திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

336 திருவாசக ஆராய்ச்சியுரை எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. உண்மை- உளதாந் தன்மை. மற்றொர் என்றது பிறிதொரு பொருளை உணர்த்தியது. அதனை அஃ றிணையாற் கூறியது இறை உயிர் உலகு என்னும் முப்பொருள்களுள் இறைவனே உயிர்களுக்கு உய்தி அருள்பவனன்றி உலகமல்லாமையின். பைதல்- துன்பம். என் று-என்று கரும். இன்மைபைதல் உண்டாவதற்கு ஏது. பாதுகாத்து இரங்கு என்பதற்கு இரங்கிப் பாதுகாத்தருள்க எனப் பொருளுரைக்க, பாவி - பாவமுடையவன். பாவம் -தன்மை. அஃது இறைவ னால் ஆட்கொள்ளப்பட்டும் பின்னர் அவனைப் பிரிந்து எய்த முடியா திருக்கும் தன்மை. பாவியேற்கு - தீவினையேற்கு எனினுமாம். ஈது என்றது இறைவன் இரங்கியருளுதலைச் சுட்டியது. வீட்டின் பப் பேற்றிற்கு இரங்கியருளுதலே சிறந்த ஏதுவாமாகலின் தலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லையே" என்றார். ஒன்றுதல் - இறைவ னோடு அத்துவிதமாகக் கலத்தல். இதன்கண், எய்தலாவது என்று? என்றும், பைதலாவதென்று பாது காத்திரங்கு என்றும் வேண்டிக் கொள்ளுதலால் ஆனந்தத்தழுந்தும் ஆர்வ முடைமை பெறப்படுதலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து 77. நுதலிய பொருள் போதருதல் காண்க. ச் செல்வக்க 82. ஈசனே நீ யல்ல தில்லை யிக்கும் அங்கும் என்பதும் பேசி னேனேர் பேதமின்மை பேதை யேனென் எம்பிரான் நீச னேனை யாண்டு கொண்ட நின்ம லாவொர் நின்னலால் தேச னேயொர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே. ப--ரை: ஈசனே-முத்திச் செல்வத்தையுடையவனே: இங்கும் அங் கும் நீ அல்லது இல்லை என்பதும்-இகத்திலும். பரத்திலும் தணையான பரம்பொருள் அல்லாமல் பிறிதொரு பொருள் இல்லை என்பதையும், பேதம் இன்மை-உயிர் வேறுபாடின்றி அத்துவிதமடைதலாகிய வீட்டின் விலியாகிய யான் எடுத்துரைத்தேன்; என் எம்பிரான்-எனக்குச் சிறப் புரிமையுடைய எங்கள் தலைவனே; நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா- கீழ்மையுடையவனாகிய என்னை ஆட்கொண்டருளிய தூயோனே, தேசனே- ஞானாசாரியனே ; ஓர் நின் அவ்வால்-ஒப்பற்ற நின்னையல்லாமல் ஓர் தேவர் உண்மை சிந்தை சந்தியாது - பிறிதொரு தெய்வம் உண்டு என்பதை என் மனம் நினையாது; ஆதலின் நின்னோடொன் நுமாறு அருள் செய்ய வேண்டும். பரம்பொருள். நியே ஈசனே இகத்திலும் பரத்திலும் துணையான யல்லாமல் பிறிதொரு பொருள் இல்லை என்பதையம்; உயிர் வேறுபா டின்றி அத்துவிதமடைதலாகிய வீட்டின் இயல்பையும் ஒன்றுக்கும் பற் ருத அறிவிலியாகிய யான் பேசினேன்; என்பிரானே ! நீசனாகிய என்னை ஆண்டு கொண்ட மின்மலா: தேசனே ஒப்பற்ற நின்னையல்லாமல் பிறி நொரு தெய்வம் உண்டு என் பதை என்மனம் நினையாது; ஆதலால் நின்னோடொன்றுமாறு அருள்செய்ய வேண்டும் என்பதாம். திருச்சதகம் 337 நீ யல்லது இல்லை என்றது நீயேயல்லாமல் பிறிதொரு பொருள் இல்வை என்றவாறு. ஈசனே என்று விளித்தமையால் இல்லை என்பதற்கு நின் போல் ஈசத்துவமுடைய பிறிதொரு பொருள் இல்லை எனக் கொள்க. இங்கும் அங்கும் - இகபரம் இரண்டினும், இம்மை மறுமை இரண்டினும் எனினுமாம். இங்கும் அங்கும் துணையாவார் இறைவனே என்பது, "இகபரமுமாம் பேராளன்" ஞான 184:3 துஞ்சும் போதும் துணையென லாகுமே" நாவு 153: 10 எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக. ** ஓர் பேதமின்மை என்றது முத்திநிலைக்கண் உயிர் இறைவனொடு பிரி வின்றி அத்துவிதமாய் நிற்கும் நிலையை உணர்த்தியது. பேதமின்மை யென்பதன்கன் உம்மை விரித்துரைக்க. ஓர் பேதையேன் சினேன் என்றது, ஒன்றுக்கும் பற்றாத அறிவிலியாகிய மான் பேரறிஞன் போல நின்னியல்பினையும் மீ அருளும் வீட்டின் இயல்பினையும் எடுத்துரைத்தேன்; அதனைப் பொறுத்தருள்க என்றவாறு. என் எம்பிரான்-எனக்குச் சிறப் புரிமையுடைய எங்கள் தலைவன். நின் கழலிணையலாதிலேன் என் எம் பிரான்” (சத 72) என வருதலும் காண்க, மெய்யன்பும் பக்குவ முதிர்ச்சியுமாகிய உயர்வு நன்குடைய அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் இயல்புபற்றி "சேனேனை" என்றார். 'யாது மொன்றல்லாப் பொல்லா நாயான் நீசனேனை ஆண்டாய்க்கு" (சத 51) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காலக நின்மலன் - அழுக் கற்றவன்; என்றது இயல்பாகவே பாசங்களினின்று நீங்கினவன் என்ற வாறு. ஓர் இரண்டனுள் முன்னது ஒப்பற்ற என்னும் பொருளிலும் பின்னது ஒரு என்னும் பொருளிலும் நின்றன. தேசன் ஒளிவடிவினன். 3. s- 9 எப்பொழுதும் இறைவனைச் சிந்தித்த பயிற்சி வயத்ததான அடிகள் சிந்தை இறைவனையன்றிப் பிறிதொரு தெய்வமுண்மையைச் சிந்தியாமை யின் "நின்னால் ஓர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே" எனச் சிந்தித்தலைச் சிந்தையின் செயலாக அருளிச் செய்தனர். "நற்றவாவுனை தான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே" தே 48:1 எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாறுங் காண்க, அடிகள் பிற தெய் வத்தைச் சிந்தியாமை ("உள்ளேன் பிற தெய்வ முன்னையல்லா தெங்கள் உத்தமனே (சத 2) என்பதனாலுமறிக. '"நச்சே னொருவரை நானுமை யல்லால் நாட்டியத்தான் குடி நம்பீ (தே 15:2) "எந்தாய் நின்னை யல்லா லினியாரை நினைக்கேனே" (தே 24:?) எனச் சுந்தரமூர்த்தி வாமிகள் அருளியமையுங் காண்க. சிந்தை சிந்தியாது - மனஞ் சித்தி கின்ஞேடொன்றுமாறு அருள் செய்ய வேண்டுமென்பது குறிப பெச்சம். 43
336 திருவாசக ஆராய்ச்சியுரை எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . உண்மை- உளதாந் தன்மை . மற்றொர் என்றது பிறிதொரு பொருளை உணர்த்தியது . அதனை அஃ றிணையாற் கூறியது இறை உயிர் உலகு என்னும் முப்பொருள்களுள் இறைவனே உயிர்களுக்கு உய்தி அருள்பவனன்றி உலகமல்லாமையின் . பைதல்- துன்பம் . என் று - என்று கரும் . இன்மைபைதல் உண்டாவதற்கு ஏது . பாதுகாத்து இரங்கு என்பதற்கு இரங்கிப் பாதுகாத்தருள்க எனப் பொருளுரைக்க பாவி - பாவமுடையவன் . பாவம் -தன்மை . அஃது இறைவ னால் ஆட்கொள்ளப்பட்டும் பின்னர் அவனைப் பிரிந்து எய்த முடியா திருக்கும் தன்மை . பாவியேற்கு - தீவினையேற்கு எனினுமாம் . ஈது என்றது இறைவன் இரங்கியருளுதலைச் சுட்டியது . வீட்டின் பப் பேற்றிற்கு இரங்கியருளுதலே சிறந்த ஏதுவாமாகலின் தலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லையே என்றார் . ஒன்றுதல் - இறைவ னோடு அத்துவிதமாகக் கலத்தல் . இதன்கண் எய்தலாவது என்று ? என்றும் பைதலாவதென்று பாது காத்திரங்கு என்றும் வேண்டிக் கொள்ளுதலால் ஆனந்தத்தழுந்தும் ஆர்வ முடைமை பெறப்படுதலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து 77 . நுதலிய பொருள் போதருதல் காண்க . ச் செல்வக்க 82. ஈசனே நீ யல்ல தில்லை யிக்கும் அங்கும் என்பதும் பேசி னேனேர் பேதமின்மை பேதை யேனென் எம்பிரான் நீச னேனை யாண்டு கொண்ட நின்ம லாவொர் நின்னலால் தேச னேயொர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே . -- ரை : ஈசனே - முத்திச் செல்வத்தையுடையவனே : இங்கும் அங் கும் நீ அல்லது இல்லை என்பதும் - இகத்திலும் . பரத்திலும் தணையான பரம்பொருள் அல்லாமல் பிறிதொரு பொருள் இல்லை என்பதையும் பேதம் இன்மை - உயிர் வேறுபாடின்றி அத்துவிதமடைதலாகிய வீட்டின் விலியாகிய யான் எடுத்துரைத்தேன் ; என் எம்பிரான் - எனக்குச் சிறப் புரிமையுடைய எங்கள் தலைவனே ; நீசனேனை ஆண்டு கொண்ட நின்மலா கீழ்மையுடையவனாகிய என்னை ஆட்கொண்டருளிய தூயோனே தேசனே ஞானாசாரியனே ; ஓர் நின் அவ்வால் - ஒப்பற்ற நின்னையல்லாமல் ஓர் தேவர் உண்மை சிந்தை சந்தியாது - பிறிதொரு தெய்வம் உண்டு என்பதை என் மனம் நினையாது ; ஆதலின் நின்னோடொன் நுமாறு அருள் செய்ய வேண்டும் . பரம்பொருள் . நியே ஈசனே இகத்திலும் பரத்திலும் துணையான யல்லாமல் பிறிதொரு பொருள் இல்லை என்பதையம் ; உயிர் வேறுபா டின்றி அத்துவிதமடைதலாகிய வீட்டின் இயல்பையும் ஒன்றுக்கும் பற் ருத அறிவிலியாகிய யான் பேசினேன் ; என்பிரானே ! நீசனாகிய என்னை ஆண்டு கொண்ட மின்மலா : தேசனே ஒப்பற்ற நின்னையல்லாமல் பிறி நொரு தெய்வம் உண்டு என் பதை என்மனம் நினையாது ; ஆதலால் நின்னோடொன்றுமாறு அருள்செய்ய வேண்டும் என்பதாம் . திருச்சதகம் 337 நீ யல்லது இல்லை என்றது நீயேயல்லாமல் பிறிதொரு பொருள் இல்வை என்றவாறு . ஈசனே என்று விளித்தமையால் இல்லை என்பதற்கு நின் போல் ஈசத்துவமுடைய பிறிதொரு பொருள் இல்லை எனக் கொள்க . இங்கும் அங்கும் - இகபரம் இரண்டினும் இம்மை மறுமை இரண்டினும் எனினுமாம் . இங்கும் அங்கும் துணையாவார் இறைவனே என்பது இகபரமுமாம் பேராளன் ஞான 184 : 3 துஞ்சும் போதும் துணையென லாகுமே நாவு 153 : 10 எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக . ** ஓர் பேதமின்மை என்றது முத்திநிலைக்கண் உயிர் இறைவனொடு பிரி வின்றி அத்துவிதமாய் நிற்கும் நிலையை உணர்த்தியது . பேதமின்மை யென்பதன்கன் உம்மை விரித்துரைக்க . ஓர் பேதையேன் சினேன் என்றது ஒன்றுக்கும் பற்றாத அறிவிலியாகிய மான் பேரறிஞன் போல நின்னியல்பினையும் மீ அருளும் வீட்டின் இயல்பினையும் எடுத்துரைத்தேன் ; அதனைப் பொறுத்தருள்க என்றவாறு . என் எம்பிரான் - எனக்குச் சிறப் புரிமையுடைய எங்கள் தலைவன் . நின் கழலிணையலாதிலேன் என் எம் பிரான் ( சத 72 ) என வருதலும் காண்க மெய்யன்பும் பக்குவ முதிர்ச்சியுமாகிய உயர்வு நன்குடைய அடிகள் தம்மைத் தாழ்த்திக் கூறும் இயல்புபற்றி சேனேனை என்றார் . ' யாது மொன்றல்லாப் பொல்லா நாயான் நீசனேனை ஆண்டாய்க்கு ( சத 51 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காலக நின்மலன் - அழுக் கற்றவன் ; என்றது இயல்பாகவே பாசங்களினின்று நீங்கினவன் என்ற வாறு . ஓர் இரண்டனுள் முன்னது ஒப்பற்ற என்னும் பொருளிலும் பின்னது ஒரு என்னும் பொருளிலும் நின்றன . தேசன் ஒளிவடிவினன் . 3 . s- 9 எப்பொழுதும் இறைவனைச் சிந்தித்த பயிற்சி வயத்ததான அடிகள் சிந்தை இறைவனையன்றிப் பிறிதொரு தெய்வமுண்மையைச் சிந்தியாமை யின் நின்னால் ஓர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே எனச் சிந்தித்தலைச் சிந்தையின் செயலாக அருளிச் செய்தனர் . நற்றவாவுனை தான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே தே 48 : 1 எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவாறுங் காண்க அடிகள் பிற தெய் வத்தைச் சிந்தியாமை ( உள்ளேன் பிற தெய்வ முன்னையல்லா தெங்கள் உத்தமனே ( சத 2 ) என்பதனாலுமறிக . ' நச்சே னொருவரை நானுமை யல்லால் நாட்டியத்தான் குடி நம்பீ ( தே 15 : 2 ) எந்தாய் நின்னை யல்லா லினியாரை நினைக்கேனே ( தே 24 :? ) எனச் சுந்தரமூர்த்தி வாமிகள் அருளியமையுங் காண்க . சிந்தை சிந்தியாது - மனஞ் சித்தி கின்ஞேடொன்றுமாறு அருள் செய்ய வேண்டுமென்பது குறிப பெச்சம் . 43