திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

302 திருவாசக ஆராய்ச்சியுரை "பாவிப்பார் மனத்தூறுமத் தேனைக் கட்டியைக் கரும்பின் தெளிதன்னை" என்னும் திருவாக்குகளும் காண்க. தே.சுந்.59:10. இறைவன் பேரொளி யுருவினனாதலின் 'ஒளியை' என்றார். தெளிந் தார் என்றது இறைவனைப் பரம்பொருள் என ஐயந்திரிபறத் தெளிந்த மெய்யன்பர்களை. ஊன் என்றது ஊனுடலை உணர்த்தியது. ஊனை உருக் கும். என்றார். இறைவனருளால் உள்ளொளியாகிய ஞானம் பெருகுந் தோறும் ஊனுடல் சுருங்குதல் பற்றி. ''ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி" (பிடித்த 9, என மேல்வருதலுங் காண்க. உடையான் - ஆட் கொண்டவன். உம்பர் என்றது எல்லாவுலகங்களுக்கும் மேலாகிய சிவ புரத்தையுணர்த்தியது. வம்பனேன் -நிலையான அன்பில்லாத யான். வம்பனேன் வினைக்கிறுதியில்லையே" (சத 93) வம்பனேன் றன்னை யாண்டமா மணியே'' (வாழாப்2) என வருவன காண்க. வம்பு - நிலை யின்மை. வம்பு நிலையின்மை என்பது தொல்காப்பியம் (உரி 31) நான் நின் அடியேன் நீயென்னை ஆண்டாய் என்றால் சிரித்தேயரு ளாம் தன்மையென்றது, அடியனாதற்கும் ஆட்கொள்ளப்படுதற்கும் தகுதி யில்லாதவனாகிய யான் 'நின் அடியேன்' என்றும் 'நீ என்னை ஆண்டாய்' என்றும் கூறினால் அது இறைவன் நகைத்தேயருளலாம் தன்மைத்து என்ற வரறு. தான் என்னும் படர்க்கையொருமைப் பெயர் இறைவனை உணர்த்தி யது. உம்மை. இறந்தது தழீஇய எச்சவும்மை. சிரித்தே என்பதில் ஏகாரத்தைப் பிரித்து தன்மையே யாம் எனக் கூட்டுக. இதன்கண், என் தன்மை தானும் சிரித்து அருளலாம் தன்மையே யாம் என்றதனால் அங்ஙனம் இறைவன் சிரித்தருளுதலாகிய பேறுகிடைக் கப்பெறின் அதனால் என் உலக அனுபவங்கள் சுத்தியடையுமே என்னும் விழைவு புலப்படுதலின் அதுபோகசுத்தி யென்னும் ஆறாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 58. 03. தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ என்னை நோக்கு வார்யாரே யென்னான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி யெந்தாய் எங்குப் புகுவேனே. பரை+ தன்மை பிறரால் அறியாத தலைவா - நின் தன்மை பிறர் எவராலும் அறியமுடியாத இறைவனே, பொல்லா நாயான புன்மையேனை ஆண்டு- பொல்லாத நாய்போன்ற இழிவு,டையவனாகிய என்னை ஆட் கொண்டருளி ஐயா புறமே போக விடுவாயோ-ஐயனே என்னைப் புறத்தே செல்ல விடுவாயோ ? என்னை நோக்குவார் யாரே - அங்ஙனம் விடுவாயாயின் என்னை அருட்கண்ணாற் பார்த்தப் பாதுகாப்பவர் பிறர் திருச்சதகம் 303 எவர் உளர்? எம்பெருமாள் நான் என் செய்கேன் எம்பெருமானே நான் யாது செய்ய வல்லேன்? பொன்னே திகழும் திருமேனி எந்தாய் - பொன் போல விளங்கும் திருமேனியையுடைய எந்தையே! எங்கு புகுவேன்- நின்னிடத்தன்றி வேறு எவ்விடத்து அடைக்கலம் புகுவேன்? தன்மை பிறரால் அறியாத தலைவனே, நாய்போன்ற புன்மையை யுடையவனாகிய என்னை ஆட்கொண்டருளிப் புறத்தே செல்லவிடுவாயோ? அங்ஙனம் விடுவையாயின் என்னை நோக்குவார் பிறர் எவர் உளர்? எம்பெரு மானே ! நான் யாது செய்யவல்லேன்? பொன்னே திகழும் திருமேனி யையுடைய எந்தையே, நின்னிடத்தன்றி வேறு எவ்விடத்து அடைக்கலம் புகுவேன் என்பதாம். பிறர் எவராலும் அறியமுடியாத உண்மை இயல்புகளை இறைவன் உடையனாதல் பற்றித் 'தன்மை பிறரால் அறியாத தலைவா' என்றருளி னார். பிறரன்றி அவன்தானும் முழுவதும் அறியான் என்பது. ** தன் பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ' (சாழல் 19) என்ப தனால் விளங்கும். ஞானந் தானுரு வாகிய நாயக னியல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாலஃ தெளிதோ மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை" குரன் அமைச் 128 எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது. பொல்வாநாய் - தீங்குமிக்க நாய் நாயான-நாய்போன்ற. "நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனை " (அம்மானை 7) என வருதலுங் காண்க. புறமே போக விடுவாயோ என்றது நின் முன்னிலையிலன்றிப் புறத்தே போக விடுவாயோ என்றவாறு. ஓகாரம் - எதிர்மறை, விடுதல் நின் தகுதிக் குப் பொருந்தாது என்பது கருத்து. என்னை நோக்குவார் யாரே என்றது என்னை நோக்குவார் நின்னையன்றிப் பிறர் இல்லை என் றபடி.. மேனி. பொன்னே திகழுந் திருமேனி.பொன்னைப் போல விளங்குகின்ற திரு "பொன்னை யழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன்" (குயிற்7) "பொன்னேர் தரு திருமேனியனே " (தே.ஞான 160:1) " பொன்போல மிளிர்வதொர் மேனியீனீர்'' பொன்னொத்த மேனி' "பொன்போல் திருமேனி யுடையான் றன்னை' (தே நாவு.1:8; 81:9; 248:2) பொன்னார் மேனியனே" "பொன்செய்த மேனியினீர்" (தே.சுந்.24:1; 25:1) பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி" (பதினொராத்.பொன்வண்ணத் 1) என வருவன காண்க. பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் என்றது ஈண்டு ஞானாசாரியனது திருமேனியை நினைவு கூர்ந்து கூறியதாகும். எங்குப் புகுவேன் என்றது
302 திருவாசக ஆராய்ச்சியுரை பாவிப்பார் மனத்தூறுமத் தேனைக் கட்டியைக் கரும்பின் தெளிதன்னை என்னும் திருவாக்குகளும் காண்க . தே.சுந் .59 : 10 . இறைவன் பேரொளி யுருவினனாதலின் ' ஒளியை ' என்றார் . தெளிந் தார் என்றது இறைவனைப் பரம்பொருள் என ஐயந்திரிபறத் தெளிந்த மெய்யன்பர்களை . ஊன் என்றது ஊனுடலை உணர்த்தியது . ஊனை உருக் கும் . என்றார் . இறைவனருளால் உள்ளொளியாகிய ஞானம் பெருகுந் தோறும் ஊனுடல் சுருங்குதல் பற்றி . ' ' ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி ( பிடித்த 9 என மேல்வருதலுங் காண்க . உடையான் - ஆட் கொண்டவன் . உம்பர் என்றது எல்லாவுலகங்களுக்கும் மேலாகிய சிவ புரத்தையுணர்த்தியது . வம்பனேன் -நிலையான அன்பில்லாத யான் . வம்பனேன் வினைக்கிறுதியில்லையே ( சத 93 ) வம்பனேன் றன்னை யாண்டமா மணியே ' ' ( வாழாப் 2 ) என வருவன காண்க . வம்பு - நிலை யின்மை . வம்பு நிலையின்மை என்பது தொல்காப்பியம் ( உரி 31 ) நான் நின் அடியேன் நீயென்னை ஆண்டாய் என்றால் சிரித்தேயரு ளாம் தன்மையென்றது அடியனாதற்கும் ஆட்கொள்ளப்படுதற்கும் தகுதி யில்லாதவனாகிய யான் ' நின் அடியேன் ' என்றும் ' நீ என்னை ஆண்டாய் ' என்றும் கூறினால் அது இறைவன் நகைத்தேயருளலாம் தன்மைத்து என்ற வரறு . தான் என்னும் படர்க்கையொருமைப் பெயர் இறைவனை உணர்த்தி யது . உம்மை . இறந்தது தழீஇய எச்சவும்மை . சிரித்தே என்பதில் ஏகாரத்தைப் பிரித்து தன்மையே யாம் எனக் கூட்டுக . இதன்கண் என் தன்மை தானும் சிரித்து அருளலாம் தன்மையே யாம் என்றதனால் அங்ஙனம் இறைவன் சிரித்தருளுதலாகிய பேறுகிடைக் கப்பெறின் அதனால் என் உலக அனுபவங்கள் சுத்தியடையுமே என்னும் விழைவு புலப்படுதலின் அதுபோகசுத்தி யென்னும் ஆறாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 58 . 03. தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ என்னை நோக்கு வார்யாரே யென்னான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி யெந்தாய் எங்குப் புகுவேனே . பரை + தன்மை பிறரால் அறியாத தலைவா - நின் தன்மை பிறர் எவராலும் அறியமுடியாத இறைவனே பொல்லா நாயான புன்மையேனை ஆண்டு- பொல்லாத நாய்போன்ற இழிவு டையவனாகிய என்னை ஆட் கொண்டருளி ஐயா புறமே போக விடுவாயோ - ஐயனே என்னைப் புறத்தே செல்ல விடுவாயோ ? என்னை நோக்குவார் யாரே - அங்ஙனம் விடுவாயாயின் என்னை அருட்கண்ணாற் பார்த்தப் பாதுகாப்பவர் பிறர் திருச்சதகம் 303 எவர் உளர் ? எம்பெருமாள் நான் என் செய்கேன் எம்பெருமானே நான் யாது செய்ய வல்லேன் ? பொன்னே திகழும் திருமேனி எந்தாய் - பொன் போல விளங்கும் திருமேனியையுடைய எந்தையே ! எங்கு புகுவேன் நின்னிடத்தன்றி வேறு எவ்விடத்து அடைக்கலம் புகுவேன் ? தன்மை பிறரால் அறியாத தலைவனே நாய்போன்ற புன்மையை யுடையவனாகிய என்னை ஆட்கொண்டருளிப் புறத்தே செல்லவிடுவாயோ ? அங்ஙனம் விடுவையாயின் என்னை நோக்குவார் பிறர் எவர் உளர் ? எம்பெரு மானே ! நான் யாது செய்யவல்லேன் ? பொன்னே திகழும் திருமேனி யையுடைய எந்தையே நின்னிடத்தன்றி வேறு எவ்விடத்து அடைக்கலம் புகுவேன் என்பதாம் . பிறர் எவராலும் அறியமுடியாத உண்மை இயல்புகளை இறைவன் உடையனாதல் பற்றித் ' தன்மை பிறரால் அறியாத தலைவா ' என்றருளி னார் . பிறரன்றி அவன்தானும் முழுவதும் அறியான் என்பது . ** தன் பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ ' ( சாழல் 19 ) என்ப தனால் விளங்கும் . ஞானந் தானுரு வாகிய நாயக னியல்பை யானும் நீயுமாய் இசைத்துமென் றாலஃ தெளிதோ மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை குரன் அமைச் 128 எனக் கந்தபுராணத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது . பொல்வாநாய் - தீங்குமிக்க நாய் நாயான - நாய்போன்ற . நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனை ( அம்மானை 7 ) என வருதலுங் காண்க . புறமே போக விடுவாயோ என்றது நின் முன்னிலையிலன்றிப் புறத்தே போக விடுவாயோ என்றவாறு . ஓகாரம் - எதிர்மறை விடுதல் நின் தகுதிக் குப் பொருந்தாது என்பது கருத்து . என்னை நோக்குவார் யாரே என்றது என்னை நோக்குவார் நின்னையன்றிப் பிறர் இல்லை என் றபடி .. மேனி . பொன்னே திகழுந் திருமேனி.பொன்னைப் போல விளங்குகின்ற திரு பொன்னை யழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன் ( குயிற் 7 ) பொன்னேர் தரு திருமேனியனே ( தே.ஞான 160 : 1 ) பொன்போல மிளிர்வதொர் மேனியீனீர் ' ' பொன்னொத்த மேனி ' பொன்போல் திருமேனி யுடையான் றன்னை ' ( தே நாவு .1 : 8 ; 81 : 9 ; 248 : 2 ) பொன்னார் மேனியனே பொன்செய்த மேனியினீர் ( தே.சுந் .24 : 1 ; 25 : 1 ) பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி ( பதினொராத்.பொன்வண்ணத் 1 ) என வருவன காண்க . பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் என்றது ஈண்டு ஞானாசாரியனது திருமேனியை நினைவு கூர்ந்து கூறியதாகும் . எங்குப் புகுவேன் என்றது