திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

20 திருவாசக ஆராய்ச்சியுரை 'கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை எனவும், 4 இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே" பூவல் 1. எனவும் அடிகள் அருளியமை காண்க. "சென்னி யின்மிசை மேவிய பாதந் திருந்து கண்ணிணை சேர்த்திரு கரத்தா அன்னல் செய்திடு மிதகமே லணைவித் துவகை கூர்ந்துமெய் யுணர்ச்சியீ னெழுந்தார்'' (திருப்பெருந் 58) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலும் காண்க. கடை - இழிவு. மக்களுக்குத் தயைசெய்தலில் தாய் சிறந்தவளாதலின் தாயிற் சிறந்த தயாவான' என்றார். #4 அம் 10. தாயி லாகிய இன்னருள் புரிந்த என்தலைவனைம் சதகம் 39. தாயான ஈசற்கே" கோத் 12. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமாள் பூவல் 3. "பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து'" பிடித்த 9. என வருவனவுங் காண்க. பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே (நாவு 252:8) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. " தத்துவம் - வடமொழி. அதன் தன்மை என்பது பொருள். அதன் தன்மையென்றது எப்பொருள் எத்தன்மையுடைத்தோ அப்பொருளை அத் தன்மையுடையதாக உண்மையுணர்தல். 62-9. மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே - களங்கம் இல் லாத ஒளிவிரிந்த மலரின் ஒளிபோன்றவனே, தேசனே- குருமுதல்வனே தேன் ஆர் அமுதே - இனிமை நிறைந்த அமுதம் போன்றவனே. சிவ புரனே -சிவபுரத்தையுடையவனே, பரசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே - ஆணவம் களமம் மாயை என்னும் மும்மலங்களின் பிடிப்பி னைக்கெடுத்து மெய்யறிவினை வளர்க்கும் மேலோனே, நேச அருள் புரிந்து- நின்பால் அன்பு செய்தற்கேதுவாகிய திருவருளைச் செய்து, நெஞ்சில் வஞ் சம் கெட - என் மனத்தின்கணுள்ள பொய்ம்மையாகிய குற்றம்கெட பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே - என் மனத்தின்கண் நீங்கா மல் நிலைபெற்ற பெருங்கருணையாகிய பெரிய யாறாகவுள்ளவனே. ஆரா அமுதே - தெவிட்டாத அமுதம் போன்றவனே. அளவு இலா பெம்மானே- எல்லையில்லாத இயல்பிணையுடைய பெருமானே. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே - நின்னை ஆராயாதவர் உள்ளத்தின்கண் வெளிப் சிவபுராணம் 21 படாது மறையும் ஒளிப்பொருளாயுள்ளவனே, மீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே-என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிர்க்கு உயிராய் நின்றவனே. உலகத்து ஒளிகள் போலாது களங்கமின்றி என்றும் ஒருபடித்தாக இருக்கும் ஒளிவிரிந்த மலரொன்று உளதாயின் அம்மலரின் ஒளிபோலும் ஒளியையுடையான் இறைவனாதலின் 'மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே' என்றார். "யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச்சோதியான்" (அருட் i) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. PEN தேசு - ஒளியாயினும், சோதிமலர்ந்த மலர்ச்சுடரே" (62) என இறை வன் ஒளிவடிவு கூறப்பட்டமையின் தேசன் என்பதற்கு ஈண்டு ஒளியையுடைய குரு என்பது பொருளாயிற்று. ஞான சிவபுரம் - சிவலோகம். மேலேமூலகங்களின் மேலேயுள்ள சத்திய லோகம் பிரமாவுடையதாக, அதற்குமேலே வைகுண்டலோகம் விஷ்ணு வுடையதாக, அதற்குமேலே சிவலோகம் சிவனுடையதாக நூல்கள் கூறும். அச்சிவலோகமே ஈண்டுச் 'சிவபுரம்' எனப்பட்டது. பாசம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள். ''பசுக் களைக் கட்டிய பாச மூன் றுண்டு என்றார் திருமந்திரத்தும் (2387).இறை வன் பாசமாம் பற்றறுத்தமையை, "பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை யாண்ட" குயில் 9. "பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் OUT "பக ஆசைதீர்த் தடியாரிடைக் கூட்டிய வற்புத மறியேனே ''அற்புத 8. பாரிக்கும் - வளர்க்கும். என அடிகள் அருளியவாற்றனுமறிக. லென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்" (குறள் 851) என்புழி, பாரிக் கும் என்பதற்கு வளர்க்கும் எனப் பரிமேலழகர் பொருளுரைத்தமையுங் காண்க. மும்மலங்களின் பற்றைக் கெடுத்து உயிர்கட்கு மெய்யறிவினை வளரச் செய்தலாற் 'பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் ' என்று அருனிச்செய்தார். ஆரியன் - மேலோன்: வடசொல். நேசம்-அன்பு. நேச அருள் - உயிர்கள் தன்பால் நேசம் செய்வதற் கேதுவாகிய திருவருள். ''அவனரு ளாலே யவன்றாள் வணங்கி" (சிவ புரா 18} என வருதலுங் காண்க. வஞ்சம் - பொய். "நின்வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ" (கலி 135:10-11) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பெயராது என்பது பேராது எனத் திரிந்தது. * பேராவிடும்பை தரும்" (குறள் 802) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க, ஆராவமுதே- தெவிட்டாத அமுது போன்றவனே. ஆராவமுதமுமானார்தாமே (தே.நாவு 250;5) எனவும்,
20 திருவாசக ஆராய்ச்சியுரை ' கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானை எனவும் 4 இணையார் திருவடி யென் றலைமேல் வைத்தலுமே பூவல் 1 . எனவும் அடிகள் அருளியமை காண்க . சென்னி யின்மிசை மேவிய பாதந் திருந்து கண்ணிணை சேர்த்திரு கரத்தா அன்னல் செய்திடு மிதகமே லணைவித் துவகை கூர்ந்துமெய் யுணர்ச்சியீ னெழுந்தார் ' ' ( திருப்பெருந் 58 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலும் காண்க . கடை - இழிவு . மக்களுக்குத் தயைசெய்தலில் தாய் சிறந்தவளாதலின் தாயிற் சிறந்த தயாவான ' என்றார் . # 4 அம் 10 . தாயி லாகிய இன்னருள் புரிந்த என்தலைவனைம் சதகம் 39 . தாயான ஈசற்கே கோத் 12 . தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமாள் பூவல் 3 . பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து ' பிடித்த 9 . என வருவனவுங் காண்க . பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே ( நாவு 252 : 8 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . தத்துவம் - வடமொழி . அதன் தன்மை என்பது பொருள் . அதன் தன்மையென்றது எப்பொருள் எத்தன்மையுடைத்தோ அப்பொருளை அத் தன்மையுடையதாக உண்மையுணர்தல் . 62-9 . மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே - களங்கம் இல் லாத ஒளிவிரிந்த மலரின் ஒளிபோன்றவனே தேசனே- குருமுதல்வனே தேன் ஆர் அமுதே - இனிமை நிறைந்த அமுதம் போன்றவனே . சிவ புரனே -சிவபுரத்தையுடையவனே பரசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே - ஆணவம் களமம் மாயை என்னும் மும்மலங்களின் பிடிப்பி னைக்கெடுத்து மெய்யறிவினை வளர்க்கும் மேலோனே நேச அருள் புரிந்து நின்பால் அன்பு செய்தற்கேதுவாகிய திருவருளைச் செய்து நெஞ்சில் வஞ் சம் கெட - என் மனத்தின்கணுள்ள பொய்ம்மையாகிய குற்றம்கெட பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே - என் மனத்தின்கண் நீங்கா மல் நிலைபெற்ற பெருங்கருணையாகிய பெரிய யாறாகவுள்ளவனே . ஆரா அமுதே - தெவிட்டாத அமுதம் போன்றவனே . அளவு இலா பெம்மானே எல்லையில்லாத இயல்பிணையுடைய பெருமானே . ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே - நின்னை ஆராயாதவர் உள்ளத்தின்கண் வெளிப் சிவபுராணம் 21 படாது மறையும் ஒளிப்பொருளாயுள்ளவனே மீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே - என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிர்க்கு உயிராய் நின்றவனே . உலகத்து ஒளிகள் போலாது களங்கமின்றி என்றும் ஒருபடித்தாக இருக்கும் ஒளிவிரிந்த மலரொன்று உளதாயின் அம்மலரின் ஒளிபோலும் ஒளியையுடையான் இறைவனாதலின் ' மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே ' என்றார் . யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச்சோதியான் ( அருட் i ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . PEN தேசு - ஒளியாயினும் சோதிமலர்ந்த மலர்ச்சுடரே ( 62 ) என இறை வன் ஒளிவடிவு கூறப்பட்டமையின் தேசன் என்பதற்கு ஈண்டு ஒளியையுடைய குரு என்பது பொருளாயிற்று . ஞான சிவபுரம் - சிவலோகம் . மேலேமூலகங்களின் மேலேயுள்ள சத்திய லோகம் பிரமாவுடையதாக அதற்குமேலே வைகுண்டலோகம் விஷ்ணு வுடையதாக அதற்குமேலே சிவலோகம் சிவனுடையதாக நூல்கள் கூறும் . அச்சிவலோகமே ஈண்டுச் ' சிவபுரம் ' எனப்பட்டது . பாசம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள் . ' ' பசுக் களைக் கட்டிய பாச மூன் றுண்டு என்றார் திருமந்திரத்தும் ( 2387 ) .இறை வன் பாசமாம் பற்றறுத்தமையை பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை யாண்ட குயில் 9 . பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் OUT பக ஆசைதீர்த் தடியாரிடைக் கூட்டிய வற்புத மறியேனே ' ' அற்புத 8 . பாரிக்கும் - வளர்க்கும் . என அடிகள் அருளியவாற்றனுமறிக . லென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் ( குறள் 851 ) என்புழி பாரிக் கும் என்பதற்கு வளர்க்கும் எனப் பரிமேலழகர் பொருளுரைத்தமையுங் காண்க . மும்மலங்களின் பற்றைக் கெடுத்து உயிர்கட்கு மெய்யறிவினை வளரச் செய்தலாற் ' பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் ' என்று அருனிச்செய்தார் . ஆரியன் - மேலோன் : வடசொல் . நேசம் - அன்பு . நேச அருள் - உயிர்கள் தன்பால் நேசம் செய்வதற் கேதுவாகிய திருவருள் . ' ' அவனரு ளாலே யவன்றாள் வணங்கி ( சிவ புரா 18 } என வருதலுங் காண்க . வஞ்சம் - பொய் . நின்வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ ( கலி 135 : 10-11 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பெயராது என்பது பேராது எனத் திரிந்தது . * பேராவிடும்பை தரும் ( குறள் 802 ) என்புழியும் இவ்வாறு வருதல் காண்க ஆராவமுதே தெவிட்டாத அமுது போன்றவனே . ஆராவமுதமுமானார்தாமே ( தே.நாவு 250 ; 5 ) எனவும்