குவம்; என்றது நாய்க் குலம் என்றவாது. நன்னெறி காட்டுதற்கு ஒரு சிறிதும் தகுதியில்லாத கடையேன் என்பார் 'நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை' என்றார். என்னை என்பதில் இரண்டாவது நான்காவகன் பொருட்கண் வந்தது. நன்னெறி காட்டுதல் - பேரின் பமயமாகிய வீடு அடைதற்குரிய நல்ல நெறியாகிய அன்பு நெறியை உபதேசத்தால் விளங்க வைத்தல். இறைவன் நன்னெறியாட்டியமை, மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன் ஞால மதனிடை வந்தழிந்து நன்னெறி காட்டி." திருவார்த்தை 2 என அடிகள் பிறாண்டு அருளியமையாலும் அறிக. தாயில் என்னும் ஐந்தாம் வேற்றுமையை உறழ்பொருளில் வந்ததா கக் கொண்டு தாயிவாகிய இன்னருள் புரிந்த என்பதற்கு தாயிடத்துண் டாகிய அருளினும் மேலாகிய இனிய அருளைச் செய்த எனவுரைக்க "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே " சிவபுரா 01. ''பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து " பிடித்த 9. என அடிகளும், " பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே" என அப்ப ரடிகளும் (தே. 251: 0) அருளியவாறுங் காண்க. என் தலைவன் என்றது " என் சிவவோகக்கோன் '' (சதகம் 38) என் பது போல ஆண்டான் அடிமையுரிமை பற்றியாகும். நனிகாலோன் என் பதில் நனி என்பது காலபீட்சியைக் குறித்தது. எனவே நெடுங்காலம் காணப்பெற்றிலேன் என்றவாறு. காணப்பெருமை. சந் நாயி னே னை நலமலி தில்லையுட் கோல மார்தரு பொதவினில் வருகென ஏல வென்னை யீங்கொழித் தருவி" கீர்த்தித் 121-3, என்று அருளிச் செய்து இறைவன் ஈண்டிய அடியவரோடும் உடன் மறைக் தமை பற்றியாகும். 1. அங்க ணிவ்வா றறைந்திடுங் காலையப் பொங்கு ஞானப் புதல்வர்க டம்மொடு மங்கை நாயகன் மாணிக்க வாசக விங்கு சில்லென் றியம்பி மறைந்தனன்' ஞானோ 54. என நம்பி திருவிளையாடற் புராணம் கூறுதலுங் காண்க.
268 திருவாசக ஆராய்ச்சியுரை மாட்டாதவனாயிருக்கின்றேன் : திண் வரை உருள்கிலேன்- திண்ணிய கன்மலை உச்சியிலிருந்து உருண்டு வீழ்ந்து இறக்கமாட்டாதவனாயிருக்கின்றேன் ; செழு கடல் புகுவேனே- மிக்கநீர் வளத்தினையுடைய கடலில் பாய்ந்து உயிரை விடுவேனோ ? அதுவுஞ் செய்ய மாட்டாதவனுாயிருக்கின்றேன் . அருட்செயவில் ஓய்வில்லா தன வும் உவமனில் இறந்தனவுமாகிய திரு வடிகளை எனக்குத் தந்தருளி நாய்க்குலத்தினுங் கீழ்ப்பட்ட எனக்கு நல்ல அன்பு நெறியைக் காட்டித் தாயிடத் துண்டாகும் அருளினும் மேலா கிய இனிய அருளைச் செய்த என்தலைவனை நெடும் பொழுது காணப்பெற்றி லேன் ; ஆயினும் தீயில் வீழ்கிலேன் : திண்வரைமேலிருந்து உருள்ேெலன் ; செழுங்கடலிற் பாய்ந்து உயிரை விடவும் மாட்டாதளனாயிருக்கின்றேன் என்பதாம் . ஓய்விலாதள தாள் . உவமனிலிறந்தன தாள் ஓண்மலர்த்தாள் எனத் தனித்தனி இயைக்க ஓய்வு - செயல் ஒழிதல் . திருவடிகள் உயிர்களுக்குச் செய்யும் அருளுதளியில் ஒழிவின் றியிருத்தலின் ஓப்விலாதன என்றார் . உவமன் = உவமை . உல்மன் இல்லாதனவாதலின் ' உவமனிபிறந்தன என்றார் . மிக்குவமன் மாறென்றிலாதன இன்னம்பரான்ற னிணையடியே நாவு 101 : 4 . உவமனிலாதென ... இன்னம்பரான் னிணையடியே நாவு 101 : 10 . எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . ஏன ஒண்மலர்த்தாள் - ஒள்ளிய மலர்போலுக் ககள் : ஒன்மலரடியிணை ஒண்மலரடி ( ஞான 201 : 9 : 262 : 9 ) எனத் தேவசரத்து வருவன வுங் காண்க வர் என்றது தமரைமலரை . ' ' ஏரிக் கனகக் கமலமலரன்ன 2 து ல் சேவடி ( தே 43 : 2 ) எனச் சுத்நாமூர்த்தி சுவாமிகள் அருளியவாறும் காண்க . ' உவாளிவிறந்தன ' எனக் கூறிய அடிான் . ' ஒண்மலர்த்தாள் ' உவமைபுணர்த்தக் கூறியது முன்னொடு பின் முரணாகாதோவெனின் உண்மையறிவும் பேரொளியும் பெருநள்மையும் உடைய எனப்பொருள் படத்தக்க ஒண்மை ' என்னும் அடைமொறி கொடுத்திருத்தலானும் உலாத்தத் தாமரைமலர் அத்தன்மைகள் உடையதல்லாமையானும் அத் தன்மையுடைய தாமரை மலரே ஈண்டுத் திருவடிகளுக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கலின் முரணாகாதென்க . ஒப்பிலாதன வுவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்தப்பன் ( அதிசயப் I ) என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க . * நன்மையு மிகுதியும் அறிவு மொழுங்கும் ஒன்மை யென்னுஞ் சொல்லிற் சூரிய திவாகசம் ( பண்புபற்றிய ) ; - அழகு நன்றும் அறிவும் ஒண்மை பிங்கலந்தை 10 : 210 . திருச்சதகம் 269 ஆகிய - உண்டாகிய . போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி பெருங் ( 3 ) 7 : 2 . நாயிவாகிய குவம் - நாயினிடத்துளதாகிய குவம் ; என்றது நாய்க் குலம் என்றவாது . நன்னெறி காட்டுதற்கு ஒரு சிறிதும் தகுதியில்லாத கடையேன் என்பார் ' நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை ' என்றார் . என்னை என்பதில் இரண்டாவது நான்காவகன் பொருட்கண் வந்தது . நன்னெறி காட்டுதல் - பேரின் பமயமாகிய வீடு அடைதற்குரிய நல்ல நெறியாகிய அன்பு நெறியை உபதேசத்தால் விளங்க வைத்தல் . இறைவன் நன்னெறியாட்டியமை மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன் ஞால மதனிடை வந்தழிந்து நன்னெறி காட்டி . திருவார்த்தை 2 என அடிகள் பிறாண்டு அருளியமையாலும் அறிக . தாயில் என்னும் ஐந்தாம் வேற்றுமையை உறழ்பொருளில் வந்ததா கக் கொண்டு தாயிவாகிய இன்னருள் புரிந்த என்பதற்கு தாயிடத்துண் டாகிய அருளினும் மேலாகிய இனிய அருளைச் செய்த எனவுரைக்க தாயிற் சிறந்த தயாவான தத்துவனே சிவபுரா 01 . ' ' பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து பிடித்த 9 . என அடிகளும் பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே என அப்ப ரடிகளும் ( தே . 251 : 0 ) அருளியவாறுங் காண்க . என் தலைவன் என்றது என் சிவவோகக்கோன் ' ' ( சதகம் 38 ) என் பது போல ஆண்டான் அடிமையுரிமை பற்றியாகும் . நனிகாலோன் என் பதில் நனி என்பது காலபீட்சியைக் குறித்தது . எனவே நெடுங்காலம் காணப்பெற்றிலேன் என்றவாறு . காணப்பெருமை . சந் நாயி னே னை நலமலி தில்லையுட் கோல மார்தரு பொதவினில் வருகென ஏல வென்னை யீங்கொழித் தருவி கீர்த்தித் 121-3 என்று அருளிச் செய்து இறைவன் ஈண்டிய அடியவரோடும் உடன் மறைக் தமை பற்றியாகும் . 1. அங்க ணிவ்வா றறைந்திடுங் காலையப் பொங்கு ஞானப் புதல்வர்க டம்மொடு மங்கை நாயகன் மாணிக்க வாசக விங்கு சில்லென் றியம்பி மறைந்தனன் ' ஞானோ 54 . என நம்பி திருவிளையாடற் புராணம் கூறுதலுங் காண்க .