திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

292 திருவாசக ஆராய்ச்சியுரை வெறியார் பாதம், மலர்ப்பாதம் எனத் தனி இயையும், வெறியார் பாதம்-நறுமணம் நிறைந்த பரதம். "நின்வெறி மலர்த்தான் " (நீத் 44) எனவும், "வெறியார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் சிவன்" (திருக் கோவை 286) எனவும் வருவனவுங் காண்க. மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற பாதம். தாமரைத்தாள்" சத 45. மெய்யர் பாதம் மேவக் கண்டும் என இயையும். '"அருள்பெற்ற, சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டும் " (சத 58) என வருதலும் காண்க. கேட்டிருந்தும் என்றது ஞான நன்னெறிக்கண் ஒழுகும் மெய்யன் பர்கள் மேன்மையான நம் மெய்ப்பதம் பெறுவர் என இறைவன் அறி வுறுத்தமையைக் குறிப்பதாகும். "புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும் போக்கி யவ்வறி வெனச்சிவ போதம் விரிந்து தோன்றுநெஞ் சுடையவித் தகரே மேன்மை யானநம் மெய்ப்பதம் பெறுவார்'" திருப்பெருந் 72. எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலும் காண்க. இருப்பதானேன் என்றது நின்திருவடிப்பேற்றைப் பெறமாட்டாது இவ்வுலகில் இருப்பது உடலை ஓம்புதற் பொருட்டு உண்பதற்கும் உடுப் பதற்குமாகவுமே அமைகின்றது என அடிகள் இரங்கிக் கூறியவாறு. போரேறே என இறைவனை விழித்தது, இறைவன் பொறிவாயில்த ளாகிய ஐந்து யானைகளை அவித்தவனாதல் பற்றியாகும். அங்ஙனம் கூறுங் தால் பொறிவாயில்கள் இறைவனைத் தாக்க அவற்றை ஒருபாயத்தால் அவித்தான் என்னும் பொருளதாகதோவெனின் இயல்பாகவே பொறி வாயில்களின் தாக்குதல்களை நீக்கிய இறைவனைப் 'பொறிவாயிலைந்தவித் தரன்" (குறள் ) எனக் கூறியது போன்ற ஒருபசார வழக்காகும். "உறு பொறி காய்ந்திசை மாதவனே " (ஞான் 371: 5) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. இனி, போரேறே என்பதற்கு, அந்தமிலின்பத் தழி வில் வீடாகிய பரமுத்தியை அளிக்கும் செயலில் மற்றைய எத்தேவர்க ளுக்கும் இல்லாத ஆற்றலுடையான் இறைவனாதல் பற்றியும், தம்மை வடையும் பக்குவரன்மாக்களை ஆட்கொள்ளும் போது அவைகளை மேற் குதியடையவொட்டாது தடுக்கும் பாசபந்தங்களாகிய பகைகளை அறுக்கும் போரில் அரியேறு போன்றவனாதல் பற்றியும் எனினுமாம். கருத்திற்கு அ.துகூலமாக "நின் அவர்ந்தமெய்க் கருணையும் நீயும். அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் " (திருப்பள்ளி 10) ஏன அடிகள் அருளியிருத்தலுங் காண்க. இறைவனைப் பேரேது என்று அடிகள் பிறண்டும் கூறுதலை, "திண்போர் விடையான் சிவபுரத் தார் பேரேறு என இத்திருவாசகத்தும் (பூவல்லி 18) அப்பரடிகள் கூறுதலை, 'கருங்கைக் களிற்றுரிவை கதறப்போர்த்த, போரேறே" (813:5) எனத் தேவாரத்தும் காண்க, " 293 திருச்சதகம் இதன்கண், உண்டுடுத்திங்கிருப்பதானேன் அதனாற் செய்வதறியாச் சிறுநாயேன் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்குரியவனாகின் றேன்; இது தகுமோ எனக் கூறுமுகத்தால் அதுபோகசுத்தி என்னும் ஆரும்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 52. FRE 57. போரே றேநின் பொன்னகர்வாய் நீபோத் தருளி யிருள் நீக்கி வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே முயிங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே. ப-ரை : போர் ஏறே-உயிர்களின் மலபந்தங்களை நீக்கும் போரில் அரியேறு போன்றவனே. நின் பொன் நகர் வாய் - நினது பொன்மயமான சிவபுரத்திகணுள்ள திருக்கோயிலினின்றும், வார் ஏற்று இள மெல் முலையா ளொடு நீ உடன் போந்தருளி-கச்சு அணிந்த இளமையும் மென்மையும் பொருந்திய தனங்களையுடைய அம்மையாரொடும் நீ ஓருங்கு புறப்பட்டருளி, வந்து இருள் நீக்கி அருள-இந்நிலவுலகின்கண் வந்து ஆணவமல இருளின் ஆற்றலைக்கெடுத்து அருள்புரிய, அருள்பெற்ற சீர் ஏறு அடியார்-அத்திரு வருளைப் பெற்ற சிறப்புமிக்க மெய்யடியார்கள். நின் பாதம் சேர கண்டும்- நின் திருவடிகளை அடைய நேரே பார்த்திருந்தும், கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ-யானும் அதனைப் பெறமாட்டாது கண்கெட்ட குருட்டு ஆண் ஊர்ப்பன்றி போலாக இவ்வுலகில் அலைந்து திரிவேனோ? கொடி யேன் உயிர்தான் உலவாதே-கொடிய பிராரத்தவினையையுடைய என் உயிர் ஒழிக்கின் றிலதே; யாது செய்வேன். பேரேறே, நின் பொன்னகரினின்றும் உமையம்மையாளொடும் நீ ஒருங்கு புறப்பட்டருளி இந்நிலவுலகின்கண் வந்து இருள் நீக்கி அருவ அத்திருவருளைப் பெற்ற சீரேறு அடியார்கள் நின்திருவடிகளை அடையக் கண்டிருந்தும் யானோ அதனைப் பெறமாட்டாது கண்கெட்ட ஊசேருய் இவ்வுலகில் அலைந்து திரிவேனோ? கொடிய வினையையுடைய என் உயிர் ஒழிக்கின் றிலதே. யாது செய்வேன் என்பதாம். புகு பொன்னகர்- சிவபுரத்தின்கணுள்ள செம்பொற்றிருக்கோயில். வதாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போந்த" (சத 38) என அந்தமையுங் காண்க. பொன்னகர்லாய் என்னும் ஏழாவது ஐந்தரவதன் பொருட்கண் வந்தது. இனமைச் செவ்வி குன்றது என்றுங் கன்னியாய் இருப்பவளாதலின் அம்மையை, 'வாரே றினமென் முலையாரொடு" என்ற ருளினார். மூலையாளோடு நீ உடன் போந்தருளி வந்து இருள் நீக்கி என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. இறைவன் மெய்யன்பர்களுக்கு அருள் செய்யும் சய்யும் பொருட்டு அம்மையொடு போந்தருவான் என்பது, "தேவியும் தானும்வந் தெம்மையாள" திருப்பொற் 2. ''மருவார் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட * கோத் 14.
292 திருவாசக ஆராய்ச்சியுரை வெறியார் பாதம் மலர்ப்பாதம் எனத் தனி இயையும் வெறியார் பாதம் - நறுமணம் நிறைந்த பரதம் . நின்வெறி மலர்த்தான் ( நீத் 44 ) எனவும் வெறியார் கழல் வீழ்சடைத் தீவண்ணன் சிவன் ( திருக் கோவை 286 ) எனவும் வருவனவுங் காண்க . மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற பாதம் . தாமரைத்தாள் சத 45. மெய்யர் பாதம் மேவக் கண்டும் என இயையும் . ' அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டும் ( சத 58 ) என வருதலும் காண்க . கேட்டிருந்தும் என்றது ஞான நன்னெறிக்கண் ஒழுகும் மெய்யன் பர்கள் மேன்மையான நம் மெய்ப்பதம் பெறுவர் என இறைவன் அறி வுறுத்தமையைக் குறிப்பதாகும் . புரிந்து போந்துள சிற்றறி வனைத்தும் போக்கி யவ்வறி வெனச்சிவ போதம் விரிந்து தோன்றுநெஞ் சுடையவித் தகரே மேன்மை யானநம் மெய்ப்பதம் பெறுவார் ' திருப்பெருந் 72 . எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலும் காண்க . இருப்பதானேன் என்றது நின்திருவடிப்பேற்றைப் பெறமாட்டாது இவ்வுலகில் இருப்பது உடலை ஓம்புதற் பொருட்டு உண்பதற்கும் உடுப் பதற்குமாகவுமே அமைகின்றது என அடிகள் இரங்கிக் கூறியவாறு . போரேறே என இறைவனை விழித்தது இறைவன் பொறிவாயில்த ளாகிய ஐந்து யானைகளை அவித்தவனாதல் பற்றியாகும் . அங்ஙனம் கூறுங் தால் பொறிவாயில்கள் இறைவனைத் தாக்க அவற்றை ஒருபாயத்தால் அவித்தான் என்னும் பொருளதாகதோவெனின் இயல்பாகவே பொறி வாயில்களின் தாக்குதல்களை நீக்கிய இறைவனைப் ' பொறிவாயிலைந்தவித் தரன் ( குறள் ) எனக் கூறியது போன்ற ஒருபசார வழக்காகும் . உறு பொறி காய்ந்திசை மாதவனே ( ஞான் 371 : 5 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . இனி போரேறே என்பதற்கு அந்தமிலின்பத் தழி வில் வீடாகிய பரமுத்தியை அளிக்கும் செயலில் மற்றைய எத்தேவர்க ளுக்கும் இல்லாத ஆற்றலுடையான் இறைவனாதல் பற்றியும் தம்மை வடையும் பக்குவரன்மாக்களை ஆட்கொள்ளும் போது அவைகளை மேற் குதியடையவொட்டாது தடுக்கும் பாசபந்தங்களாகிய பகைகளை அறுக்கும் போரில் அரியேறு போன்றவனாதல் பற்றியும் எனினுமாம் . கருத்திற்கு அ.துகூலமாக நின் அவர்ந்தமெய்க் கருணையும் நீயும் . அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் ( திருப்பள்ளி 10 ) ஏன அடிகள் அருளியிருத்தலுங் காண்க . இறைவனைப் பேரேது என்று அடிகள் பிறண்டும் கூறுதலை திண்போர் விடையான் சிவபுரத் தார் பேரேறு என இத்திருவாசகத்தும் ( பூவல்லி 18 ) அப்பரடிகள் கூறுதலை ' கருங்கைக் களிற்றுரிவை கதறப்போர்த்த போரேறே ( 813 : 5 ) எனத் தேவாரத்தும் காண்க 293 திருச்சதகம் இதன்கண் உண்டுடுத்திங்கிருப்பதானேன் அதனாற் செய்வதறியாச் சிறுநாயேன் பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்குரியவனாகின் றேன் ; இது தகுமோ எனக் கூறுமுகத்தால் அதுபோகசுத்தி என்னும் ஆரும்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 52 . FRE 57. போரே றேநின் பொன்னகர்வாய் நீபோத் தருளி யிருள் நீக்கி வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே முயிங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே . - ரை : போர் ஏறே - உயிர்களின் மலபந்தங்களை நீக்கும் போரில் அரியேறு போன்றவனே . நின் பொன் நகர் வாய் - நினது பொன்மயமான சிவபுரத்திகணுள்ள திருக்கோயிலினின்றும் வார் ஏற்று இள மெல் முலையா ளொடு நீ உடன் போந்தருளி - கச்சு அணிந்த இளமையும் மென்மையும் பொருந்திய தனங்களையுடைய அம்மையாரொடும் நீ ஓருங்கு புறப்பட்டருளி வந்து இருள் நீக்கி அருள - இந்நிலவுலகின்கண் வந்து ஆணவமல இருளின் ஆற்றலைக்கெடுத்து அருள்புரிய அருள்பெற்ற சீர் ஏறு அடியார் - அத்திரு வருளைப் பெற்ற சிறப்புமிக்க மெய்யடியார்கள் . நின் பாதம் சேர கண்டும் நின் திருவடிகளை அடைய நேரே பார்த்திருந்தும் கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல்வேனோ - யானும் அதனைப் பெறமாட்டாது கண்கெட்ட குருட்டு ஆண் ஊர்ப்பன்றி போலாக இவ்வுலகில் அலைந்து திரிவேனோ ? கொடி யேன் உயிர்தான் உலவாதே - கொடிய பிராரத்தவினையையுடைய என் உயிர் ஒழிக்கின் றிலதே ; யாது செய்வேன் . பேரேறே நின் பொன்னகரினின்றும் உமையம்மையாளொடும் நீ ஒருங்கு புறப்பட்டருளி இந்நிலவுலகின்கண் வந்து இருள் நீக்கி அருவ அத்திருவருளைப் பெற்ற சீரேறு அடியார்கள் நின்திருவடிகளை அடையக் கண்டிருந்தும் யானோ அதனைப் பெறமாட்டாது கண்கெட்ட ஊசேருய் இவ்வுலகில் அலைந்து திரிவேனோ ? கொடிய வினையையுடைய என் உயிர் ஒழிக்கின் றிலதே . யாது செய்வேன் என்பதாம் . புகு பொன்னகர்- சிவபுரத்தின்கணுள்ள செம்பொற்றிருக்கோயில் . வதாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போந்த ( சத 38 ) என அந்தமையுங் காண்க . பொன்னகர்லாய் என்னும் ஏழாவது ஐந்தரவதன் பொருட்கண் வந்தது . இனமைச் செவ்வி குன்றது என்றுங் கன்னியாய் இருப்பவளாதலின் அம்மையை ' வாரே றினமென் முலையாரொடு என்ற ருளினார் . மூலையாளோடு நீ உடன் போந்தருளி வந்து இருள் நீக்கி என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க . இறைவன் மெய்யன்பர்களுக்கு அருள் செய்யும் சய்யும் பொருட்டு அம்மையொடு போந்தருவான் என்பது தேவியும் தானும்வந் தெம்மையாள திருப்பொற் 2 . ' ' மருவார் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட * கோத் 14 .