திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நின்னிடத்து அன்பு பொருந்திய மனம் அழலைச் சேர்ந்த மெழுகு போல உருகுபவராய், நின் பொன்போன்ற திருவடிகளைத் தரிசித்து வணங்கி, நின்னைப் பிரியாது தொடர்ந்தவர்களாகிய மெய்யடியார்களோ டும் தொடர்ந்து வரமாட்டாது, பிற்பட்டுத் தனித்து நின்று அழுபலனாகிய யான், இனி எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உன்னை வணங்குவேன்; பயனின்றிப் பிறந்தவனானேன்; என்னைப் பிறவிப் பயனுடையவனாகச் செய்தருள வேண்டும் என்பதாம். 2 TR அழுகேன் என்பது ஈண்டு அழுபவனாகிய யான் என வினையாலணை யும் பெயராய் நின்றது. மனமாய் என்பதில் ஆய் என்னும் எச்சத்தைப் பிரித்து அன்னாராய் எனக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது. அழல் சேர்ந்த மெழுகு போல உருகும் மனத்தின் வினை மேனின்றது. தொடர்ந்தார் என்பது பிரியாது தொடர்ந்து கநியடைந்த அதனை உடையார் வர்களாகிய மெய்யடியார்களென வினையாலணையும் பெயராய் நின்றது. தொடராது-தொடரமாட்டாது. தொடராது அழுகேன் என மாறிக்கூட்டுக. 354 என் கொண்டு என்றது எதனைத் துணையாகக் கொண்டு என்றவாறு. அம்மெய்யடியார் போல அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகு போல உருகுந் தன்மையும் அவரை விடாது பின் தொடர்ந்து செல்லும் ஆற்றலும் இன்மையின் இனி எனக்குத் துணை பிறிதில்லை என்பார். 'என் கொண்டு' என்றும் பழுதே பிறந்தேன் பயணின் றிப் பிறந்தவனாயி னேன். ஏ - தேற்றம். இனி, நின்பால் அன்பாம் மனமாய் அழமாட்டே னும் உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடரமாட்டாது பழுதே பிறந் தேனுமாகிய யான் என் கொண்டு உன்னைப் பணிவேன் எனவும் உரைக்க லாம். இவ்வுரையில் அழுகேன் என்பது அழமாட்டாதவனாகிய யான் எனத் தன்மையொருமை எதிர்மறை வினையாலணையும் பெயராயும், பிறந் தேன் என்பது தன்மையொருமை இறந்தகால வினையாலணையும் பெயராக வும் கொள்ளவேண்டும். இதன்கண், அழுகேன் பழுதே பிறந்தேன் பணிகேன் என்றமையால் அழுபவனாகிய எனக்கு உற்ற துணையை உத என்கொண்டுன்னைப் விப் பிறவிப்பயனுடையதாகச் செய்ய வேண்டும் என்பது பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதரு 88. தல் காண்க. 93. பனிவார் பிணிதீர்த் தருளிப் பழைய வடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி அதுவும் அரிதென்றாள் திணியார் மூங்கில் அனையேன் விளையைப் பொடியாக்கித் சணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. ப.ரை: பொய்தீர் மெய்யானே-உயிர்களின் பொய்ர்மையை யருளும் மெய்ப்பொருளாயுள்ளவளே; பணிவார் பழைய அடியார்க்கு பிணி ரிக்கி திருச்சதகம் 355 தீர்த்தருளி-கின்ளை மெய்யன்போடு வணங்குபவர்களாகிய பழைய அடி யார்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி; உன் அணி ஆர் பாதம் கொடுத்தி- உன் அழகு நிறைந்த திருவடிகளைக் கொடுத்தருளினை; அது அரிது என்றா லும் எனக்கு இப்போது உடனே அப்படி அருள் செய்தல் முடியாதாயினும்; திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடியாக்கி-திட்பம் பொருந்திய மூங்கிலைப் போன்ற தீமையையுடையவனாகிய எனது பிராரத்த கன்மத்தை யும் ஞானத் தீயாற் பொடி செய்து; ஒல்லை வந்து தணி ஆர் பாதம் தாராய் - காலம் நீட்டியாது விரைந்து வந்து குளிர்ச்சி பொருந்திய நின் திருவடிகளைத் தந்தருள்வாயாக. பொய்தீர் மெய்யானே, நின்னைப் பணிபவர்களாகிய பழைய அடி யார்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உனது திருவடிகளைக் கொடுத் தருளினை: எனக்கு இப்பொழுது பிணிதீர்த்துத் திருவடிகளைத் தருதல் அரிதாயினும் முங்கிலனையேன் வினையைப் பொடியாக்கி விரைந்து வந்து திருவடிகளைத் தந்தருள வேண்டும் என்பதாம். பணிவார் பழைய அடியார்க்குப் பிணி தீர்த்தருளி உன்பாதம் கொடுத்தி என இயைத்து பொருள் கொள்க. பணிவார்-அடியவர். பணிவோர் மருங்களியா " கோவை 52. பிணி - பிறவிப்பிணி. "பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே " (டூத் 18) என அடிகள் அருளியவாறுங் காண்க. பழைய அடியார்- தொன்றுதொட்டு வழிபட்டு இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யன் பர்களை. "பாதங் கொடுத்தி" என்றது வீடு பேற்றினைக் கொடுத்தருளுதி என்றவாறு. 'அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அர சமர்ந்திருந்தார் எனப் பெரிய புராணத்து (திருநாவுக் 427) வருதலுங் காண்க. கொடுத்தி என்பதில் இகர விகுதி காலங் காட்டாது முன்னிலை விகுதியாய் நின்றது. தகரம் இறந்த காலம் காட்டிற்று. SODY அதுவும் அரிது என்றல் என்பதில் உம்மையைப் பிரித்து அது அரி தென்றலும் எனக் கூட்டி, எனக்கு இப்பொழுது உடனே அப்படிச் செய்தல் முடியாதாயினும் எனப் பொருள் கொள்ளப்பட்டது. திணியார் மூங்கில் - திண்மை பொருந்திய மூங்கில் என்றது குழாய் முங்கிலல்லாத் கன்மூங்கிலை. இம்முங்கில் போல மனநெகிழ்ச்சி யில்லாதேன் என்பார்! "திணியார் மூங்கிலனையேன்" என்றார். 'திணியார் மூங்கிற் சிந்தையேன்" (பிரார்த்தனை 8) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. இனி மூங்கிலிடத்தே உண்டாகும் தீ அதனையே அழிப்பது போல யானே எனக்குத் தீமையைத் தேடிக் கொள்பவன் எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட போது சஞ்சித வினையும் ஆகாமிய வினையும் அழிக்கப்பட்டமையின் வினையென்றது எஞ்சி கின்ற பிராரத்த வினையைக் குறித்தது. தணி : தண்மை; குளிர்ச்சி "தணிபுணல்". தணி
திருவாசக ஆராய்ச்சியுரை நின்னிடத்து அன்பு பொருந்திய மனம் அழலைச் சேர்ந்த மெழுகு போல உருகுபவராய் நின் பொன்போன்ற திருவடிகளைத் தரிசித்து வணங்கி நின்னைப் பிரியாது தொடர்ந்தவர்களாகிய மெய்யடியார்களோ டும் தொடர்ந்து வரமாட்டாது பிற்பட்டுத் தனித்து நின்று அழுபலனாகிய யான் இனி எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உன்னை வணங்குவேன் ; பயனின்றிப் பிறந்தவனானேன் ; என்னைப் பிறவிப் பயனுடையவனாகச் செய்தருள வேண்டும் என்பதாம் . 2 TR அழுகேன் என்பது ஈண்டு அழுபவனாகிய யான் என வினையாலணை யும் பெயராய் நின்றது . மனமாய் என்பதில் ஆய் என்னும் எச்சத்தைப் பிரித்து அன்னாராய் எனக் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது . அழல் சேர்ந்த மெழுகு போல உருகும் மனத்தின் வினை மேனின்றது . தொடர்ந்தார் என்பது பிரியாது தொடர்ந்து கநியடைந்த அதனை உடையார் வர்களாகிய மெய்யடியார்களென வினையாலணையும் பெயராய் நின்றது . தொடராது - தொடரமாட்டாது . தொடராது அழுகேன் என மாறிக்கூட்டுக . 354 என் கொண்டு என்றது எதனைத் துணையாகக் கொண்டு என்றவாறு . அம்மெய்யடியார் போல அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகு போல உருகுந் தன்மையும் அவரை விடாது பின் தொடர்ந்து செல்லும் ஆற்றலும் இன்மையின் இனி எனக்குத் துணை பிறிதில்லை என்பார் . ' என் கொண்டு ' என்றும் பழுதே பிறந்தேன் பயணின் றிப் பிறந்தவனாயி னேன் . - தேற்றம் . இனி நின்பால் அன்பாம் மனமாய் அழமாட்டே னும் உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடரமாட்டாது பழுதே பிறந் தேனுமாகிய யான் என் கொண்டு உன்னைப் பணிவேன் எனவும் உரைக்க லாம் . இவ்வுரையில் அழுகேன் என்பது அழமாட்டாதவனாகிய யான் எனத் தன்மையொருமை எதிர்மறை வினையாலணையும் பெயராயும் பிறந் தேன் என்பது தன்மையொருமை இறந்தகால வினையாலணையும் பெயராக வும் கொள்ளவேண்டும் . இதன்கண் அழுகேன் பழுதே பிறந்தேன் பணிகேன் என்றமையால் அழுபவனாகிய எனக்கு உற்ற துணையை உத என்கொண்டுன்னைப் விப் பிறவிப்பயனுடையதாகச் செய்ய வேண்டும் என்பது பெறப்படுதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதரு 88 . தல் காண்க . 93. பனிவார் பிணிதீர்த் தருளிப் பழைய வடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி அதுவும் அரிதென்றாள் திணியார் மூங்கில் அனையேன் விளையைப் பொடியாக்கித் சணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே . ப.ரை : பொய்தீர் மெய்யானே - உயிர்களின் பொய்ர்மையை யருளும் மெய்ப்பொருளாயுள்ளவளே ; பணிவார் பழைய அடியார்க்கு பிணி ரிக்கி திருச்சதகம் 355 தீர்த்தருளி - கின்ளை மெய்யன்போடு வணங்குபவர்களாகிய பழைய அடி யார்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி ; உன் அணி ஆர் பாதம் கொடுத்தி உன் அழகு நிறைந்த திருவடிகளைக் கொடுத்தருளினை ; அது அரிது என்றா லும் எனக்கு இப்போது உடனே அப்படி அருள் செய்தல் முடியாதாயினும் ; திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடியாக்கி - திட்பம் பொருந்திய மூங்கிலைப் போன்ற தீமையையுடையவனாகிய எனது பிராரத்த கன்மத்தை யும் ஞானத் தீயாற் பொடி செய்து ; ஒல்லை வந்து தணி ஆர் பாதம் தாராய் - காலம் நீட்டியாது விரைந்து வந்து குளிர்ச்சி பொருந்திய நின் திருவடிகளைத் தந்தருள்வாயாக . பொய்தீர் மெய்யானே நின்னைப் பணிபவர்களாகிய பழைய அடி யார்க்குப் பிறவிப் பிணியை நீக்கியருளி உனது திருவடிகளைக் கொடுத் தருளினை : எனக்கு இப்பொழுது பிணிதீர்த்துத் திருவடிகளைத் தருதல் அரிதாயினும் முங்கிலனையேன் வினையைப் பொடியாக்கி விரைந்து வந்து திருவடிகளைத் தந்தருள வேண்டும் என்பதாம் . பணிவார் பழைய அடியார்க்குப் பிணி தீர்த்தருளி உன்பாதம் கொடுத்தி என இயைத்து பொருள் கொள்க . பணிவார் - அடியவர் . பணிவோர் மருங்களியா கோவை 52. பிணி - பிறவிப்பிணி . பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே ( டூத் 18 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . பழைய அடியார்- தொன்றுதொட்டு வழிபட்டு இறைவனுக்கு ஆட்பட்ட மெய்யன் பர்களை . பாதங் கொடுத்தி என்றது வீடு பேற்றினைக் கொடுத்தருளுதி என்றவாறு . ' அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அர சமர்ந்திருந்தார் எனப் பெரிய புராணத்து ( திருநாவுக் 427 ) வருதலுங் காண்க . கொடுத்தி என்பதில் இகர விகுதி காலங் காட்டாது முன்னிலை விகுதியாய் நின்றது . தகரம் இறந்த காலம் காட்டிற்று . SODY அதுவும் அரிது என்றல் என்பதில் உம்மையைப் பிரித்து அது அரி தென்றலும் எனக் கூட்டி எனக்கு இப்பொழுது உடனே அப்படிச் செய்தல் முடியாதாயினும் எனப் பொருள் கொள்ளப்பட்டது . திணியார் மூங்கில் - திண்மை பொருந்திய மூங்கில் என்றது குழாய் முங்கிலல்லாத் கன்மூங்கிலை . இம்முங்கில் போல மனநெகிழ்ச்சி யில்லாதேன் என்பார் ! திணியார் மூங்கிலனையேன் என்றார் . ' திணியார் மூங்கிற் சிந்தையேன் ( பிரார்த்தனை 8 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . இனி மூங்கிலிடத்தே உண்டாகும் தீ அதனையே அழிப்பது போல யானே எனக்குத் தீமையைத் தேடிக் கொள்பவன் எனப் பொருள் கொள்ளலும் பொருந்தும் . இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட போது சஞ்சித வினையும் ஆகாமிய வினையும் அழிக்கப்பட்டமையின் வினையென்றது எஞ்சி கின்ற பிராரத்த வினையைக் குறித்தது . தணி : தண்மை ; குளிர்ச்சி தணிபுணல் . தணி