திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

404 திருவாசக ஆராய்ச்சியுரை லீன் "மடலின் மட்டே" என்றார். இறைவன் மாணிக்க மணிபோலும் செம்மை பொருந்திய திருமேனியுடன் ஞானாசாரியனாக எழுத்தருனியமை யின் மணியே என்றார். கழிபெருஞ்சுவையோடு உறுதி பயத்தலுடைமை யான் ''அமுதே" என்றார். மது.கள். அது இங்கே களிப்பை உணர்த் தியது. கள்ளினால் உண்டாகும் களிப்பு உடல் உணர்வுகளை மறக்கச் செய்து முழுவதும் தன்வயப்படுத்துதல் போல, இறைவன் அருளால் உண் டாகும் களிப்பு உடலையும் உணர்வையும் உலகத்தையும் மறக்கச் செய்து பரவசமடையச் செய்தலின் 'மதுவெள்ளமே' என்றார். நானென்பதறியேன் பகல் இரவாவதுமறியேன் (உயிருண்ணி 8) என அடிகள் அருளியவாறுங் காண்க. 10 இதன்கண், கருணைக் கடலினுள்ளம் விடலரியேனை விடுதி கண்டாய் என்பதனால் கினது அருட்பெருங்கடலில் உள்ளம் புக்கழுந்தி நிறை வினைப் பெறத்தக்க தவமில்லாதேனைக் கைவிடாதொழிதல் வேண்டும் என் பது போதநதலின் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் வேண்டும் என்பதும் புலப்படுமாறு காண்க. 13. 118. வெள்ளத்துள் நாவற்றியாங் குன் அருள் பெற்றுத்துன் STOR பத்தினின்றும் விள்ளக் கிலேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து வேற்கரு ளாய்களி யாத களியெனக்கே. ப-ரை : விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் - நின்னை விரும்பி அன்பு செய்யும் மெய்யடியாரின் மனத்தின்கண் உள்ளவனே. மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே- நிலைபெற்ற திருவுத்தரகோசமங்கை என் னும் தலத்துக்கு அரசே. வெள்ளத்துள் நா வற்றியாங்கு - நல்ல நீர்ப் பெருக்கினுள் உள்ளான் ஒருவனுக்கு நா வரண்டு துன்பமுண்டானாற் போல உன் அருள்பெற்று இன்றும் துன்பத்து விள்ளக்கிலேனை - நின் திருவருளைப் பெற்றும் இப்போதும் பொய்யுலகத் துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய ஆற்றவில்லாத என்னை. விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். கள்ளத்துளேற்கு எனக்கு களியாத களி அருளாய் - மாயையின் கரவின்கண் உள்ளேனாகிய எனக்கு அக்கரவினை நீக்கிப் புலன்களால் நுகரப்பெருத பெருங் களிப்பை எனக்கு அருள்புரிவாயாக. அடியார் உள்ளத் துள்ளாய் உத்தர கோசமங்கைக்கரசே, வெள்ளத் துள் இருந்தும் ஒருவனுக்கு நா வரண்டு துன்பமுண்டானாற் போல நின் திருவருளைப் பெற்றும் இப்போதும் பொய்யுலகத் துன்பத்தினின்றும் நீங் கும் ஆற்றலில்லாத என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். கள்ளத்துளேற்கு எனக்குக் களியாதகளி அருளாய் என்ப தாம். நீத்தல் விண்ணப்பம் 405 என் வெள்ளத்துள் நாவற்றியாங்கு என்பதற்கு நல்ல நீர்ப் பெருக்கி னுள்ளான் ஒருவனுக்கு நாவரண்டதுபோல என ஆற்றலாற் சில சொற் கள் வருவித்துரைக்கப்பட்டன வற்றியது ஆங்கு வற்றியாங்கு விகாரமடைந்தது. உன் அருள் என்றது இறைவன் அடிகளை ஆட் கொண்டருளிய திருவருட்டிறத்தையாகும். பெற்று என்பதில் உம்மை தொக்கது. துன்பத்தினின்றும் என்பதனைத் துன்பத்தின் இன்றும் எனப் பிரித்து இன்னும் அன்பத்தின் விள்ளக்கிலேனை என்பது பொருளாகக் கொள்க. துன்பம் பிராரத்த வினையாலுண்டாகும் துன்பம். நின்னால் ஆட் கொள்ளப்பட்ட பின்னர் இப்போதும் என்றவாறு. கிவ் - ஆற்றலிடை நிலை. கள்ளத்துளேற்கு எனக்கு என நான்காம் வேற்றுமையை இரு முறை விரித்துக் கூறியது. இறைவன் திருவருளைப் பெறும் ஆர்வ மிகுதி யாலாகும். களி களிப்பு - "விடக்களியா நம் விழுநகரார்க்கும் வியன் முரசே' திருக்கோவை 207 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. களியாத களி - புலன்களின் வாயிலாக அடையப் பெறாத களிப்பு. இதன் கண் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பது புலப்படுதல் காண்க. 110. களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலத்தருள வெளிவந் திலேனை வீடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த எந்தைப் ரான்என்னை ஆளுடை என்னப்பனே. ப-ரை : மெய் சுடருக்கு எல்லாம் ஒளி வந்த பூங்கழல் - மெய் யான ஒளியையுடைய மண்டலங்களுக்கெல்லாம் ஒளி உண்டாதற்கேது வாகிய பொலிவினை யுடைய திருவடியையுடைய. உத்தரகோசமங்கைக்கு அரசே - திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே, எனி வந்த எந்தை பிரான் - அருமையில் எனியையாய் வலிய வந்த எம் தந்தை முத லியோர்க்கும் தலைவனே என்னை ஆளுடை என் அப்பனே - அடியேனை ஆளாகவுடைய என் தந்தையே, உன் கழல் கலந்தருளி களிவந்த சிந்தை யொடு கண்டும் - நின் திருவடிகள் என்னைக் கலந்து அருள் செய்ய அவற் றைக் கனிப்புண்டாகின்ற உள்ளத்தோடு தரிசித்தும், வெளி வந்திலேனை- பிராரத்தவினையினின்றும் வெளிப்படாத என்னை, விடுதி கண்டாய்- என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். உத்தரகோச மங்கைக்கரசே. எந்தை பிரானே, என் அப்பனே. உன் திருவடிகள் என்னைக் கலந்து அருள் செய்ய அவற்றைக் களிப்பு உண் டாகின்ற உள்ளத்தொடு தரிசித்தும், பிராரத்த வினையினின்றும் வெளிப் படாத என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம்,
404 திருவாசக ஆராய்ச்சியுரை லீன் மடலின் மட்டே என்றார் . இறைவன் மாணிக்க மணிபோலும் செம்மை பொருந்திய திருமேனியுடன் ஞானாசாரியனாக எழுத்தருனியமை யின் மணியே என்றார் . கழிபெருஞ்சுவையோடு உறுதி பயத்தலுடைமை யான் ' ' அமுதே என்றார் . மது.கள் . அது இங்கே களிப்பை உணர்த் தியது . கள்ளினால் உண்டாகும் களிப்பு உடல் உணர்வுகளை மறக்கச் செய்து முழுவதும் தன்வயப்படுத்துதல் போல இறைவன் அருளால் உண் டாகும் களிப்பு உடலையும் உணர்வையும் உலகத்தையும் மறக்கச் செய்து பரவசமடையச் செய்தலின் ' மதுவெள்ளமே ' என்றார் . நானென்பதறியேன் பகல் இரவாவதுமறியேன் ( உயிருண்ணி 8 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . 10 இதன்கண் கருணைக் கடலினுள்ளம் விடலரியேனை விடுதி கண்டாய் என்பதனால் கினது அருட்பெருங்கடலில் உள்ளம் புக்கழுந்தி நிறை வினைப் பெறத்தக்க தவமில்லாதேனைக் கைவிடாதொழிதல் வேண்டும் என் பது போதநதலின் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் வேண்டும் என்பதும் புலப்படுமாறு காண்க . 13 . 118. வெள்ளத்துள் நாவற்றியாங் குன் அருள் பெற்றுத்துன் STOR பத்தினின்றும் விள்ளக் கிலேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து வேற்கரு ளாய்களி யாத களியெனக்கே . - ரை : விரும்பும் அடியார் உள்ளத்து உள்ளாய் - நின்னை விரும்பி அன்பு செய்யும் மெய்யடியாரின் மனத்தின்கண் உள்ளவனே . மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே- நிலைபெற்ற திருவுத்தரகோசமங்கை என் னும் தலத்துக்கு அரசே . வெள்ளத்துள் நா வற்றியாங்கு - நல்ல நீர்ப் பெருக்கினுள் உள்ளான் ஒருவனுக்கு நா வரண்டு துன்பமுண்டானாற் போல உன் அருள்பெற்று இன்றும் துன்பத்து விள்ளக்கிலேனை - நின் திருவருளைப் பெற்றும் இப்போதும் பொய்யுலகத் துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய ஆற்றவில்லாத என்னை . விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . கள்ளத்துளேற்கு எனக்கு களியாத களி அருளாய் - மாயையின் கரவின்கண் உள்ளேனாகிய எனக்கு அக்கரவினை நீக்கிப் புலன்களால் நுகரப்பெருத பெருங் களிப்பை எனக்கு அருள்புரிவாயாக . அடியார் உள்ளத் துள்ளாய் உத்தர கோசமங்கைக்கரசே வெள்ளத் துள் இருந்தும் ஒருவனுக்கு நா வரண்டு துன்பமுண்டானாற் போல நின் திருவருளைப் பெற்றும் இப்போதும் பொய்யுலகத் துன்பத்தினின்றும் நீங் கும் ஆற்றலில்லாத என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . கள்ளத்துளேற்கு எனக்குக் களியாதகளி அருளாய் என்ப தாம் . நீத்தல் விண்ணப்பம் 405 என் வெள்ளத்துள் நாவற்றியாங்கு என்பதற்கு நல்ல நீர்ப் பெருக்கி னுள்ளான் ஒருவனுக்கு நாவரண்டதுபோல என ஆற்றலாற் சில சொற் கள் வருவித்துரைக்கப்பட்டன வற்றியது ஆங்கு வற்றியாங்கு விகாரமடைந்தது . உன் அருள் என்றது இறைவன் அடிகளை ஆட் கொண்டருளிய திருவருட்டிறத்தையாகும் . பெற்று என்பதில் உம்மை தொக்கது . துன்பத்தினின்றும் என்பதனைத் துன்பத்தின் இன்றும் எனப் பிரித்து இன்னும் அன்பத்தின் விள்ளக்கிலேனை என்பது பொருளாகக் கொள்க . துன்பம் பிராரத்த வினையாலுண்டாகும் துன்பம் . நின்னால் ஆட் கொள்ளப்பட்ட பின்னர் இப்போதும் என்றவாறு . கிவ் - ஆற்றலிடை நிலை . கள்ளத்துளேற்கு எனக்கு என நான்காம் வேற்றுமையை இரு முறை விரித்துக் கூறியது . இறைவன் திருவருளைப் பெறும் ஆர்வ மிகுதி யாலாகும் . களி களிப்பு - விடக்களியா நம் விழுநகரார்க்கும் வியன் முரசே ' திருக்கோவை 207 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . களியாத களி - புலன்களின் வாயிலாக அடையப் பெறாத களிப்பு . இதன் கண் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பது புலப்படுதல் காண்க . 110. களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலத்தருள வெளிவந் திலேனை வீடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த எந்தைப் ரான்என்னை ஆளுடை என்னப்பனே . - ரை : மெய் சுடருக்கு எல்லாம் ஒளி வந்த பூங்கழல் - மெய் யான ஒளியையுடைய மண்டலங்களுக்கெல்லாம் ஒளி உண்டாதற்கேது வாகிய பொலிவினை யுடைய திருவடியையுடைய . உத்தரகோசமங்கைக்கு அரசே - திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே எனி வந்த எந்தை பிரான் - அருமையில் எனியையாய் வலிய வந்த எம் தந்தை முத லியோர்க்கும் தலைவனே என்னை ஆளுடை என் அப்பனே - அடியேனை ஆளாகவுடைய என் தந்தையே உன் கழல் கலந்தருளி களிவந்த சிந்தை யொடு கண்டும் - நின் திருவடிகள் என்னைக் கலந்து அருள் செய்ய அவற் றைக் கனிப்புண்டாகின்ற உள்ளத்தோடு தரிசித்தும் வெளி வந்திலேனை பிராரத்தவினையினின்றும் வெளிப்படாத என்னை விடுதி கண்டாய் என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . உத்தரகோச மங்கைக்கரசே . எந்தை பிரானே என் அப்பனே . உன் திருவடிகள் என்னைக் கலந்து அருள் செய்ய அவற்றைக் களிப்பு உண் டாகின்ற உள்ளத்தொடு தரிசித்தும் பிராரத்த வினையினின்றும் வெளிப் படாத என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம்