திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

428 திருவாசக ஆராய்ச்சியுரை பெருநீரில் வாழ்ந்த சிறு மீன்கள் அந்நீர் வற்றியவிடத்து வாடினாற் போல எனக்கு ஆதாரமாகிய நின்னைப் பிரிந்து வருந்தி அதனால் அஞ்சி னேன் என்பார். பெருநீரறச் சிறு மீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த வெருநீர்மையேனை' என்றார். துவள்தல்-வருந்துதல் 'சோறு கூறை யின்றியே துவண்டு " (ஞான 233:3| தேவாரம். துவண்டாங்கு என் பதற்கு ஏற்ப, நினைப் பிரிந்த என்பதற்கு நினைப் பிரிந்து வருந்துகின்ற எனவுரைக்க. "மருளார் மனத்தோ டுனைப் பிரிந்து வருந்துவேனை" (கோயில் மூத் 8) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவானுங் காண்க. வெருநீர்மையேனை - அஞ்சுந் தன்மையுடைய என்னை, திருப்பெருந்துறை யுறை சிவனே அஞ்சினேன் நாயேன்" (வாழாப் ே என அருளியமை காண்க. நின் பிரிவால் அஞ்சுந் தன்மையுடைய என்னைக் கைவிட லாகாது என்பார் "வெருநீர்மையேனை விடுதி கண்டாய்" என்றார். இதன் கண், நினைப் பிரிந்த வெருநீர்மை யேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புவனாதல் காண்க. 26. 131. கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடி யேனை விடுதிகண் டாய் மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்தின் புலன்கழலே. ப-ரை: கொழு மணி ஏர் நகையார் - கொழுவிய முத்தை யொக் கும் வெள்ளிய பற்களையுடைய மகளிரது. கொங்கை குன்று இடை சென்று - தனங்களாகிய மலைகளிடத்துச் சென்று, குன்றி வீழும் அடி யேனை - அறிவு குறைந்து விழுகின்ற அடியேனை. விடுதி கண்டாய்-கை விடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். மெய் முழுதும் கம் பித்து அழும் அடியாரிடை அன்பின் பெருக்கால் உடல் முழுவதும் நடுங்கி அழுகின்ற மெய்யடியார் நடுவுள், என்னை ஆர்த்து வைத்து ஆட் கொண்டருளி-அடியேனையும் சேர்த்து வைத்து அடிமையாகக் கொண்டு அருள் புரிந்து. என்னை கமும் மணியே - அடியேனைத் தூய்மை செய்த குருமணியே, இன்னும் நின் புலன் கழல் காட்டு - நின்னைப் பிரிந்து வருந்துகின்ற எனக்கு இன்னும் ஞானத் திருவடியைக் காட்டியருள வேண்டும். மகளிரது கொங்கைகளாகிய குன்றிடைச் சென்று அறிவு குன்றி விழுகின்ற அடியேனைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண் டும். உடல் முழுவதும் கம்பித்து அழுகின்ற மெய்யடியார் நடுவுள் என்னை ஆர்த்து வைத்து ஆட்டுகாண்டருளி என்னைத் தூய்மை செய்த நீத்தல் விண்ணப்பம் 429 குருமணியே இன்னும் நின் ஞானத் திருவடியைக் காட்டியருள வேண் டும் என்பதாம். கொழுமணி என்றது குற்றங்களின்மையால் தெளிந்த ஒளியையுடைய மணி வெண்ணிற முத்தினை. மணி என்பது முத்தைக் குறித்து வரல் வாள் நகையாய் 385 என்னும் திருக்கோவையாரினுங் காண்க. ஏர் உவமவுருபு. "முத்தேர் முறுவலாய்'" (கலி 64.29) என்புழிப் போல. நகை - எயிறு. (கவி 72:12 நச்). மகளிர் பல்லுக்கு முத்தினை உவமை 'முத்தன்ன வெண்ணகையாய்'' திருவெம் 3. ''ஒண்ணித்திவ நகையாய் திருவெம் 4. ''கனி பவளத் தயலுளவே முத்தமொத்த நிரை' திருக்கோவை 35 "தொண்டைக் கனிவாய்க் குளிர் முத்த நிரைத்து " திருக்கோவை 38 கவவின் வாணகை வெண் முத்தம் திருக்கோவை 108 என வருவனவற்றிலுங் காண்க. மகளிரது இளமைச் செவ்வி புலப்பட "கொழுமணி ஏர் நகையார். என்றார். குன்றிடை - குன்றினிடத்து. இடை -இடத்து. "முலையிடை வாங்கி முயங்கினன் " (கலி 146 : 24) என்புழிப்போல. காமத்தால் அறிவு குன்றி மகளிரை முயங்குதலின் "கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடியேனை என்றார். கம்பித்தல் - நடுங்குதல். "விதிர்ப்புப் பணிப்பு விதலை கம்பம் அதிர்ப் புப் பொதிர்ப்பு நடுக்கமாகும்" எனத் திவாகரத்தும் வருதல் காண்க. மெய்யடியார்க்கு அன்பின் பெருக்கால் உடல் முழுவதும் கம்பித்தலும் ஆனந்தக்கண்ணீர் சொரிதலும் நிகழ்தலீன் "மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடியார்'' என்றார். நகமெலாந் தேயக் கையானுாண்மலர் தொழுது தூவி முகமெலாங் கண்ணீர் மல்க முன் பணிந்தேத்துந் தொண்டா" 'கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே யேத்து மல்பர்க்கு" நாவு 200:3. " அகங் குழைந்து மெய்வருந்தி யவார் தங்கள் வாயவன் காண்" 41 19 நாவு 40:8 எனத் தேவாரத்தும், குறையாத வுவகைக் கண்ணீர், ஆறாத வானந்தத் தடியார்" நாவு 201:3. நாவு 223:5.
428 திருவாசக ஆராய்ச்சியுரை பெருநீரில் வாழ்ந்த சிறு மீன்கள் அந்நீர் வற்றியவிடத்து வாடினாற் போல எனக்கு ஆதாரமாகிய நின்னைப் பிரிந்து வருந்தி அதனால் அஞ்சி னேன் என்பார் . பெருநீரறச் சிறு மீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த வெருநீர்மையேனை ' என்றார் . துவள்தல் - வருந்துதல் ' சோறு கூறை யின்றியே துவண்டு ( ஞான 233 : 3 | தேவாரம் . துவண்டாங்கு என் பதற்கு ஏற்ப நினைப் பிரிந்த என்பதற்கு நினைப் பிரிந்து வருந்துகின்ற எனவுரைக்க . மருளார் மனத்தோ டுனைப் பிரிந்து வருந்துவேனை ( கோயில் மூத் 8 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவானுங் காண்க . வெருநீர்மையேனை - அஞ்சுந் தன்மையுடைய என்னை திருப்பெருந்துறை யுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ( வாழாப் என அருளியமை காண்க . நின் பிரிவால் அஞ்சுந் தன்மையுடைய என்னைக் கைவிட லாகாது என்பார் வெருநீர்மையேனை விடுதி கண்டாய் என்றார் . இதன் கண் நினைப் பிரிந்த வெருநீர்மை யேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண் டும் என்பதும் புவனாதல் காண்க . 26 . 131. கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடி யேனை விடுதிகண் டாய் மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்தின் புலன்கழலே . - ரை : கொழு மணி ஏர் நகையார் - கொழுவிய முத்தை யொக் கும் வெள்ளிய பற்களையுடைய மகளிரது . கொங்கை குன்று இடை சென்று - தனங்களாகிய மலைகளிடத்துச் சென்று குன்றி வீழும் அடி யேனை - அறிவு குறைந்து விழுகின்ற அடியேனை . விடுதி கண்டாய் - கை விடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . மெய் முழுதும் கம் பித்து அழும் அடியாரிடை அன்பின் பெருக்கால் உடல் முழுவதும் நடுங்கி அழுகின்ற மெய்யடியார் நடுவுள் என்னை ஆர்த்து வைத்து ஆட் கொண்டருளி - அடியேனையும் சேர்த்து வைத்து அடிமையாகக் கொண்டு அருள் புரிந்து . என்னை கமும் மணியே - அடியேனைத் தூய்மை செய்த குருமணியே இன்னும் நின் புலன் கழல் காட்டு - நின்னைப் பிரிந்து வருந்துகின்ற எனக்கு இன்னும் ஞானத் திருவடியைக் காட்டியருள வேண்டும் . மகளிரது கொங்கைகளாகிய குன்றிடைச் சென்று அறிவு குன்றி விழுகின்ற அடியேனைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண் டும் . உடல் முழுவதும் கம்பித்து அழுகின்ற மெய்யடியார் நடுவுள் என்னை ஆர்த்து வைத்து ஆட்டுகாண்டருளி என்னைத் தூய்மை செய்த நீத்தல் விண்ணப்பம் 429 குருமணியே இன்னும் நின் ஞானத் திருவடியைக் காட்டியருள வேண் டும் என்பதாம் . கொழுமணி என்றது குற்றங்களின்மையால் தெளிந்த ஒளியையுடைய மணி வெண்ணிற முத்தினை . மணி என்பது முத்தைக் குறித்து வரல் வாள் நகையாய் 385 என்னும் திருக்கோவையாரினுங் காண்க . ஏர் உவமவுருபு . முத்தேர் முறுவலாய் ' ( கலி 64.29 ) என்புழிப் போல . நகை - எயிறு . ( கவி 72:12 நச் ) . மகளிர் பல்லுக்கு முத்தினை உவமை ' முத்தன்ன வெண்ணகையாய் ' ' திருவெம் 3 . ' ' ஒண்ணித்திவ நகையாய் திருவெம் 4 . ' ' கனி பவளத் தயலுளவே முத்தமொத்த நிரை ' திருக்கோவை 35 தொண்டைக் கனிவாய்க் குளிர் முத்த நிரைத்து திருக்கோவை 38 கவவின் வாணகை வெண் முத்தம் திருக்கோவை 108 என வருவனவற்றிலுங் காண்க . மகளிரது இளமைச் செவ்வி புலப்பட கொழுமணி ஏர் நகையார் . என்றார் . குன்றிடை - குன்றினிடத்து . இடை -இடத்து . முலையிடை வாங்கி முயங்கினன் ( கலி 146 : 24 ) என்புழிப்போல . காமத்தால் அறிவு குன்றி மகளிரை முயங்குதலின் கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி விழுமடியேனை என்றார் . கம்பித்தல் - நடுங்குதல் . விதிர்ப்புப் பணிப்பு விதலை கம்பம் அதிர்ப் புப் பொதிர்ப்பு நடுக்கமாகும் எனத் திவாகரத்தும் வருதல் காண்க . மெய்யடியார்க்கு அன்பின் பெருக்கால் உடல் முழுவதும் கம்பித்தலும் ஆனந்தக்கண்ணீர் சொரிதலும் நிகழ்தலீன் மெய்ம் முழுதுங் கம்பித் தழுமடியார் ' ' என்றார் . நகமெலாந் தேயக் கையானுாண்மலர் தொழுது தூவி முகமெலாங் கண்ணீர் மல்க முன் பணிந்தேத்துந் தொண்டா ' கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே யேத்து மல்பர்க்கு நாவு 200 : 3 . அகங் குழைந்து மெய்வருந்தி யவார் தங்கள் வாயவன் காண் 41 19 நாவு 40 : 8 எனத் தேவாரத்தும் குறையாத வுவகைக் கண்ணீர் ஆறாத வானந்தத் தடியார் நாவு 201 : 3 . நாவு 223 : 5 .