திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

318 திருவாசக ஆராய்ச்சியுரை "சிவபுரத்தமர ரேறே" விண்ணோர் தலை வானவர்க் கிறைவா வனே" (திருநாவு 29:9; 42:4; 75:2; 250:7) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. இனி. ஏறு - உயர்வு, ஆகுபெயராய் உயர்வுடைய இறைவனை உணர்த்தியது எனினுமாம். ''கொம்பரார் மருங்குல் மங்கை " என்றது உமையம்மையை. ஞான 224:5, கொம்பன்ன மின்னி னிடையானோர் கூறன் "கொம்பளைய நுண்ணிடையான் கூறா 246 :7. எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. கெரம்பர் - கொம்பு என்பதன் போலி ஆர் உவமவுருபு. மங்கை கூற, வெண்ணீற என்றதனால் இறை வன் உவகிற்கு ஆதியும் அந்தமுமாயினான் என்பது குறிப்பால் உணரப் படும். 34 " செம்பிரான் - செம்மேனியையுடைய பிரான். "சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி யெம்மானே" "செக்கரது திகழ்மேனிச் சிவன வன் காண்' (நாவு 112:9; 301:2) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. செம்பொருளாகிய தலைவன் எனினுமாம். தில்லை தலப்பெயர். திருச்சிற்றம்பலம் - கோயிற் பெயர். "தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன் (9) எனத் திருக்கோவையாரிலும் "சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புட னடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி" எனப் பெரியபுராணத்தும் (தில்லை வாழ் அந் 2) வருவன காண்க. உம்பரான் என் பது உம்பரா என விளி ஏற்றது. உம்பரான் - மேலாகிய சிவலோகத்தை யுடையவன் உருநி லவு மொண்சுடரை உம்பரானை" தே.நாவு 294:0 தன்னொப்பாரில்லாத பரம்பொருளே தன்னை ஆளாகக் கொண்டான். என்பார் '" என்னை ஆளுடை யொருவ" என்றார். எம்பிரான். வானத்தவரவரேறு, மங்கை கூற, வெண்ணீற செம் பிரான், திருச்சிற்றம்பலவ, உம்பரா, அளுடை யொருவ என இறைவனை முன்னிலைப்படுத்திப் போற்றி என வணக்கம் தெரிவித்தமையால், "உட லிது களைந்திட்டு ஒல்லை யும்பர் தந்தருள்" (சத 64) என்பது அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டது. இதன்கண், இறைவனை முன்னிலைப்படுத்தி போற்றி என வணக்கம் தெரிவித்தமை கொண்டு, அவாய் நிலையான் வருவிக்கப்பட்ட உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருள் என்பதனால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 72. ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே. 67. திருச்சதகம் 319 படரை : ஒருவனே போற்றி - தனி முதல்வளே நினக்கு வணக்கம்; ஒப்பு இல் அப்பனே போற்றி - தனக்கு யாரும் நிகரில்லாத தந்தையே நினக்கு வணக்கம்; வானோர் குருவனே போற்றி - தேவர்களுக்கும் குருவா யுள்ளவனே இனக்கு வணக்கம்; எங்கள் கோமள கொழுந்து போற்றி . அடியேங்களது மென்மையான இளந்தளிர் போன் றவனே நினக்கு வணக் கம்: என்னை வருக என்று நீன்பால் வாங்கிட வேண்டும் போற்றி-அடி யேனை இங்கே வருகவென்று அழைத்து நின் பக்கலில் இழுத்துக் கொள்ளு தல் வேண்டும்; நினக்கு வணக்கம் தமியனேன் தனிமை தீர்த்து நின் பாதம் தருக போற்றி - நின்னைப் பிரிந்த துணையில்லாதேனது பிரிவுத் தயரை ஒழித்து நின் திருவடியைத் தந்தருள வேண்டும் நினக்கு வணக்கம். ஒருவனே நினக்கு வணக்கம்; தனக்கு யாவரும் நிகரில்லாத தந்தையே நினக்கு வணக்கம்; தேவர்களுக்கும் குருவாயுள்ளவனே நினக்கு வணக்கம்; கோமளக் கொழுந்து போன்றவனே நினக்கு வணக்கம்; அடியேனை இங்கே வருக என்று அழைத்து நின்பக்கலில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்; நினக்கு வணக்கம் ; நின்னைப் பிரிந்த தமியேனது பிரிவுத் துயரை ஒழித்து நின் திருவடியைத் தந்தருளவேண்டும்; நினக்கு வணக்கம் என்பதாம். ** ஒருவன் - இரண்டாமவன் இல்லாதவன்; முழுமுதல்லன் என்றவாறு. "ஒருவனாய் நின்ற பெம்மான் " (ஞான 315:9) தெளிவார்க்கெலாம் ஒருவனே'. ''ஒருவனாகி நின்றான் இவ்வுலகெலாம்', '"உலகுக் கொரு வனே' (நாவு 126 : 5; 210 : 11; 245:4) எனத் தேவாரத்து வருவன காண்க. '"ஒப்பில்'' என்னும் அடையை ஒருவன் என்பதனோடும் கூட் டுக. 'ஒப்பொருவர் இல்லாத ஒருவன் (தே. நாவு 247:9) என வருத லுங் காண்க. அப்பன் - தந்தை. தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி" (தே.நரவு 200: 2.) ஒப்பில் அப்பனே என்றார், உடலைப் பாது காக்கும் உலகியல் தந்தை போலாது பிறர் எவராலும் அளித்தற்கரிய வீடு பேற்றினை யளிக்கும் தந்தையாதல் பற்றி. குருவன் - குருவாயுள்ளவன். "குருவனே யடியேனைக் குறிக்கொளேட் நாவு 127:5 எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பக்குவ முதிர்ந்த மக்களுக்கே யன்றித் தேவர்களுக்கும் குருவாயுள்ளவன் இறைவனாதல் பற்றி, வானோர் குருவனே"' என்றார். ஒருவனே என்பது எதுகை நோக்கிக் குருவனே என்றாயிற்று. கோமளம் - மென்மை; இளமையுமாம். கொழுந்து போன்றவனைக் கொழுந்து என்றார். ஆள்வதற்குரியவன் விரை மலர்த்திருப்பாதம் முற்றினா விளந் தளிர் (சத 34) என வருதலுங் காண்க. கொழுந்து - தளிர். கோமளக் கொழுந்து என்பதற்கு அழகிய தீபச் சுடர் போன்றவன் எனினுமாம். ஈண்டு சுடர் சிவலிங்க குறிக்கும். வடிவினைச்
318 திருவாசக ஆராய்ச்சியுரை சிவபுரத்தமர ரேறே விண்ணோர் தலை வானவர்க் கிறைவா வனே ( திருநாவு 29 : 9 ; 42 : 4 ; 75 : 2 ; 250 : 7 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . இனி . ஏறு - உயர்வு ஆகுபெயராய் உயர்வுடைய இறைவனை உணர்த்தியது எனினுமாம் . ' ' கொம்பரார் மருங்குல் மங்கை என்றது உமையம்மையை . ஞான 224 : 5 கொம்பன்ன மின்னி னிடையானோர் கூறன் கொம்பளைய நுண்ணிடையான் கூறா 246 : 7 . எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . கெரம்பர் - கொம்பு என்பதன் போலி ஆர் உவமவுருபு . மங்கை கூற வெண்ணீற என்றதனால் இறை வன் உவகிற்கு ஆதியும் அந்தமுமாயினான் என்பது குறிப்பால் உணரப் படும் . 34 செம்பிரான் - செம்மேனியையுடைய பிரான் . சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி யெம்மானே செக்கரது திகழ்மேனிச் சிவன வன் காண் ' ( நாவு 112 : 9 ; 301 : 2 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . செம்பொருளாகிய தலைவன் எனினுமாம் . தில்லை தலப்பெயர் . திருச்சிற்றம்பலம் - கோயிற் பெயர் . தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன் ( 9 ) எனத் திருக்கோவையாரிலும் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புட னடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி எனப் பெரியபுராணத்தும் ( தில்லை வாழ் அந் 2 ) வருவன காண்க . உம்பரான் என் பது உம்பரா என விளி ஏற்றது . உம்பரான் - மேலாகிய சிவலோகத்தை யுடையவன் உருநி லவு மொண்சுடரை உம்பரானை தே.நாவு 294 : 0 தன்னொப்பாரில்லாத பரம்பொருளே தன்னை ஆளாகக் கொண்டான் . என்பார் ' என்னை ஆளுடை யொருவ என்றார் . எம்பிரான் . வானத்தவரவரேறு மங்கை கூற வெண்ணீற செம் பிரான் திருச்சிற்றம்பலவ உம்பரா அளுடை யொருவ என இறைவனை முன்னிலைப்படுத்திப் போற்றி என வணக்கம் தெரிவித்தமையால் உட லிது களைந்திட்டு ஒல்லை யும்பர் தந்தருள் ( சத 64 ) என்பது அவாய் நிலையான் வருவித்துரைக்கப்பட்டது . இதன்கண் இறைவனை முன்னிலைப்படுத்தி போற்றி என வணக்கம் தெரிவித்தமை கொண்டு அவாய் நிலையான் வருவிக்கப்பட்ட உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்தருள் என்பதனால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 72. ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி யெங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே . 67 . திருச்சதகம் 319 படரை : ஒருவனே போற்றி - தனி முதல்வளே நினக்கு வணக்கம் ; ஒப்பு இல் அப்பனே போற்றி - தனக்கு யாரும் நிகரில்லாத தந்தையே நினக்கு வணக்கம் ; வானோர் குருவனே போற்றி - தேவர்களுக்கும் குருவா யுள்ளவனே இனக்கு வணக்கம் ; எங்கள் கோமள கொழுந்து போற்றி . அடியேங்களது மென்மையான இளந்தளிர் போன் றவனே நினக்கு வணக் கம் : என்னை வருக என்று நீன்பால் வாங்கிட வேண்டும் போற்றி - அடி யேனை இங்கே வருகவென்று அழைத்து நின் பக்கலில் இழுத்துக் கொள்ளு தல் வேண்டும் ; நினக்கு வணக்கம் தமியனேன் தனிமை தீர்த்து நின் பாதம் தருக போற்றி - நின்னைப் பிரிந்த துணையில்லாதேனது பிரிவுத் தயரை ஒழித்து நின் திருவடியைத் தந்தருள வேண்டும் நினக்கு வணக்கம் . ஒருவனே நினக்கு வணக்கம் ; தனக்கு யாவரும் நிகரில்லாத தந்தையே நினக்கு வணக்கம் ; தேவர்களுக்கும் குருவாயுள்ளவனே நினக்கு வணக்கம் ; கோமளக் கொழுந்து போன்றவனே நினக்கு வணக்கம் ; அடியேனை இங்கே வருக என்று அழைத்து நின்பக்கலில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் ; நினக்கு வணக்கம் ; நின்னைப் பிரிந்த தமியேனது பிரிவுத் துயரை ஒழித்து நின் திருவடியைத் தந்தருளவேண்டும் ; நினக்கு வணக்கம் என்பதாம் . ** ஒருவன் - இரண்டாமவன் இல்லாதவன் ; முழுமுதல்லன் என்றவாறு . ஒருவனாய் நின்ற பெம்மான் ( ஞான 315 : 9 ) தெளிவார்க்கெலாம் ஒருவனே ' . ' ' ஒருவனாகி நின்றான் இவ்வுலகெலாம் ' ' உலகுக் கொரு வனே ' ( நாவு 126 : 5 ; 210 : 11 ; 245 : 4 ) எனத் தேவாரத்து வருவன காண்க . ' ஒப்பில் ' ' என்னும் அடையை ஒருவன் என்பதனோடும் கூட் டுக . ' ஒப்பொருவர் இல்லாத ஒருவன் ( தே . நாவு 247 : 9 ) என வருத லுங் காண்க . அப்பன் - தந்தை . தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி ( தே.நரவு 200 : 2. ) ஒப்பில் அப்பனே என்றார் உடலைப் பாது காக்கும் உலகியல் தந்தை போலாது பிறர் எவராலும் அளித்தற்கரிய வீடு பேற்றினை யளிக்கும் தந்தையாதல் பற்றி . குருவன் - குருவாயுள்ளவன் . குருவனே யடியேனைக் குறிக்கொளேட் நாவு 127 : 5 எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பக்குவ முதிர்ந்த மக்களுக்கே யன்றித் தேவர்களுக்கும் குருவாயுள்ளவன் இறைவனாதல் பற்றி வானோர் குருவனே ' என்றார் . ஒருவனே என்பது எதுகை நோக்கிக் குருவனே என்றாயிற்று . கோமளம் - மென்மை ; இளமையுமாம் . கொழுந்து போன்றவனைக் கொழுந்து என்றார் . ஆள்வதற்குரியவன் விரை மலர்த்திருப்பாதம் முற்றினா விளந் தளிர் ( சத 34 ) என வருதலுங் காண்க . கொழுந்து - தளிர் . கோமளக் கொழுந்து என்பதற்கு அழகிய தீபச் சுடர் போன்றவன் எனினுமாம் . ஈண்டு சுடர் சிவலிங்க குறிக்கும் . வடிவினைச்