திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

338 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண், சேனேனை யாண்டு கொண்ட நின்மலா, தேசனே என் சிந்தை மின்னல்வால் ஓர் தேவருண்மை சிந்தியாது. ஆதலால் இரங்கி நின்னை ஒன்றும் வண்ணம் அருள் செய்ய வேண்டும் என்பது பெறப்படு தலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் ட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 78. 83. சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களால் முந்தை யான காலம் நின்னை யெய்தி டாத மூர்க்சுனேன் வெந்தை யாளிழுந்தி லேன்என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை யாய நின்னை யின்னம் எய்த றுற்றி ருப்பனே. ப-ரை: ஐயா ! - வழிபாட்டிற்குரிய இறைவனே; சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்-மனம் செயல் கேள்வி மொழி சிறப்பில்லாத ஐம்பொறிகள் ஆகிய இவற்றால்; முந்தை ஆன காலம்- நின்னால் ஆட்கொள்ளப்பட்ட முற்காலத்தில்; நின்னை எய்திடாத மூர்க்க னேன்-நின்னை உடனே அடைதற்கேதுவாகிய பெரிய தவத்தைச் செய் யாத அறிவிலியாகிய யான்; விழுந்து வெந்திலேன்-தியில் விழுந்து வெந்தி லேன்; என் உள்ளம் வெள்கி விண்டிலேன்-நீ ஆட்கொண்டு பிரிந்தமை யால் என் மனம் நாணி உடைந்து இறந்திலேன்; எந்தையாகிய நின்னை- எமது தந்தையாகிய நின்னை; இன்னம் எய்தல் உற்று இருப்பன் - இன்ன மும் அடைதற்கு முயன்று கொண்டு இருப்பேனாயினேன். ஐயா, சிந்தை செய்கை கேள்வி வாக்கு சிறப்பில்லாத ஐம்பொறிகள் ஆகிய இவற்றால் முற்காலத்தில் நின்னை எய்திடாத மூர்க்கனாகிய யான் தீயில் விழுந்து வெந்திலேன்; என் உள்ளம் வெள்கி உடைந்து இறந்தி லேன்; எந்தையாகிய நின்னை இன்னமும் அடைதற்கு முயன்று கொண் டிருக்கிறேன். இந்நிலை கண்டு இரங்கியருள வேண்டும் என்பதாம். 2016-2 20 ஐம்புலன்களால் என்புழி ஆல் என்றது மூன்றனுருபைச் சிந்தை முதலியவற்றோடும் கூட்டி எண்ணும்மைகளை விரித்துரைக்க. கருவிகளுள் சிந்தை சிறந்தமை பற்றி அதனை முதலிற் கூறினார். செய்கை - மனம் மொழி மெய்களுள் மெய்யின் செயல். கேள்வி-கேட்டறியும் அறிவு. "சீரில்' என்பது நடுநிலை விளக்காக நின்று சிந்தை செய்கை கேள்வி வாக்கு என்பவற்றோடும் இயையும். மனமொழி மெய்களையும் அறிவை யும் ஐம்புலன்களையும் சீரில் என அடிகள் கூறியது இறைவன் வலீய வந்து ஆட்கொள்ளுதற்கு ஏதுவாகிய தவத்தைச் செய்த இக்கருவிகள், உடனே இறைவனை அடைதற்கும் ஏதுவான மிக்க தவத்தைச் செய்யாமை பற்றி என்க. புலன்களாகிய காரியங்கள் அவற்றையுணரும் கருவிகளாகிய பொறிகளுக்கு ஆகுபெயர். முந்தை - முன். முந்தையான காலம். முற்காலம். ஈண்டு அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட காளைக் குறித்தது. அதனை முந்தை திருச்சதகம் 339 யான காலம் என்று அடிகள் கூறியது இறைவனைப் பிரிந்த பின் கழிந்த நாட்கள் நெடுங்காலம் போலத் தோன் றியமை பற்றி என்க. சிந்தை செய்கை கேள்வி வாக்கு ஐம்புலன்களால் எய்திடாத என்பதற்கு கருவிகளால் இறைவனை உடனே எய்துதற்குரிய பெரிய தவத்தைச் செய் யாத என்பது பொருளாகும். அங்ஙமைன் றிச் சீரில்லாத அக்கருவிகளை யுடைமையால் நின்னை அடையமாட்டாத என உரைக்கலாகாதோவெனின் அவற்றையுடைய அடிகளை இறைவன் வலிய வந்து ஆட்கொண்டது எங்யனம் என எதிர்வினாவுக. மூர்க்கன் - அறிவிலி, 'முத்தி நெறியறியாத மூர்க்கனொடு" அச்சோ 1. வெந்து விழுந்திலேன் என்பதனை, விழுந்து வெந்திலேன் என் மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது. வேதலாகிய தொழில் பற்றி வேதற் இடன் தீ யென்பது பெறப்பட்டது. 'தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை கனி காணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் '' (சத 39) என அடிகள் அருளியமையுங் காண்க. வெள்கி-நாணி. ''வில்வினை மேருவில் வைத்தவன் தில்லைத் தொழா ரின் வெள்கி'' திருக்கோவை 28. உள்ளம் வெள்கி மனம் நாணி. நாணம் என்னையெனில் இறைவன் வலியவந்து ஆட்கொண்டும் உடனே கதி அரு ளாது அடிகளைப் பூமியில் விட்டுப் பிரிந்தமை பற்றி யுண்டாகியது. '"ஏல என்னை யீங்கொழித் தருளி இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே கீர்த்தி 129-146. என அடிகள் அருளியவாறுங் காண்க. உள்ளம் வெள்ளி விண்டிவேன் என்றது நாணத்தினால் மனம் உடைந்து இறக்கப் பெற்றிலேன் என்ற வாறு. இன்மை எய்தலுற்று இருப்பன் என்றது வெந்து விழுதல், வெள்கி விள்ளுதல் முதலியன செய்யமாட்டாத யான் இன்னும் நின்னையடைய முயன்று கொண்டிருப்பே னாயினேன் என்றவாறு. இதன்கண். சிந்தை முதலியவற்றால் எய்திடாத மூர்க்கனேன் வெந்து விழுந்திலேன்; உள்ளம் வெள்ளி விண்டிலேன்; இன்மை எய்தலுற்று இருப்பன், என்பனவற்றால் என்னிலைமை கண்டிரங்கி நின்னை எய்துமாறு அருள் செய்ய வேண்டும் என்பது புலப்படுதலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 79
338 திருவாசக ஆராய்ச்சியுரை இதன்கண் சேனேனை யாண்டு கொண்ட நின்மலா தேசனே என் சிந்தை மின்னல்வால் ஓர் தேவருண்மை சிந்தியாது . ஆதலால் இரங்கி நின்னை ஒன்றும் வண்ணம் அருள் செய்ய வேண்டும் என்பது பெறப்படு தலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் ட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 78 . 83. சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களால் முந்தை யான காலம் நின்னை யெய்தி டாத மூர்க்சுனேன் வெந்தை யாளிழுந்தி லேன்என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை யாய நின்னை யின்னம் எய்த றுற்றி ருப்பனே . - ரை : ஐயா ! - வழிபாட்டிற்குரிய இறைவனே ; சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால் - மனம் செயல் கேள்வி மொழி சிறப்பில்லாத ஐம்பொறிகள் ஆகிய இவற்றால் ; முந்தை ஆன காலம் நின்னால் ஆட்கொள்ளப்பட்ட முற்காலத்தில் ; நின்னை எய்திடாத மூர்க்க னேன் - நின்னை உடனே அடைதற்கேதுவாகிய பெரிய தவத்தைச் செய் யாத அறிவிலியாகிய யான் ; விழுந்து வெந்திலேன் - தியில் விழுந்து வெந்தி லேன் ; என் உள்ளம் வெள்கி விண்டிலேன் - நீ ஆட்கொண்டு பிரிந்தமை யால் என் மனம் நாணி உடைந்து இறந்திலேன் ; எந்தையாகிய நின்னை எமது தந்தையாகிய நின்னை ; இன்னம் எய்தல் உற்று இருப்பன் - இன்ன மும் அடைதற்கு முயன்று கொண்டு இருப்பேனாயினேன் . ஐயா சிந்தை செய்கை கேள்வி வாக்கு சிறப்பில்லாத ஐம்பொறிகள் ஆகிய இவற்றால் முற்காலத்தில் நின்னை எய்திடாத மூர்க்கனாகிய யான் தீயில் விழுந்து வெந்திலேன் ; என் உள்ளம் வெள்கி உடைந்து இறந்தி லேன் ; எந்தையாகிய நின்னை இன்னமும் அடைதற்கு முயன்று கொண் டிருக்கிறேன் . இந்நிலை கண்டு இரங்கியருள வேண்டும் என்பதாம் . 2016-2 20 ஐம்புலன்களால் என்புழி ஆல் என்றது மூன்றனுருபைச் சிந்தை முதலியவற்றோடும் கூட்டி எண்ணும்மைகளை விரித்துரைக்க . கருவிகளுள் சிந்தை சிறந்தமை பற்றி அதனை முதலிற் கூறினார் . செய்கை - மனம் மொழி மெய்களுள் மெய்யின் செயல் . கேள்வி - கேட்டறியும் அறிவு . சீரில் ' என்பது நடுநிலை விளக்காக நின்று சிந்தை செய்கை கேள்வி வாக்கு என்பவற்றோடும் இயையும் . மனமொழி மெய்களையும் அறிவை யும் ஐம்புலன்களையும் சீரில் என அடிகள் கூறியது இறைவன் வலீய வந்து ஆட்கொள்ளுதற்கு ஏதுவாகிய தவத்தைச் செய்த இக்கருவிகள் உடனே இறைவனை அடைதற்கும் ஏதுவான மிக்க தவத்தைச் செய்யாமை பற்றி என்க . புலன்களாகிய காரியங்கள் அவற்றையுணரும் கருவிகளாகிய பொறிகளுக்கு ஆகுபெயர் . முந்தை - முன் . முந்தையான காலம் . முற்காலம் . ஈண்டு அடிகள் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட காளைக் குறித்தது . அதனை முந்தை திருச்சதகம் 339 யான காலம் என்று அடிகள் கூறியது இறைவனைப் பிரிந்த பின் கழிந்த நாட்கள் நெடுங்காலம் போலத் தோன் றியமை பற்றி என்க . சிந்தை செய்கை கேள்வி வாக்கு ஐம்புலன்களால் எய்திடாத என்பதற்கு கருவிகளால் இறைவனை உடனே எய்துதற்குரிய பெரிய தவத்தைச் செய் யாத என்பது பொருளாகும் . அங்ஙமைன் றிச் சீரில்லாத அக்கருவிகளை யுடைமையால் நின்னை அடையமாட்டாத என உரைக்கலாகாதோவெனின் அவற்றையுடைய அடிகளை இறைவன் வலிய வந்து ஆட்கொண்டது எங்யனம் என எதிர்வினாவுக . மூர்க்கன் - அறிவிலி ' முத்தி நெறியறியாத மூர்க்கனொடு அச்சோ 1 . வெந்து விழுந்திலேன் என்பதனை விழுந்து வெந்திலேன் என் மாறிக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது . வேதலாகிய தொழில் பற்றி வேதற் இடன் தீ யென்பது பெறப்பட்டது . ' தாயிலாகிய இன்னருள் புரிந்தவென் தலைவனை கனி காணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் ' ' ( சத 39 ) என அடிகள் அருளியமையுங் காண்க . வெள்கி - நாணி . ' ' வில்வினை மேருவில் வைத்தவன் தில்லைத் தொழா ரின் வெள்கி ' ' திருக்கோவை 28. உள்ளம் வெள்கி மனம் நாணி . நாணம் என்னையெனில் இறைவன் வலியவந்து ஆட்கொண்டும் உடனே கதி அரு ளாது அடிகளைப் பூமியில் விட்டுப் பிரிந்தமை பற்றி யுண்டாகியது . ' ஏல என்னை யீங்கொழித் தருளி இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே கீர்த்தி 129-146 . என அடிகள் அருளியவாறுங் காண்க . உள்ளம் வெள்ளி விண்டிவேன் என்றது நாணத்தினால் மனம் உடைந்து இறக்கப் பெற்றிலேன் என்ற வாறு . இன்மை எய்தலுற்று இருப்பன் என்றது வெந்து விழுதல் வெள்கி விள்ளுதல் முதலியன செய்யமாட்டாத யான் இன்னும் நின்னையடைய முயன்று கொண்டிருப்பே னாயினேன் என்றவாறு . இதன்கண் . சிந்தை முதலியவற்றால் எய்திடாத மூர்க்கனேன் வெந்து விழுந்திலேன் ; உள்ளம் வெள்ளி விண்டிலேன் ; இன்மை எய்தலுற்று இருப்பன் என்பனவற்றால் என்னிலைமை கண்டிரங்கி நின்னை எய்துமாறு அருள் செய்ய வேண்டும் என்பது புலப்படுதலின் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 79