திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

388 திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: வெள் மதி கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி - வெண் ணிறமான இளம்பிறை ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடியை யுடைய, உத்தரகோச மங்கைக்கு அரசே - திருவுத்தசகோச மங்கை என் னும் தலத்துக்கு அரசனே, தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழுசுடரே-உருகித் தெளிந்த மாற்றுயர்ந்த பொன்னையும் மின்னலையும் ஒத்த தோற்றத்தினையுடைய பேரொளியுருவினனே. வளர் கின்ற நின் கருணை கையில் வாங்கவும் - வளர்ந்து கொண்டிருக்கின்ற நினது திருவருட் கரத்தால் நின்பால் இழுக்கவும், நீங்கி இப்பால் மிளிர் கின்ற என்னை - நின்னை விட்டுப் பிரிந்து இப்பொய்யுலக வாழ்வில் விளங் குதற் கேதுவாகிய வினையையுடைய என்னை, விடுதி கண்டாய்- கைவிடு கின்றனையோ? 1 யா ? கைவிடாதொழிதல் வேண்டும். வெண்மதிக் கொழுந்து ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடியை யுடைய உத்தர கோசமங்கைக்கு அரடு ஒளிர்கின்ற பொன்னும் மின் னும் ஒத்த தோற்றத்தினையுடைய சுடர் கொழுந்தே,வளர்கின்ற நின் திருவருட் கரத்தால் நின்பால் இழுக்கவும், நின்னின் நீங்கி - இப்பொய் யுலக வாழ்வில் விளங்குதற்கேதுவாகிய வினையையுடைய என்னைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். வளர்கின்ற கருணை . அன்பர்க்கு வழங்க வழங்கச் சிறிதும் குறைவு படாது வளர்ந்து கொண்டேயிருக்கின்ற கருனை. திருவருளால் ஈர்த்தல் பற்றிக் கருணையைக் கை என்றார். கையில் - கையினால். வாங்குதல் - இழுத்தல். ''குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கி" (கலி 83:9) என் புழிப்போல. நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை என்பதற்கு நின்னை விட்டுப் பிரிந்து இப்பொய்யுலக வாழ்வில் விளங்குதற்கேதுவாகிய வினையையுடைய என்னை எனப் பொருளுரைக்க. இங்ஙனம் உரையா விடத்து இறைவன் திருவருளுக்கு மாறாக அடிகளே இறைவனை விட்டுப் பிரிந்து சென்றனர் எனப் பொருள்படும். அது அடிகள் வரலாற்றிற்கு மாறாகும். மதிக் '"மதிக்கொழுந் தலைய விழுங் கங்கை குதித்த சடைக் கூத்தனார்' (மானக் 32) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க. கொழுந்து ஒளிர்கின்ற சடை என்றகனால் எய்த்து அடைந்த திங்களுக்கு இரங்கியருள் செய்து முடியின்கட் கொண்டது போல என்னையும் நின் பால் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என உள்ளுறைப் பொருள் தோன்றுமாறு காண்க. தெளிகின்ற பொன் - ஓடவிட்டுத் தெளிந்த பசும்பொன். இது மிக்க ஒளியுடைத்தென்பது "தாவின்று திருமணி பொருத நிகழ்வீடு பசும் பொன்" பதிற் 19:14-5 என்பதனாலும் அறியப்படும். *" பொன்னும் மின்னும் அன்ன தோற்றம்" என்புழி பொன் திருமேனிக்கும் மின் செஞ்சடைக்கும் உவமையாகக் கொள்க. நீத்தல் விண்ணப்பம் "பொன்னே திகழும் திருமேனி யெந்தாய்" "பொன் னியலுந் திருமேனி' "பொன் னொளி கொள் மேளி" தே.ஞான 71:8 திருப்படை 8 சத 59 389 எனவும், " மின்னெறி செஞ்சடைக் கூத்தப்பிரான் " திருக்கோவை 49 ''மின்னங் கலருஞ் சடை முடியோன்" திருக்கோவை 172 மின்னிற் பொலி சடை" மின்னை யன்ன சடை" தே.ஞான 11: 8 தே.ஞான 250 : 4 எனவும் வருவன காண்க, தெளிகின்ற பொன் என்றதனால் பொன்னுக்கு ஒளியுடைமையும் பெறப்படுதலின் திருமேனி ஒர்க்கு மின் கூறப்பட்டது. எனல் அமையாதென்க. இறைவன் பேரொளியுருவினனாதலின் "செழுஞ் சுடரே" என்றார். "செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி"" (5) "தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி (?) எனப் பிடித்தபத்திலும் அடிகள் அருனியமை காண்க. திகழ்ந்த நற்செழுஞ்சுடர்" வானோர் செழுஞ்சுடரே ஞான 232:10 நாவு 200:1 "எறும்பி யூர் மலைமேன் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரை' நாவு 304:1 "தேவாதி தேவர் முதலுமாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே" நாவு 307 : 8 எனத் தேவாரத்தும் வருவன காண்க. என்னை விடுதி கண்டாய் இதன் கண், நீங்கி யிப்பால் மிளிர்கின்ற என்பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் தம்மைக் கைவிடலாகாதென் பலும் புலப்படுமாறு காண்க. 109. செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற வென்னை விடுதி கண் டாய்வெறி வாயறுகால் உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே. 4. ப-ரை : வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி. - தேன் பொருந் திய வாயினையுடைய வண்டுகள் கிண்டுகின்ற கொன்றை மலர் மாலையை
388 திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : வெள் மதி கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி - வெண் ணிறமான இளம்பிறை ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடியை யுடைய உத்தரகோச மங்கைக்கு அரசே - திருவுத்தசகோச மங்கை என் னும் தலத்துக்கு அரசனே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழுசுடரே - உருகித் தெளிந்த மாற்றுயர்ந்த பொன்னையும் மின்னலையும் ஒத்த தோற்றத்தினையுடைய பேரொளியுருவினனே . வளர் கின்ற நின் கருணை கையில் வாங்கவும் - வளர்ந்து கொண்டிருக்கின்ற நினது திருவருட் கரத்தால் நின்பால் இழுக்கவும் நீங்கி இப்பால் மிளிர் கின்ற என்னை - நின்னை விட்டுப் பிரிந்து இப்பொய்யுலக வாழ்வில் விளங் குதற் கேதுவாகிய வினையையுடைய என்னை விடுதி கண்டாய்- கைவிடு கின்றனையோ ? 1 யா ? கைவிடாதொழிதல் வேண்டும் . வெண்மதிக் கொழுந்து ஒன்று விளங்குகின்ற நீண்ட சடைமுடியை யுடைய உத்தர கோசமங்கைக்கு அரடு ஒளிர்கின்ற பொன்னும் மின் னும் ஒத்த தோற்றத்தினையுடைய சுடர் கொழுந்தே வளர்கின்ற நின் திருவருட் கரத்தால் நின்பால் இழுக்கவும் நின்னின் நீங்கி - இப்பொய் யுலக வாழ்வில் விளங்குதற்கேதுவாகிய வினையையுடைய என்னைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . வளர்கின்ற கருணை . அன்பர்க்கு வழங்க வழங்கச் சிறிதும் குறைவு படாது வளர்ந்து கொண்டேயிருக்கின்ற கருனை . திருவருளால் ஈர்த்தல் பற்றிக் கருணையைக் கை என்றார் . கையில் - கையினால் . வாங்குதல் - இழுத்தல் . ' ' குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கி ( கலி 83 : 9 ) என் புழிப்போல . நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை என்பதற்கு நின்னை விட்டுப் பிரிந்து இப்பொய்யுலக வாழ்வில் விளங்குதற்கேதுவாகிய வினையையுடைய என்னை எனப் பொருளுரைக்க . இங்ஙனம் உரையா விடத்து இறைவன் திருவருளுக்கு மாறாக அடிகளே இறைவனை விட்டுப் பிரிந்து சென்றனர் எனப் பொருள்படும் . அது அடிகள் வரலாற்றிற்கு மாறாகும் . மதிக் ' மதிக்கொழுந் தலைய விழுங் கங்கை குதித்த சடைக் கூத்தனார் ' ( மானக் 32 ) எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க . கொழுந்து ஒளிர்கின்ற சடை என்றகனால் எய்த்து அடைந்த திங்களுக்கு இரங்கியருள் செய்து முடியின்கட் கொண்டது போல என்னையும் நின் பால் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என உள்ளுறைப் பொருள் தோன்றுமாறு காண்க . தெளிகின்ற பொன் - ஓடவிட்டுத் தெளிந்த பசும்பொன் . இது மிக்க ஒளியுடைத்தென்பது தாவின்று திருமணி பொருத நிகழ்வீடு பசும் பொன் பதிற் 19 : 14-5 என்பதனாலும் அறியப்படும் . * பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் என்புழி பொன் திருமேனிக்கும் மின் செஞ்சடைக்கும் உவமையாகக் கொள்க . நீத்தல் விண்ணப்பம் பொன்னே திகழும் திருமேனி யெந்தாய் பொன் னியலுந் திருமேனி ' பொன் னொளி கொள் மேளி தே.ஞான 71 : 8 திருப்படை 8 சத 59 389 எனவும் மின்னெறி செஞ்சடைக் கூத்தப்பிரான் திருக்கோவை 49 ' ' மின்னங் கலருஞ் சடை முடியோன் திருக்கோவை 172 மின்னிற் பொலி சடை மின்னை யன்ன சடை தே.ஞான 11 : 8 தே.ஞான 250 : 4 எனவும் வருவன காண்க தெளிகின்ற பொன் என்றதனால் பொன்னுக்கு ஒளியுடைமையும் பெறப்படுதலின் திருமேனி ஒர்க்கு மின் கூறப்பட்டது . எனல் அமையாதென்க . இறைவன் பேரொளியுருவினனாதலின் செழுஞ் சுடரே என்றார் . செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தி ( 5 ) தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி ( ? ) எனப் பிடித்தபத்திலும் அடிகள் அருனியமை காண்க . திகழ்ந்த நற்செழுஞ்சுடர் வானோர் செழுஞ்சுடரே ஞான 232 : 10 நாவு 200 : 1 எறும்பி யூர் மலைமேன் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரை ' நாவு 304 : 1 தேவாதி தேவர் முதலுமாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்றவாறே நாவு 307 : 8 எனத் தேவாரத்தும் வருவன காண்க . என்னை விடுதி கண்டாய் இதன் கண் நீங்கி யிப்பால் மிளிர்கின்ற என்பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் தம்மைக் கைவிடலாகாதென் பலும் புலப்படுமாறு காண்க . 109. செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற் பன்னாள் விழுகின்ற வென்னை விடுதி கண் டாய்வெறி வாயறுகால் உழுகின்ற பூமுடி யுத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே . 4 . - ரை : வெறி வாய் அறுகால் உழுகின்ற பூமுடி . - தேன் பொருந் திய வாயினையுடைய வண்டுகள் கிண்டுகின்ற கொன்றை மலர் மாலையை