திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நின் மலன் - அநாதியே மலங்களினின்று நீங்கியவன். எங்கள் நின்மலா என்றது மலபந்தமுடைய எங்களுக்கு அதனை நீக்கியருளும் மலமற்றவனே என்றவாறு. 308 இதன்கண், சங்கரா வானவிருத்தனே விடலையே ஒப்பில் ஒருத்தனே உம்பர் தம்பிரான் தில்லை விருத்தனே எங்கள் நின்மலா என விளித்து. போற்றி என்பவற்றால் 'காத்தருள்க' என இரங்கி வேண்டுதலின் காரு ணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 61. 66. போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன். போற்றியோ நமச்சி வாய புகவிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. ப-ரை: ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி- ஓம் நமச்சி வாய என்னும் மந்திரப்பொருளாயுள்ளவனே பாம்பை அணிந்த வனே பிராரத்த வினையால் அடியேன் அறிவு மயங்கப் பெறுகின்றேன் காத்தருள்க; ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை போற்றி- ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப்பொருளாயுள்ளவனே, நான் அடைக் கலமாக அடையத் தகுந்தவிடம் நின்னையொழியப் பிறிதொன்றில்லை; ஆதலாற் காத்தருள்க; ஓம் நமச்சிவாய புறம் எனை போக்கல் போற்றி- ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப் பொருளாயுள்ளவனே நின் காட்சியைப் பிரிந்த என்னைப் புறத்தே போக்காது காத்தருள்க. ஓம் நமச்சிவாய போற்றி-ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப் பொருளாயுள்ளவனே காத் தருள்க; சய சய-நின்புகழ் வெல்க வெல்க. போற்றி போற்றி-காத்தருள்க காத்தருள்க. ஓம் நமச்சிவாய, புயங்கனே பிராரத்த வினையால் அறிவு மயங்கு கின்றேன்; காத்தருள்க; ஓம் நமச்சிவாய நான் அடைக்கலமாக அடையத் தகுந்த நின்னையொழியப் பிறிதொன்றில்லை; ஆதலாற் காத்தருள்க; ஓம் நமச்சிவாய என்னைப் புறத்தே போகவிடாதே; காத்தருள்க; ஓம் நமச்சி வாய காத்தருள்க; நின்புகழ் வெல்க வெல்க; காத்தருள்க காத்தருள்க என்பதரம். போற்றி என்பன காத்தருள்க என்னும் பொருளன. ஓம் நமச்சிவாய என்பது இறைவனுக்குரிய தூல பஞ்சாக்கர மந்திரமாகும். நமச்சிவாய என்பது இறைவனது அருட்டிருமேனியின் அங்கங்களாக அமைந்திருக்கும் முறையினை. "ஆடும் படி கேள்ால் லம்பலத்தான் ஐயனே நாடுந் திருவடியி லேநகரம் - கூடு மகர முதரம் வளர்தோள் சிகரம் பகரு முகம் வாமுடியப் பார். திருச்சதகம் 309 என்னும் உண்மைவிளக்கத்தானுமறிக. திருவடியிலே நகாரமும், திரு வுந்தியிலே மகாரமும், திருத்தோளிலே சிகாரமும், திருமுகத்திலே வகார றம் திருமுடியிலே யகாரமுமாக இந்த முறைமையிலே நமச்சிவாய என்ற பஞ்சாக்கரமே திருமேனியாக அமைந்தமையை இதனால் அறியலாம். இம் மந்திரம் தூலமாதல் பற்றியும் போகத்தை விரும்பும் உயிர்களால் செபிக் கப்படுதல் பற்றியும் தீக்கைப் பேறுடையார் அஃதில்லார் ஆகிய யாவர் முன்னும் சொல்லத்தக்கதாதல் பற்றியும் அடிகள் "நமச்சிவாய வாழ்க" (சிவபுராணம்) என்பது முதலாகப் பவவிடங்களிலும் கூறியுள்ளார். சைவ சமயாசாரியர்களுள் ஒருவராகிய இவ்வாளுடைய அடிகளைப் போலவே ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசர் ஆளுடைய நம்பியார் ஆகிய மற்றை சமயாசாரியர் முவரும் தாமருளிச் செய்த தமிழ் மறைகளில் நமச்சிவாய என்னும் தூலபஞ்சாக்கரத்தையே அமைத்துத் திருப்பதிகஞ் செய்தருளுவாராயினர். நாத நாம நமச்சிவாயவே ' 307 1. என ஆளுடையபிள்ளையாரும், நற்றுணை யாவது நமச்சிவாயவே'' (11:1) என ஆளுடைய அரசரும். OPS "சொல்லுநா நமச்சிவாயவே 48:1. வாய என ஆளுடைய நம்பியும் அருளிச் செய்தமை காண்க. ஆனால் அவர் கள் அம்மந்திரத்தினைச் சிகாராதியாகவே செபித்து வந்தனர் என்பது அவர்கள் வரலாற்றிடையே அறியத்தக்கதாகவுள்ளது. அடிகள் * நமச்சி என நகாரமுதலாகக் கூறினும் ஞானாசாரியனாகிய இறைவனிடத்து சிகாராதியாகவே உபதேசம் பெற்றனர் என்பது, " நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்'' (ஏசறவு 10) என அருளிச் செய்தமையான் அறியப்படும். சிகாராதியாகிய சூக்கும் பஞ்சாக்கரமே பேரின்ப வாழ்வில்எய்தி வாழ்வதற்கு உச்சரிக்கத்தக்கது என்பது. '"ஆதிமல மிரண்டும் ஆகியாய் ஓதினால் சேதியா மும்மலமுந் தீர்வாகா- போதம் மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படியோ தஞ்செழுத்து மே " உண்மை விளக் 43. என்பதனால் அறியலாம். சூக்கும பஞ்சாக்கரம் இறைவனது குக்குமமாகிய திருமேனியில் நான்கு திருக்கரங்களையும் முயவகளை மிதித்த திருப்பாதத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதனை, 'சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான்'' என்னும் உண்மைவிளக்கத்தானுமறிக. (93)
திருவாசக ஆராய்ச்சியுரை நின் மலன் - அநாதியே மலங்களினின்று நீங்கியவன் . எங்கள் நின்மலா என்றது மலபந்தமுடைய எங்களுக்கு அதனை நீக்கியருளும் மலமற்றவனே என்றவாறு . 308 இதன்கண் சங்கரா வானவிருத்தனே விடலையே ஒப்பில் ஒருத்தனே உம்பர் தம்பிரான் தில்லை விருத்தனே எங்கள் நின்மலா என விளித்து . போற்றி என்பவற்றால் ' காத்தருள்க ' என இரங்கி வேண்டுதலின் காரு ணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 61 . 66. போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் . போற்றியோ நமச்சி வாய புகவிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி . - ரை : ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி ஓம் நமச்சி வாய என்னும் மந்திரப்பொருளாயுள்ளவனே பாம்பை அணிந்த வனே பிராரத்த வினையால் அடியேன் அறிவு மயங்கப் பெறுகின்றேன் காத்தருள்க ; ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை போற்றி ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப்பொருளாயுள்ளவனே நான் அடைக் கலமாக அடையத் தகுந்தவிடம் நின்னையொழியப் பிறிதொன்றில்லை ; ஆதலாற் காத்தருள்க ; ஓம் நமச்சிவாய புறம் எனை போக்கல் போற்றி ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப் பொருளாயுள்ளவனே நின் காட்சியைப் பிரிந்த என்னைப் புறத்தே போக்காது காத்தருள்க . ஓம் நமச்சிவாய போற்றி - ஓம் நமச்சிவாய என்னும் மந்திரப் பொருளாயுள்ளவனே காத் தருள்க ; சய சய - நின்புகழ் வெல்க வெல்க . போற்றி போற்றி - காத்தருள்க காத்தருள்க . ஓம் நமச்சிவாய புயங்கனே பிராரத்த வினையால் அறிவு மயங்கு கின்றேன் ; காத்தருள்க ; ஓம் நமச்சிவாய நான் அடைக்கலமாக அடையத் தகுந்த நின்னையொழியப் பிறிதொன்றில்லை ; ஆதலாற் காத்தருள்க ; ஓம் நமச்சிவாய என்னைப் புறத்தே போகவிடாதே ; காத்தருள்க ; ஓம் நமச்சி வாய காத்தருள்க ; நின்புகழ் வெல்க வெல்க ; காத்தருள்க காத்தருள்க என்பதரம் . போற்றி என்பன காத்தருள்க என்னும் பொருளன . ஓம் நமச்சிவாய என்பது இறைவனுக்குரிய தூல பஞ்சாக்கர மந்திரமாகும் . நமச்சிவாய என்பது இறைவனது அருட்டிருமேனியின் அங்கங்களாக அமைந்திருக்கும் முறையினை . ஆடும் படி கேள்ால் லம்பலத்தான் ஐயனே நாடுந் திருவடியி லேநகரம் - கூடு மகர முதரம் வளர்தோள் சிகரம் பகரு முகம் வாமுடியப் பார் . திருச்சதகம் 309 என்னும் உண்மைவிளக்கத்தானுமறிக . திருவடியிலே நகாரமும் திரு வுந்தியிலே மகாரமும் திருத்தோளிலே சிகாரமும் திருமுகத்திலே வகார றம் திருமுடியிலே யகாரமுமாக இந்த முறைமையிலே நமச்சிவாய என்ற பஞ்சாக்கரமே திருமேனியாக அமைந்தமையை இதனால் அறியலாம் . இம் மந்திரம் தூலமாதல் பற்றியும் போகத்தை விரும்பும் உயிர்களால் செபிக் கப்படுதல் பற்றியும் தீக்கைப் பேறுடையார் அஃதில்லார் ஆகிய யாவர் முன்னும் சொல்லத்தக்கதாதல் பற்றியும் அடிகள் நமச்சிவாய வாழ்க ( சிவபுராணம் ) என்பது முதலாகப் பவவிடங்களிலும் கூறியுள்ளார் . சைவ சமயாசாரியர்களுள் ஒருவராகிய இவ்வாளுடைய அடிகளைப் போலவே ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசர் ஆளுடைய நம்பியார் ஆகிய மற்றை சமயாசாரியர் முவரும் தாமருளிச் செய்த தமிழ் மறைகளில் நமச்சிவாய என்னும் தூலபஞ்சாக்கரத்தையே அமைத்துத் திருப்பதிகஞ் செய்தருளுவாராயினர் . நாத நாம நமச்சிவாயவே ' 307 1 . என ஆளுடையபிள்ளையாரும் நற்றுணை யாவது நமச்சிவாயவே ' ' ( 11 : 1 ) என ஆளுடைய அரசரும் . OPS சொல்லுநா நமச்சிவாயவே 48 : 1 . வாய என ஆளுடைய நம்பியும் அருளிச் செய்தமை காண்க . ஆனால் அவர் கள் அம்மந்திரத்தினைச் சிகாராதியாகவே செபித்து வந்தனர் என்பது அவர்கள் வரலாற்றிடையே அறியத்தக்கதாகவுள்ளது . அடிகள் * நமச்சி என நகாரமுதலாகக் கூறினும் ஞானாசாரியனாகிய இறைவனிடத்து சிகாராதியாகவே உபதேசம் பெற்றனர் என்பது நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் ' ' ( ஏசறவு 10 ) என அருளிச் செய்தமையான் அறியப்படும் . சிகாராதியாகிய சூக்கும் பஞ்சாக்கரமே பேரின்ப வாழ்வில்எய்தி வாழ்வதற்கு உச்சரிக்கத்தக்கது என்பது . ' ஆதிமல மிரண்டும் ஆகியாய் ஓதினால் சேதியா மும்மலமுந் தீர்வாகா- போதம் மதிப்பரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி விதிப்படியோ தஞ்செழுத்து மே உண்மை விளக் 43 . என்பதனால் அறியலாம் . சூக்கும பஞ்சாக்கரம் இறைவனது குக்குமமாகிய திருமேனியில் நான்கு திருக்கரங்களையும் முயவகளை மிதித்த திருப்பாதத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது . இதனை ' சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக் ( கு ) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான் ' ' என்னும் உண்மைவிளக்கத்தானுமறிக . ( 93 )