திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

406 திருவாசக ஆராய்ச்சியுரை உன் கழல் கலந்தருள களிவந்த சிந்தையொடு கண்டும் என மாறிக் கூட்டுக. நீ ஞானாசாரியனாக வலிய வந்து என்னோடு இயைந்து திரு வருள் செய்ய என்பார். அவர் திருவடிமேல் ஏற்றி "டன் கழல் கலந் தருள' என்றார். களி - களிப்பு. திருக்கோவை 52 பேர். சிந்தையில் களிவருதற்கு கழல் காணுதல் ஏது. வெளிவருதல் பிராரத்த வினையி னின்றும் நீங்குதல். மெய்ச்சுடர்- ஞாயிறு, செந்தி, விண்மீன் முதலி யன. இவையெல்லாம் மெய்ச் சுடராய் விளங்குதற்கு ஒளியை நல்கியது மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளிவந்த கழல் என்றார். திருவடியென்பார், பூங்கழல் - பொலிவினையுடைய திருவடி. திருக்கோவை 17 பேர். கழலை யுடைய அரசே என இயையும். 582 எலி வந்த பிரான் என இயையும். "பெருந்துறையில் எளிவந்திருந்து' (அம் 18) ''எனி வந்தென்னை யாண்டு கொண்ட என்னா ரமுதேயோ" (ஆசைப் 5) "என் என்பெலாம் உருக்கி எளியை யாண்ட ஈசனே மாசிலாமணியே" (பிடித்த 10) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. "எம்மானை எளிவத்த பிரானை' (சுந் 59: 1) என்பது தேவா ரம் எந்தை பிரான் - எந்தந்தை முதலியோர்க்கும் பிரான். "எந்தையை எந்தை தந்தை பிரானை" (சுந் 5?: 7) "என்னிற வெந்தை பிரான் றனை' "எந்தை பிரா னிடைமருதினை '' (நாவு 88.8: 127 - 9) எனத் தேவாரத்தும் "எந்தை பிரானென்று, கச்சியே யண்ணலை நாடுகி வாரே'' எனத் திருமந்திரத்தும் 278 வருவன காண்க. "2 இதன்கண் சுழல் கலந்தருளக் கண்டும் வெளிவந்திலேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க. 15. 120. என்னை அப் பாஅஞ்சல் என்பவர் இன்றிதின் நெய்த்தலைந்தேன் மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாயுவ மிக்கின்மெய்யே உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அன்னையொப் பாய்எனக் கத்தனெப் பாய்என் அரும்பொருளே. யில் ப-ரை: மின்னை ஒப்பாய் - மின்னை ஒத்த ஒளியுருவீனனே. உவமிக் கின் மெய்யே உன்னை ஒப்பாய். உனக்கு உவமை கூறப் புகில் உண்மை உன்னையே நீ ஒப்பவனே. மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே - நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே எனக்கு அன்னை ஒப்பாய் - அடியேனுக்குத் தாயை ஒப்பவனே, அத் தன் ஒப்பாய் - தந்தைமை ஒப்பலனே என் அரும் பொருளை எனது பெறுதற்கரிய பொருளாயுள்ளவனே, என்னை அப்பர அஞ்சல் என்பவர் இன்றி நின்று அடியேனைப் பார்த்து அப்பனே பயப்படாதே என்று சொல்லிப் பாதுகாப்பவர் ஒருவருமில்லாது வருந்தி நின்று. எய்த்து நீத்தல் விண்ணப்பம் 407 அலைந்தேன் - இளைத்து அலைந்தேன். வீட்டிடுதி கண்டாய் - என்னைக் கை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். மின்னை ஒப்பவனே, மெய்யே உவமிக்கின் உன்னையே ஒப்பவனே உத்தரகோச மங்கைக்கு அரசே, எனக்கு அன்னையை ஒப்பவனே, அத் தனை ஒப்பவனே, எனது அரும் பொருளாயுள்ள வனே, என்னைப் பார்த்து 'அப்பா, அஞ்சல்' என்று சொல்லிப் பாதுகாப்பவர் ஒருவருமில்லாது வருந்தி நின்று எய்த்தலைந்தேன். என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழி தல் வேண்டும் என்பதாம். அப்பா அஞ்சல் என்பது வருந்தினோர்க்கு இரங்குவோர் கூறும் தேற்றவுரை. என்பவரின்றி எனக்குளதாகும் பிரபஞ்ச அச்சத்தினை நீக் கிப் பாதுகாக்க வல்லார் நீ யன்றிப் பிறரில்லை என்றபடி. "அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்கு " (கோயின் மூத் 8) '"வா வென்னா விடில்என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்" (ஆனந்த 6) என வருவன காண்க. அச்சம் இறப்புப் பிறப்புப் பற்றிய அச்சம் எனினுமாம். "கறங்கோலை போவதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் அறம்பாவ மென்றிரண் டச்சந் தவிர்த்தென்னை யாண்டு கொண்டான் " (தெள் ?) என அடிகள் அருளியவாறுங் காண்க. இன்றி என்பது இல்லாமையால் என ஏதுப்பொருளில் வந்தது. எய்த்தல்-இளைத்தல். அலைதல் - அஞ்சல் என்பார் யாண்டாயினும் உள் ரோவென அலைந்து தேடுதல் ஒப்பாய் யாவும் விளிப்பொருளில் வந் தன. மின்னல் உருவத்தின் ஒளிக்கு உவமானம் " பொங்கரவம் புன் சடை மிடைந்த மின்னனையான் எனத் திருக்கோவையாரில் (125) வகுதலுங் காண்க, மெய் உண்மையில் என ஏழனுருபு விரிக்க. ஏயைப் பிரித்து உன் ேைய எனக் கூட்டுக. உவமிக்கின் உன்னை யொப்பாய் என்றது உனக்கு உவமை கூறப் புகுந்தால் உனக்கு ஒப்பாளார் பிறர் எவருமின்மையின் உன்னை யொப்பாய் என்றவாறு தாமே தமக்கொப்பு மற்றில்லவர்" எனத் திருக்கோவையாரில் (228) வருதலுங் காண்க. உன்னை ஒப்பாய் என்றமையால் மின்னையொப்பாய் அன்னை யொப்பாய் அத்தனெப்பாய் என்பன ஒருபுடை யுவமையாவனவாகும். இதன் கண் "என்னை அப்பா அஞ்சல் என்பவரின்றி நின்றெய்த்தலைர் டுதன்" வீட்டிடுது கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும். என்பதும் புலனாமாறு காண்க. 16.
406 திருவாசக ஆராய்ச்சியுரை உன் கழல் கலந்தருள களிவந்த சிந்தையொடு கண்டும் என மாறிக் கூட்டுக . நீ ஞானாசாரியனாக வலிய வந்து என்னோடு இயைந்து திரு வருள் செய்ய என்பார் . அவர் திருவடிமேல் ஏற்றி டன் கழல் கலந் தருள ' என்றார் . களி - களிப்பு . திருக்கோவை 52 பேர் . சிந்தையில் களிவருதற்கு கழல் காணுதல் ஏது . வெளிவருதல் பிராரத்த வினையி னின்றும் நீங்குதல் . மெய்ச்சுடர்- ஞாயிறு செந்தி விண்மீன் முதலி யன . இவையெல்லாம் மெய்ச் சுடராய் விளங்குதற்கு ஒளியை நல்கியது மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளிவந்த கழல் என்றார் . திருவடியென்பார் பூங்கழல் - பொலிவினையுடைய திருவடி . திருக்கோவை 17 பேர் . கழலை யுடைய அரசே என இயையும் . 582 எலி வந்த பிரான் என இயையும் . பெருந்துறையில் எளிவந்திருந்து ' ( அம் 18 ) ' ' எனி வந்தென்னை யாண்டு கொண்ட என்னா ரமுதேயோ ( ஆசைப் 5 ) என் என்பெலாம் உருக்கி எளியை யாண்ட ஈசனே மாசிலாமணியே ( பிடித்த 10 ) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . எம்மானை எளிவத்த பிரானை ' ( சுந் 59 : 1 ) என்பது தேவா ரம் எந்தை பிரான் - எந்தந்தை முதலியோர்க்கும் பிரான் . எந்தையை எந்தை தந்தை பிரானை ( சுந் 5 ?: 7 ) என்னிற வெந்தை பிரான் றனை ' எந்தை பிரா னிடைமருதினை ' ' ( நாவு 88.8 : 127 - 9 ) எனத் தேவாரத்தும் எந்தை பிரானென்று கச்சியே யண்ணலை நாடுகி வாரே ' ' எனத் திருமந்திரத்தும் 278 வருவன காண்க . 2 இதன்கண் சுழல் கலந்தருளக் கண்டும் வெளிவந்திலேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் வேண்டும் என்பதும் புலனாதல் காண்க . 15 . 120. என்னை அப் பாஅஞ்சல் என்பவர் இன்றிதின் நெய்த்தலைந்தேன் மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாயுவ மிக்கின்மெய்யே உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அன்னையொப் பாய்எனக் கத்தனெப் பாய்என் அரும்பொருளே . யில் - ரை : மின்னை ஒப்பாய் - மின்னை ஒத்த ஒளியுருவீனனே . உவமிக் கின் மெய்யே உன்னை ஒப்பாய் . உனக்கு உவமை கூறப் புகில் உண்மை உன்னையே நீ ஒப்பவனே . மன்னும் உத்தர கோசமங்கைக்கு அரசே - நிலைபெறும் திருவுத்தரகோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே எனக்கு அன்னை ஒப்பாய் - அடியேனுக்குத் தாயை ஒப்பவனே அத் தன் ஒப்பாய் - தந்தைமை ஒப்பலனே என் அரும் பொருளை எனது பெறுதற்கரிய பொருளாயுள்ளவனே என்னை அப்பர அஞ்சல் என்பவர் இன்றி நின்று அடியேனைப் பார்த்து அப்பனே பயப்படாதே என்று சொல்லிப் பாதுகாப்பவர் ஒருவருமில்லாது வருந்தி நின்று . எய்த்து நீத்தல் விண்ணப்பம் 407 அலைந்தேன் - இளைத்து அலைந்தேன் . வீட்டிடுதி கண்டாய் - என்னைக் கை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . மின்னை ஒப்பவனே மெய்யே உவமிக்கின் உன்னையே ஒப்பவனே உத்தரகோச மங்கைக்கு அரசே எனக்கு அன்னையை ஒப்பவனே அத் தனை ஒப்பவனே எனது அரும் பொருளாயுள்ள வனே என்னைப் பார்த்து ' அப்பா அஞ்சல் ' என்று சொல்லிப் பாதுகாப்பவர் ஒருவருமில்லாது வருந்தி நின்று எய்த்தலைந்தேன் . என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழி தல் வேண்டும் என்பதாம் . அப்பா அஞ்சல் என்பது வருந்தினோர்க்கு இரங்குவோர் கூறும் தேற்றவுரை . என்பவரின்றி எனக்குளதாகும் பிரபஞ்ச அச்சத்தினை நீக் கிப் பாதுகாக்க வல்லார் நீ யன்றிப் பிறரில்லை என்றபடி . அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்கு ( கோயின் மூத் 8 ) ' வா வென்னா விடில்என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் ( ஆனந்த 6 ) என வருவன காண்க . அச்சம் இறப்புப் பிறப்புப் பற்றிய அச்சம் எனினுமாம் . கறங்கோலை போவதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும் அறம்பாவ மென்றிரண் டச்சந் தவிர்த்தென்னை யாண்டு கொண்டான் ( தெள் ? ) என அடிகள் அருளியவாறுங் காண்க . இன்றி என்பது இல்லாமையால் என ஏதுப்பொருளில் வந்தது . எய்த்தல் - இளைத்தல் . அலைதல் - அஞ்சல் என்பார் யாண்டாயினும் உள் ரோவென அலைந்து தேடுதல் ஒப்பாய் யாவும் விளிப்பொருளில் வந் தன . மின்னல் உருவத்தின் ஒளிக்கு உவமானம் பொங்கரவம் புன் சடை மிடைந்த மின்னனையான் எனத் திருக்கோவையாரில் ( 125 ) வகுதலுங் காண்க மெய் உண்மையில் என ஏழனுருபு விரிக்க . ஏயைப் பிரித்து உன் ேைய எனக் கூட்டுக . உவமிக்கின் உன்னை யொப்பாய் என்றது உனக்கு உவமை கூறப் புகுந்தால் உனக்கு ஒப்பாளார் பிறர் எவருமின்மையின் உன்னை யொப்பாய் என்றவாறு தாமே தமக்கொப்பு மற்றில்லவர் எனத் திருக்கோவையாரில் ( 228 ) வருதலுங் காண்க . உன்னை ஒப்பாய் என்றமையால் மின்னையொப்பாய் அன்னை யொப்பாய் அத்தனெப்பாய் என்பன ஒருபுடை யுவமையாவனவாகும் . இதன் கண் என்னை அப்பா அஞ்சல் என்பவரின்றி நின்றெய்த்தலைர் டுதன் வீட்டிடுது கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கியமும் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் . என்பதும் புலனாமாறு காண்க . 16 .