திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

314 திருவாசக ஆராய்ச்சியுரை வாழும் வாழ்க்கையைப் பொறுக்க மாட்டுகிலேன்; அதனை வெறுத்து விட்டேன். சங்கரர நினக்கு வணக்கம்; பிறிதொரு புகலிடம் இல்லேன் ஆதலாற் காத்தருள்க. மங்கையை இடப்பாகத்திற் கொண்டவனே நினக்கு வணக் கம்: பெரிய விடையை ஊர்தியாகக் கொண்டவனே ஈனக்கு வணக்கம்: எங்கள் தலைவனே இவ்வுலகத்தில் இவ்வுடலோடு கூடி வாழும் வாழ்க் கையைப் பொறுக்கமாட்டேன்: இதனை வெறுத்து விட்டேன்: ஆதலால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருளவேண்டும் என்பதாம். - 240 சரண் - புகலிடம். நின்னையொழிய வேறு புகலிடம் இல்லேன் என் பார் மற்றோர் சரணிலேன் என்றார். "போற்றியோ நமச்சிவாய புக விடம் பிறிதொன் றில்லை" (சத 62) என அடிகள் அருளியமையுங் காண்க. கோல மங்கை என இயையும். 'கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய், சீலமே'' (நாவு 57:8) எனத் தேவாரத் தும் வருதல் காண்க. இனி 'கோல' என்னும் அடையை அல்குல் வாய் நகை கண் என்பவற்றோடு கூட்டினுமமையும். பொங்குதல் - வெகுனல். வெகுண்ட காலையே பாம்பு படமெடுத்தலின், 'பொங்கரா என்றார். அரா ஆகுபெயராய் நின்று படத்தையுணர்த்தியது. அரவின் படம் போன்ற அல்குல் என்க. பைந்நாப்பட அரவேரல்குல் உமை (உயிருண்ணி 1) என வருதலுங் காண்க, 'அரவுக்கிளர்ந்தன்ன ... அவ்குல்'" (நற் 336:1-3) என்றார் பிறரும். கரியகண், வாட்கண் எனத் தனித்தனி கு இயைக்க. கண்ணிற்கு கருமை இலக்கணமாதல், "ஈசற் கியான் வைத்த என்பி கைன்றவன் வாங்கிய வென்பாசத்திற் காரென்று பெருநீனம் பெருங் கண்களே " (109) என திருக்கோவையாரினும் வருதல் காண்சு. வாட்கண் - வாள்போலும் கண். திருக்கோவை 48 பேர் மங்கை என்றது உமையம்மையை. ஓர் பங்க என்றது இடப்பங்கை மாதிடங் கொண் டம்பலத்து நின்றோர்" (திருக்கோவை 188) என அரு ளியமையுங் காண்க, மால்விடை - பெரியவிடை, " வெள்ளிமலை யன்ன மால்விடையோன்" (திருக்கோவை 128) என்புழி மால்விடை என்பதற்குப் பெரிய விடை எனப் பேராசிரியர் பொருளுரைத்தமையுங் காண்க. கயிலை நடந்தனைய உயர்நிலை நோன்றாட் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமிற் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக" திருவிடைமரு 16:4.8. (1 எனப் பதினொராக் திருமுறையினும் வருதல் காண்க. இனி இறைவன் தடமதில்க ளனை மூன்றுந் தழலெரித்த அந்நாளில் திருமால் இடபம் தாய்த் தாங்கினானுாதலின் மால்வீடை என்பதற்குத சுருமாலாகிய விடை எனினுமமையும். ஊர்தி- ஏறப்படுவது, வாகனம். "ஊர்தி வால் வெள் திருச்சதகம் 315 ளேறே " புற கடவுள் 3 மங்கையோர் பங்களுாகிய இறைவன் மால் விடையை ஊர்தியாகக் கொண்டமையின் மங்கையோர் பங்க; மால்விடை யூர்தி என்றார். "செங்கண்மால் விடையார் செழும்பொன் மலைவல்லி பங்கினனார் என்றார் பெரியபுராணத்தும் (உருத்திரபதி 3.) 3960 இங்கு - இவ்வுலகத்து. இவ்வாழ்வு - உடலோடு கூடிவாழும் இழிந்த வாழ்வு. ஆற்ற கில்லேன் - பொறுக்க மாட்டுகிலேன், "ஒன்றா மிவட்கு மொழிதல் கில்லேன் '' (திருக்கோவை/ 288) என்புழி மொழிதல் கில்லேன் மொழிய மாட்டுகிலேன். எனப் பேராசிரியர் பொருளுரைத்தமையுங் காண்க. கிவ் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இழித்தல்-வெறுத்தல் ஆதி லால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருள வேண்டும் என்பது குறிப்பெச் சம். "உடலிது களைந்திட் டொல்லை யும்பர்தந் தருளு (சத &4) என அடிகள் அருளியமையுங் காண்க. இதன்கண் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கமாட்டேன் இழித் திட்டேன் ஆதலால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருள வேண்டும் என்பத னால், காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 65. 70.இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் சுடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர் நாட் டெம்பி ரானே. ப-ரை: யானே என்னை இழித்தனன் - யானே என்னை இழிவு படுத்தினேன்; எம்பிரான் போற்றி போற்றி - எங்கள் தலைவனே வணக் கம் வணக்கம்; உன்னைப் பழித்திலேன் - ஆண்டவனாகிய நின்னை இகழ்ந்தி லேன்; என்னை ஆளுடைய பாதம் போற்றி - அடியேனை ஆளாகவுடைய நின் திருவடிகளுக்கு வணக்கம். பிழைத்தவை எல்லாம் பொறுக்கை பெரிய வர் கடமை போற்றி - பிழையாகச் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத் துக் கொள்ளுதல் பெரியோராகிய நின்போல்வார்க்குக் கடமையாகும்; நினக்கு வணக்கம். உம்பர் நாட்டு எம்பிரானே - மேலாகிய சிவலோகத் துள்ள எங்கள் தலைவனே; இவ்வாழ்வு ஒழித்திடு போற்றி - இவ்வுடலோடு கூடி வாழும் இவ்வாழ்க்கையை ஒழித்தருள்க நினக்கு வணக்கம். யானே என்னை இழித்தனன்; எங்கள் தலைவனே நினக்கு வணக்கம் வணக்கம்; ஆண்டவனாகிய நீன்னைப் பழித்திலேன்; என்னை ஆளாக வுடைய நின் திருவடிகளுக்கு வணக்கம்; பிழையாகச் செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்தல் பெரியவர் கடமையாகும்; நினக்கு வணக்கம்; உம்பர்நாட்டு எம்பிரானே; இவ்வுடலோடு கூடிவாழும் இவ்வாழ்க்கையை ஒழித்தருள்க; நினக்கு வணக்கம் என்பதாம்.
314 திருவாசக ஆராய்ச்சியுரை வாழும் வாழ்க்கையைப் பொறுக்க மாட்டுகிலேன் ; அதனை வெறுத்து விட்டேன் . சங்கரர நினக்கு வணக்கம் ; பிறிதொரு புகலிடம் இல்லேன் ஆதலாற் காத்தருள்க . மங்கையை இடப்பாகத்திற் கொண்டவனே நினக்கு வணக் கம் : பெரிய விடையை ஊர்தியாகக் கொண்டவனே ஈனக்கு வணக்கம் : எங்கள் தலைவனே இவ்வுலகத்தில் இவ்வுடலோடு கூடி வாழும் வாழ்க் கையைப் பொறுக்கமாட்டேன் : இதனை வெறுத்து விட்டேன் : ஆதலால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருளவேண்டும் என்பதாம் . - 240 சரண் - புகலிடம் . நின்னையொழிய வேறு புகலிடம் இல்லேன் என் பார் மற்றோர் சரணிலேன் என்றார் . போற்றியோ நமச்சிவாய புக விடம் பிறிதொன் றில்லை ( சத 62 ) என அடிகள் அருளியமையுங் காண்க . கோல மங்கை என இயையும் . ' கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய் சீலமே ' ' ( நாவு 57 : 8 ) எனத் தேவாரத் தும் வருதல் காண்க . இனி ' கோல ' என்னும் அடையை அல்குல் வாய் நகை கண் என்பவற்றோடு கூட்டினுமமையும் . பொங்குதல் - வெகுனல் . வெகுண்ட காலையே பாம்பு படமெடுத்தலின் ' பொங்கரா என்றார் . அரா ஆகுபெயராய் நின்று படத்தையுணர்த்தியது . அரவின் படம் போன்ற அல்குல் என்க . பைந்நாப்பட அரவேரல்குல் உமை ( உயிருண்ணி 1 ) என வருதலுங் காண்க ' அரவுக்கிளர்ந்தன்ன ... அவ்குல் ' ( நற் 336 : 1-3 ) என்றார் பிறரும் . கரியகண் வாட்கண் எனத் தனித்தனி கு இயைக்க . கண்ணிற்கு கருமை இலக்கணமாதல் ஈசற் கியான் வைத்த என்பி கைன்றவன் வாங்கிய வென்பாசத்திற் காரென்று பெருநீனம் பெருங் கண்களே ( 109 ) என திருக்கோவையாரினும் வருதல் காண்சு . வாட்கண் - வாள்போலும் கண் . திருக்கோவை 48 பேர் மங்கை என்றது உமையம்மையை . ஓர் பங்க என்றது இடப்பங்கை மாதிடங் கொண் டம்பலத்து நின்றோர் ( திருக்கோவை 188 ) என அரு ளியமையுங் காண்க மால்விடை - பெரியவிடை வெள்ளிமலை யன்ன மால்விடையோன் ( திருக்கோவை 128 ) என்புழி மால்விடை என்பதற்குப் பெரிய விடை எனப் பேராசிரியர் பொருளுரைத்தமையுங் காண்க . கயிலை நடந்தனைய உயர்நிலை நோன்றாட் பிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமிற் பால்நிறச் செங்கண் மால்விடைப் பாக திருவிடைமரு 16 : 4.8 . ( 1 எனப் பதினொராக் திருமுறையினும் வருதல் காண்க . இனி இறைவன் தடமதில்க ளனை மூன்றுந் தழலெரித்த அந்நாளில் திருமால் இடபம் தாய்த் தாங்கினானுாதலின் மால்வீடை என்பதற்குத சுருமாலாகிய விடை எனினுமமையும் . ஊர்தி- ஏறப்படுவது வாகனம் . ஊர்தி வால் வெள் திருச்சதகம் 315 ளேறே புற கடவுள் 3 மங்கையோர் பங்களுாகிய இறைவன் மால் விடையை ஊர்தியாகக் கொண்டமையின் மங்கையோர் பங்க ; மால்விடை யூர்தி என்றார் . செங்கண்மால் விடையார் செழும்பொன் மலைவல்லி பங்கினனார் என்றார் பெரியபுராணத்தும் ( உருத்திரபதி 3. ) 3960 இங்கு - இவ்வுலகத்து . இவ்வாழ்வு - உடலோடு கூடிவாழும் இழிந்த வாழ்வு . ஆற்ற கில்லேன் - பொறுக்க மாட்டுகிலேன் ஒன்றா மிவட்கு மொழிதல் கில்லேன் ' ' ( திருக்கோவை / 288 ) என்புழி மொழிதல் கில்லேன் மொழிய மாட்டுகிலேன் . எனப் பேராசிரியர் பொருளுரைத்தமையுங் காண்க . கிவ் ஆற்றலுணர்த்தும் இடைநிலை . இழித்தல் - வெறுத்தல் ஆதி லால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருள வேண்டும் என்பது குறிப்பெச் சம் . உடலிது களைந்திட் டொல்லை யும்பர்தந் தருளு ( சத & 4 ) என அடிகள் அருளியமையுங் காண்க . இதன்கண் இவ்வுலக வாழ்க்கையைப் பொறுக்கமாட்டேன் இழித் திட்டேன் ஆதலால் இவ்வுடலை நீக்கி உம்பர் தந்தருள வேண்டும் என்பத னால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 65 . 70.இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் சுடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர் நாட் டெம்பி ரானே . - ரை : யானே என்னை இழித்தனன் - யானே என்னை இழிவு படுத்தினேன் ; எம்பிரான் போற்றி போற்றி - எங்கள் தலைவனே வணக் கம் வணக்கம் ; உன்னைப் பழித்திலேன் - ஆண்டவனாகிய நின்னை இகழ்ந்தி லேன் ; என்னை ஆளுடைய பாதம் போற்றி - அடியேனை ஆளாகவுடைய நின் திருவடிகளுக்கு வணக்கம் . பிழைத்தவை எல்லாம் பொறுக்கை பெரிய வர் கடமை போற்றி - பிழையாகச் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத் துக் கொள்ளுதல் பெரியோராகிய நின்போல்வார்க்குக் கடமையாகும் ; நினக்கு வணக்கம் . உம்பர் நாட்டு எம்பிரானே - மேலாகிய சிவலோகத் துள்ள எங்கள் தலைவனே ; இவ்வாழ்வு ஒழித்திடு போற்றி - இவ்வுடலோடு கூடி வாழும் இவ்வாழ்க்கையை ஒழித்தருள்க நினக்கு வணக்கம் . யானே என்னை இழித்தனன் ; எங்கள் தலைவனே நினக்கு வணக்கம் வணக்கம் ; ஆண்டவனாகிய நீன்னைப் பழித்திலேன் ; என்னை ஆளாக வுடைய நின் திருவடிகளுக்கு வணக்கம் ; பிழையாகச் செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்தல் பெரியவர் கடமையாகும் ; நினக்கு வணக்கம் ; உம்பர்நாட்டு எம்பிரானே ; இவ்வுடலோடு கூடிவாழும் இவ்வாழ்க்கையை ஒழித்தருள்க ; நினக்கு வணக்கம் என்பதாம் .