திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப - ரை : மாறு இலாத மா கருணை வெள்ளமே-ஒரு காலத்தும் வேறு படுதலில்லாத பேரருட் பெருக்கே; நின் மலர் கொள் தாளிணை நினது தாமரை மலரின் தன்மையைக் கொண்ட திருவடிகள் இரண்டினையும், வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர்-வீட்டு நீங்குதல் இல்லாத பக்குவ நிலையை யடைந்த நின்னுடன் வந்த மெய்யன்பர்கள்; முந்தி வந்து உன் மெய்ம்மை மேவினார்-முற்பட்டு வந்து உனது மெய்ம்மை யாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர். ஈறு இலாத நீ-அழிவில்லாத இறைமைக் குணங்களையுடைய அரியையாகிய நீ, எளியை ஆகி ஒளி செய் மானுடம் ஆக வந்து நோக்கியும்-அருளால் எளிமையையுடையை யாகி ஒளி விளங்குகின்ற மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து திருவருட் பார்வையாகிய நான தீட்சை செய்தம், கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் பிளந்து அழிந்தொழியாத வன்நெஞ்சுடைய நாய் போன்றவனாகிய யான். கடையன் ஆயினேன். பட்ட கீழ்மை-அதனால் யான் அடைந்த இழிலரலை என் ஆயினேன் - புறத்தே நிற்பவன் னென்பேன். 358 # தாமரை மாறிலாதமாக் கருணை வெள்ளமே. நின் தன்மையைக் கொண்ட தாளிணையை விட்டு நீங்குதலில்லாத பக்குவ நிலைமையை யடைந்த நின் மெய்ம்மை அன்பர்கள் உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர். ஈறிலாத நீ, அருளால் ஒளியையுடையை யாகி விளங்குகின்ற மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து திருவருட் பார்வையாகிய நயன தீட்சை செய்தும், கீறிலாத வன்நெஞ் சுடைய நாயினேன் புறத்தே நிற்பவனாயினேன். அதனால் யானடைந்த இழிவரலை என்னென்பேன் என்பதாம். மலரின் 30 இறைவன் பேரருள் மாக்கருணை எனப்பட்டது. போருளை வெள்ள மாகக் கூறுதலை "கல்லைட் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி" (அம்மானை 5) " வான் கருணை வெள்ளப் பிரான் '' (கோத் 16) '"தன் கருணை வெள்ளத்து (பொன் னூசல் 3) என வருவனவற்றிலும் காண்க. இறைவன் கருணையே உருவாயுள்ளானாதலின் கருணை வெள்ளமே என்றார். இறைவனது பேரருட் பெருக்கு மிகுதல்குறைதலின்றி எக் காலத்தும் ஒரே தன்மைத் தாயிருத்தலின் வெள்ளமே'' என்றார். "மாறிலாத மாக்கருணை ''குறை விலா நிறைவே கோதிலா அமுதே" (கோயிற் 5) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. மலர் கொள் தாள்-தாமரை மலரின் தன்மையைக் கொண்ட தாள். 'தாமரைத் தாள்" (சத 45) என வந்தமையுங் காண்க. தாளிணையை என இரண்டாவது விரிக்க. வேறு இலாத - விட்டு நீங்குதலில் வாத. பதப் பரிசு இறைவனோடு இரண்டறக் கலத்தற்குரிய பக்குவ நிலைமை. மெய்ம்மை யன்பர்-மெய்யன்பர் என்றது இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த ஞான்று உடன் வந்த அணுக்கள் தொண்டர்களை. உன் மெய்ம்மை திருச்சதகம் 359 மேவினார்-உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர். "பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி" (சத 89) என்பது ஈண்டறி யற் பாலது. ஈறிலாத- அறிவற்ற என்றது அழிவற்ற இறைமைக் குணங்களின் பெருமையையும் அருமையையும் உணர்த்தியது. அங்ஙனமன்றி, ஈறி லாத நீ என்பதற்கு அழிவில்லாத நீ என அறியாமையை உணர், ர்த்தியது எனக் கொள்ளின் அறியாமை உயிர்க்குமுண்டு. உலகுக்கு முன்டாதலின் அதனைச் சிறப்பாக இறைவனுக்குக் கூறுதல் அமையாது. எளியையாகி என்றதனாலும் நீ அரியை என்பது போதரும். '" எத்தனையு மரியநீ யெளியையானாய்'" (தேவா நாவு 308:8), எளியையாகி யாண்டமை "எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே" (பிடித்த 10) எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னாரமுதேயோ (ஆசைப் 5) என்பதனாலு மறியப்படும். எளியையாதவ் கைம்மாறு கருதாத பேரருளாகும். மானுடம்-மனித வடிவு. "மற்றவர் தம்மை நோக்கி மானுடமிவர்தா மல்லர் எனப் பெரியபுராணத்து (காரைக்கால் 47 ) வருதலுங் காண்க. திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலில் தெய்வீக ஒளி திகழ மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளியவன் இறைவன்; என்பது புலப்பட ஈறிலாத நீ எளியையாகி வந்து ஒளி செய் மானுடமாக நோக்கியும்". என்றார். இறைவன் மானுடத் திருவுருவங் கொண்டருளுதல், F '"மீ கெழு பரஞ்சுடர் வெளிப்பட் டம்ம எம்மனோர் போல வினிதெழுந் தருளிக் கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன் " 2:13-6. எனவும், "மானிட னாய வடிவுகொண் டருளாது மானிட னாய வடிவுகொண் டருளி " 14:21-2. எனவும் பண்டார மும்மணிக்கோவையில் வருவனவற்றாலுமறிக. நோக்கியும் என்றது திருவருட்பார்வை செய்தலாகிய நயன தீட்சை செய்தும் என்றவாறு. உம்மை-உயர்வு சிறப்பு. இறைவன் அடிகளுக்கு நயன தீட்சை மாத்திரஞ் செய்தானல்லன். அகன்மேலும் தத்துவ சுத்தி யாகிய நிருவான தீக்கையினையும், மந்திர உபதேசமாகிய வாசக தீட்சை யையும், சிவஹஸ்தமத்தக சம்யோசனம் ஆகிய பரிச தீட்சையையும் செய் தருளினான் என்பது புராணவரலாற்றால் அறியப்படும்.
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : மாறு இலாத மா கருணை வெள்ளமே - ஒரு காலத்தும் வேறு படுதலில்லாத பேரருட் பெருக்கே ; நின் மலர் கொள் தாளிணை நினது தாமரை மலரின் தன்மையைக் கொண்ட திருவடிகள் இரண்டினையும் வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் - வீட்டு நீங்குதல் இல்லாத பக்குவ நிலையை யடைந்த நின்னுடன் வந்த மெய்யன்பர்கள் ; முந்தி வந்து உன் மெய்ம்மை மேவினார் - முற்பட்டு வந்து உனது மெய்ம்மை யாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர் . ஈறு இலாத நீ - அழிவில்லாத இறைமைக் குணங்களையுடைய அரியையாகிய நீ எளியை ஆகி ஒளி செய் மானுடம் ஆக வந்து நோக்கியும் - அருளால் எளிமையையுடையை யாகி ஒளி விளங்குகின்ற மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து திருவருட் பார்வையாகிய நான தீட்சை செய்தம் கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் பிளந்து அழிந்தொழியாத வன்நெஞ்சுடைய நாய் போன்றவனாகிய யான் . கடையன் ஆயினேன் . பட்ட கீழ்மை - அதனால் யான் அடைந்த இழிலரலை என் ஆயினேன் - புறத்தே நிற்பவன் னென்பேன் . 358 # தாமரை மாறிலாதமாக் கருணை வெள்ளமே . நின் தன்மையைக் கொண்ட தாளிணையை விட்டு நீங்குதலில்லாத பக்குவ நிலைமையை யடைந்த நின் மெய்ம்மை அன்பர்கள் உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர் . ஈறிலாத நீ அருளால் ஒளியையுடையை யாகி விளங்குகின்ற மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளி வந்து திருவருட் பார்வையாகிய நயன தீட்சை செய்தும் கீறிலாத வன்நெஞ் சுடைய நாயினேன் புறத்தே நிற்பவனாயினேன் . அதனால் யானடைந்த இழிவரலை என்னென்பேன் என்பதாம் . மலரின் 30 இறைவன் பேரருள் மாக்கருணை எனப்பட்டது . போருளை வெள்ள மாகக் கூறுதலை கல்லைட் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி ( அம்மானை 5 ) வான் கருணை வெள்ளப் பிரான் ' ' ( கோத் 16 ) ' தன் கருணை வெள்ளத்து ( பொன் னூசல் 3 ) என வருவனவற்றிலும் காண்க . இறைவன் கருணையே உருவாயுள்ளானாதலின் கருணை வெள்ளமே என்றார் . இறைவனது பேரருட் பெருக்கு மிகுதல்குறைதலின்றி எக் காலத்தும் ஒரே தன்மைத் தாயிருத்தலின் வெள்ளமே ' ' என்றார் . மாறிலாத மாக்கருணை ' ' குறை விலா நிறைவே கோதிலா அமுதே ( கோயிற் 5 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . மலர் கொள் தாள் - தாமரை மலரின் தன்மையைக் கொண்ட தாள் . ' தாமரைத் தாள் ( சத 45 ) என வந்தமையுங் காண்க . தாளிணையை என இரண்டாவது விரிக்க . வேறு இலாத - விட்டு நீங்குதலில் வாத . பதப் பரிசு இறைவனோடு இரண்டறக் கலத்தற்குரிய பக்குவ நிலைமை . மெய்ம்மை யன்பர் - மெய்யன்பர் என்றது இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த ஞான்று உடன் வந்த அணுக்கள் தொண்டர்களை . உன் மெய்ம்மை திருச்சதகம் 359 மேவினார் - உன் மெய்ம்மையாகிய திருவடியின்பத்தைப் பெற்றனர் . பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி ( சத 89 ) என்பது ஈண்டறி யற் பாலது . ஈறிலாத- அறிவற்ற என்றது அழிவற்ற இறைமைக் குணங்களின் பெருமையையும் அருமையையும் உணர்த்தியது . அங்ஙனமன்றி ஈறி லாத நீ என்பதற்கு அழிவில்லாத நீ என அறியாமையை உணர் ர்த்தியது எனக் கொள்ளின் அறியாமை உயிர்க்குமுண்டு . உலகுக்கு முன்டாதலின் அதனைச் சிறப்பாக இறைவனுக்குக் கூறுதல் அமையாது . எளியையாகி என்றதனாலும் நீ அரியை என்பது போதரும் . ' எத்தனையு மரியநீ யெளியையானாய் ' ( தேவா நாவு 308 : 8 ) எளியையாகி யாண்டமை எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே ( பிடித்த 10 ) எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னாரமுதேயோ ( ஆசைப் 5 ) என்பதனாலு மறியப்படும் . எளியையாதவ் கைம்மாறு கருதாத பேரருளாகும் . மானுடம் - மனித வடிவு . மற்றவர் தம்மை நோக்கி மானுடமிவர்தா மல்லர் எனப் பெரியபுராணத்து ( காரைக்கால் 47 ) வருதலுங் காண்க . திருப்பெருந்துறையில் குருந்த மரநிழலில் தெய்வீக ஒளி திகழ மக்கள் வடிவில் ஞானாசாரியனாக எழுந்தருளியவன் இறைவன் ; என்பது புலப்பட ஈறிலாத நீ எளியையாகி வந்து ஒளி செய் மானுடமாக நோக்கியும் . என்றார் . இறைவன் மானுடத் திருவுருவங் கொண்டருளுதல் F ' மீ கெழு பரஞ்சுடர் வெளிப்பட் டம்ம எம்மனோர் போல வினிதெழுந் தருளிக் கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன் 2 : 13-6 . எனவும் மானிட னாய வடிவுகொண் டருளாது மானிட னாய வடிவுகொண் டருளி 14 : 21-2 . எனவும் பண்டார மும்மணிக்கோவையில் வருவனவற்றாலுமறிக . நோக்கியும் என்றது திருவருட்பார்வை செய்தலாகிய நயன தீட்சை செய்தும் என்றவாறு . உம்மை - உயர்வு சிறப்பு . இறைவன் அடிகளுக்கு நயன தீட்சை மாத்திரஞ் செய்தானல்லன் . அகன்மேலும் தத்துவ சுத்தி யாகிய நிருவான தீக்கையினையும் மந்திர உபதேசமாகிய வாசக தீட்சை யையும் சிவஹஸ்தமத்தக சம்யோசனம் ஆகிய பரிச தீட்சையையும் செய் தருளினான் என்பது புராணவரலாற்றால் அறியப்படும் .