திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

370 திருவாசக ஆராய்ச்சியுரை விச்சதின்றியே விளைவு செய்குவாய் என்றது விண்ணுலகம் முதலிய வற்றை இறைவன் உண்டாக்குங்கால் அவற்றிற்கு மூலகாரணமாகிய மாயை எல்லார்க்கும் எளிதிற் புலப்படாமை பற்றியாகும். " அளவிலண் டமும் முளையின்றி விளைத்து '" ஞானாமிர்தம் கடவுள். '' விச்சதின்றி நாறு செய்வானும்" (நரியைக்) (தே. நாவு.4:2) என வருதல் காண்க. இங்ஙனம் கொள்ளாது முதலுற்பவத்தில் இறைவன் அவ்வுயிர்களுக்கு வினைகளாகிய வித்துக்களுக்கு ஈடாகவல்லாமல் தனது இச்சைப்படி தனு காண்புவன் போகங்களைக் கொடுப்பவன் என உரைக்கின் அது இறை இயல்புக்கு வழுவாகுமென்க. வைச்சு - வைத்து. "வைச்ச பொருள் நமக்காகுமென்றெண்ணி" (தே. நாவு 80:4) வைத்து என்றது குறித்த காலம் வரையும் காத்து வைத்து என்றவாறு. வாங்குதல் -தம்பால் ஒடுக்குதல். "ஓடு தந்து நில்லென்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் (பெரிய. திரு நில 20) வஞ்சகம்- மயக்கம் புலைமை - இழிவு, "வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டிற் பூட்டி" (காவு 70:5.) கோயில் வாயிலில் பிச்சனாக்கினாய் என்றது திருக்கோயில் வாயிலிலே நின்னைத் தரிசிக்கும் பெருவிருப்பால் பைத்தியம் பிடித்தவன் போல நிற் கும் வண்ணம் செய்தாய் என்பது. பெரிய அன்பர் என்றது இறைவனுடன் வந்த அணுக்கன் தொண் டர்களை. அன்பருக்குரியனாக்கினாய் என்றது ''பேசப்பட்டேன் நின் அடி யாரில்'' (சத 82) என அடிகள் முன்னர் அருளிச் செய்த வண்ணம் அவ் வடியாரில் தாமும் ஒருவராதல். "ருச்சு மாமரமாயினும் கொலார்" என்பதற்கு உலகினர் என எழு வாய் வருவித்துக் கொள்க. உலகினர் தாம் வளர்த்ததொரு மாமரம் பின்னர் ஈச்சுத் தன்மையுடையதென அறிந்தவிடத்தும் தாமே அதனைக் கொல்லார். அதுபோல நின்னால் வளர்க்கப்பட்ட யானும் தீமையுடையே ஞாயினும் கொல்லப்படாது அருள் செய்தல் வேண்டும் என்பதாம். கொல்லாதருள்செய்தல் வேண்டும் என்பதன் குறிப்பு கொன்றால் மீளப் பிறப்புண்டாம்; அதனால், நீ ஆட்கொண்டமை, ஊனை நாடகமாட வைத் உனைப் பருக வைத்தமை, ஞான நாடக மாடுவித்தமை ஆகிய இவைகள் பயனிலவாகும்; ஆதலாற் கொல்லாது இப்போதே என்னை உய்யக் கொண்டருள வேண்டும் என்பதாம். தமை, MAN இதன் கண், '' நச்சு மாமரமாயினும் கொலார் நானும் அங்ஙனே '" என்பதனால் கொல்லாது பாதுகாத்து உய்யக் கொண்டருள வேண்டும் என வேண்டுதல் அதீதமாகிய சிவானந்த நுகர்ச்சிப் பொருட்டு என்பது பொருள் புலனுாதல் காண்க. 08. 101. திருச்சதகம் உடைய நாதனே போற்றி நின்னலால் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடைய னோபணி போற்றி உம்பரார் தம்ப ராபரா போற்றி யாரினுங் கடைய னுயினேன் போற்றி யென்பெருங் கருணை யாளனே போற்றி என்னைநின் அடிய னாக்கினாய் போற்றி ஆதியும் அந்த மாயினாய் போற்றி யப்பனே. 371 ப-ரை : அப்பனே ஆதியும் அந்தமும் ஆயினாய் போற்றி .என் தந்தையே உலகத்திற்கு முதலும் முடிவும் ஆனவனே வணக்கம்; உம்ப ரார் தம் பராபரா போற்றி-மேலுலகத்தவர்களான தேவர்களுடைய மேலான பரம்பொருளே, வணக்கம்; யாரினும் கடைய னாயினேன் போற்றி - யான் மெய்யடியார் எவரினும் கடைப்பட்டவனாயினேன், காத் தருள்க: என் பெரும் கருணையாளனே போற்றி - என்னுடைய பேரரு ளாளனே வணக்கம்; என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி - யாரி னுங் கடையனாகிய என்னை நினக்குத் தொண்டனாகச் செய்தாய் வணக் கம்; உடைய நாதனே போற்றி - என்னை அடிமையாகவுடைய தலைவனே வணக்கம்; இனி எனக்கு பற்று ஆவது நின் அலால் மற்று ஒன்று உடையனோ நின்னால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் எனக்குப் பற்றுக் கோடாகவுள்ளது நின்னையன்றிப் பிறிதொரு பொருளை உடையனோ; பணி-கூறியருள்வாயாக. போற்றி - வணக்கம். PROD அப்பனே,ஆதியும் அந்தமும் ஆனவனே, வணக்கம்; தேவர்களுடைய மேலான பரம்பொருளே, வணக்கம்; யாரினும் கடைய னாயினேன் காத் தருள்க; என்னுடைய பெருங் கருணையாளனே, வணக்கம்; என்னை நின் அடியனாக்கினாய் வணக்கம்: உடைய நாதனே வணக்கம்; எனக்குப் பற் றுக்கோடாகவுள்ளது நின்னையன்றிப் பிறிதொரு பொருளை உடையனோ ? பணித்தருள்க; வணக்கம் என்பதாம். உடைய நாதன் - அடிமையாகவுடைய தலைவன்; என்றது இறைவனை. "உடையநாதன் திருமுடிமேன் மன்றல் விரவுங் திருப்பள்ளித் தாமஞ் சாத்தி" எனப் பெரிய புராணத்து (சண்டேசுர 47) வருதல் காண்க. போற்றி என்பன வணக்கம் என்னும் பொருள்பட நின்றன. '"யாரினும் கடையனாயினேன் போற்றி என்பதில் போற்றி என்பது காத்தருள்க என்னும் பொருள்பட நின்றது. "நின்னவாற் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடையனோ பணி" என்பது இனி எனக்குப் பற்றுவது நின் அல்லால் மற்று ஒன்று உடையனே பணி என இயைத்துப் பொருள். கொள்ளப்பட்டது. இனி என்பது நின்னால் ஆட்கொள்ளப்பட்ட பின் என்னும் பொருட்டாய் நின்றது. பற்று பற்றப்படுவது; அடிகளுக்கு இறைவனே யன்றிப் பிறிதொரு பற்றுக்கோடின்மை. கள ப்பட் ஆகாரம்.
370 திருவாசக ஆராய்ச்சியுரை விச்சதின்றியே விளைவு செய்குவாய் என்றது விண்ணுலகம் முதலிய வற்றை இறைவன் உண்டாக்குங்கால் அவற்றிற்கு மூலகாரணமாகிய மாயை எல்லார்க்கும் எளிதிற் புலப்படாமை பற்றியாகும் . அளவிலண் டமும் முளையின்றி விளைத்து ' ஞானாமிர்தம் கடவுள் . ' ' விச்சதின்றி நாறு செய்வானும் ( நரியைக் ) ( தே . நாவு .4 : 2 ) என வருதல் காண்க . இங்ஙனம் கொள்ளாது முதலுற்பவத்தில் இறைவன் அவ்வுயிர்களுக்கு வினைகளாகிய வித்துக்களுக்கு ஈடாகவல்லாமல் தனது இச்சைப்படி தனு காண்புவன் போகங்களைக் கொடுப்பவன் என உரைக்கின் அது இறை இயல்புக்கு வழுவாகுமென்க . வைச்சு - வைத்து . வைச்ச பொருள் நமக்காகுமென்றெண்ணி ( தே . நாவு 80 : 4 ) வைத்து என்றது குறித்த காலம் வரையும் காத்து வைத்து என்றவாறு . வாங்குதல் -தம்பால் ஒடுக்குதல் . ஓடு தந்து நில்லென்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் ( பெரிய . திரு நில 20 ) வஞ்சகம்- மயக்கம் புலைமை - இழிவு வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டிற் பூட்டி ( காவு 70 : 5 . ) கோயில் வாயிலில் பிச்சனாக்கினாய் என்றது திருக்கோயில் வாயிலிலே நின்னைத் தரிசிக்கும் பெருவிருப்பால் பைத்தியம் பிடித்தவன் போல நிற் கும் வண்ணம் செய்தாய் என்பது . பெரிய அன்பர் என்றது இறைவனுடன் வந்த அணுக்கன் தொண் டர்களை . அன்பருக்குரியனாக்கினாய் என்றது ' ' பேசப்பட்டேன் நின் அடி யாரில் ' ' ( சத 82 ) என அடிகள் முன்னர் அருளிச் செய்த வண்ணம் அவ் வடியாரில் தாமும் ஒருவராதல் . ருச்சு மாமரமாயினும் கொலார் என்பதற்கு உலகினர் என எழு வாய் வருவித்துக் கொள்க . உலகினர் தாம் வளர்த்ததொரு மாமரம் பின்னர் ஈச்சுத் தன்மையுடையதென அறிந்தவிடத்தும் தாமே அதனைக் கொல்லார் . அதுபோல நின்னால் வளர்க்கப்பட்ட யானும் தீமையுடையே ஞாயினும் கொல்லப்படாது அருள் செய்தல் வேண்டும் என்பதாம் . கொல்லாதருள்செய்தல் வேண்டும் என்பதன் குறிப்பு கொன்றால் மீளப் பிறப்புண்டாம் ; அதனால் நீ ஆட்கொண்டமை ஊனை நாடகமாட வைத் உனைப் பருக வைத்தமை ஞான நாடக மாடுவித்தமை ஆகிய இவைகள் பயனிலவாகும் ; ஆதலாற் கொல்லாது இப்போதே என்னை உய்யக் கொண்டருள வேண்டும் என்பதாம் . தமை MAN இதன் கண் ' ' நச்சு மாமரமாயினும் கொலார் நானும் அங்ஙனே ' என்பதனால் கொல்லாது பாதுகாத்து உய்யக் கொண்டருள வேண்டும் என வேண்டுதல் அதீதமாகிய சிவானந்த நுகர்ச்சிப் பொருட்டு என்பது பொருள் புலனுாதல் காண்க . 08 . 101 . திருச்சதகம் உடைய நாதனே போற்றி நின்னலால் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடைய னோபணி போற்றி உம்பரார் தம்ப ராபரா போற்றி யாரினுங் கடைய னுயினேன் போற்றி யென்பெருங் கருணை யாளனே போற்றி என்னைநின் அடிய னாக்கினாய் போற்றி ஆதியும் அந்த மாயினாய் போற்றி யப்பனே . 371 - ரை : அப்பனே ஆதியும் அந்தமும் ஆயினாய் போற்றி .என் தந்தையே உலகத்திற்கு முதலும் முடிவும் ஆனவனே வணக்கம் ; உம்ப ரார் தம் பராபரா போற்றி - மேலுலகத்தவர்களான தேவர்களுடைய மேலான பரம்பொருளே வணக்கம் ; யாரினும் கடைய னாயினேன் போற்றி - யான் மெய்யடியார் எவரினும் கடைப்பட்டவனாயினேன் காத் தருள்க : என் பெரும் கருணையாளனே போற்றி - என்னுடைய பேரரு ளாளனே வணக்கம் ; என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி - யாரி னுங் கடையனாகிய என்னை நினக்குத் தொண்டனாகச் செய்தாய் வணக் கம் ; உடைய நாதனே போற்றி - என்னை அடிமையாகவுடைய தலைவனே வணக்கம் ; இனி எனக்கு பற்று ஆவது நின் அலால் மற்று ஒன்று உடையனோ நின்னால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் எனக்குப் பற்றுக் கோடாகவுள்ளது நின்னையன்றிப் பிறிதொரு பொருளை உடையனோ ; பணி - கூறியருள்வாயாக . போற்றி - வணக்கம் . PROD அப்பனே ஆதியும் அந்தமும் ஆனவனே வணக்கம் ; தேவர்களுடைய மேலான பரம்பொருளே வணக்கம் ; யாரினும் கடைய னாயினேன் காத் தருள்க ; என்னுடைய பெருங் கருணையாளனே வணக்கம் ; என்னை நின் அடியனாக்கினாய் வணக்கம் : உடைய நாதனே வணக்கம் ; எனக்குப் பற் றுக்கோடாகவுள்ளது நின்னையன்றிப் பிறிதொரு பொருளை உடையனோ ? பணித்தருள்க ; வணக்கம் என்பதாம் . உடைய நாதன் - அடிமையாகவுடைய தலைவன் ; என்றது இறைவனை . உடையநாதன் திருமுடிமேன் மன்றல் விரவுங் திருப்பள்ளித் தாமஞ் சாத்தி எனப் பெரிய புராணத்து ( சண்டேசுர 47 ) வருதல் காண்க . போற்றி என்பன வணக்கம் என்னும் பொருள்பட நின்றன . ' யாரினும் கடையனாயினேன் போற்றி என்பதில் போற்றி என்பது காத்தருள்க என்னும் பொருள்பட நின்றது . நின்னவாற் பற்று மற்றெனக் காவ தொன்றினி உடையனோ பணி என்பது இனி எனக்குப் பற்றுவது நின் அல்லால் மற்று ஒன்று உடையனே பணி என இயைத்துப் பொருள் . கொள்ளப்பட்டது . இனி என்பது நின்னால் ஆட்கொள்ளப்பட்ட பின் என்னும் பொருட்டாய் நின்றது . பற்று பற்றப்படுவது ; அடிகளுக்கு இறைவனே யன்றிப் பிறிதொரு பற்றுக்கோடின்மை . கள ப்பட் ஆகாரம் .