திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை படரை: மன்ன - என் அரசே; நாயினே னை = நாயைப் போன்ற இழிந்தவனாகிய என்னை; ஆவ என்று பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு அருளும் நீ-ஆஆ என்று இரங்கியருளி பொய்ம்மை யாகிய உலகப்பற்றை ஒழித்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருளியநீ; அடியனேனும் பூண்டு கொண்டு நின் அடிமையாகிய யானும் நின் தொண்டினை மேற்கொண்டு; போற்றி என்றும் போற்றி என்றும் - வணக் கம் என்றும் வணக்கம் என்றும் பன்முறை கூறிக்கொண்டு; மாண்டு வந்து மாண்டு வந்து - பன்முறை இறந்து பிறந்து இறந்து பிறந்தாயி னும்; மின் வணங்க = நின்னை மறவாது வணங்கும் பொருட்டு; நின் கழற் மின் வண கண் அன்பு வேண்டும் - நின் திருவடிக்கண் அன்பினைத் தந்தருளவேண்டும். வக 330 மன்ன ! நாயினேனை ஆஆ என்று இரங்கியருளி பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருளிய நீ நின் அடிமையாகிய யானும் நின் தொண்டினை மேற்கொண்டு வணக்கம் என்றும் வணக்கம் என்றும் பன் முறை கூறிக்கொண்டு பலமுறை இறந்து பிறந்து இறந்து பிறந்தாயி னும் நின்னை மறவாது வணங்கும் பொருட்டு நின் திருவடிக்கண் அன்பி னைத் தந்தருள வேண்டும் என்பதாம். வேண்டும் மின்கழற் கன்பு என்பதில் வேண்டும் என்பதற்குத் தந் தருள வேண்டும் என ஆற்றலால் ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. பொய்ம்மை என்றது நிலையில்லாத அகப்புறப் பற்றுக்கன. மெய்ம்மையே ஆண்டு கொண்டு என்றது. *கண்ணார நிறு இட்ட அன்பரோடு யாவரும் காண (சத 49) வெளிப்படையாக ஆட்கொண் டமையைக் குறித்தது. ஆ. ஆ. என்னும் இரக்கக் குறிப்புச் சொல் ஆவ எனச் செய்யுள் நோக்கிக் குறுகிகின்றது. " அளித்து வந்தெனக் காவயென் றருளி" (செத்திலாப் 10) எனப் பிறாண்டு வருதல் காண்க. நாயினேனை ஆவவென்று பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு அருளுநீ என இயைத்து நாயினேனை ஆவாவென்று இரங்கி யருளி பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருள்வாயாக என உரைப்பாருமுளர். அங்ஙனம் உரைப்பின் அடிகள் இன்னும் இறைவ ஞால் ஆட்கொள்ளப் பெற்றிலர் என்றும் அதனால் தம்மை ஆட்கொள்ள வேண்டுகின்றார் என்றும் பொருமையும். இறைவனால் ஆட்கொண்ட பின்னரே இத்திருவாசகத்தைப் பாடியருளும் அடிகள் ஆட்கொண்டருள வேண்டும் என்றல் வேண்டா கூற்றாகும். அடிகள் இத்திருப்பாட்டில் வேண்டிக் கொள்வது இறைவன் தம்மை உடனேயே தன்பால் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. பிராரத்த விளையுண்மையால் அது முடியா தெனில் மாண்டு மாண்டு வந்து வந்தாயினும் போற்றி என்றும் போற்றி என்றும் நின்னை மறவாது வணங்குதற்குரிய நின்கழற் கண் அன்பினைத் தந்தருள வேண்டும் என்பது. திருச்சதகம் 331 அடியனேனும் என்பதில் உம்மை, நின் திருவடிப்பேற்றை உடனே பெறும் பக்குவமில்லாதவனாகிய யானும் என இழிவு சிறப்பு. போற்றி போற்றி என்றும் என்றும் என்பதைப் போற்றி என்றும் போற்றி என் றும் என இயைத்து வணக்கம் என்றும் வணக்கம் என்றும் பலகாற் கூறி எனப் பொருள் கொள்க. மாண்டு வந்து மாண்டு வந்து எனக் கூட்டி இறந்து பிறந்து இறந்து பிறந்து எனவுரைக்க. பிறந்து என்பதற்குப் பிறந்தாயினும் என ஒரு சொல் ஆற்றவால் வருவிக்கப்பட்டது. மன்ன, அருளும் மாண்டு மாண்டு வந்து நின் வணங்க நின்கழற்கண் அன்பு தந்தருள வேண்டும் என முடிக்க. இதன்கண், வேண்டும் நின்கழற்கண் அன்பு என்றதனால் சாதனமா கிய அன்பு கிடைக்கவே சாத்தியமாகிய ஆனந்தத்தழுந்தவ் ஒருதலையாக லின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 79. வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கும் ஒலமிட் இணங்கு நிள்ணை யெய்த அற்று மற்ருெ ருண்மை யின்மையின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற குளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநி னைப்பதே. ப-ரை: இணங்கு கொங்கை மங்கை பங்க - ஒத்த கொங்கைகளை யுடைய மங்கையது கூற்றையுடையவனே, மற்று ஓர் உண்மை இன்மை யின் - நின்னொடொத்த பிறிதொரு உண்மைப் பொருள் இல்லாமையினால், நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும் - இணையிலியாகிய நின்னை மண் ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் வணங்குவர்; வேதம் நான்கும் நின்னை எய்தல் உற்று ஓலம் இட்டு உணங்கும் = நான்கு வேதங்களும் நின் உண் மைத் தன்மையைக் கூறத்தொடங்கி மாட்டாமையால் இஃதல்லை எனக் கூறி அடைக்கலம் வேண்டி வாடிநிற்கும்; அங்ஙனம் அருமையுடையையா யினும், யாம் வணங்கி விடேங்கள் என்ன நின் அடியோமாகிய மலங் கள் நின்னை வணங்கி விடமாட்டோம் என்று பெருமதிழ்ச்சியால் கூற; வந்து நின்று அருளுதற்கு நினைப்பது என் கொல் - வெளிப்பட்டு வந்து நின்று அருள் செய்வதற்குத் தடையாகத் திருவுள்ளத்துக் கருதுவது யாதோ? மங்கை பங்கனே, நின்னொடு ஒத்த பிறிதொரு உண்மைப் பொருள் இன்மையின் மண்ணவரும், விண்ணவரும் நின்னையே வணங்குவர்; வேதம் நான்கும் நின் உண்மை இயல்பைக் கூறத் தொடங்கி ஓல மீட்டு வாடா நிற்கும்; அங்ஙனம் அருமையுடையையாயினும்; நின் அடிமையாகிய யா யாங்கள் சின்னை வணங்கி விடமாட்டோம் என்று பெரு மாட்டாமையால்
திருவாசக ஆராய்ச்சியுரை படரை : மன்ன - என் அரசே ; நாயினே னை = நாயைப் போன்ற இழிந்தவனாகிய என்னை ; ஆவ என்று பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு அருளும் நீ - ஆஆ என்று இரங்கியருளி பொய்ம்மை யாகிய உலகப்பற்றை ஒழித்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருளியநீ ; அடியனேனும் பூண்டு கொண்டு நின் அடிமையாகிய யானும் நின் தொண்டினை மேற்கொண்டு ; போற்றி என்றும் போற்றி என்றும் - வணக் கம் என்றும் வணக்கம் என்றும் பன்முறை கூறிக்கொண்டு ; மாண்டு வந்து மாண்டு வந்து - பன்முறை இறந்து பிறந்து இறந்து பிறந்தாயி னும் ; மின் வணங்க = நின்னை மறவாது வணங்கும் பொருட்டு ; நின் கழற் மின் வண கண் அன்பு வேண்டும் - நின் திருவடிக்கண் அன்பினைத் தந்தருளவேண்டும் . வக 330 மன்ன ! நாயினேனை ஆஆ என்று இரங்கியருளி பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருளிய நீ நின் அடிமையாகிய யானும் நின் தொண்டினை மேற்கொண்டு வணக்கம் என்றும் வணக்கம் என்றும் பன் முறை கூறிக்கொண்டு பலமுறை இறந்து பிறந்து இறந்து பிறந்தாயி னும் நின்னை மறவாது வணங்கும் பொருட்டு நின் திருவடிக்கண் அன்பி னைத் தந்தருள வேண்டும் என்பதாம் . வேண்டும் மின்கழற் கன்பு என்பதில் வேண்டும் என்பதற்குத் தந் தருள வேண்டும் என ஆற்றலால் ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது . பொய்ம்மை என்றது நிலையில்லாத அகப்புறப் பற்றுக்கன . மெய்ம்மையே ஆண்டு கொண்டு என்றது . * கண்ணார நிறு இட்ட அன்பரோடு யாவரும் காண ( சத 49 ) வெளிப்படையாக ஆட்கொண் டமையைக் குறித்தது . . . என்னும் இரக்கக் குறிப்புச் சொல் ஆவ எனச் செய்யுள் நோக்கிக் குறுகிகின்றது . அளித்து வந்தெனக் காவயென் றருளி ( செத்திலாப் 10 ) எனப் பிறாண்டு வருதல் காண்க . நாயினேனை ஆவவென்று பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு அருளுநீ என இயைத்து நாயினேனை ஆவாவென்று இரங்கி யருளி பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையாகவே ஆட்கொண்டருள்வாயாக என உரைப்பாருமுளர் . அங்ஙனம் உரைப்பின் அடிகள் இன்னும் இறைவ ஞால் ஆட்கொள்ளப் பெற்றிலர் என்றும் அதனால் தம்மை ஆட்கொள்ள வேண்டுகின்றார் என்றும் பொருமையும் . இறைவனால் ஆட்கொண்ட பின்னரே இத்திருவாசகத்தைப் பாடியருளும் அடிகள் ஆட்கொண்டருள வேண்டும் என்றல் வேண்டா கூற்றாகும் . அடிகள் இத்திருப்பாட்டில் வேண்டிக் கொள்வது இறைவன் தம்மை உடனேயே தன்பால் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது . பிராரத்த விளையுண்மையால் அது முடியா தெனில் மாண்டு மாண்டு வந்து வந்தாயினும் போற்றி என்றும் போற்றி என்றும் நின்னை மறவாது வணங்குதற்குரிய நின்கழற் கண் அன்பினைத் தந்தருள வேண்டும் என்பது . திருச்சதகம் 331 அடியனேனும் என்பதில் உம்மை நின் திருவடிப்பேற்றை உடனே பெறும் பக்குவமில்லாதவனாகிய யானும் என இழிவு சிறப்பு . போற்றி போற்றி என்றும் என்றும் என்பதைப் போற்றி என்றும் போற்றி என் றும் என இயைத்து வணக்கம் என்றும் வணக்கம் என்றும் பலகாற் கூறி எனப் பொருள் கொள்க . மாண்டு வந்து மாண்டு வந்து எனக் கூட்டி இறந்து பிறந்து இறந்து பிறந்து எனவுரைக்க . பிறந்து என்பதற்குப் பிறந்தாயினும் என ஒரு சொல் ஆற்றவால் வருவிக்கப்பட்டது . மன்ன அருளும் மாண்டு மாண்டு வந்து நின் வணங்க நின்கழற்கண் அன்பு தந்தருள வேண்டும் என முடிக்க . இதன்கண் வேண்டும் நின்கழற்கண் அன்பு என்றதனால் சாதனமா கிய அன்பு கிடைக்கவே சாத்தியமாகிய ஆனந்தத்தழுந்தவ் ஒருதலையாக லின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 79. வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கும் ஒலமிட் இணங்கு நிள்ணை யெய்த அற்று மற்ருெ ருண்மை யின்மையின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற குளுதற் கிணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநி னைப்பதே . - ரை : இணங்கு கொங்கை மங்கை பங்க - ஒத்த கொங்கைகளை யுடைய மங்கையது கூற்றையுடையவனே மற்று ஓர் உண்மை இன்மை யின் - நின்னொடொத்த பிறிதொரு உண்மைப் பொருள் இல்லாமையினால் நின்னை மண்ணும் விண்ணும் வணங்கும் - இணையிலியாகிய நின்னை மண் ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் வணங்குவர் ; வேதம் நான்கும் நின்னை எய்தல் உற்று ஓலம் இட்டு உணங்கும் = நான்கு வேதங்களும் நின் உண் மைத் தன்மையைக் கூறத்தொடங்கி மாட்டாமையால் இஃதல்லை எனக் கூறி அடைக்கலம் வேண்டி வாடிநிற்கும் ; அங்ஙனம் அருமையுடையையா யினும் யாம் வணங்கி விடேங்கள் என்ன நின் அடியோமாகிய மலங் கள் நின்னை வணங்கி விடமாட்டோம் என்று பெருமதிழ்ச்சியால் கூற ; வந்து நின்று அருளுதற்கு நினைப்பது என் கொல் - வெளிப்பட்டு வந்து நின்று அருள் செய்வதற்குத் தடையாகத் திருவுள்ளத்துக் கருதுவது யாதோ ? மங்கை பங்கனே நின்னொடு ஒத்த பிறிதொரு உண்மைப் பொருள் இன்மையின் மண்ணவரும் விண்ணவரும் நின்னையே வணங்குவர் ; வேதம் நான்கும் நின் உண்மை இயல்பைக் கூறத் தொடங்கி ஓல மீட்டு வாடா நிற்கும் ; அங்ஙனம் அருமையுடையையாயினும் ; நின் அடிமையாகிய யா யாங்கள் சின்னை வணங்கி விடமாட்டோம் என்று பெரு மாட்டாமையால்