திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 91.தாரரய் உடையாய் அடியேற் குன் தாள் இணையன்பு பேரா வுலகம் புக்கார் அடியார் புறமே போத்தேன் யான் ஊரா மிலைக்க குருட்டா மிலைத்திங் குன்ற ளிணையன்புக் காரா யடியேன் அயலே மயல்கொண் டழுகேனே. 352 ப-ரை : உடையாய் - என்னை ஆளாகவுடையவனே, அடியார் பேரா உலகம் புக்கார்-நின் மெய்யடியார்கள் மீளாவுலகமாகிய வீட்டுலகத்தினை அடைந்தனர்; யான் புறமே போந்தேன்-யான் அதற்குப் புறம்பாகிய இடத்தை அடைந்தேன்: ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ யிலைத்து ஊரி லுள்ள நல்ல பசு கனைக்க அதனைக் கேட்ட குருட்டுப் பசுவும் கனைத் தது போல; இங்கு உன் தாள் இணை அன்புக்கு ஆராய்-இவ்விடத்து இந்நிலையில் உனது திருவடியிணையைப் பெறுதற்குரிய மெய்யன்புக்கு என்ன தகுதியுடையேனாய்; அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேன் நின் அடியவனாகிய யான் அவர் போன வழிக்குப் புறத்தே நின்று ஆசைப் பட்டு அழுவேன்; அடியேற்கு உள் தாள் இணை அன்பு தாராய்-ஆத லாவ் அடியேனுக்கு நின் திருவடித் துணையைப் பெறுதற்குரிய மெய்யன் பினை எனக்குத் தந்தருளுக. உடையவனே, நின் மெய்யடியார்கள் பேராவுலகம் புக்கனர். யான் அதற்குப் புறம்பாகிய இடத்தினை அடைந்தேன். ஊரிலுள்ள நல்ல பசுக் கனைக்க அதனைக் கேட்ட குருட்டுப் பசுவும் கனைத்தது போல இவ் விடத்து உனது திருவடியிணையைப் பெறுதற்குரிய மெய்யன்புக்கு என்ன தகுதியுடையேனாய் நின் அடியவனாகிய யான் அவர்போன வழிக்குப் புறத்தே நின்று ஆசைப்பட்டு அழுவேன். ஆதவால் அடியேற்கு நின் திருவடித்துணையைப் பெறுதற்குரிய மெய்யன்பினை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதாம். தாராய்-தருதி. முன்னிலை உடன்பாட்டு எதிர்கால வினைமுற்று. "தணியார் பாதம் வந்தொல்லை தாராய்" (சத 89) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. தாளிணையன்பு- தாளிணையைப் பெறுதற்கு ஏது வாகிய மெய்யன்பு. அன்பு தாராய் எ இயையும். ''உனக்குள்ள அன்புந்தாராய்" (பிரார்த் 8) என அடிகள் அருளியமையுங் காண்க, பேராவுலகம்-மீளத் திரும்புதலில்லாத வுலகமாகிய வீடு. "பேராவுலகந் தந்து வந்தாட் கொள்வோனே" (ஆசைப்?) என வருதலும் காண்க. அடியார் பேராவுலகம் புக்கார் என மாறிக் கூட்டுக. பிரிவறி யாவன்பர் நின்னருட் பெய்கழற் றாளிணைக்கீழ் மறிவறி யாச் செல்வம் வந்து பெற்றார் '' (அடைக்கலப் 9) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. புகாமையின் புறமே போந்தேன் என்றார். பேராவுலகம் திருச்சதகம் ஊரா-ஊரிலுள்ள நல்ல பசு, மிலைத்தல் - கதறுதல். ஊராமிலைக்கக் குருட்டா மிலைத்து என்றது. ஊரிலுள்ள குருடல்லாத நல்ல பசு கதற அதனைக் கேட்ட குருட்டுப் பசுவுங் கதறியது போல என்றவாறு. நல்ல பசுவின் கதறல் தன் கன்றினை அழைக்கவோ உணவினைப் பெறவோ உதவும். குருட்டுப் பசுவின் கதறல் அவற்றை நோக்காது, நல்ல பசு கதறியதைக் கேட்டுக் கதறிய பயனற்றதாகும். அதுபோல என சொல் வருவித்துரைக்கப்பட்டது. 353 நின் தாளிணை யன்பினையுடைய மெய்யடியார் நின்னைப் போற்றிப் பேராவுலகம் புக்காராக, அவர் புக்க வழிக்குப் புறமான வழியிற் போன யான் நின் தாளிணை அன்புக்கு என்ன உரிமையுடையேனாய்ப் புறத்தே நின்று அழுவேன். குருட்டாவின் கதறல் பயனின்றிப் போதல் போல என் அழுகையும் பயனற்றதாகும் என்பதாம். மிலைத்தல்- கதறுதல். இப் பொருட்டாதல் ''இங்குன் தாளினை அன்புக் காராய் மயல்கொண் டமுகேனே என அடிகள் தமது அழுகை தாளிணையன்பாகிய பயனைத் தராமையைக் காட்டுதலால் நன்கு உணரப்படும். இவ்வாறே நம்மாழ் வாரும், "எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன் குற்றிய தென்பனே" (நம்மாம் - திருவிருத்தம் 34) எனத் திவ்விய பிரபந்தத்தின் கண் கூறுத லுங் காண்க. இதன்கண்.நின்தாள் சேர்தற்குச் செய்யத்தக்கது யா துமில்லை இரங்கி யருள வேண்டும் என்பதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 92. அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுத் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே. ப-ரை : நின்பால் அன்பரம் மனம் அழல் சேர்ந்த மெழுகே அன்னா ராய் - நின்னிடத்து அன்பு பொருந்திய மனம் அழலைச் சேர்ந்த மெழுகு போல உருகுபவராய்: மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு -ஒளி பொருந்திய நின் பொன்போன்ற திருவடியைத் தரிசித்து; தொழுது உன்னைத்தொடர்ந்தா ரோடும் தொடராது-வணங்கி நின்னைப் பிரியாது தொடர்ந்தவர்களாகிய மெய்யடியவர்களோடும் தொடர்ந்து வரமாட்டாது; அமுகேன் பிற்பட்டுத் தனித்து நின்று அழுபவனாகிய யான்; என் கொண்டு உன்னைப் பணி கேன் - இனி எதனைத் துணையாகக் கொண்டு உன்னை வணங்குவேன்; பழதே பிறந்தேன்-பயனில் நிப் பிறந்தவனானேன; என்னைப் பறவிப் பயனுடையவனாகச் செய்தருள வேண்டும். 45
திருவாசக ஆராய்ச்சியுரை 91.தாரரய் உடையாய் அடியேற் குன் தாள் இணையன்பு பேரா வுலகம் புக்கார் அடியார் புறமே போத்தேன் யான் ஊரா மிலைக்க குருட்டா மிலைத்திங் குன்ற ளிணையன்புக் காரா யடியேன் அயலே மயல்கொண் டழுகேனே . 352 - ரை : உடையாய் - என்னை ஆளாகவுடையவனே அடியார் பேரா உலகம் புக்கார் - நின் மெய்யடியார்கள் மீளாவுலகமாகிய வீட்டுலகத்தினை அடைந்தனர் ; யான் புறமே போந்தேன் - யான் அதற்குப் புறம்பாகிய இடத்தை அடைந்தேன் : ஊர் மிலைக்க குருட்டு யிலைத்து ஊரி லுள்ள நல்ல பசு கனைக்க அதனைக் கேட்ட குருட்டுப் பசுவும் கனைத் தது போல ; இங்கு உன் தாள் இணை அன்புக்கு ஆராய் - இவ்விடத்து இந்நிலையில் உனது திருவடியிணையைப் பெறுதற்குரிய மெய்யன்புக்கு என்ன தகுதியுடையேனாய் ; அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேன் நின் அடியவனாகிய யான் அவர் போன வழிக்குப் புறத்தே நின்று ஆசைப் பட்டு அழுவேன் ; அடியேற்கு உள் தாள் இணை அன்பு தாராய் - ஆத லாவ் அடியேனுக்கு நின் திருவடித் துணையைப் பெறுதற்குரிய மெய்யன் பினை எனக்குத் தந்தருளுக . உடையவனே நின் மெய்யடியார்கள் பேராவுலகம் புக்கனர் . யான் அதற்குப் புறம்பாகிய இடத்தினை அடைந்தேன் . ஊரிலுள்ள நல்ல பசுக் கனைக்க அதனைக் கேட்ட குருட்டுப் பசுவும் கனைத்தது போல இவ் விடத்து உனது திருவடியிணையைப் பெறுதற்குரிய மெய்யன்புக்கு என்ன தகுதியுடையேனாய் நின் அடியவனாகிய யான் அவர்போன வழிக்குப் புறத்தே நின்று ஆசைப்பட்டு அழுவேன் . ஆதவால் அடியேற்கு நின் திருவடித்துணையைப் பெறுதற்குரிய மெய்யன்பினை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதாம் . தாராய் - தருதி . முன்னிலை உடன்பாட்டு எதிர்கால வினைமுற்று . தணியார் பாதம் வந்தொல்லை தாராய் ( சத 89 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . தாளிணையன்பு- தாளிணையைப் பெறுதற்கு ஏது வாகிய மெய்யன்பு . அன்பு தாராய் இயையும் . ' ' உனக்குள்ள அன்புந்தாராய் ( பிரார்த் 8 ) என அடிகள் அருளியமையுங் காண்க பேராவுலகம் - மீளத் திரும்புதலில்லாத வுலகமாகிய வீடு . பேராவுலகந் தந்து வந்தாட் கொள்வோனே ( ஆசைப் ? ) என வருதலும் காண்க . அடியார் பேராவுலகம் புக்கார் என மாறிக் கூட்டுக . பிரிவறி யாவன்பர் நின்னருட் பெய்கழற் றாளிணைக்கீழ் மறிவறி யாச் செல்வம் வந்து பெற்றார் ' ' ( அடைக்கலப் 9 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . புகாமையின் புறமே போந்தேன் என்றார் . பேராவுலகம் திருச்சதகம் ஊரா - ஊரிலுள்ள நல்ல பசு மிலைத்தல் - கதறுதல் . ஊராமிலைக்கக் குருட்டா மிலைத்து என்றது . ஊரிலுள்ள குருடல்லாத நல்ல பசு கதற அதனைக் கேட்ட குருட்டுப் பசுவுங் கதறியது போல என்றவாறு . நல்ல பசுவின் கதறல் தன் கன்றினை அழைக்கவோ உணவினைப் பெறவோ உதவும் . குருட்டுப் பசுவின் கதறல் அவற்றை நோக்காது நல்ல பசு கதறியதைக் கேட்டுக் கதறிய பயனற்றதாகும் . அதுபோல என சொல் வருவித்துரைக்கப்பட்டது . 353 நின் தாளிணை யன்பினையுடைய மெய்யடியார் நின்னைப் போற்றிப் பேராவுலகம் புக்காராக அவர் புக்க வழிக்குப் புறமான வழியிற் போன யான் நின் தாளிணை அன்புக்கு என்ன உரிமையுடையேனாய்ப் புறத்தே நின்று அழுவேன் . குருட்டாவின் கதறல் பயனின்றிப் போதல் போல என் அழுகையும் பயனற்றதாகும் என்பதாம் . மிலைத்தல்- கதறுதல் . இப் பொருட்டாதல் ' ' இங்குன் தாளினை அன்புக் காராய் மயல்கொண் டமுகேனே என அடிகள் தமது அழுகை தாளிணையன்பாகிய பயனைத் தராமையைக் காட்டுதலால் நன்கு உணரப்படும் . இவ்வாறே நம்மாழ் வாரும் எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன் குற்றிய தென்பனே ( நம்மாம் - திருவிருத்தம் 34 ) எனத் திவ்விய பிரபந்தத்தின் கண் கூறுத லுங் காண்க . இதன்கண்.நின்தாள் சேர்தற்குச் செய்யத்தக்கது யா துமில்லை இரங்கி யருள வேண்டும் என்பதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 92 . அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு தொழுதே யுன்னைத் தொடர்ந்தா ரோடுத் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே . - ரை : நின்பால் அன்பரம் மனம் அழல் சேர்ந்த மெழுகே அன்னா ராய் - நின்னிடத்து அன்பு பொருந்திய மனம் அழலைச் சேர்ந்த மெழுகு போல உருகுபவராய் : மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு -ஒளி பொருந்திய நின் பொன்போன்ற திருவடியைத் தரிசித்து ; தொழுது உன்னைத்தொடர்ந்தா ரோடும் தொடராது - வணங்கி நின்னைப் பிரியாது தொடர்ந்தவர்களாகிய மெய்யடியவர்களோடும் தொடர்ந்து வரமாட்டாது ; அமுகேன் பிற்பட்டுத் தனித்து நின்று அழுபவனாகிய யான் ; என் கொண்டு உன்னைப் பணி கேன் - இனி எதனைத் துணையாகக் கொண்டு உன்னை வணங்குவேன் ; பழதே பிறந்தேன் - பயனில் நிப் பிறந்தவனானேன ; என்னைப் பறவிப் பயனுடையவனாகச் செய்தருள வேண்டும் . 45