திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

340 திருவாசக ஆராய்ச்சியுரை 84. இருப்பு நெஞ்ச வஞ்ச வேளை ஆண்டு கொண்ட நின்னதாட் கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க ஐந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்த துண்ட தாயினும் விருப்பம் உண்டு நின்கண் என்கண் என்பதென்ன விச்சையே. ப-ரை: இருப்பு நெஞ்ச வஞ்சனேனை - இரும்பு போன்ற வலிய நெஞ்சத்தையுடைய வஞ்சகனாகிய என்னை; ஆண்டு கொண்ட நின்ன தாள்- ஆட்கொண்டருளிய சின்னுடைய திருவடியின் பமாகிய: கருப்பு மட்டு வாய் மடுத்து-கருப்பஞ்சாற்றை உண்பித்து; என்னை கலந்து போகவும் என் உயிரோடு கலந்து நீ பின்னர் பிரிந்து செல்லவும்; நெருப்பும் உண்டு= நெருப்பும் உள்ளது; யானும் உண்டு இருந்தது உண்டு.யானும் அந்நெருப் பில் வீழ்ந்து இறந்தொழியாமல் உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்திருந்த தும் உண்டு; அது ஆயினும் அது அக்ஙனமாயினும்; நின்கண் என்கண் விருப்பம் உண்டு என்பது-நின்னிடத்து எனக்கு விருப்பம் உண்டு என்று சொல்வது; என் தவிச்சையே-என் அறியாமையேயாம். இரும்புபோலும் வலிய நெஞ்சத்தையுடைய வஞ்சகனாகிய என்னை ஆட்கொண்டருளிய நின்னுடைய திருவடியின்பமாகிய கருப்பஞ்சாற்றை உண்பித்து என் உயிரோடு கலந்து நீ பின்னர் பிரிந்து போகவும் நெருப்பும் உள்ளது; யானும் அந்நெருப்பில் விழுந்து இறந்தொழியாமல் உண்டு உயிர் வாழ்ந்திருந்ததும் உண்டு. அங்ஙனமாயினும் நின்கண் எனக்கு விருப்பம் உண்டு என்று சொல்வது என் அறியாமையேயாம் என்பதாம். வலிய கரும்பு இரும்பு என்பன எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற் றன. அன்பினால் குழையாத நெஞ்சமுடையன்ே என்பார். "இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ' என்றார். "இரும்பு தரு மனத்தேனை" ''வன்னெஞ்ச (ஏ சறவு 1) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. மரம் இரும்பும் குழைத்த மதுரைப்பிரான் " (85) என மதுரைக் கலம்ப கத்து வருதலுங் காண்க. வஞ்சனேனை-வஞ்சகமுடையனுாகிய என்னை. "ஆண்டு நீ யளித்த அருளினை மருளினான் மறந்த வஞ்சனேன்'' (வாழாப்பி) என அடிகள் அருளியமையுங் காண்க. வின் என்பது நின்ன என விரித் தல் விகாரம் பெற்றது.அ.ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு. தாட் கருப்பு மட்டு- திருவடியின்பமாகிய கருப்பஞ்சாறு. இனி நின்னதாட் கருப்பு மட்டு என்பது " நற்பகற் சோமல் " (திருக்கோவை 168) என் புழிப்போல விகார வகையான் வலிந்து நின்றது எனக்கொண்டு தாள் மடுத்து கலந்து போகவும் என உரைப்பினும் அமையும். ஈண்டு கருப்பு மட்டு என்பதற்கு கருப்பஞ்சாது போன்ற திருவருள் இன்பம் எனக் கொள்க. வாய் மடுத்து-உண்பித்து ஒரு சொல். கருப்பு மட்டு என்ற தற்கு எற்ப வாய் மடுத்து என்றாராயினும் திருவடியின்பத்தை அனுபவிக்கச் செய்து என்பது கருத்தாகக் கொள்க. திருச்சதகம் 341 கலந்து போகவும்-என்னுயிரோடு கலந்து பிரிந்து செல்லவும். உயி ரொடு கலந்தமை ஊனாருடல் புகுந்தான் உயிர் கலத்தான் உளம் பிரியான். தேனார் சடை முடியான்" (உயிருண்ணிப் 2) என அடிகள் அருளியமையானுமறிக பிரிவுத் துயரை ஆற்றாது வீழ்ந்து உடலை நீக்குதற்கு நெருப்பு உள தாகவும் அங்ஙனம் செய்யாது யான் உண்டு உலகில் வாழ்ந்திருந்ததுண்டு என்பார், "நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்ததுண்டு" என்றார். "ஊனிலாவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே'. "பொய்யனேனான் உண்டுடுத்திங் கிருப்பதா னன் போரேறே" (சத 40:52) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. அதாயினும் என்றது நெருப்பில் வீழ்ந்து இறவாமல் உயிர் வாழ்ந் திருந்தும் என்றவாறு, நின்கண் என்னும் ஏழாவது நான்காவதன் பொரு ளில் வந்தது. நின் பிரிவுத் துயரை ஆற்றாது தீயில் விழுந்து இறவாமல் யான் உண்டு உயிர் வாழ்ந்து கொண்டு நின்பால் எனக்கு அன்பு உண்டு என்று கூறுதில் என் அறியாமையே என்பார். "விருப்பம் உண்டு நின் கண் என்க என்ப தென்ன விச்சையே'' என்றார். அவிச்சை அறி யாமை. என்ன விச்சையே என்பதை, என்ன வீச்சையே எனப் பிரித்து என்ன வித்தையோ என்றுரைப்பாருமுளர். இரங்கி யருள்செய்யவேண்டு மென்பது குறிப்பெச்சம். இதன்கண், விருப்பம் உண்டு, நின்கண் என்கண் என்பது என் அவிச்சை. அதனால் இரங்கியருள்செய்ய வேண்டும் என்பதனால் ஆனந் தத்தழுந்தும் அவா புலப்படுதலின் ஆனந்தத்தழுத்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 80. 9. ஆனந்த பரவசம் இறைவன் திருவடி அருளாகிய பேரின்பத்தில் மூழ்கி தன் தன்மை நீங்குதலை அடிகள் விரும்பியது. பரவசம் - தன்வசமிழத்தல். 85. வீச்சுக்கேடுபொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார். அச்சத் தாளே ஆழ்த்திடு கின்றேன் ஆகுரெம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே. 225 ப-ரை : ஆரூர் எம் பிச்சை தேவா-திருவாரூரில் எழுந்தருளியிருந்து நின்னை வந்தடைகின்ற மெய்யன்பர்களுக்குத் திருவருளாகிய பிச்சையை
340 திருவாசக ஆராய்ச்சியுரை 84. இருப்பு நெஞ்ச வஞ்ச வேளை ஆண்டு கொண்ட நின்னதாட் கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைக்க ஐந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்த துண்ட தாயினும் விருப்பம் உண்டு நின்கண் என்கண் என்பதென்ன விச்சையே . - ரை : இருப்பு நெஞ்ச வஞ்சனேனை - இரும்பு போன்ற வலிய நெஞ்சத்தையுடைய வஞ்சகனாகிய என்னை ; ஆண்டு கொண்ட நின்ன தாள் ஆட்கொண்டருளிய சின்னுடைய திருவடியின் பமாகிய : கருப்பு மட்டு வாய் மடுத்து - கருப்பஞ்சாற்றை உண்பித்து ; என்னை கலந்து போகவும் என் உயிரோடு கலந்து நீ பின்னர் பிரிந்து செல்லவும் ; நெருப்பும் உண்டு = நெருப்பும் உள்ளது ; யானும் உண்டு இருந்தது உண்டு.யானும் அந்நெருப் பில் வீழ்ந்து இறந்தொழியாமல் உணவுகளை உண்டு உயிர் வாழ்ந்திருந்த தும் உண்டு ; அது ஆயினும் அது அக்ஙனமாயினும் ; நின்கண் என்கண் விருப்பம் உண்டு என்பது - நின்னிடத்து எனக்கு விருப்பம் உண்டு என்று சொல்வது ; என் தவிச்சையே - என் அறியாமையேயாம் . இரும்புபோலும் வலிய நெஞ்சத்தையுடைய வஞ்சகனாகிய என்னை ஆட்கொண்டருளிய நின்னுடைய திருவடியின்பமாகிய கருப்பஞ்சாற்றை உண்பித்து என் உயிரோடு கலந்து நீ பின்னர் பிரிந்து போகவும் நெருப்பும் உள்ளது ; யானும் அந்நெருப்பில் விழுந்து இறந்தொழியாமல் உண்டு உயிர் வாழ்ந்திருந்ததும் உண்டு . அங்ஙனமாயினும் நின்கண் எனக்கு விருப்பம் உண்டு என்று சொல்வது என் அறியாமையேயாம் என்பதாம் . வலிய கரும்பு இரும்பு என்பன எதுகை நோக்கி வலித்தல் விகாரம் பெற் றன . அன்பினால் குழையாத நெஞ்சமுடையன்ே என்பார் . இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ' என்றார் . இரும்பு தரு மனத்தேனை ' ' வன்னெஞ்ச ( சறவு 1 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . மரம் இரும்பும் குழைத்த மதுரைப்பிரான் ( 85 ) என மதுரைக் கலம்ப கத்து வருதலுங் காண்க . வஞ்சனேனை - வஞ்சகமுடையனுாகிய என்னை . ஆண்டு நீ யளித்த அருளினை மருளினான் மறந்த வஞ்சனேன் ' ' ( வாழாப்பி ) என அடிகள் அருளியமையுங் காண்க . வின் என்பது நின்ன என விரித் தல் விகாரம் பெற்றது.அ.ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு . தாட் கருப்பு மட்டு- திருவடியின்பமாகிய கருப்பஞ்சாறு . இனி நின்னதாட் கருப்பு மட்டு என்பது நற்பகற் சோமல் ( திருக்கோவை 168 ) என் புழிப்போல விகார வகையான் வலிந்து நின்றது எனக்கொண்டு தாள் மடுத்து கலந்து போகவும் என உரைப்பினும் அமையும் . ஈண்டு கருப்பு மட்டு என்பதற்கு கருப்பஞ்சாது போன்ற திருவருள் இன்பம் எனக் கொள்க . வாய் மடுத்து - உண்பித்து ஒரு சொல் . கருப்பு மட்டு என்ற தற்கு எற்ப வாய் மடுத்து என்றாராயினும் திருவடியின்பத்தை அனுபவிக்கச் செய்து என்பது கருத்தாகக் கொள்க . திருச்சதகம் 341 கலந்து போகவும் - என்னுயிரோடு கலந்து பிரிந்து செல்லவும் . உயி ரொடு கலந்தமை ஊனாருடல் புகுந்தான் உயிர் கலத்தான் உளம் பிரியான் . தேனார் சடை முடியான் ( உயிருண்ணிப் 2 ) என அடிகள் அருளியமையானுமறிக பிரிவுத் துயரை ஆற்றாது வீழ்ந்து உடலை நீக்குதற்கு நெருப்பு உள தாகவும் அங்ஙனம் செய்யாது யான் உண்டு உலகில் வாழ்ந்திருந்ததுண்டு என்பார் நெருப்பும் உண்டு யானும் உண்டிருந்ததுண்டு என்றார் . ஊனிலாவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே ' . பொய்யனேனான் உண்டுடுத்திங் கிருப்பதா னன் போரேறே ( சத 40:52 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . அதாயினும் என்றது நெருப்பில் வீழ்ந்து இறவாமல் உயிர் வாழ்ந் திருந்தும் என்றவாறு நின்கண் என்னும் ஏழாவது நான்காவதன் பொரு ளில் வந்தது . நின் பிரிவுத் துயரை ஆற்றாது தீயில் விழுந்து இறவாமல் யான் உண்டு உயிர் வாழ்ந்து கொண்டு நின்பால் எனக்கு அன்பு உண்டு என்று கூறுதில் என் அறியாமையே என்பார் . விருப்பம் உண்டு நின் கண் என்க என்ப தென்ன விச்சையே ' ' என்றார் . அவிச்சை அறி யாமை . என்ன விச்சையே என்பதை என்ன வீச்சையே எனப் பிரித்து என்ன வித்தையோ என்றுரைப்பாருமுளர் . இரங்கி யருள்செய்யவேண்டு மென்பது குறிப்பெச்சம் . இதன்கண் விருப்பம் உண்டு நின்கண் என்கண் என்பது என் அவிச்சை . அதனால் இரங்கியருள்செய்ய வேண்டும் என்பதனால் ஆனந் தத்தழுந்தும் அவா புலப்படுதலின் ஆனந்தத்தழுத்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 80 . 9. ஆனந்த பரவசம் இறைவன் திருவடி அருளாகிய பேரின்பத்தில் மூழ்கி தன் தன்மை நீங்குதலை அடிகள் விரும்பியது . பரவசம் - தன்வசமிழத்தல் . 85. வீச்சுக்கேடுபொய்க் காகா தென்றிங் கெனைவைத்தாய் இச்சைக் கானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் . அச்சத் தாளே ஆழ்த்திடு கின்றேன் ஆகுரெம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே . 225 - ரை : ஆரூர் எம் பிச்சை தேவா - திருவாரூரில் எழுந்தருளியிருந்து நின்னை வந்தடைகின்ற மெய்யன்பர்களுக்குத் திருவருளாகிய பிச்சையை