திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

298 திருவாசக ஆராய்ச்சியுரை இது தகுமோ என்பார் 'உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூடப் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன்'' என்று அருளிச் செய் தா அடியேனையும் சுழல் கூடும் வண்ணம் அருள்செய்ய வேண்டும் என் பது குறிப்பு. இவ்வுடம்பு எடுத்ததன் பயன் இறைவன் திருவடியை அடைதலே யென்பது, படிறாயின சொல்லிப் பாமுட லோம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிது மெழுநெஞ்சமே யெரியாடி யெம்மான் கடருாயின நஞ்ச முண்ட பிரான் கழல்சேர்தல் கண்டா யுடறா னுள பயவை சொன்னே னிவ்வுலகி னுள்ளே" (பொன் வண்ணத் 13) எனப் பதினொராந் திருமுறையில் வருதலானுமறிக. இதன்கன், ஊனார் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன் என்பத னால் பிராரத்த வினையினால் உண்டாகும் அதுபோகங்களின் தீமையை நீக்கி அருளவேண்டுமென்பது பெறப்படுத்தலின் அதுபோகசுத்தி யென் னும் ஆறாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 55. 60. உடையா னேநின் றனையுள்கி யுள்ள முருகும் பெருங்காதல் உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயின் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்பதாக முடித்தாயே. ப-ரை: உடையானே - என்னை ஆளாகவுடையவனே, நின்தனை உள்தி - நின்னை நினைந்து, உள்ளம் உருகும் பெரு காதல் உடையார்-மனம் உருகுகின்ற பேரன்பினை உடையவர்கள், உடையாய் நின்பாதம் சேர கண்டு - தம்மை அடிமையாக உடையையாகிய நின் திருவடிகளை அடையக் கண்டு வைத்தும். இங்கு ஊர் நாயின் கடையானேன் - இவ்வுவகில் ஊரில் அன்பின்மையால் உள்ளம் உருகாதவனும், கல் ஆம் மனத்தேன் - கல்லைப் போன்ற மனத்தினையுடையவனும், கசியாதேன்-அதனால் மனம் நெகிழப் பெறாதவனுமாகிய யான், முடை ஆர் புழு கூடு இது காத்து - தீயநாற்றம் நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுடம்பைப் பாதுகாத்துக் கொண்டு, இங்கு இருப்பதாக முடித்தாயே- இந்நிலவுலகத்தில் இருக்க வேண்டியவனாக முடிவு செய்து வீட்டனையோ உடையவனே, நின்னை நினைந்து உள்ளமுருகும் பெருங்காதலுடைய வர்கள் தம்மை அடிமையாக உடையையாகிய நின்திருவடியை அடையக் கண்டும். இவ்வுலகில் ஊர்நாயினும் கடைப்பட்டவனும் அன்பின்மையால் உள்ள முருகாதவனும் மல்போன்ற மனத்திணையுடையவனும் அதனால் மனம் நெகிழப் பெறாதவனுமாகிய யான் முடையார் புழுக்கூடாகிய இவ்வுடம் திருச்சதகம் 299 பைப் பாதுகாத்துக்கொண்டு இங்கு இருக்கவேண்டியவனாக முடிவு செய்து விட்டனையோ? என்வினை இருந்தவாறென்னே என்பதாம். உள்குதல் - நினைத்தல். காதல்-அன்பு. உள்ளம் உள்குதற்கும் உருகு தற்கும் பெருங்காதல் ஏதுவாகும். பெருங்காதலுடையார் என்றது மெய் யன்பர்களை. உடையாய் நின்பரதம் என்றது அம்மெய்யன்பர்களை அடிமை யாக வுடையையாகிய நினது திருவடியென்றவாறு. ஈண்டு உடையாய் என்பது முன்னிலை வினையாலணையும் பெயர். கண்டும் என்புழி உம்மை தொக்குநின்றது, கண்டும் உருகாதேன் என இயையும். ஊர்நாய் - தன்னை வளர்ப்பவரின்மையால் ஊணுக்கும் உறைவிடத்துக் கும் ஊரில் அலைந்து திரியும் நாய். ஊர்நாயிற் கடையானேன் என்பது முதலாக அடிகள் தம்மைப்பற்றிக் கூறியன "பணியுமா மென்றும் பெருமை" (குறள் ) என்னும் முறைமைபற்றியனவாகும். கல்லா மனத் தேன் 'என்பதற்குத் தத்துவஞானத்தையுதவும் நூல்களைக் கற்றறியாத மனத்தையுடையேன் எனினுமாம். கசிதல்-உள்ளம் உருகுதற்கு முன்னிக ழும் நிகழ்ச்சி. ''கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகி (வாழாப்?) "கசிந்துருக வேண்டுவனே' (புலம் 3) "கசிந்துருகக் கேதங்கெடுத்தென்னை யாண்டருளும்'' வார்த்தை 9). எனினுமாம். முடை-புலால்நாற்றம் முடித்தாயே ஏ,வினாப்பொருட்டு. இதன்கண், கூடிது காத்திங்கிருப்பதாக முடித்தாயே என்றதனால் உடலோடு இருக்கும் காலத்துளவாகும் அதுபோகங்களால் தீங்குண்டா காதவாறு அவற்றை நீக்கியருளவேண்டுமென்பது பெறப்படுதலின் அது போகசுத்தியென்னும் ஆறாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு 56- காண்க 61. முடித்தவாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுந் துகிலிறையே சேரர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே. படரை: என் தனக்கு முடித்தவாறும் தக்கதே - எனக்குப் புழுக்கூடு இது காத்திங்கிருப்பதாக முடிபு செய்ததும் பொருந்துவதே. முன் அடி யாரைச் சோராமல் பிடித்தவாறும் தக்கதே-முன்னர் உன்னை நாடிய மெய்யடியாரைச் சோரம்போகாமல் நீ பிடித்துக் கொண்ட விதமும் தக் கதே. சோரனேன் - மாயாசத்தியால் கவரப்பட்டவனாகிய யான், இங்கு ஒருத்தி வாய் துடித்தவாறும் - இவ்வுலகத்திலுள்ள மாயையாகிய ஒருத்தி யின் வாய் இதழ் துடித்தவிதமும், துகில் இறையே சோர்ந்த வாறும்- அவள் அணிந்திருந்த ஆடை சிறிது வழுவிய விதமும், முகம் குறுவேர்
298 திருவாசக ஆராய்ச்சியுரை இது தகுமோ என்பார் ' உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின்கழல் கூடப் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன் ' ' என்று அருளிச் செய் தா அடியேனையும் சுழல் கூடும் வண்ணம் அருள்செய்ய வேண்டும் என் பது குறிப்பு . இவ்வுடம்பு எடுத்ததன் பயன் இறைவன் திருவடியை அடைதலே யென்பது படிறாயின சொல்லிப் பாமுட லோம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிது மெழுநெஞ்சமே யெரியாடி யெம்மான் கடருாயின நஞ்ச முண்ட பிரான் கழல்சேர்தல் கண்டா யுடறா னுள பயவை சொன்னே னிவ்வுலகி னுள்ளே ( பொன் வண்ணத் 13 ) எனப் பதினொராந் திருமுறையில் வருதலானுமறிக . இதன்கன் ஊனார் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன் என்பத னால் பிராரத்த வினையினால் உண்டாகும் அதுபோகங்களின் தீமையை நீக்கி அருளவேண்டுமென்பது பெறப்படுத்தலின் அதுபோகசுத்தி யென் னும் ஆறாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 55 . 60. உடையா னேநின் றனையுள்கி யுள்ள முருகும் பெருங்காதல் உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயின் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்பதாக முடித்தாயே . - ரை : உடையானே - என்னை ஆளாகவுடையவனே நின்தனை உள்தி - நின்னை நினைந்து உள்ளம் உருகும் பெரு காதல் உடையார் - மனம் உருகுகின்ற பேரன்பினை உடையவர்கள் உடையாய் நின்பாதம் சேர கண்டு - தம்மை அடிமையாக உடையையாகிய நின் திருவடிகளை அடையக் கண்டு வைத்தும் . இங்கு ஊர் நாயின் கடையானேன் - இவ்வுவகில் ஊரில் அன்பின்மையால் உள்ளம் உருகாதவனும் கல் ஆம் மனத்தேன் - கல்லைப் போன்ற மனத்தினையுடையவனும் கசியாதேன் - அதனால் மனம் நெகிழப் பெறாதவனுமாகிய யான் முடை ஆர் புழு கூடு இது காத்து - தீயநாற்றம் நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுடம்பைப் பாதுகாத்துக் கொண்டு இங்கு இருப்பதாக முடித்தாயே- இந்நிலவுலகத்தில் இருக்க வேண்டியவனாக முடிவு செய்து வீட்டனையோ உடையவனே நின்னை நினைந்து உள்ளமுருகும் பெருங்காதலுடைய வர்கள் தம்மை அடிமையாக உடையையாகிய நின்திருவடியை அடையக் கண்டும் . இவ்வுலகில் ஊர்நாயினும் கடைப்பட்டவனும் அன்பின்மையால் உள்ள முருகாதவனும் மல்போன்ற மனத்திணையுடையவனும் அதனால் மனம் நெகிழப் பெறாதவனுமாகிய யான் முடையார் புழுக்கூடாகிய இவ்வுடம் திருச்சதகம் 299 பைப் பாதுகாத்துக்கொண்டு இங்கு இருக்கவேண்டியவனாக முடிவு செய்து விட்டனையோ ? என்வினை இருந்தவாறென்னே என்பதாம் . உள்குதல் - நினைத்தல் . காதல் - அன்பு . உள்ளம் உள்குதற்கும் உருகு தற்கும் பெருங்காதல் ஏதுவாகும் . பெருங்காதலுடையார் என்றது மெய் யன்பர்களை . உடையாய் நின்பரதம் என்றது அம்மெய்யன்பர்களை அடிமை யாக வுடையையாகிய நினது திருவடியென்றவாறு . ஈண்டு உடையாய் என்பது முன்னிலை வினையாலணையும் பெயர் . கண்டும் என்புழி உம்மை தொக்குநின்றது கண்டும் உருகாதேன் என இயையும் . ஊர்நாய் - தன்னை வளர்ப்பவரின்மையால் ஊணுக்கும் உறைவிடத்துக் கும் ஊரில் அலைந்து திரியும் நாய் . ஊர்நாயிற் கடையானேன் என்பது முதலாக அடிகள் தம்மைப்பற்றிக் கூறியன பணியுமா மென்றும் பெருமை ( குறள் ) என்னும் முறைமைபற்றியனவாகும் . கல்லா மனத் தேன் ' என்பதற்குத் தத்துவஞானத்தையுதவும் நூல்களைக் கற்றறியாத மனத்தையுடையேன் எனினுமாம் . கசிதல் - உள்ளம் உருகுதற்கு முன்னிக ழும் நிகழ்ச்சி . ' ' கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகி ( வாழாப் ? ) கசிந்துருக வேண்டுவனே ' ( புலம் 3 ) கசிந்துருகக் கேதங்கெடுத்தென்னை யாண்டருளும் ' ' வார்த்தை 9 ) . எனினுமாம் . முடை - புலால்நாற்றம் முடித்தாயே வினாப்பொருட்டு . இதன்கண் கூடிது காத்திங்கிருப்பதாக முடித்தாயே என்றதனால் உடலோடு இருக்கும் காலத்துளவாகும் அதுபோகங்களால் தீங்குண்டா காதவாறு அவற்றை நீக்கியருளவேண்டுமென்பது பெறப்படுதலின் அது போகசுத்தியென்னும் ஆறாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு 56 காண்க 61 . முடித்தவாறும் என்றனக்கே தக்க தேமுன் அடியாரைப் பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் துடித்த வாறுந் துகிலிறையே சேரர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே . படரை : என் தனக்கு முடித்தவாறும் தக்கதே - எனக்குப் புழுக்கூடு இது காத்திங்கிருப்பதாக முடிபு செய்ததும் பொருந்துவதே . முன் அடி யாரைச் சோராமல் பிடித்தவாறும் தக்கதே - முன்னர் உன்னை நாடிய மெய்யடியாரைச் சோரம்போகாமல் நீ பிடித்துக் கொண்ட விதமும் தக் கதே . சோரனேன் - மாயாசத்தியால் கவரப்பட்டவனாகிய யான் இங்கு ஒருத்தி வாய் துடித்தவாறும் - இவ்வுலகத்திலுள்ள மாயையாகிய ஒருத்தி யின் வாய் இதழ் துடித்தவிதமும் துகில் இறையே சோர்ந்த வாறும் அவள் அணிந்திருந்த ஆடை சிறிது வழுவிய விதமும் முகம் குறுவேர்