திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மனத்தினால் எண்ணி உணர்ந்து சுட்டியறியப்படும் தன்மைக்கு அப் பாற்பட்டவன் இறைவன் என்பது 'எண்ணிறந்து' என்பதனாற் கூறப் பட்டது. 10 "இன்ளவுரு வின்னநிற மென்றறிவதே ரிது" (தே.330:4) எனத் திருஞானசம்பந்த சுவாமிகளும், "அப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படிய னிக்கிறத்த னிவ்வண்ணத் தனிவனிறைவனென்றெழுதிக் [காட்டொணாதே" 311:10. எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிய திருவாக்குகளும் இதனை உணர்த்தும். இனி 'எண்ணிறந்து' என்பதற்கு மனவுணர்வுக்கும் எட்டாது. எனப் பொருள் உரைத்து வாக்குக்கும் எட்டாது எனவும் உரைக்கலாம். பெருஞ்சீர்-அளவில்லாத உண்மைப் புகழ். இறைவன் பொருள் சேர்புகழ் '' (குறள் 5) என்றார் திருவள்ளுவரும். பொல்லா என்பது வினைக்கு விரேடணம். வினையேன் என்றது தன்னைத் தாழ்த்திக் கூறிய வாறு. ** அவனருளாலே அவன்தாள் வணங்கிச் (18) சிவபுராணந் தன்னை (19) உரைப்பனியான் (20) என்று சொல்லத் தொடங்கிய அடிகள் இம்மூன்று (23-5) அடிகளாலும் அவையடக்கம் கூறுகின்றாராதலின், 'நின்சீர் புகழுமாறொன்றறியேன் என்றார். இறைவனை முன்னிலைப் படுத்தி இவ் வவையடக்கத்தினைக் கூறியது, அவ்விறைவனருள் முன்னின்று உதவுமா யினும் தற்போதங்கெட வேண்டியாகும். ஒன்று என்பதற்குச் சிறிது எனினுமமையும். 'இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென்" (கலி 2:19) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க, ** 20-31. புல் ஆகி - புல்லாகியும், பூடுஆம்- பல்வகைப் பூண்டுகளாகி யும், புழுஆய் - புழுவாகியும், மரம் ஆகி - மரமாகியும், பல் விருகம் ஆகி - பலவகைப்பட்ட மிருகங்களாகியும், பறவை ஆய் - பலவகைப் பறவைகளாகி யும், பாம்பு ஆகி - பாம்புகளாகியும், கல்ஆய்-கல்கியும், மனிதர் ஆய் - மனிதராகியும், பேய் ஆய்-பேய்களாகியும். கணங்கள் ஆய்-கணங்களாகி யும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவர் ஆய் - முனிவராகி யும், தேவர் ஆய் - தேவராகியும், செல்வா நின்ற இ தாவர சங்கமத்துள் - நிகழா நின்ற இந்த நிலையியற்பொருள் இயங்கியற் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுள்ளே. எம்பெருமான் எல்லா பிறப்பும் பிறந்து இளைத் தேன் - எம்பெருமானே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இனைப் படைந்தேன். இங்கு கூறப்பட்ட உயிர்களின் தோற்றமுறைமை, செய்யுளாதலின் பிறழவைத்துரைத்தாராயினும் அவை தோன்று முறைமையில் வைத்து உரைகொள்ளற்பாற்று. எல்லா உயிர்ப்பொருள்களும், நிலையியற் பொரு சிவபுராணம் ளாகிய தாவரமும் இயங்கியற் பொருளாகிய சங்கமமும் என இருகூற்றுள் அடங்கும். தாவர வகையுள் கல் புல் பூண்டு மரம் என்னும் நான்கும், சங் கம வகையுள் புழு பாம்பு பறவை பல்விருகம் மனிதர் அசுரர் முனிவர் பேய் கணங்கள் தேவர் என்னும் பத்தும் கூறப்பட்டனவாகும். தாவரவகையுள் முதற்கண் கொள்ளத்தக்க கல் அல்லது மலை வகை அறிவுவிளக்கமுமின்றிக் கிடந்த உயிர்களின் நிலையேயாகும். அந் நிலையினின்று ஏற்ற தகுதி வந்தபோது ஓரறிவுயிர்களாகிய புல் பூடு மரம் ஆகிய தோற்றத்தையடையும்; அவற்றினின்றும் அறிவு சிறிது சிறிதாக மேற்படும்போது சங்கமவகையுள் அவற்றிற்றேற்ற உடம்பினைப்பெற்று ஈரறிவுயிர்களாகிய புழுக்களாகியும். மூவறிவுயிர்களாகிய கறையான் எறும்புகளாகியும், நாௗறிவுயிர்களாகிய நண்டு தும்பிகளாகியும், ஐந்தறி வுயிர்களாகிய பாம்பு பறவை பல்விருகமாகியும், ஆறறிவுயிர்களாகிய மனி தர் அசுரராகியும், ஆற்றிவின் மேற்பட்ட முனிவர் பேய் கணங்கள் தேவர்களாகியும் பிறவி எடுக்கும் என உரை கூறிக்கொள்க. வரலாறு பூமியினுட் கிடக்கும் கல் வளர்ச்சிடையக் காண்கின்றோமாதலின் அதுவும் ஒருவகை உயிர்த்தோற்றத்தின்பாற்பட்டதாகும். ஆயினும் அது உணர்ச்சியுடைத்தன்று; கௌதமர் சாபத்தாற் கல்லாய்க்கிடந்த அகலிகை இராமரது பாதந் தீண்டுதவால் தொல்லுருப் பெற்றனள் என கூறுதலின் உயிருக்குக் கல்லும் ஒருவகைப் பிறப்பாதல் உணரப்படும். இனிச் சர்வசங்காரகாலத்து உயிர் ஒருவகை உணர்ச்சியுமின்றி ஆணவ மலத்துன் பாஷாணம் (கல்) போல் அசைவற்றுக் கிடத்தலின் 'கல்லாய்' எனக் கூறினார் எனக் கொள்ளுதலும் ஒன்று. 11 விருகம் - மிருகம்; பல் என்ற அடையைப் பூடு முதலியவற்றோடும் கூட் பேய் - நிழல்போல் நுண்ணுடம்பினையுடைய ஒருவகை உயிர். "கிழல்போ னுடங்கிப் பேயாட + (சீவக 309) எனப் பிறரும் கூறுதல் காண்க. இது கண்டார்க்கு அச்சத்தைச் செய்தலின் 'பேய்' எனப்பட் பட்டது. பேந்தரும் பேய்' (சீவக 1181) என வருதலும் காண்க, பேம்- அச்சம். "மேநா முருமென வரூஉங் கிளவி, யாமுறை மூன்று மச்சப் பொருள் (உரி (9) என்றார் தொல்காப்பியனாரும். ஈண்டு கணங்கள் என்றது பதினெண்கணங்களுள் இங்கே விதந்து கூறப்பட்ட அசுரர் பேய் தேவர் ஒழிந்த ஏனையோரை. பதினெண் களங்களாவார்; தேவரும் அசுரரும் தைத்தியரும் கருடரும் கின்னரரும் கிம்புருடரும் இயக்கரும் விஞ்ஞையரும் இராக்கதரும் கந்தருவரும் சித்த ரும் சாரணரும் பூதரும் பைசாசகணமும் தாரகாகணமும் நாகரும் ஆகாய வாசிகளும் போகபூமியோருமெனவிவர். இதற்குப் / பிறவாறு முரைப்பர். அசுரர் - சுரர்க்கு மாறானவர். தாவரம்-நிற்பன. ஸ்தாவரம் என்னும் வட சொற்றிரிபு சங்கமம் - அசைவன. ஜங்கமம் என்னும் வடசொற்றிரிபு. புறநானூ:10 உரை. பிங்கலத்தை 92.
திருவாசக ஆராய்ச்சியுரை மனத்தினால் எண்ணி உணர்ந்து சுட்டியறியப்படும் தன்மைக்கு அப் பாற்பட்டவன் இறைவன் என்பது ' எண்ணிறந்து ' என்பதனாற் கூறப் பட்டது . 10 இன்ளவுரு வின்னநிற மென்றறிவதே ரிது ( தே .330 : 4 ) எனத் திருஞானசம்பந்த சுவாமிகளும் அப்படியு மந்நிறமு மவ்வண்ணமு மவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படிய னிக்கிறத்த னிவ்வண்ணத் தனிவனிறைவனென்றெழுதிக் [ காட்டொணாதே 311 : 10 . எனத் திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிய திருவாக்குகளும் இதனை உணர்த்தும் . இனி ' எண்ணிறந்து ' என்பதற்கு மனவுணர்வுக்கும் எட்டாது . எனப் பொருள் உரைத்து வாக்குக்கும் எட்டாது எனவும் உரைக்கலாம் . பெருஞ்சீர் - அளவில்லாத உண்மைப் புகழ் . இறைவன் பொருள் சேர்புகழ் ' ' ( குறள் 5 ) என்றார் திருவள்ளுவரும் . பொல்லா என்பது வினைக்கு விரேடணம் . வினையேன் என்றது தன்னைத் தாழ்த்திக் கூறிய வாறு . ** அவனருளாலே அவன்தாள் வணங்கிச் ( 18 ) சிவபுராணந் தன்னை ( 19 ) உரைப்பனியான் ( 20 ) என்று சொல்லத் தொடங்கிய அடிகள் இம்மூன்று ( 23-5 ) அடிகளாலும் அவையடக்கம் கூறுகின்றாராதலின் ' நின்சீர் புகழுமாறொன்றறியேன் என்றார் . இறைவனை முன்னிலைப் படுத்தி இவ் வவையடக்கத்தினைக் கூறியது அவ்விறைவனருள் முன்னின்று உதவுமா யினும் தற்போதங்கெட வேண்டியாகும் . ஒன்று என்பதற்குச் சிறிது எனினுமமையும் . ' இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென் ( கலி 2:19 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க ** 20-31 . புல் ஆகி - புல்லாகியும் பூடுஆம்- பல்வகைப் பூண்டுகளாகி யும் புழுஆய் - புழுவாகியும் மரம் ஆகி - மரமாகியும் பல் விருகம் ஆகி - பலவகைப்பட்ட மிருகங்களாகியும் பறவை ஆய் - பலவகைப் பறவைகளாகி யும் பாம்பு ஆகி - பாம்புகளாகியும் கல்ஆய் - கல்கியும் மனிதர் ஆய் - மனிதராகியும் பேய் ஆய் - பேய்களாகியும் . கணங்கள் ஆய் - கணங்களாகி யும் வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும் முனிவர் ஆய் - முனிவராகி யும் தேவர் ஆய் - தேவராகியும் செல்வா நின்ற தாவர சங்கமத்துள் - நிகழா நின்ற இந்த நிலையியற்பொருள் இயங்கியற் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுள்ளே . எம்பெருமான் எல்லா பிறப்பும் பிறந்து இளைத் தேன் - எம்பெருமானே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இனைப் படைந்தேன் . இங்கு கூறப்பட்ட உயிர்களின் தோற்றமுறைமை செய்யுளாதலின் பிறழவைத்துரைத்தாராயினும் அவை தோன்று முறைமையில் வைத்து உரைகொள்ளற்பாற்று . எல்லா உயிர்ப்பொருள்களும் நிலையியற் பொரு சிவபுராணம் ளாகிய தாவரமும் இயங்கியற் பொருளாகிய சங்கமமும் என இருகூற்றுள் அடங்கும் . தாவர வகையுள் கல் புல் பூண்டு மரம் என்னும் நான்கும் சங் கம வகையுள் புழு பாம்பு பறவை பல்விருகம் மனிதர் அசுரர் முனிவர் பேய் கணங்கள் தேவர் என்னும் பத்தும் கூறப்பட்டனவாகும் . தாவரவகையுள் முதற்கண் கொள்ளத்தக்க கல் அல்லது மலை வகை அறிவுவிளக்கமுமின்றிக் கிடந்த உயிர்களின் நிலையேயாகும் . அந் நிலையினின்று ஏற்ற தகுதி வந்தபோது ஓரறிவுயிர்களாகிய புல் பூடு மரம் ஆகிய தோற்றத்தையடையும் ; அவற்றினின்றும் அறிவு சிறிது சிறிதாக மேற்படும்போது சங்கமவகையுள் அவற்றிற்றேற்ற உடம்பினைப்பெற்று ஈரறிவுயிர்களாகிய புழுக்களாகியும் . மூவறிவுயிர்களாகிய கறையான் எறும்புகளாகியும் நாௗறிவுயிர்களாகிய நண்டு தும்பிகளாகியும் ஐந்தறி வுயிர்களாகிய பாம்பு பறவை பல்விருகமாகியும் ஆறறிவுயிர்களாகிய மனி தர் அசுரராகியும் ஆற்றிவின் மேற்பட்ட முனிவர் பேய் கணங்கள் தேவர்களாகியும் பிறவி எடுக்கும் என உரை கூறிக்கொள்க . வரலாறு பூமியினுட் கிடக்கும் கல் வளர்ச்சிடையக் காண்கின்றோமாதலின் அதுவும் ஒருவகை உயிர்த்தோற்றத்தின்பாற்பட்டதாகும் . ஆயினும் அது உணர்ச்சியுடைத்தன்று ; கௌதமர் சாபத்தாற் கல்லாய்க்கிடந்த அகலிகை இராமரது பாதந் தீண்டுதவால் தொல்லுருப் பெற்றனள் என கூறுதலின் உயிருக்குக் கல்லும் ஒருவகைப் பிறப்பாதல் உணரப்படும் . இனிச் சர்வசங்காரகாலத்து உயிர் ஒருவகை உணர்ச்சியுமின்றி ஆணவ மலத்துன் பாஷாணம் ( கல் ) போல் அசைவற்றுக் கிடத்தலின் ' கல்லாய் ' எனக் கூறினார் எனக் கொள்ளுதலும் ஒன்று . 11 விருகம் - மிருகம் ; பல் என்ற அடையைப் பூடு முதலியவற்றோடும் கூட் பேய் - நிழல்போல் நுண்ணுடம்பினையுடைய ஒருவகை உயிர் . கிழல்போ னுடங்கிப் பேயாட + ( சீவக 309 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . இது கண்டார்க்கு அச்சத்தைச் செய்தலின் ' பேய் ' எனப்பட் பட்டது . பேந்தரும் பேய் ' ( சீவக 1181 ) என வருதலும் காண்க பேம் அச்சம் . மேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள் ( உரி ( 9 ) என்றார் தொல்காப்பியனாரும் . ஈண்டு கணங்கள் என்றது பதினெண்கணங்களுள் இங்கே விதந்து கூறப்பட்ட அசுரர் பேய் தேவர் ஒழிந்த ஏனையோரை . பதினெண் களங்களாவார் ; தேவரும் அசுரரும் தைத்தியரும் கருடரும் கின்னரரும் கிம்புருடரும் இயக்கரும் விஞ்ஞையரும் இராக்கதரும் கந்தருவரும் சித்த ரும் சாரணரும் பூதரும் பைசாசகணமும் தாரகாகணமும் நாகரும் ஆகாய வாசிகளும் போகபூமியோருமெனவிவர் . இதற்குப் / பிறவாறு முரைப்பர் . அசுரர் - சுரர்க்கு மாறானவர் . தாவரம் - நிற்பன . ஸ்தாவரம் என்னும் வட சொற்றிரிபு சங்கமம் - அசைவன . ஜங்கமம் என்னும் வடசொற்றிரிபு . புறநானூ : 10 உரை . பிங்கலத்தை 92 .