திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

சிவபுராணம்ம் பெற்ற அத்தன்மையினால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - அவனது திருவருளினாலே அவனது திருவடிகளை வணங்கி முந்தை வினை முழுதும் ஓய - முற்பிறப்பிற் செய்த வினைமுழுவதும் வலிகுன்றிப் போக வும், சிந்தை மகிழ - மனம் மகிழ்ச்சியடையவும், சிவபுராணம் தன்னை யான் உரைப்பன் - சிவனது பழமையான முறைமையினை அடியேன் கூறு வேனாயினேன். 8 கண் நுதலான் - கண்ணமைந்த நெற்றியையுடைய இறைவன். 'கண் சுமந்த நெற்றிக் கடவுள்'" (திருவா. அம்மானை B) கண்ணுதலான் ஓரு காதலின் நிற்கவும் (திருமத். (1) எனப் பிறாண்டும் வருவன காண்க. கண்ணுதலான் என்பதற்கு நெற்றிக்கண்ணையுடைய இறைவன் எனினுமாம். எண்ணுதற்கும் என உம்மை விரிக்க. எண்ணுதற்கு என்றமையாவ் சொல்லுதற்கும் காண்டற்கும் எட்டாமையும் கொள்ளப்படும். எழில் என்பதற்கு எழுச்சியெனினுமமையும். கழல் ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்தியது இறைஞ்சி - தாழ்ந்து. "எல்லை செல்ல வேமூர் பிறைஞ்சி (குறிஞ்சி 215) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கழல் இறைஞ்சி என்பதற்குத் திருவடிகளை வணங்கி எனப் பொருளுரைக்கின், ''அவரு ளாலே யவன்றாள் வணங்கி' (18) எனக் கூறப்படுதலிற் கூறியது கூறலாம்; ஆதலால் திருவடிகள் அருமையில் எளியனவாய்ப் பூமியிற்றழ்ந்து எனப் பொருள் உரைக்கப்பட்டது. இறைஞ்சி என்னும் சினைவினை வந்தெய்தி என்னும் முதல் வினையொடு முடிந்தது. இனி,கழலிறைஞ்ச வந்தெய்தி எனச் செயவெனெச்சமாக்கி முடிப்பிதுமமையும்.. 'கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி, எண்ணுதற் கெட்டா வெழிலார் கழ லிறைஞ்சி, விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய், எண்ணீறந்தெல்வை யிலாதானே' எனக் கிடந்தவாறே கூட்டிப் பொரு ளுரைக்கின் 'கண்ணுதலான்' என்னும் படர்க்கையும் 'மிக்காய்' 'விளங் கொளியாய்' 'எண்ணிறந்தெல்லை யிலாதானே' என்னும் முன்னிலைகளும் தம்முளியையாமையின், கண்ணுதலான் 21) எண்ணுதற் கட்டா எழிலார் கழில் இறைஞ்சி (22) வந்தெய்தி தன்கருணைக்கண் காட்ட (21) என மாறிக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது. கருணைக் கண்காட்டல் =நயனதீக்கை செய்து உபதோஞ் செய்தல். காட்ட என்னும் செயவெனெச்சம் ஏதுப்பொருளில் வந்தது. சாட்ட(21) நின்றவதனால் (I7) என இயையும். அவன் சிவன் என மாறீக்கூட்டி அவன் என்றது கண்ணுதலானைச் சுட்டியதாகக் கொள்க. தன்கருணைக் கண்காட்டலின் பேருக இறைவன் சிந்தையுள் நின்றமையின் சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் என்றார். அவனருளாலே அவன்றாள் வணங்கி என்றது சிவனது திருவருளி னாலே அவனது திருவடிகளை வணங்கி என்றவாறு. ரீத்தனருள் பெற்று சிவபுராணம் அவர் பாதம்நினைக்கும் நியமத் தலைநின்றார் எனப் பெரியபுராணத்தும் (பெருமிழலைக் குறும்பனார் செய்.4) வருதல் காண்க. *** உயிர்க்குயிராய் இறைவன் உண்ணின்று இயக்குகின்றமையால் தம் செயலெல்லாம் அவன் அருள்வழிச்செய்யும் செயல்களாதலின் 'அருளால் வணங்கி மகிழ ஓய மான் புராணந்தன்னை உரைப்பன்' என்றார். சிவபுரா ணத்தை உரைப்பதன் பயன் முந்தை வினைமுழுதும் ஓய்தலும் சிந்தை மகிழ்தலுமாகும். முந்தை - முன். முந்தை வினையென்றது முற்பிறப்பிள் செய்த சஞ்சிதகன்மங்களை. வினைமுழுதும் ஓய என்றது சஞ்சித கன்மங் கள் முழுவதும் நுகர்வுக்கு வாராமல் வலிகுன்றிப்போக என்றவாது.ஓய். நுணுக; என்றது வலிகுன்ற என்றபடி. ஓய்தல் என்பது நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்பது, "ஓய்த லாய்த னிழத்தல் சாஅய், யாவயி னான்கு முள்ளத னுணுக்கம்'' (தொல்.உரி 34) என்பனாலுமறிக. இதுவரையுங் கூறிய இருபத்திரண்டு அடிகளில் முதற்பத்து அடிக் ளால் வாழ்த்தும், பின்னர் ஆறு அடிகளால் வணக்கமும், அதன் பின் னர் ஆறு அடிகளால் வருபொருளுரைத்தலுமாகிய தற்சிறப்புப்பாயிரம் கூறியருளினார்.ஆறுமுதல் பத்து அடிவரை ' வெல்க' என மற்றொரு பொருள் கூறியது என்னையெனின், 'வெற்றி பெறுக என்பதும் வாழ்த்தாகவே அமைதலினென்க. 23-5. விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் - விண்ணுலகம் முழுவ தும் நிறைந்தும் மண்ணுலகம் முழுவதும் நிறைந்தும் அவற்றிற்கு அப் பாலுமாய் நிறைந்தவனே. விளங்கு ஒளியாய் - விளங்குகின்ற ஒளிவடிவி ளனே. எண் இறந்து எல்லை இலாதானே - சுட்டியுணரப்படும் தன்மை யினைக் கடந்து வரம்பின்றி விரிந்தவனே.நின் பெரும் சீர் - நின் துடைய பெரிய புகழினை. பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்- தீயவினையையுடையேனாகிய யான் நின்னருளாலன்றிப் புகழ்ந்துரைக்கும் நெறி ஒன்றனையும் அறிகிலேன். இறைவள் விண்ணுலகம் மண்ணுலகம் முதலாகிய எல்லாவுலகங்க ளும் தன்னுள் அடங்கத் தான் அவற்றிற்கு அப்பாலுமாய் நிறைந்து ஒளிவடிவிளனாய் உள்ளான் என்பது "விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்'' என்பதனாற் கூறப்பட்டது. "உலகெலாஞ் சோதியாய் நிறைந்தான்" எனத் தேவாரத்தும் (ஞான 142:7) வருதல் காண்க. இறைவன் விண்னும் மண்ணும் நிறைந்த ஒளிவடிவினன் என் பது, 6+ அண்டமா விருளூடு கடந்தும்பர் உண்டுபோது மோரொண்சுடர் : தே.நாவு,211:2. என அப்பரடிகள் அருளியவாற்றானுமறியப்படும். 9
சிவபுராணம்ம் பெற்ற அத்தன்மையினால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - அவனது திருவருளினாலே அவனது திருவடிகளை வணங்கி முந்தை வினை முழுதும் ஓய - முற்பிறப்பிற் செய்த வினைமுழுவதும் வலிகுன்றிப் போக வும் சிந்தை மகிழ - மனம் மகிழ்ச்சியடையவும் சிவபுராணம் தன்னை யான் உரைப்பன் - சிவனது பழமையான முறைமையினை அடியேன் கூறு வேனாயினேன் . 8 கண் நுதலான் - கண்ணமைந்த நெற்றியையுடைய இறைவன் . ' கண் சுமந்த நெற்றிக் கடவுள் ' ( திருவா . அம்மானை B ) கண்ணுதலான் ஓரு காதலின் நிற்கவும் ( திருமத் . ( 1 ) எனப் பிறாண்டும் வருவன காண்க . கண்ணுதலான் என்பதற்கு நெற்றிக்கண்ணையுடைய இறைவன் எனினுமாம் . எண்ணுதற்கும் என உம்மை விரிக்க . எண்ணுதற்கு என்றமையாவ் சொல்லுதற்கும் காண்டற்கும் எட்டாமையும் கொள்ளப்படும் . எழில் என்பதற்கு எழுச்சியெனினுமமையும் . கழல் ஆகுபெயராய்த் திருவடியை உணர்த்தியது இறைஞ்சி - தாழ்ந்து . எல்லை செல்ல வேமூர் பிறைஞ்சி ( குறிஞ்சி 215 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கழல் இறைஞ்சி என்பதற்குத் திருவடிகளை வணங்கி எனப் பொருளுரைக்கின் ' ' அவரு ளாலே யவன்றாள் வணங்கி ' ( 18 ) எனக் கூறப்படுதலிற் கூறியது கூறலாம் ; ஆதலால் திருவடிகள் அருமையில் எளியனவாய்ப் பூமியிற்றழ்ந்து எனப் பொருள் உரைக்கப்பட்டது . இறைஞ்சி என்னும் சினைவினை வந்தெய்தி என்னும் முதல் வினையொடு முடிந்தது . இனி கழலிறைஞ்ச வந்தெய்தி எனச் செயவெனெச்சமாக்கி முடிப்பிதுமமையும் .. ' கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா வெழிலார் கழ லிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணீறந்தெல்வை யிலாதானே ' எனக் கிடந்தவாறே கூட்டிப் பொரு ளுரைக்கின் ' கண்ணுதலான் ' என்னும் படர்க்கையும் ' மிக்காய் ' ' விளங் கொளியாய் ' ' எண்ணிறந்தெல்லை யிலாதானே ' என்னும் முன்னிலைகளும் தம்முளியையாமையின் கண்ணுதலான் 21 ) எண்ணுதற் கட்டா எழிலார் கழில் இறைஞ்சி ( 22 ) வந்தெய்தி தன்கருணைக்கண் காட்ட ( 21 ) என மாறிக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது . கருணைக் கண்காட்டல் = நயனதீக்கை செய்து உபதோஞ் செய்தல் . காட்ட என்னும் செயவெனெச்சம் ஏதுப்பொருளில் வந்தது . சாட்ட ( 21 ) நின்றவதனால் ( I7 ) என இயையும் . அவன் சிவன் என மாறீக்கூட்டி அவன் என்றது கண்ணுதலானைச் சுட்டியதாகக் கொள்க . தன்கருணைக் கண்காட்டலின் பேருக இறைவன் சிந்தையுள் நின்றமையின் சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் என்றார் . அவனருளாலே அவன்றாள் வணங்கி என்றது சிவனது திருவருளி னாலே அவனது திருவடிகளை வணங்கி என்றவாறு . ரீத்தனருள் பெற்று சிவபுராணம் அவர் பாதம்நினைக்கும் நியமத் தலைநின்றார் எனப் பெரியபுராணத்தும் ( பெருமிழலைக் குறும்பனார் செய் .4 ) வருதல் காண்க . *** உயிர்க்குயிராய் இறைவன் உண்ணின்று இயக்குகின்றமையால் தம் செயலெல்லாம் அவன் அருள்வழிச்செய்யும் செயல்களாதலின் ' அருளால் வணங்கி மகிழ ஓய மான் புராணந்தன்னை உரைப்பன் ' என்றார் . சிவபுரா ணத்தை உரைப்பதன் பயன் முந்தை வினைமுழுதும் ஓய்தலும் சிந்தை மகிழ்தலுமாகும் . முந்தை - முன் . முந்தை வினையென்றது முற்பிறப்பிள் செய்த சஞ்சிதகன்மங்களை . வினைமுழுதும் ஓய என்றது சஞ்சித கன்மங் கள் முழுவதும் நுகர்வுக்கு வாராமல் வலிகுன்றிப்போக என்றவாது.ஓய் . நுணுக ; என்றது வலிகுன்ற என்றபடி . ஓய்தல் என்பது நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்பது ஓய்த லாய்த னிழத்தல் சாஅய் யாவயி னான்கு முள்ளத னுணுக்கம் ' ' ( தொல்.உரி 34 ) என்பனாலுமறிக . இதுவரையுங் கூறிய இருபத்திரண்டு அடிகளில் முதற்பத்து அடிக் ளால் வாழ்த்தும் பின்னர் ஆறு அடிகளால் வணக்கமும் அதன் பின் னர் ஆறு அடிகளால் வருபொருளுரைத்தலுமாகிய தற்சிறப்புப்பாயிரம் கூறியருளினார்.ஆறுமுதல் பத்து அடிவரை ' வெல்க ' என மற்றொரு பொருள் கூறியது என்னையெனின் ' வெற்றி பெறுக என்பதும் வாழ்த்தாகவே அமைதலினென்க . 23-5 . விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் - விண்ணுலகம் முழுவ தும் நிறைந்தும் மண்ணுலகம் முழுவதும் நிறைந்தும் அவற்றிற்கு அப் பாலுமாய் நிறைந்தவனே . விளங்கு ஒளியாய் - விளங்குகின்ற ஒளிவடிவி ளனே . எண் இறந்து எல்லை இலாதானே - சுட்டியுணரப்படும் தன்மை யினைக் கடந்து வரம்பின்றி விரிந்தவனே.நின் பெரும் சீர் - நின் துடைய பெரிய புகழினை . பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் தீயவினையையுடையேனாகிய யான் நின்னருளாலன்றிப் புகழ்ந்துரைக்கும் நெறி ஒன்றனையும் அறிகிலேன் . இறைவள் விண்ணுலகம் மண்ணுலகம் முதலாகிய எல்லாவுலகங்க ளும் தன்னுள் அடங்கத் தான் அவற்றிற்கு அப்பாலுமாய் நிறைந்து ஒளிவடிவிளனாய் உள்ளான் என்பது விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் ' ' என்பதனாற் கூறப்பட்டது . உலகெலாஞ் சோதியாய் நிறைந்தான் எனத் தேவாரத்தும் ( ஞான 142 : 7 ) வருதல் காண்க . இறைவன் விண்னும் மண்ணும் நிறைந்த ஒளிவடிவினன் என் பது 6+ அண்டமா விருளூடு கடந்தும்பர் உண்டுபோது மோரொண்சுடர் : தே.நாவு 211 : 2 . என அப்பரடிகள் அருளியவாற்றானுமறியப்படும் . 9