திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

430 திருவாசக ஆராய்ச்சியுரை அழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளம் உருகி யழுதுடல் கம்பித்து (போற்றி 60-1} எனத் திருவாசகத்தும், "மெய்த்தழையா நின்ற வன்பினர் போல விதிர் விதித்து எனத் திருகோவையாரிலும், ''காவலன் வியந்து பல்காற் கண்டுகண் டதிச யித்துப் பூவினை யடைவிற் கொய்து புளகிதத் தோடுங் கண்ணீர் மேவ மெய் கம்பித் தன்பின் வெள்ளத்து மூழ்கி மிக்க தேவதே வனைப்பூ சித்தான் விதிப்படி சிறந்த நல்கி" இந்திரன் பழி 22 எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தும் வருவன காண்க. அடியாரிடை யார்த்து வைத்தாட்கொண்டருளி என்றது மெய்யடி யாரிடைத் தங்கச் செய்து அடிமை கொண்டருளி என்றவாறு. " அறவை யென்றடியார்கள் தங்கள் அருட் குழாம்புக விட்டுநல் அறவு செய்தெனை உய்யக் கொண்ட பிரான் " (சென்னிப் 7) என அடிகன் பிறிதோரிடத்து அருளியவா துங் காண்க. கழுவும் மணி என்பது கழுமணி என இடைக்குறைந்து நின்றது. கழுவுதல் - தூய்மை செய்தல். மணி - குருமணி. ஆசாரிய சிரேட்டர் என்ற வாது. இறைவன் குருவாக எழுந்தருளி வந்து அடிகளின் பாசவழுக்கை நீக்கியமையின் ''என்னைக் கழுமணியே" என்றார். 102 பாச மறுத்தெனை யாண்ட'' குயில் 9 பந்த மறுத் தென்னை யாண்டு கொண்ட பாண்டிப்பிரான்" பூவல்லி 2. கடிய வினை யகற்றிப் பறமவம் பற்றறுத் தாண்டவன் '' பாண்டி 8. "பழவினைகள் பாலும் வண்ணம் சித்தமலமறுவித்தச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தன் பந்த மறுத்தெனை யாண்டு" என அடிகள் அருளியவாலும் காண்க. கண்டாய் என்பது முன்னிலையசையாயினும் காட்டியருள வேண்டும் என்னும் ஆர்வமிகுதியையுணர்த்தியது. கழல் அதனையுடைய திருவடிக்கு ஆகுபெயர். ஞானமயமான திருவடியாதவின் புலன்கழல்' என்றார். " அச்சோ6. அச்சோ 1. இதன்கண், நகையார் கொங்கைக் குன்றிடை வீழுமடியேனை விடுதி கண்டாய் எனவும், இன்னும் காட்டு கண்டாய் நின்புலன் கழலே எனவும் கூறுமாற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டு மென்பதும் புலனாதல் காண்க. 27. 431 நீத்தல் விண்ணப்பம் 132. புலன்கள் திகைப்பிக்க யானுத்திகைத்திங்கொர்பொய்ந்நெறிக்கே விலங்குகின் நேனைவிடுதிகண்டாய்வீண்னும் மண் ணுமெல்லாம் கலங்கமுத் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே துலங்குகின் றேனடி யேனுடை யாயென் தொழுகுலமே. ப-ரை : விண்ணும் மண்ணும் எல்லாம் கலங்க விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் கலக்கமடைய. முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் - அதனை நீக்கும் பொருட்டு திருப்பாற்கடவிற் றோன்றிய ஆல காலவிடத்தை உன்டருளி அவர்களைக் காத்தருளினவனே. கருணை ஆகரனே - கருணைக்கு இருப்பிடமானவனே, இலங்குகின்றேன் அடியேன் உடையாய் - உலகவாதனையால் நடுங்குகின்றேனாகிய அடியேனை ஆளாக உடையவளே, அடியேன் தொழுகுலமே - என்னுடைய வணக்கத்திற்குரிய மரபினையுடைய அந்தணாளனே, புவன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து - ஐம்புலன்களும் மயக்கத்தைச் செய்ய யானும் அவற்குல் மயக்கமடைந்து இங்கு ஓர் பொய் நெறீக்கே விலங்குகின்றேனை - இவ்வுலகில் நிலையற்ற ஒரு பொய்யாகிய வழியின்கண் விலகிச் செல்லுகின்றேனாகிய என்னை. விடுதி கண்டாய் - கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் கலக்க மடைய அதனைக் கண்டு திருப்பாற்கடலிற் சோன்றிய நஞ்சை உண் டருளி அவர்களைக் காத்தருளினவனே, கருணாகரனே, துலங்குகின்றேனா கிய அடியேனை ஆளாக உடையவனே. அடியேன் தொழுகுலமே, ஐம்புலன் களும் திகைப்பிக்க யானும் திகைத்து இவ்வுலகில் ஒரு பொய்யாகிய வழி ធម៌ពគឺចំ சென்றவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். யின்கண் அமுதம் பெறவிரும்பி வானவரும் தானவரும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் அஞ்சிக் கலக்கமடைந்தமையின் 'விண் ணும் மண்ணு மெல்லாங் கலங்க" என்றும், இறைவன் அவர்கள் கலக் கத்தை நீக்கும்பொருட்டு பாற்கடலிற்றோன்றிய அந்நஞ்சை அமுது செய் தருளினமையின் "முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்' என்றும் அருனினார். "தேவர் தானவர் பரந்து திண்வரை மால் கடனி விறுவி நாவதாலமிர் துண்ண நயந்தவர்' ஞான 232.2. "வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட வெழுந்த நஞ்சுங் கண்டு பஃறேவரஞ்சி அடைந்து நுஞ் சரண மென்ன வருள் பெரிதுடையராகித் தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவினாரே'' நா வு 05:2 'மண்டனை யிரந்து கொண்ட மயனோ டசுரர் வானோர் தெண்டிரை கடைய வந்த தீ விடந் தன்னையுண்ட காவு 71:4.
430 திருவாசக ஆராய்ச்சியுரை அழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளம் உருகி யழுதுடல் கம்பித்து ( போற்றி 60-1 } எனத் திருவாசகத்தும் மெய்த்தழையா நின்ற வன்பினர் போல விதிர் விதித்து எனத் திருகோவையாரிலும் ' ' காவலன் வியந்து பல்காற் கண்டுகண் டதிச யித்துப் பூவினை யடைவிற் கொய்து புளகிதத் தோடுங் கண்ணீர் மேவ மெய் கம்பித் தன்பின் வெள்ளத்து மூழ்கி மிக்க தேவதே வனைப்பூ சித்தான் விதிப்படி சிறந்த நல்கி இந்திரன் பழி 22 எனத் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தும் வருவன காண்க . அடியாரிடை யார்த்து வைத்தாட்கொண்டருளி என்றது மெய்யடி யாரிடைத் தங்கச் செய்து அடிமை கொண்டருளி என்றவாறு . அறவை யென்றடியார்கள் தங்கள் அருட் குழாம்புக விட்டுநல் அறவு செய்தெனை உய்யக் கொண்ட பிரான் ( சென்னிப் 7 ) என அடிகன் பிறிதோரிடத்து அருளியவா துங் காண்க . கழுவும் மணி என்பது கழுமணி என இடைக்குறைந்து நின்றது . கழுவுதல் - தூய்மை செய்தல் . மணி - குருமணி . ஆசாரிய சிரேட்டர் என்ற வாது . இறைவன் குருவாக எழுந்தருளி வந்து அடிகளின் பாசவழுக்கை நீக்கியமையின் ' ' என்னைக் கழுமணியே என்றார் . 102 பாச மறுத்தெனை யாண்ட ' ' குயில் 9 பந்த மறுத் தென்னை யாண்டு கொண்ட பாண்டிப்பிரான் பூவல்லி 2 . கடிய வினை யகற்றிப் பறமவம் பற்றறுத் தாண்டவன் ' ' பாண்டி 8 . பழவினைகள் பாலும் வண்ணம் சித்தமலமறுவித்தச் சிவமாக்கி யெனை யாண்ட அத்தன் பந்த மறுத்தெனை யாண்டு என அடிகள் அருளியவாலும் காண்க . கண்டாய் என்பது முன்னிலையசையாயினும் காட்டியருள வேண்டும் என்னும் ஆர்வமிகுதியையுணர்த்தியது . கழல் அதனையுடைய திருவடிக்கு ஆகுபெயர் . ஞானமயமான திருவடியாதவின் புலன்கழல் ' என்றார் . அச்சோ 6 . அச்சோ 1 . இதன்கண் நகையார் கொங்கைக் குன்றிடை வீழுமடியேனை விடுதி கண்டாய் எனவும் இன்னும் காட்டு கண்டாய் நின்புலன் கழலே எனவும் கூறுமாற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டு மென்பதும் புலனாதல் காண்க . 27 . 431 நீத்தல் விண்ணப்பம் 132. புலன்கள் திகைப்பிக்க யானுத்திகைத்திங்கொர்பொய்ந்நெறிக்கே விலங்குகின் நேனைவிடுதிகண்டாய்வீண்னும் மண் ணுமெல்லாம் கலங்கமுத் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே துலங்குகின் றேனடி யேனுடை யாயென் தொழுகுலமே . - ரை : விண்ணும் மண்ணும் எல்லாம் கலங்க விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் கலக்கமடைய . முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் - அதனை நீக்கும் பொருட்டு திருப்பாற்கடவிற் றோன்றிய ஆல காலவிடத்தை உன்டருளி அவர்களைக் காத்தருளினவனே . கருணை ஆகரனே - கருணைக்கு இருப்பிடமானவனே இலங்குகின்றேன் அடியேன் உடையாய் - உலகவாதனையால் நடுங்குகின்றேனாகிய அடியேனை ஆளாக உடையவளே அடியேன் தொழுகுலமே - என்னுடைய வணக்கத்திற்குரிய மரபினையுடைய அந்தணாளனே புவன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து - ஐம்புலன்களும் மயக்கத்தைச் செய்ய யானும் அவற்குல் மயக்கமடைந்து இங்கு ஓர் பொய் நெறீக்கே விலங்குகின்றேனை - இவ்வுலகில் நிலையற்ற ஒரு பொய்யாகிய வழியின்கண் விலகிச் செல்லுகின்றேனாகிய என்னை . விடுதி கண்டாய் - கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் கலக்க மடைய அதனைக் கண்டு திருப்பாற்கடலிற் சோன்றிய நஞ்சை உண் டருளி அவர்களைக் காத்தருளினவனே கருணாகரனே துலங்குகின்றேனா கிய அடியேனை ஆளாக உடையவனே . அடியேன் தொழுகுலமே ஐம்புலன் களும் திகைப்பிக்க யானும் திகைத்து இவ்வுலகில் ஒரு பொய்யாகிய வழி ធម៌ គឺ ចំ சென்றவனாகிய என்னைக் கைவிடுகின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . யின்கண் அமுதம் பெறவிரும்பி வானவரும் தானவரும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருமாகிய எல்லாரும் அஞ்சிக் கலக்கமடைந்தமையின் ' விண் ணும் மண்ணு மெல்லாங் கலங்க என்றும் இறைவன் அவர்கள் கலக் கத்தை நீக்கும்பொருட்டு பாற்கடலிற்றோன்றிய அந்நஞ்சை அமுது செய் தருளினமையின் முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் ' என்றும் அருனினார் . தேவர் தானவர் பரந்து திண்வரை மால் கடனி விறுவி நாவதாலமிர் துண்ண நயந்தவர் ' ஞான 232.2 . வடங்கெழு மலைமத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட வெழுந்த நஞ்சுங் கண்டு பஃறேவரஞ்சி அடைந்து நுஞ் சரண மென்ன வருள் பெரிதுடையராகித் தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவினாரே ' ' நா வு 05 : 2 ' மண்டனை யிரந்து கொண்ட மயனோ டசுரர் வானோர் தெண்டிரை கடைய வந்த தீ விடந் தன்னையுண்ட காவு 71 : 4 .