திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

392 திருவாசக ஆராய்ச்சியுரை ரத்த வினையின் தொகுதி முழுவதையும் கடிந்து அடியேனை கொண்டருளுக. ஆண்டு என் மணியே, உத்தர கோசமங்கைக்கு அரசே, பெரியோர் சிறு நாய் போன்றவர்களது பொய்யினைப் பொறுத்துக் சொள்வார்களல் லவா? அடியேன் நினது திருவருளின் அருமையை அறியாமைக்கேது வாகிய பிராரத்தவிளையுடைமையால் அதனை மறுத்துவிட்டேன்; நீஎனை வெறுத்துக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். எனது பிராரத்தவினையின் தொகுதியை வெறுத்து ஆண்டுகொண்டருளுக என்ப தாம். யான் உன் அருளறியாமையின் மறுத்தனன் எனக் கூட்டிப் பொருள் கொள்க. அருள் என்றது அருளாரமுதத்தினை; "நின்னருளாரமு தூட்ட மறுத்தனன்" (நீத் 5) என வந்தமை காண்க. அருளை மறுத்தமைக்குப் பிராரத்தவினையின் தொகுதியே ஏதுவாதல் "வினையின் தொகுதி யொறுத்து" என மேல் வருதலானும் அறியப்படும். வினை என்றது பிரா ரத்த வினையை. ஒறுத்து - கெடுத்து எனினுமாம். நாய்கள் - நாய் போன்ற வர்கள். பொய் - பொய்ச் செயல். இதன் கண், மறுத்தனன் யானுன் அருளறியாமையின் எனவும் வெறுத்தெனை விட்டிடுதி கண்டாய் எனவும் வினையின் தொகுதி யொறுத்தெனை பாண்டு சொள் எனவும் வருவனவற்றல் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் பெறப்பட்ட வாறு காண்க, Tal 111. பொய்யவ னேனைப் பொருளென வாண்டொன்று 8. பொத்திக்கொண்ட ப-ரை: விடம் மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று மையவ னேமன்னு முத்தார கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவத் தீர்ப்பவனே. உண் மிடற்று மையவனே - நஞ்சுண்டமையால் கண்டத்தில் கருமை நிறத்தையுடையவனே, மன்னும் உத்தர கேரச மங்கைக்கு அரசே- நிலைபெற்ற திருவுத்தர கோசமங்கை என்னும் தலத் துக்கு அரசே, செய்யவனே- சிவந்த திருமேனியை யுடையவனே, சிவனே - சிவனே. சிறியேன் பவம் தீர்ப்பவனே - சிறுமையுடையேனது பிறப்பை நீக்குபவனே, பொய்யவனேனை பொருள் என ஆண்டு-நிலையற்ற பொய் யுலக வாழ்வினையுடையவனாகிய என்னை ஒரு பொருளாக மதித்து ஆட் கொண்டருளி. ஒன்று பொத்தி கொண்ட மெய்யவனே - ஒப்பற்ற பேற்றினை அருளாது மறைத்துக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவனே, கைவிடாதொழி விட்டிடுதி கண்டாய். என்னைக் கைவிடுகின் றேையா? ல்வேண்டும் என்பதாம். வீடு நீத்தல் விண்ணப்பம் 393 விடமுண் மிடற்று மையவனே உத்தர கோசமங்கைக்கு அரசே, செய்யவனே, சிவனே. சிறுமையுடையேனது பிறப்பை நீக்குபவனே, பொய்யவனேனை ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்டருளி ஒப்பற்ற வீடு பேற்றினை மறைத்துக் கொண்ட மெய்யவனே, என்னைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதவ் வேண்டும், என்பதாம். பொய்யவனேனை - பொய்யுலக வாழ்வில் பற்று நீங்கப் பெருதவனாகிய என்னை.'பொய்யனேன் நான் உண்டுடுத்திங் இருப்பதானேன்" (சத 52) பொய்யனேன் அகநெக'" (செத் 1) எனப் பிருண்டும் கூறுதல் காண்க. பொருளென ஆண்டு பொருளாக மதித்து ஆண்டு. "பொருளர வெனைப் புகுந்தாண்ட பொன்னே ' கோயின் மூத் 8. புலையனேனையும் பொருளென நினைந்துன் அருள் புரிந்தனை' செத் 3. பொருளாவெனைப் புகுந்தாண்டு " திருக்கோவை 73. 'புலியூர் எனை நின்று ஆண்டான் ''- புலியூரின்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்று ஆண்டவனது (திருக்கோவை 244 பேர்) என வருவன காண்க. #1 ஒன்று பொத்தி கொண்ட என்றது ஓப்பற்ற வீடு பேற்றினை அரு னாது மறைத்துக் கொண்ட என்றவாறு. உடனே வீடு பேற்றினை இறை வன் அருளாமை. தூலவுடம்பும் அது முகந்து நின்ற பிராரத்த வினையும் நீங்கத்தக்க பக்குவமடையாமையாவாகும். அதனை உணர்ந்து பொத்திக்கொண்டமையால் இறைவனை "மெய்யவனே" என்றார். பொத்து தல் - மறைத்தல். உடனே விடமுன் மிடற்று மையவன் - விடமுண்டமையால் கண்டத்தில் கருமை நிறமுடையவன். "கஞ்சுண் மழைதரு கண்டன் " நீத் 48, "செழுமிடற்றின் மைவந்த கோன் திருக்கோவை 212. அருந்தும் விட மணியா மணி கண்டன் " திருக்கோவை 272. மை கொண்ட கண்டா" திருக்கோவை 386. " என அடிகளும், 12 "கடுவிடமுண்டு இருண்ட மணி கண்டத் தோன்'' தே.1293. "கறுத்த நஞ்ச முண்டிருண்ட கண்டர் "" "நஞ்சினை யுண்டிருள் கண்டனார்'' என ஆளுடைய பிள்ளையாரும் அருளியமை விளை ரதுப் பொருளில் வந்தது. 60 தே.237:8. தே.258:2 காண்க. உண் என்னும்
392 திருவாசக ஆராய்ச்சியுரை ரத்த வினையின் தொகுதி முழுவதையும் கடிந்து அடியேனை கொண்டருளுக . ஆண்டு என் மணியே உத்தர கோசமங்கைக்கு அரசே பெரியோர் சிறு நாய் போன்றவர்களது பொய்யினைப் பொறுத்துக் சொள்வார்களல் லவா ? அடியேன் நினது திருவருளின் அருமையை அறியாமைக்கேது வாகிய பிராரத்தவிளையுடைமையால் அதனை மறுத்துவிட்டேன் ; நீஎனை வெறுத்துக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . எனது பிராரத்தவினையின் தொகுதியை வெறுத்து ஆண்டுகொண்டருளுக என்ப தாம் . யான் உன் அருளறியாமையின் மறுத்தனன் எனக் கூட்டிப் பொருள் கொள்க . அருள் என்றது அருளாரமுதத்தினை ; நின்னருளாரமு தூட்ட மறுத்தனன் ( நீத் 5 ) என வந்தமை காண்க . அருளை மறுத்தமைக்குப் பிராரத்தவினையின் தொகுதியே ஏதுவாதல் வினையின் தொகுதி யொறுத்து என மேல் வருதலானும் அறியப்படும் . வினை என்றது பிரா ரத்த வினையை . ஒறுத்து - கெடுத்து எனினுமாம் . நாய்கள் - நாய் போன்ற வர்கள் . பொய் - பொய்ச் செயல் . இதன் கண் மறுத்தனன் யானுன் அருளறியாமையின் எனவும் வெறுத்தெனை விட்டிடுதி கண்டாய் எனவும் வினையின் தொகுதி யொறுத்தெனை பாண்டு சொள் எனவும் வருவனவற்றல் பிரபஞ்ச வைராக்கியமும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் பெறப்பட்ட வாறு காண்க Tal 111. பொய்யவ னேனைப் பொருளென வாண்டொன்று 8 . பொத்திக்கொண்ட - ரை : விடம் மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று மையவ னேமன்னு முத்தார கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவத் தீர்ப்பவனே . உண் மிடற்று மையவனே - நஞ்சுண்டமையால் கண்டத்தில் கருமை நிறத்தையுடையவனே மன்னும் உத்தர கேரச மங்கைக்கு அரசே- நிலைபெற்ற திருவுத்தர கோசமங்கை என்னும் தலத் துக்கு அரசே செய்யவனே- சிவந்த திருமேனியை யுடையவனே சிவனே - சிவனே . சிறியேன் பவம் தீர்ப்பவனே - சிறுமையுடையேனது பிறப்பை நீக்குபவனே பொய்யவனேனை பொருள் என ஆண்டு - நிலையற்ற பொய் யுலக வாழ்வினையுடையவனாகிய என்னை ஒரு பொருளாக மதித்து ஆட் கொண்டருளி . ஒன்று பொத்தி கொண்ட மெய்யவனே - ஒப்பற்ற பேற்றினை அருளாது மறைத்துக் கொண்ட மெய்ப்பொருளாயுள்ளவனே கைவிடாதொழி விட்டிடுதி கண்டாய் . என்னைக் கைவிடுகின் றேையா ? ல்வேண்டும் என்பதாம் . வீடு நீத்தல் விண்ணப்பம் 393 விடமுண் மிடற்று மையவனே உத்தர கோசமங்கைக்கு அரசே செய்யவனே சிவனே . சிறுமையுடையேனது பிறப்பை நீக்குபவனே பொய்யவனேனை ஒரு பொருளாகக் கருதி ஆட்கொண்டருளி ஒப்பற்ற வீடு பேற்றினை மறைத்துக் கொண்ட மெய்யவனே என்னைக் கைவிடு கின்றனையோ ? கைவிடாதொழிதவ் வேண்டும் என்பதாம் . பொய்யவனேனை - பொய்யுலக வாழ்வில் பற்று நீங்கப் பெருதவனாகிய என்னை.'பொய்யனேன் நான் உண்டுடுத்திங் இருப்பதானேன் ( சத 52 ) பொய்யனேன் அகநெக ' ( செத் 1 ) எனப் பிருண்டும் கூறுதல் காண்க . பொருளென ஆண்டு பொருளாக மதித்து ஆண்டு . பொருளர வெனைப் புகுந்தாண்ட பொன்னே ' கோயின் மூத் 8 . புலையனேனையும் பொருளென நினைந்துன் அருள் புரிந்தனை ' செத் 3 . பொருளாவெனைப் புகுந்தாண்டு திருக்கோவை 73 . ' புலியூர் எனை நின்று ஆண்டான் ' ' - புலியூரின்கண் ஒரு பொருளாக மதித்து என்னை நின்று ஆண்டவனது ( திருக்கோவை 244 பேர் ) என வருவன காண்க . # 1 ஒன்று பொத்தி கொண்ட என்றது ஓப்பற்ற வீடு பேற்றினை அரு னாது மறைத்துக் கொண்ட என்றவாறு . உடனே வீடு பேற்றினை இறை வன் அருளாமை . தூலவுடம்பும் அது முகந்து நின்ற பிராரத்த வினையும் நீங்கத்தக்க பக்குவமடையாமையாவாகும் . அதனை உணர்ந்து பொத்திக்கொண்டமையால் இறைவனை மெய்யவனே என்றார் . பொத்து தல் - மறைத்தல் . உடனே விடமுன் மிடற்று மையவன் - விடமுண்டமையால் கண்டத்தில் கருமை நிறமுடையவன் . கஞ்சுண் மழைதரு கண்டன் நீத் 48 செழுமிடற்றின் மைவந்த கோன் திருக்கோவை 212 . அருந்தும் விட மணியா மணி கண்டன் திருக்கோவை 272 . மை கொண்ட கண்டா திருக்கோவை 386 . என அடிகளும் 12 கடுவிடமுண்டு இருண்ட மணி கண்டத் தோன் ' ' தே .1293 . கறுத்த நஞ்ச முண்டிருண்ட கண்டர் நஞ்சினை யுண்டிருள் கண்டனார் ' ' என ஆளுடைய பிள்ளையாரும் அருளியமை விளை ரதுப் பொருளில் வந்தது . 60 தே .237 : 8 . தே .258 : 2 காண்க . உண் என்னும்