திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "கன்ன ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான்" 382 '"உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூன்புக்குக் கருணையினா லாண்டு கொண்ட திருத்துருத்தி மேயானை" கண்டபத்து 3 பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீ யாண்டவா றன்றேயெம் பெருமானே ' ஏசறவு 8 என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க, கலத்தல் - மனத்திற் பொருந்துதல். கலந்தாண்டமை. "கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக் கலந்தாண்டலுமே" (தெள் 11) என்பதனாலுமறிக. கலத்தற்கும் கருணையே காரணமாதலின் கருணை யினாற் கலந்து என்றார். "கற்போலு நெஞ்சங் கசித்துருகக் கருணையினால், நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி" (தோணோ 4) என அடிகள் அருளியமையுங் காண்க. கலந்து என்ற வினையினால் தானே வலிய எழுந்தருளி வந்தமை பெறப்பட்டது. "தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும், வான் வார்கழல்........" தெள் 9. "பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு'' "இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு" திருவெம்பா பீ. ' "பொருளா வெனைப் புகுந்தாண்டு" (73) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. அம்:1. அம்: 3, "அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டு" தெள்:3. ''அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின் மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்" தென்: 6, என இத்திருவாசகத்தும், இறைவனுக்குரிய தரும வெள்விடையும் மால்ளிடையுமாகிய எருத்து வாகனங்கள் இரண்டனுள் ஈண்டு விடையென்றது அறவடிவாகிய தரும் 383 நீத்தல் விண்ணப்பம் வெள்விடையேயாகும். விட்டிடுதி என்பது எதிர்கால முணர்த்துவதா யினும் ஈண்டு விடுகின்றனையோ என நிகழ்காலத்தில் குறிப்பினால் விரைப் பொருளில் வந்தது. கண்டாய் என்னும் முன்னிலையசை விட்டுவிடா தொழிய வேண்டும் என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது. மாறு விறல் வேங்கை தாருகா வனத்து இருடிகளால் இறைவனைக் கொல்லு அபிசார வேள்வியிலிருந்து தோற்றுவித்து விடப்பட்டதாகும். இறைவன் அதனைக் கொன்று உரியை உடையாகக் கொண்டனன் என்க. கொன்று "கருத்தில்விழி 3 சிவந்தமுனிக் கணங்கணத்தி அதிப்பித்த வெரித்ததிரு முழுவையைநே ரேவுதலு மெந்தைபிரான் சிரித்தருளி யது பிடித்துத் திருக்கரத்தி ளகநுதியால் உரித்தவுரி பசும்பட்டா வுடை தொடைமே அறவுடுத்தான்'' (பதஞ் 32) எனக் கோயிற் புராணத்து வருதலுங் காண்க. உத்தரகோச மங்கை என்பது பாண்டி நாட்டிலுள்ள ஒரு சிவதலம். இது தத்துவங்களிலுண்டாகும் வினாக்களுக்கு விடை கூறும் தொகை யாகிய நூலினை இறைவன் மெய்யடியார்களுக்கும் இறைவிக்கும் உப தேசஞ் செய்து அவ்விறைவியோடு இருக்கும் தலம் எனப் பொருள் கொள்ளத்தக்கதாகவுள்ளது. தளர்ச்சியுற்ற பிறையைச் சடையிற் றாங்கி பாதுகாத்த நீ தளர்ந்த என்னையும் தாங்கிப் பாதுகாத்தல் கடனாம் என் பது தோன்றச் "சடையவனே " என்றார். சடையவன் - சடையையுடை "தில்லைச் சிற்றம்பலத்துப் பொற்பந்தியன்ன சடையவன் " (305) எனத் திருக்கோவையாரினும் வருதல் காண்க. யவன் தளர்தல் - ஞானாசாரியத் திருவுருவைக் காணப் பெருமையாலும் பொய்யுலக வாழ்விற் பற்று அழுமையாலும் உளதாகிய தளர்ச்சி. "மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன்'' (அடைக் 6) என வருதலுங் காண்க. தாங்குதல் - அணைத்துக் கொள்ளுதல். இதன் கண் விட்டிடுதி கண்டாய்; தளர்ந்தேன் என்பவற்றால் நீத் தல் விண்ணப்பமும் பிரயஞ்ச வைராக்கியமும் புலப்படுத்தல் காண்க, இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது. 1. 108. கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொன்னைச் செவ்வாய் விள்ளே னெளிலும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளே னொழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே.
திருவாசக ஆராய்ச்சியுரை கன்ன ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் 382 ' உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூன்புக்குக் கருணையினா லாண்டு கொண்ட திருத்துருத்தி மேயானை கண்டபத்து 3 பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தே நீ யாண்டவா றன்றேயெம் பெருமானே ' ஏசறவு 8 என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க கலத்தல் - மனத்திற் பொருந்துதல் . கலந்தாண்டமை . கயன்மாண்ட கண்ணிதன் பங்கனெனைக் கலந்தாண்டலுமே ( தெள் 11 ) என்பதனாலுமறிக . கலத்தற்கும் கருணையே காரணமாதலின் கருணை யினாற் கலந்து என்றார் . கற்போலு நெஞ்சங் கசித்துருகக் கருணையினால் நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி ( தோணோ 4 ) என அடிகள் அருளியமையுங் காண்க . கலந்து என்ற வினையினால் தானே வலிய எழுந்தருளி வந்தமை பெறப்பட்டது . தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான் வார்கழல் ........ தெள் 9 . பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு ' ' இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு திருவெம்பா பீ . ' பொருளா வெனைப் புகுந்தாண்டு ( 73 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . அம் : 1 . அம் : 3 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்து நம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டு தெள் : 3 . ' ' அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின் மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் தென் : 6 என இத்திருவாசகத்தும் இறைவனுக்குரிய தரும வெள்விடையும் மால்ளிடையுமாகிய எருத்து வாகனங்கள் இரண்டனுள் ஈண்டு விடையென்றது அறவடிவாகிய தரும் 383 நீத்தல் விண்ணப்பம் வெள்விடையேயாகும் . விட்டிடுதி என்பது எதிர்கால முணர்த்துவதா யினும் ஈண்டு விடுகின்றனையோ என நிகழ்காலத்தில் குறிப்பினால் விரைப் பொருளில் வந்தது . கண்டாய் என்னும் முன்னிலையசை விட்டுவிடா தொழிய வேண்டும் என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது . மாறு விறல் வேங்கை தாருகா வனத்து இருடிகளால் இறைவனைக் கொல்லு அபிசார வேள்வியிலிருந்து தோற்றுவித்து விடப்பட்டதாகும் . இறைவன் அதனைக் கொன்று உரியை உடையாகக் கொண்டனன் என்க . கொன்று கருத்தில்விழி 3 சிவந்தமுனிக் கணங்கணத்தி அதிப்பித்த வெரித்ததிரு முழுவையைநே ரேவுதலு மெந்தைபிரான் சிரித்தருளி யது பிடித்துத் திருக்கரத்தி ளகநுதியால் உரித்தவுரி பசும்பட்டா வுடை தொடைமே அறவுடுத்தான் ' ' ( பதஞ் 32 ) எனக் கோயிற் புராணத்து வருதலுங் காண்க . உத்தரகோச மங்கை என்பது பாண்டி நாட்டிலுள்ள ஒரு சிவதலம் . இது தத்துவங்களிலுண்டாகும் வினாக்களுக்கு விடை கூறும் தொகை யாகிய நூலினை இறைவன் மெய்யடியார்களுக்கும் இறைவிக்கும் உப தேசஞ் செய்து அவ்விறைவியோடு இருக்கும் தலம் எனப் பொருள் கொள்ளத்தக்கதாகவுள்ளது . தளர்ச்சியுற்ற பிறையைச் சடையிற் றாங்கி பாதுகாத்த நீ தளர்ந்த என்னையும் தாங்கிப் பாதுகாத்தல் கடனாம் என் பது தோன்றச் சடையவனே என்றார் . சடையவன் - சடையையுடை தில்லைச் சிற்றம்பலத்துப் பொற்பந்தியன்ன சடையவன் ( 305 ) எனத் திருக்கோவையாரினும் வருதல் காண்க . யவன் தளர்தல் - ஞானாசாரியத் திருவுருவைக் காணப் பெருமையாலும் பொய்யுலக வாழ்விற் பற்று அழுமையாலும் உளதாகிய தளர்ச்சி . மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் ' ' ( அடைக் 6 ) என வருதலுங் காண்க . தாங்குதல் - அணைத்துக் கொள்ளுதல் . இதன் கண் விட்டிடுதி கண்டாய் ; தளர்ந்தேன் என்பவற்றால் நீத் தல் விண்ணப்பமும் பிரயஞ்ச வைராக்கியமும் புலப்படுத்தல் காண்க இப்பதிகம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளது . 1 . 108. கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொன்னைச் செவ்வாய் விள்ளே னெளிலும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளே னொழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே .