திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

278 திருவாசக ஆராய்ச்சியுரை வந்துபோதல் - தோன்றி ஒடுங்குதல். காலம் காலதத்துவம். அது, அதனை இயக்குகின்ற இறைவனை உணர்த்தியது. இறைவன் அருட்டிருமேனி கொண்டு ஆட்கொண்டருளி மறைந்தமையின் உனை என்று கொல் காண்பது என்பது ஆராமை மிகுதியால் அருளியதாகும். SOM இதன்கண், உனை என்று கொல் காண்பதே என்றதனால் கைம்மாறு கொடுக்க முடியாது வருந்துகலும் புலப்படுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் புவப்படுமாறு காண்க. 48. காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப்பொரு ளேயிங்கொர் பார்ப்பென பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் மாற்றி யேன்புலன் போற்றியே. ப-ரை: காணல் ஆம்பரமே நின் அருளாற் காண்டற்குரியதாகிய மேலாகிய பொருளே, கட்கு இறந்தது ஓர் வாள் நிலா பொருனே-கண் ஒளிக்கு அடங்காதத கிய ஒப்பற்ற பேரொளிப் பொருளே, பாணனேன். வீணனாகிய யான் புலன் போற்றி-ஐர்புல இன்பங்கள் என்னைப்பற்றது பாதுகாத்து, இங்கு ஓர் பார்ப்பு என - இவ்வுலகத்தே குடம்பை தனித் தொழியப் பறந்து செல்லும் ஒரு பறவைக் குஞ்சுபோல, படிறு ஆக் கையை விட்டு - பொய்யாகிய இவ்வுடம்பை நிக்கிவிட்டு உன்னை பூணும் ஆறு அறியேன் - உன்னைப் பொருந்தும் வழியை அறியாதவனாயினேன். கண் நின் அருளாற் காண்டற்குரியதாகிய மேலான பொருளே, ஒளிக்கு அடங்காததாகிய ஒப்பற்ற பேரொளிப் பொருளே. பாணனேன் ஐம்புல வின் பங்கள் என்னைப் பற்றது பாதுகாத்து இங்கு ஓர் பார்ப் பெனப் பொய்யாகிய இவ்வுடம்பை நீக்கிவிட்டு உன்னைப் பொருந்தும் வழியை அறியாதவனாயினேன் என்பதாம். எல்லாப் பொருட்கும் அப்பாலாய் இறைவனது அருட்குருமேனியை அவனருளாலே தாம் கண்டமைபற்றிக் 'காணலாம் பரமே என்றார். பரம் - எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன்; திருக்கோவை 251 உரை. "அவனருளே கண்ணாகக் காணினல்லால்' (நாவு 311:9) எனத் தேவா ரத்து வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. வாள் நிலா-ஒருபொருட் பன்மொழி; பேரொளியைக் குறித்தது. பேரொளியையுடைய பொருளை அற்ப ஒளியையுடைய கண் காணமாட்டாது தம் ஒளி மழுங்குதல் பற்றிக் கட்கிறந்ததோர் வாணிலாப் பொருளே' என்றார். இங்கு - இந்நிலவுலகத்து. இங்கு பூணுமாறறியேன் என இயையும். பார்ப்பு - பறவைக்குஞ்சு. "அவற்றுட், பார்ப்பும் பிள்னையும் பறப்பவற் றிளமை" என்பது தொல்காப்பியம் (மரபு 4). பார்ப்பென என்றது தனக்காதாரமாயிருந்த முட்டையோட்டினை விடுத்துச் செல்லும் குஞ்சு திருச்சதகம் 279 போல என்றவாறு. உடம்பினுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகா மற் போதலின் பார்ப்பு உயிர்க்குவமையாயிற்று பார்ப்பென ஆக்கையை விட்டு என இயையும். பறவைக் குஞ்சைக் கூறினார் பறந்துபோதற் றொழிலான் உயிரோடொப்புமையெய்துவது அதுவேயாகலின், உயர வாணன் பாழ்நன் என்பது பாணன் என மரீ இயிற்று.வாழ்நன், என்றாயது போல. பாணன்-வீணன், இறைவனைப் பொருந்து வழியை அறியாது வீணே இருத்தல்பற்றி அடிகள் தம்மைப் 'பாணன்' என்றார். படிறு-பொய்; என்றது நிலையின்மையை. ஆக்கை-என்பு நரம்பு முதலிய வற்றால் கட்டப்பட்டது. பூணுதல் - பொருந்துதல். பூணுமாறு என்பதற்கு உன் திருவடியைப் பொருந்துமாறு எனினுமமையும்.ஆக்கையை விட்டுப் பூணுாறு அறியேன் என்பதற்கு ஆக்கையை விடுதற்கும் உன்னைப் பொருந்துவதற்கும் வழியை அறியேன் என்பது கருத்தாகக் கொள்க, "மண்மேல் யாக்கை விடுமாறும், வந்துன் கழற்கே புகுமாறும்'' (குழைத்9) '' அனை என வருதல் ஈண்டறியற்பாலது. போற்றுதல்-பாதுகாத்தல். யவை போற்றி நினைஇயன நாடிக்காண் '' (கவி 15:23) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. புலன் போற்றுதல்-ஐம்புல இன்பங்கள் தம்மைப் பற்றாது பாதுகாத்தல். இறைவனை அடைதற்குப் புலன் போற்றுதல் இன்றியமையாததாகலின் 'புலன்போற்றி' என்றார். புலன்போற்றிப் பூணுமாறு என இயையும். இதன்கண், தம்மை ஆட்கொண்டருளிய இறைவனுக்குக் கைம்மாறு கொடுக்கும் நெறியின்றி வருந்தும் அடிகள் பாணனேன் படிற்றாக்கையை விட்டு உனைப்பூணுமாற்றினையாவது அறியாதவனாயினேன் என வருந்திக் கூறுதலால் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 49. போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்துநின் ஏற்று றாற்றல் மிக்கவன் பாலழைக் கின்றிலேன் வந்தெதிர் தாமரைத் தாளுறும் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. படரை: போற்றி என்றும்.நின் அருட்குருமேனியைக் காணப் பெருாதயான் காத்தருள்க என்று வேண்டுதல் செய்தும், புரண்டும்-அங் கப்பிரதட்சணம் பண்ணியும், புகழ்ந்தும்-நின் பொய்யில் புகழைப் புகழ்ந்து பாடியும், நின்று - இந்நிலையில் அமைந்து, ஆற்றல் மிக்க அன்பால் அழைக் இன்றிலேன் - உறுதிமிக்க மெய்யன்பினால் அழைத்தலும் செய்கின்றிலேன்; என் கொள்கை- இவ்வா றிருக்கின்ற எனது கொள்கை, எதிர் ஏற்றுவந்து- முன்னிகூயில் எதிர்த்து வந்து, தாமரை தாள் உறும் கூற்றம் அன்னது ஓர் கொள்கை -நின் தாமரைமலர் போன்ற திருவடியின் உதையினைப் பெற்ற கூற்றுவனது கொள்கையை ஒத்ததாகிய ஒருவகைக் கொள்கையே யாம்.
278 திருவாசக ஆராய்ச்சியுரை வந்துபோதல் - தோன்றி ஒடுங்குதல் . காலம் காலதத்துவம் . அது அதனை இயக்குகின்ற இறைவனை உணர்த்தியது . இறைவன் அருட்டிருமேனி கொண்டு ஆட்கொண்டருளி மறைந்தமையின் உனை என்று கொல் காண்பது என்பது ஆராமை மிகுதியால் அருளியதாகும் . SOM இதன்கண் உனை என்று கொல் காண்பதே என்றதனால் கைம்மாறு கொடுக்க முடியாது வருந்துகலும் புலப்படுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் புவப்படுமாறு காண்க . 48. காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப்பொரு ளேயிங்கொர் பார்ப்பென பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் மாற்றி யேன்புலன் போற்றியே . - ரை : காணல் ஆம்பரமே நின் அருளாற் காண்டற்குரியதாகிய மேலாகிய பொருளே கட்கு இறந்தது ஓர் வாள் நிலா பொருனே - கண் ஒளிக்கு அடங்காதத கிய ஒப்பற்ற பேரொளிப் பொருளே பாணனேன் . வீணனாகிய யான் புலன் போற்றி - ஐர்புல இன்பங்கள் என்னைப்பற்றது பாதுகாத்து இங்கு ஓர் பார்ப்பு என - இவ்வுலகத்தே குடம்பை தனித் தொழியப் பறந்து செல்லும் ஒரு பறவைக் குஞ்சுபோல படிறு ஆக் கையை விட்டு - பொய்யாகிய இவ்வுடம்பை நிக்கிவிட்டு உன்னை பூணும் ஆறு அறியேன் - உன்னைப் பொருந்தும் வழியை அறியாதவனாயினேன் . கண் நின் அருளாற் காண்டற்குரியதாகிய மேலான பொருளே ஒளிக்கு அடங்காததாகிய ஒப்பற்ற பேரொளிப் பொருளே . பாணனேன் ஐம்புல வின் பங்கள் என்னைப் பற்றது பாதுகாத்து இங்கு ஓர் பார்ப் பெனப் பொய்யாகிய இவ்வுடம்பை நீக்கிவிட்டு உன்னைப் பொருந்தும் வழியை அறியாதவனாயினேன் என்பதாம் . எல்லாப் பொருட்கும் அப்பாலாய் இறைவனது அருட்குருமேனியை அவனருளாலே தாம் கண்டமைபற்றிக் ' காணலாம் பரமே என்றார் . பரம் - எல்லாப் பொருட்கும் அப்பாலாயவன் ; திருக்கோவை 251 உரை . அவனருளே கண்ணாகக் காணினல்லால் ' ( நாவு 311 : 9 ) எனத் தேவா ரத்து வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . வாள் நிலா - ஒருபொருட் பன்மொழி ; பேரொளியைக் குறித்தது . பேரொளியையுடைய பொருளை அற்ப ஒளியையுடைய கண் காணமாட்டாது தம் ஒளி மழுங்குதல் பற்றிக் கட்கிறந்ததோர் வாணிலாப் பொருளே ' என்றார் . இங்கு - இந்நிலவுலகத்து . இங்கு பூணுமாறறியேன் என இயையும் . பார்ப்பு - பறவைக்குஞ்சு . அவற்றுட் பார்ப்பும் பிள்னையும் பறப்பவற் றிளமை என்பது தொல்காப்பியம் ( மரபு 4 ) . பார்ப்பென என்றது தனக்காதாரமாயிருந்த முட்டையோட்டினை விடுத்துச் செல்லும் குஞ்சு திருச்சதகம் 279 போல என்றவாறு . உடம்பினுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகா மற் போதலின் பார்ப்பு உயிர்க்குவமையாயிற்று பார்ப்பென ஆக்கையை விட்டு என இயையும் . பறவைக் குஞ்சைக் கூறினார் பறந்துபோதற் றொழிலான் உயிரோடொப்புமையெய்துவது அதுவேயாகலின் உயர வாணன் பாழ்நன் என்பது பாணன் என மரீ இயிற்று.வாழ்நன் என்றாயது போல . பாணன் - வீணன் இறைவனைப் பொருந்து வழியை அறியாது வீணே இருத்தல்பற்றி அடிகள் தம்மைப் ' பாணன் ' என்றார் . படிறு - பொய் ; என்றது நிலையின்மையை . ஆக்கை - என்பு நரம்பு முதலிய வற்றால் கட்டப்பட்டது . பூணுதல் - பொருந்துதல் . பூணுமாறு என்பதற்கு உன் திருவடியைப் பொருந்துமாறு எனினுமமையும்.ஆக்கையை விட்டுப் பூணுாறு அறியேன் என்பதற்கு ஆக்கையை விடுதற்கும் உன்னைப் பொருந்துவதற்கும் வழியை அறியேன் என்பது கருத்தாகக் கொள்க மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் ' ' ( குழைத் 9 ) ' ' அனை என வருதல் ஈண்டறியற்பாலது . போற்றுதல் - பாதுகாத்தல் . யவை போற்றி நினைஇயன நாடிக்காண் ' ' ( கவி 15:23 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . புலன் போற்றுதல் - ஐம்புல இன்பங்கள் தம்மைப் பற்றாது பாதுகாத்தல் . இறைவனை அடைதற்குப் புலன் போற்றுதல் இன்றியமையாததாகலின் ' புலன்போற்றி ' என்றார் . புலன்போற்றிப் பூணுமாறு என இயையும் . இதன்கண் தம்மை ஆட்கொண்டருளிய இறைவனுக்குக் கைம்மாறு கொடுக்கும் நெறியின்றி வருந்தும் அடிகள் பாணனேன் படிற்றாக்கையை விட்டு உனைப்பூணுமாற்றினையாவது அறியாதவனாயினேன் என வருந்திக் கூறுதலால் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 49. போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்துநின் ஏற்று றாற்றல் மிக்கவன் பாலழைக் கின்றிலேன் வந்தெதிர் தாமரைத் தாளுறும் கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே . படரை : போற்றி என்றும்.நின் அருட்குருமேனியைக் காணப் பெருாதயான் காத்தருள்க என்று வேண்டுதல் செய்தும் புரண்டும் - அங் கப்பிரதட்சணம் பண்ணியும் புகழ்ந்தும் - நின் பொய்யில் புகழைப் புகழ்ந்து பாடியும் நின்று - இந்நிலையில் அமைந்து ஆற்றல் மிக்க அன்பால் அழைக் இன்றிலேன் - உறுதிமிக்க மெய்யன்பினால் அழைத்தலும் செய்கின்றிலேன் ; என் கொள்கை- இவ்வா றிருக்கின்ற எனது கொள்கை எதிர் ஏற்றுவந்து முன்னிகூயில் எதிர்த்து வந்து தாமரை தாள் உறும் கூற்றம் அன்னது ஓர் கொள்கை -நின் தாமரைமலர் போன்ற திருவடியின் உதையினைப் பெற்ற கூற்றுவனது கொள்கையை ஒத்ததாகிய ஒருவகைக் கொள்கையே யாம் .